கும்பகோணம் சோமேசர் குடந்தை காரோணம்

🌸 மூலவர் : சோமேஸ்வரர், காயாரோகனர், வியாழ சோமேசர், சிக்கேசர்

அம்பாள் : தேனார் மொழியாள், சோமசுந்தரி

ஸ்தல விருக்ஷம் : வில்வம்

தீர்த்தம் : மகாமக தீ, சோம தீ,

பாடல் : சம்பந்தர்

சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 28

🌸 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹மூர்த்தி, ஸ்தலம் மற்றும் தீர்த்தம் மூன்றும் சிறப்பு

🌹இக்கோயில் மகாமகம் தீர்த்தவாரியில் பங்குபெறும் கோயிலாகும்

🌹 சோமேசம் – கலசத்தின் நாண் (“உரி” / “சிக்கம்”) விழுந்த இடம் இது. இவ்விடம் தற்போது சோமேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது .

🌹புராணங்களின்படி, நவகன்னிகர்கள் மகாமகா குளத்தில் நீராட வந்தபோது, ​​அங்கு மிகுந்த இரைச்சலும் குழப்பமும் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. அச்சத்தின் காரணமாக பார்வதி தேவி, சிவபெருமானை (ஆரோகண வடிவில்) தழுவினார். எனவே, இந்த இடம் ‘காய ஆரோகணம்’ (‘காயம்’ என்றால் உடல், ‘ஆரோகணம்’ என்றால் தழுவியது) என்ற பெயரைப் பெற்றதுடன், இங்குள்ள இறைவன் ‘ஸ்ரீ காயரோகனர்’ என்றும் அழைக்கப்படுகிறார். ‘காய ஆரோகணம்’ என்பது தற்போது ‘காரோணம்’ என மாறியுள்ளது.

🌹இத்தலத்தில் இராமன், இராவணனை கொல்ல ருத்ராம்சம் வேண்டி வழிபட்டு உடலில் ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் காய – ஆரோகணம் – காரோணம் என்று பெயர் பெற்றது

🌹திருஞானசம்பந்தர் பாடலில் “தேனார் மொழியாள் திளைத்தங்காடித் திகழும் குடமூக்கில், கானார் நட்டம் உடையார் செல்வக்காரோணத்தாரே” என்று குறிப்பிட்டுள்ளமையால், அம்பிகை பெயர் வழங்கும் தலம் (சக – உமேசம்) சோமேசம் ஆதலின் இதுவே பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது.

🌹குடந்தைச் சிவனடியார் திருக்கூட்டத்தினர் இத்திருக்கோயிலையே குடந்தைக் காரோணமாக ஏற்றுக்கொண்டு 1958-ஆம் ஆண்டில் காரோணப் பதிகத்தைக் கல்லில் பொறித்துச் சுவரில் பதித்துள்ளனார். 

🌸 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹அசுரர்களுடன் போரிட்டு அவர்களை அழிக்கும் வரத்தைப் பெறுவதற்காக, மஹாவிஷ்ணு இங்கு ஒரு வருடம் சிவபெருமானை வழிபட்டதாக நம்பப்படுகிறது. எனவே, இங்குள்ள சிவபெருமான் “ஸ்ரீ மாலீசர்” (மால் என்றால் மஹா விஷ்ணு என்று பொருள்) என்று அழைக்கப்படுகிறார்.

🌹குரு வியாழன் கிரகமும், சந்திர பகவானும் இங்கு இறைவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. சந்திரன் ‘சோமன்’ என்றும் அழைக்கப்படுவதால், இவ்விடம் ‘சோமேசம்’ என்ற பெயரைப் பெற்றதுடன், இறைவன் ‘ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர்’ என்றும் போற்றப்படுகிறார்.

🌹சோழ மன்னன் பராந்தகன் இவ்விடத்திற்கு வருகை தந்து, ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, குழந்தை பாக்கியம் வேண்டி இறைவனின் ஆசீர்வாதத்தைப் பெற அதை வழிபட்டதாகவும் நம்பப்படுகிறது. அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம், சோழர் காலத்திலிருந்து பெறப்பட்ட ‘ஸ்ரீ சோழீசர்’ என்று அழைக்கப்படுகிறது.

🌹1964 ஆம் ஆண்டில், 100 பக்தர்கள் ஐந்து புனித எழுத்துக்களான (“பஞ்சாக்ஷர மந்திரம்” – “சிவாய நம”) ஒவ்வொன்றையும் ஒரு லட்சம் முறை எழுதி, மொத்தமாக ஒரு கோடியை உருவாக்கும் பணியை மேற்கொண்டதாக நம்பப்படுகிறது. அவர்கள் அவ்வாறு எழுதிய ஒவ்வொரு புத்தகத்தையும் கட்டி, ஒரு பெட்டியில் பாதுகாத்து வைத்தனர், அதனை இன்றும் காணலாம்.

🌸 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்ட பொழுது, பிரம்மதேவன் மனம் வருந்தி தனது படைப்புத் தொழிலை எங்கிருந்து துவக்குவது என சிவபெருமானிடம் கேட்டார்.

சிவபெருமான் அவரிடம் “நீ இப்போதே பல புண்ணிய தலங்களின் மணல் எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய். அதில் அமுதத்தை நிரப்பு. அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையாக விளங்கும் சிருஷ்டி பீஜத்தை அதனுள் வை. கும்பத்தின் மீது ஒரு தேங்காய் வைத்து, மாவிலையால் அலங்கரித்து நூல் சுற்று. அது பிரளய வெள்ளத்தில் சாய்ந்து விடாதபடி ஒரு உரியில் வை. அந்தக் குடத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய். அந்த கும்பம் பிரளய வெள்ளத்தில் தெற்கு நோக்கி செல்லும். அப்போது அவ்விடத்திற்கு நான் வருவேன் என்று சொன்னார். இதன்படி பிரளய வெள்ளம் ஏற்பட்டது. கும்பம் மிதந்தது. அமுத கும்பத்திற்கு ஆதாரமாக இருந்த உரி சிதறியது. அவ்விடத்தில் ஒரு லிங்கம் தோன்றியது. இந்த லிங்கத்தை சந்திரன் வழிபட்டான். எனவே இறைவனுக்கு சோமேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

🌸 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

•இக்கோயில் மேற்கு நோக்கிய சந்நிதியும், 5 நிலைகளைக் கொண்ட 72 அடி உயர ராஜகோபுரமும் கொண்டுள்ளது.

இக்கோவிலுக்கு மூன்று வாசல்கள் உள்ளன.

• உள் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகர் மற்றும் கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன.

• வாயில் பகுதியில் திருமுறைக் கோயில், விநாயகர், சேக்கிழார் மற்றும் நால்வர் திருமேனிகள் உள்ளன.

• ராஜகோபுரம் வழியாக வந்தால் மங்களாம்பிகை மற்றும் மாலீசர் சன்னதிகள் வடக்குப் பகுதியில் மேற்கு நோக்கி அமைந்துள்ளன.

• அருகில் கல்யாண விநாயகர் சன்னதியும், தனிச் சிறப்புமிக்க நடராச சபையும் உள்ளது. நடராஜர் காணாநட்டம் உடையார்

இவரைப் பார்க்காமல் சென்று விட்டால், சென்றவருக்குத்தான் நஷ்டம் என்ற பொருளில் இப்பெயர்.

• கட்டை கோபுரத்தை கடந்து வந்தால் சோமநாதர் தேனார் மொழியம்மை.

•வடக்கு வாசல் வழியாகவந்தால் சோமநாதரையும் சோமசுந்தரி யையும் தரிசிக்கலாம். உள் மண்டபத்தில் சோமாஸ்கந்தர் அருள் பாலிக்கிறார்.

🌸 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வியாபாரம் மற்றும் வேலை

உத்தியோக உயர்வு

திருமண தடை நீங்குதல்

சந்திர தோஷ நிவர்த்தி

🌸 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மகாமக திருவிழா 👉

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை

மாசி மக பெருவிழா 👉 பிரம்மோற்சவம் திருக்கல்யாணம்

மஹா சிவராத்திரி

சித்திரை சப்தஸ்தான விழா

பங்குனி உத்திரம்

ஆனித் திருமஞ்சனம்

ஆடிப்பெருக்கு ஆடிப்பூரம்

🌸 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சந்திரன் வியாழன் ராமன் மஹாவிஷ்ணு பராந்தக சோழன்

புண்டரீக மகரிஷி, சம்பந்தர் சேக்கிழார் முதலியோர்.

🌸 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கும்பகோணம் நகரின் மையப் பகுதியில் உள்ள பெரிய கடைத் தெருவில் (Big Bazaar Street), புகழ்பெற்ற பொற்றாமரைக் குளத்தின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் சாரங்கபாணி கோயிலுக்கு மிக அருகில் (அடுத்தடுத்து) அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

7AM – 12NOON, 4.30PM – 9PM

94438 73108 கணேஷ் குருக்கள்

🌸 கோவில் தேவார பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வாரார் கொங்கை மாதோர்

பாக மாக வார்சடை

நீரார் கங்கை திங்கள்

சூடி நெற்றி யொற்றைக்கண்

கூரார் மழுவொன் றேந்தி

யந்தண் குழகன் குடமூக்கில்

காரார் கண்டத் தெண்டோள்

எந்தை காரோ ணத்தாரே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *