சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் சட்டைநாதர்
மூலவர் : பிரம்மபுரீஸ்வரர் சட்டைநாதர் தோணியப்பர்
அம்பாள் : பெரியநாயகி திருநிலைநாயகி
ஸ்தல விருக்ஷம் : பாரிஜாதம் பவளமல்லி
தீர்த்தம் : பிரம்ம + 22 தீர்த்தம்
பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர் மாணிக்கவாசகர், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் 68, சோழ நாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 14
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மிகவும் அதிகமான திருமுறைகளை கொண்ட சிவாலயம் இதுதான் 71.
இந்த ஊருக்கு மட்டும் 12 பெயர்கள். அனைத்தையும் பதிகமாக பாடியுள்ளார் ஞானசம்பந்தர். ஒருமுறை இங்கு வந்து, ஞானசம்பந்தர் உற்சவத்தின் போது, அந்தப் பாலை குடிப்பவர்கள் மறுமுறை முலைப்பால் குடிக்க மாட்டார்கள் என்று வழக்கு உண்டு.
ஊழிக் காலத்தில் உலகம் அழிந்தபின், சிவபெருமான், 64 கலைகளையும் ஆடையாக தரித்து, ஓம் எனும் பிரணவ மந்திரத்தை தோணி ஆக்கி, உமா மகேஸ்வரராக வருகையில்
ஊழிக்காலத்திலும் அழியாத இந்த சீர்காழி தலத்தை கண்டார்.
இதுவே எல்லாவற்றிற்கும் மூல ஷேத்திரம் என்று தோணியுடன் இத்தலத்தில் எழுந்தருளி தோணியப்பர் என பெயர் பெற்றார். அம்பாள் திருமலை நாயகி. மீண்டும் சிருஷ்டியை துவங்குவதற்காக பிரம்மா இங்கு வந்து சிவனை பூஜித்ததால் பிரம்மபுரீஸ்வரராக லிங்க வடிவத்திலும் ( பிரம்மபுரம்), பிரம்மா பூஜித்து பீஜங்களை சிருஷ்டிவிதைகளை பெற்றுக் கொண்டார்.
அதனால்தான் கீழே இருக்கக்கூடிய சுவாமி பிரம்மபுரீஸ்வரர். முதல் அடுக்கில் உமாமகேஸ்வரராக இருக்கக்கூடிய சுவாமி தோணியப்பர். அதற்கு மேல் மூன்றாவது அடுக்கில் இருக்கக்கூடிய சுவாமி தான் சட்டை நாதர். இது பைரவ க்ஷேத்ரம். அஷ்ட பைரவர்களுக்கும் சந்நிதி உள்ளது. சோழ நாட்டில் திருவுடைமருதூர் சிவன் சன்னதியாகவும் சுற்றியுள்ள கோவில்கள் அனைத்திலும் இது சீர்காழி பைரவர் சன்னதியாகும்.
கோவிலில் இருப்பது போலவே அந்தந்த இடத்தில் அமைந்துள்ளது.
இங்கு தோனியப்பரை வணங்கி சட்டைநாதர் செல்லும் பொழுது சட்டையை கழற்ற வேண்டும், தலையில் புஷ்பம் இருந்தால் எடுத்து விட வேண்டும். வாமனாவதாரம் முடிந்த பிறகு திருவிக்ரம அவதாரம் ஆக்ரோஷமாக உலகையே கபளீகரம் செய்து விடும் என்ற நிலையில், அந்த மூர்த்தியை கிழித்து தான் சட்டையாக போட்டு கொண்டு, எடுத்த வடிவம் சட்டநாதர். அந்த எலும்புகளை எடுத்து கதையுரு கொண்டு தாங்கும் வடிவம் சட்டை நாதர்.
ஆனால் மஹாவிஷ்ணுவை சிவன் அழித்துவிட்டதாக நினைத்து, மஹாலக்ஷ்மி தலையில் பூ வைத்துக் கொள்ளாமல் ஆழ்ந்த கவலையில் இருந்தாள். ( அதனால் சட்டை இல்லை பூ இல்லை ) ஸ்ரீ என்ற மஹாலஷ்மி காத்திருந்து மஹாவிஷ்ணுவை வரமாக பெற்ற காரணத்தினாலே ஸ்ரீகாழி மருவி சீர்காழி. ( லக்ஷ்மி புரம்)
சட்டங்களுக்கெல்லாம் இவரே அதிபதி என்பதால் வழக்குகளில் பிரச்சனை உள்ளவர்கள் இவரை வழிபடுகிறார்கள்.
பிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீங்கிய தலம்.
பிரளய காலத்தில் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம்.
இத்தல அம்மன், மஹாலக்ஷ்மி ஸ்வரூபமாக சக்தி பீடத்தில் 11வது பீடமாக அமர்ந்துள்ளார்.
பிரம்மா விஷ்ணு சிவன் பார்வதி லட்சுமி சரஸ்வதி மூலவர் உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான். காசியை விட மிகப்பெரிய பைரவ க்ஷேத்ரம்.
எனவேதான் “காழியில் பாதி காசி” என்பர்.
ஆதிசேஷன் தபஸ் செய்து தரிசனம் பெற்ற இடம் சிரபுரம்.
செண்பக மர காடாக இருந்ததால் செண்பகாரன்யம்.
ஸ்தல விருக்ஷம் மூங்கில் அதனால் வேணுபுரம். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து, சிவனை வேண்டி, எங்களைக் காப்பாற்ற முருகப்பெருமான் பிறக்க வேண்டும் என வேண்டி மூங்கிலுக்குள் ஒளிந்துகொண்ட இடம் இந்த இடம். அவனுக்கு சுவாமி அனுகிரகம் செய்த இடம் இந்த இடம்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சட்டை முனி சித்தர்
18 சித்தர்களில் ஒருவர் இங்கு ஜீவசமாதி. சிவன் கோவில் பிரகாரத்தில் இவரது ஜீவசமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது. இங்கிருந்தபடியே உச்சியில் இருக்கும் சட்டைநாதரை தரிசிக்க முடியும். வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12 மணிக்கு இதற்கு புணுகு சட்டம் சாத்தி, வடைமாலை அணிவித்து பாசிப்பருப்பு பாயாசம் நைவேத்தியம் செய்யப்படுகிறது
குன்று கோவில்
உரோமச முனிவர் கயிலை சென்று, சிவனை வணங்கி, இறைவா தென்னாட்டு பக்தர்களின் குறைதீர்க்க தயவுசெய்து தேவியுடன் எழுந்தருளி கயிலை தரிசனம் தர வேண்டும் என வேண்டினார்.
ஒரு சமயம் ஆதிசேஷன் வாயு பகவான் சண்டையில் சிறு பகுதி – 20 பறவைகள் சிறு மலையை சீர்காழிக்கு கொண்டு வந்து சேர்த்தன. காலவித்து எனும் மன்னனுக்கு குழந்தை பாக்யம் இல்லை. கயிலை சென்று இறைவனை வணங்கினால் தான் புத்திர பாக்யம் கிடைக்கும்.
அவன் சின்ன கயிலையான சீர்காழிக்கு வந்து இறைவனை வணங்கி குழந்தை பாக்யம் பெற்றான்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வாசலில் உள்ள பிரம்ம தீர்த்தம் அளப்பரிய மகத்தானது. இந்த ஊரில் தான் தமிழ் தழைக்க, சைவ சமயம் உலகமெல்லாம் பரவ, அவதாரம் செய்த ஞான சம்பந்தப் பெருமான் இங்குதான்.
இங்குதான் சிறிய குழந்தையை அழைத்து வந்த அப்பா படிக்கட்டில் உட்கார வைத்து விட்டு, பிரம்ம தீர்த்தத்தில் ஸ்னானம் செய்ய இறங்கி, நித்ய அனுஷ்டானங்களில் மூழ்கிய போது குழந்தை பசியால் கூப்பிட, அம்மா அப்பா என்று கத்தினாலும் அவர் காதில் விழவில்லை. யார் காதில் விழுந்தது. கோபுரத்தில் இருக்கும் அம்மையப்பன் காதில். ஜகன்மாதா காதில்.
உமையம்பிகை வந்தாள். குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு பால் கொடுத்தாள், கீழே இறக்கி வைத்து விட்டு சென்றாள். அப்பொழுதுதான் கண்ணைத் திறந்த அப்பா குழந்தை உதட்டில் பாலை பார்த்துவிட்டு, யார் கொடுத்தாலும் பாலை குடிக்கலாமா என்று அதட்ட, குழந்தை கோபுரத்தை கை காட்ட
அப்பா அடிக்க கையை ஓங்கும் போது, பார்வதி பரமேஸ்வரா காட்சி கொடுக்கிறார். அப்போதுதான் யார் வந்தா என “தோடுடைய செவியன் ” – அம்பாள் கொடுத்த முலைப்பாலை குடித்து தமிழ் பாலை கொட்டினார்.. அன்றிலிருந்து நமக்கெல்லாம் தமிழை அனுகிரகம் செய்தார்.
அப்படிப்பட்ட பிரம்ம தீர்த்தம் இருக்கக்கூடிய சீர்காழி
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இக்கோவிலுக்கு உள்ளேயே ஞானசம்பந்தர் தனி சன்னதி உள்ளது. இங்கு சம்பந்தர் மூலவராக உள்ளார். அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் வெளியே தனியாக உள்ளனர்.
சுவாமி சந்நிதிக்கும் அம்மன் சந்நிதிக்கும் நடுவே சம்பந்தர் சந்நிதி உள்ளது. இதனை சோமாஸ்கந்த அமைப்பு என்று கூறுகிறார்கள். இத்தல விநாயகர் ரொணம் தீர்த்த விநாயகர்.
63வரில் கணநாத நாயனார் பிறந்த இடம், ஞானசம்பந்தர் பிறந்த இடமும் இதுதான்.
தருமபுர ஆதீனம் 27 கோயில்களில் ஒன்று.
பிரம்ம தீர்த்தம் வாயிலில் பிரம்மதேவன் வழிபடுவதையும், ஞானசம்பந்தர் பார்வதி தேவியிடம் பால் பெறுவதையும், ஞானசம்பந்தர் இறைவனை நோக்கி செல்வதையும் சித்தரிக்கும் அழகே சிற்பங்கள் உள்ளன.
ஞானசம்பந்தர் திருநாவுக்கரசரை அப்பா என்று அன்புடன் அழைத்த ஸ்தலம்.
சீர்காழி ஞானசம்பந்தர் பிறந்த ஊர், சுந்தரர் விதிக்க மனம் இல்லாமல் ஊருக்கு வெளியில் தங்கி பாடல் பாடினார் சிவன் காட்சி தந்தார்.
ஞானசம்பந்தர், யாழ் வித்வான் திருநீலகண்ட யாழ்ப்பாணர், இங்கிருந்து தான் அவருடன் செல்ல தொடங்கினார்.
இத்தால முருகனை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஞானம் மற்றும் கல்வி பெற
தோஷங்கள் நீங்க
கடன் தொல்லை பயம் நீங்க
வழக்குகளில் வெற்றி பெற
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமுலைப்பால் திருவிழா
சித்திரை பிரம்மோற்சவம் பெருவிழா
எண்ணெய்க் காப்புத் திருவிழா
மஹா சிவராத்திரி ஆடிப்பூரம் கார்த்திகை திருவாதிரை பிரதோஷம் சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரமன், குருபகவான், திருமால், மஹாலக்ஷ்மி சிபிச்சக்கரவர்த்தி, காளி, பராசர முனிவர், உரோமசமுனிவர், இந்திரன், இராகு, கேது, சூரியன், அக்னி, ஆதிசேஷன், வியாசமுனிவர், முருகப் பெருமான், காலவித்து மன்னன், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்துப் பிள்ளையார் முதலியோர்.
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சீர்காழி நகரின் மையப் பகுதியில் உள்ளது. சிதம்பரம் மாயவரம் நடுவில் உள்ளது. 20KM EACH. ரயில் & பேருந்து வசதி உண்டு.
6AM – 12NOON, 4PM – 8PM
99442 12232 கைலாஷ் குருக்கள்
94452 43871 ஹரி குருக்கள்
97910 98672 விக்னேஷ் சிவாச்சாரியார்
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தோடுடைய செவியன்விடை
யேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்
உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந்
தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. 1
திருஞானசம்பந்தர் முதல் பதிகம்


Leave a Reply