குருமாணக்குடி கண்ணார் கோவில் கண்ணாயிரம் உடையார் கண்ணாயிரநாதர்
மூலவர் : கண்ணாயிரமுடையார் கண்ணாயிர நாதர் சகஸ்ர நேத்ரேஸ்வரர்
அம்பாள் : முருகுவளர்க்கோதை நாயகி, சுகந்த குந்தளாம்பிகை
ஸ்தல விருக்ஷம் : கொன்றை
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்
ஆகமம் : சிவாகமம்
புராணப் பெயர் : கண்ணார்கோவில்
பாடல் : சம்பந்தர், சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் 71, சோழநாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 17
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மூலவர் சுயம்புத் திருமேனி, சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்ப திருமேனி முழுவதும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளது.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வாமனாவதாரத்தில் மூன்றடி மண் இரந்து பெற்று, உலகளந்த திருமால் செருக்கை ஒடுக்கி நெற்றியிலிருந்து ரத்தம் இறுத்த சிவபெருமானை வழிபட்டு அருள்பற்ற தலமாகயால் குருமாணிக்குடி மருவி குருமாணக்குடி ஆயிற்று.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாபலி என்ற மன்னனை வெல்லுமாறு தேவர்கள் வேண்ட திருமால் வாமன அவதாரம் எடுத்தார். குருமாணி (குள்ளமான பிரம்மச்சாரி) வடிவில் தோன்றி, மகாபலி இடம் மூன்றடி மண் யாசித்தார். தனது குருவான சுக்ராச்சாரியார் தடுத்தும் கேளாமல் மூன்றடி மண் தருவதாக வாக்களித்தான்.
அப்பொழுது வாமனர் திருவிக்கிரம வடிவமெடுத்து, மண்ணை ஓரடியாலும் விண்ணை ஓர் அடியாலும் அளந்தார். மூன்றாவது அடியாக மஹாபலியின் முடி மீது வைத்தார். இவ்வாறு குறுமாணி வடிவில் வந்த திருமால் வழிபட்ட தலம் இக்கண்ணார் கோவில் ஆகும். இதனால்தான் இத்தலத்திற்கு குருமாணக்குடி என பெயர் வந்தது.
தேவர்கள் தலைவனான இந்திரன், கௌதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு முறை முனிவரை வெளியே அனுப்பிவிட்டு, முனிவரின் வடிவெடுத்து, அகலிகையுடன் சந்தோசமாக இருந்தான். இதற்குள் முனிவர் திரும்பி வர, இந்திரன் பூனை வடிவெடுத்து தப்பிக்க முயற்சித்தான். நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு, இந்திரன் உடல் முழுவதும், ஆயிரம் யோனி உறுப்பு உண்டாகும் படி சபித்தார்.
இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மனிடம் சென்றான். அதற்கு பிரம்மன் குருமாணக்குடி சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற வழி கூறினார். இந்திரனும் இங்கு வந்து இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட, சிவன் மனமிரங்கி, அதே சமயம் செய்த தவறுக்கும் தண்டனை உண்டு என அவனது ஆயிரம் குறிகளும் ஆயிரம் கண்களாக மாற்றினார்.
எனவே இத்தல இறைவன் கண்ணாயிர நாதர்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ராஜகோபுரம் இல்லை. வாயிலில் ஒருபுறம் குடவரை விநாயகரும் மறுபுறம் தண்டபாணி உள்ளனர். செப்பு கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் நந்தி பலிபீடம். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தியை அடுத்தார் போல் சித்தி விநாயகர் சன்னதி தனி கோவிலாக உள்ளது. பிரகாரத்தில் நால்வரை எடுத்து கன்னி விநாயகர் உள்ளார். கொடி மரத்தை வலம் வந்து மேலே சென்றால் பள்ளியறையும் பக்கத்தில் அம்பாள் சந்நிதியும் உள்ளன. அம்பாள் சன்னதிக்கு மேல் 12 ராசிக்குரிய கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 12 ராசிக்காரர்களும் தங்கள் ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டிருந்தால், குங்குமார்ச்சனை செய்து வழிபட்டால் விலகும். திருமணத் தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய சிறந்த ஸ்தலம்.
கிழக்கு நோக்கிய மூலவர் சன்னதி. கோயிலின் எதிரில் உள்ள தீர்த்தக் கரையில் விநாயகர் முருகன் சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள்
பாவங்கள் மற்றும் சாபங்களிலிருந்து விடுபட
குழந்தை பாக்கியம் பெற திருமணத் தடை நீங்க பிரார்த்தனை.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கார்த்திகை பிரம்மோற்சவம் மஹாசிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், நவராத்திரி, ஆருத்ரா தரிசனம், மாசி மகம், தைப்பூசம், பங்குனி தீர்த்தவாரி, விநாயகர் சதுர்த்தி சிறப்பு.
பௌர்ணமி & பிரதோஷம் சிறப்பு பூஜைகள்.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாவிஷ்ணு, இந்திரன், சம்பந்தர் சேக்கிழார் மாணிக்கவாசகர் வள்ளலார்
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
6KM வைத்தீஸ்வரன் கோவில் மாயவரம் வழியில் பாகசாலை கைகாட்டியில் இடது பக்கம் 3KM
99946 62079 சபேசன் குருக்கள்
92441 58673 மெய்க்காப்பாளர்
8AM – 11AM & 5.30PM – 8PM
கோவில் குருக்கள் அல்லது மெய்க்காப்பாளர் தொடர்பு கொண்டு செல்வது சிறப்பு
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தண்ணார் திங்கட் பொங்கர
வந்தாழ் புனல்சூடிப்
பெண்ணா ணாய பேரரு
ளாளன் பிரியாத
கண்ணார் கோயில் கைதொழு
வோர்கட் கிடர்பாவம்
நண்ணா வாகும் நல்வினை
யாய நணுகும்மே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply