கும்பகோணம் கும்பேஸ்வரர்
மூலவர் : கும்பேஸ்வரர் / அமுதேஸ்வரர்
அம்பாள் : மங்களாம்பிகை / மந்திரபீடேஸ்வரி
( சம்பந்தர் வளர்மங்கை )
ஸ்தல விருக்ஷம் : வன்னி
தீர்த்தம் : 14 மகாமக குளம், பொற்றாமரை குளம் & வருண, காஸ்யப, சக்கர, மாதங்க, பகவத், மங்கள, நாக, குர, சந்திர, சூரிய, கௌதம, வராஹ தீர்த்தங்கள்..
பாடல் : அப்பர் சம்பந்தர்
சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 26. சோழர்களால் கட்டப்பட்ட கோவில்..
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்கு மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. லிங்கம் கீழே பருத்தும் மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும்.
மகாமக குளம் சிறப்பு
16 நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு சிவன் சன்னதி உண்டு. அனைத்துமாக ஷோடச மகாலிங்க ஸ்வாமி.
இந்த மகாமக தீர்த்தம்
கிருதயுகத்தில் “பிரம்மதீர்த்தம்”, த்ரேதாயுகத்தில் “பாபனோதம்”,
துவாபரயுகத்தில் “முக்திதீர்த்தம்
கலியுகத்தில் “கன்யாதீர்த்தம்”
கோவிலின் முன்பு பொற்றாமரைக் குளம் உள்ளது. மகாமகத்திற்கு வருபவர்கள் மகாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரைக் குளத்திலும் நீராடுவர்.
நவகன்னியரான நதிகள் அவ்வாறே நீராடியதாக ஐதீகம்.
மஹாவிஷ்ணு இங்குள்ள இறைவனை வணங்கி, சிவபெருமான் மகிழ்ந்து சக்கரம் வழங்கினார்.
ஸ்ரீ சக்கரபாணி என்று போற்றப்படுகிறார்.
இதே போன்ற ஒரு சம்பவத்தில் மகாவிஷ்ணுவிற்கு சிவபெருமான் (வில்) சாரங்கம் கொடுத்தார். இதனாலேயே ஸ்ரீ சாரங்கபாணி.
வெளிப்பிரகாரத்தில் கிரஹ தோஷங்கள் நீக்கும் கும்பமுனி சித்தர் அருள்பாளிக்கிறார்.
இங்கு கல் நாதஸ்வரம் மிகவும் பிரபலம் + பராமரிப்பு.
63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்கநாயனார் (நார்ச்சத்தர்) இங்கு முக்தி அடைவதற்கு முன்பு பக்தர்களுக்கு உணவு வழங்கியதாக நம்பப்படுகிறது.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நாரதர் கொடுத்த ஞானக் கனியை பெற உலகத்தை சுற்றிவரும் போட்டியை சிவன் அறிவித்தார். விநாயகரோ அம்மையப்பனை சுற்றி வந்து அவர்களே உலகம் என்பதை உலகிற்கு எடுத்துரைத்தார். இதை மெய்ப்பிக்கும் வகையில் இக்கோயிலின் பிரகார அமைப்பு சுவாமியையும் அம்பாளையும் சேர்த்து சுற்றிவரும் வகையில் உள்ளது. பெரும்பாலான கோவில்களில் சுவாமி அம்பாள் பிரகாரங்களை தனித்தனியே சுற்றிவரும் அமைப்பு தான் உள்ளது.
மங்களநாயகி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தல அம்மனுக்கு மங்களநாயகி மந்திர பீட நலத்தாள் என்ற திருநாமங்கள். சம்பந்தர் இவளை வளர்மங்கை என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப் போலே, தனது மந்திர சக்திகளில் 36,000 கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். சுவாமி 72000 கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக மந்திரபீடேஸ்வரர்.
அம்மனுக்குரிய 51 சக்தி பீடங்களில் இத்தலம் முதன்மையாக கருதப்படுகிறது. அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி குங்குமத் திலகம் இட்டு அருள் பாலிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
மகாமக தீர்த்தம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ப்ரளய காலத்தின் போது அமுத கும்பத்திலிருந்து வழிந்தோடிய அமுதத்தை “பூமி குழிந்து தாங்குக” என சிவபெருமான் நினைத்ததால், அமுதம் திரண்டு இந்த குளத்தில் தங்கியது. மூன்று ஏக்கர் பரப்பு உள்ள இங்குதான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக திருவிழா நடைபெறுகிறது, கங்கை யமுனை கோதாவரி கிருஷ்ணா நர்மதை சரஸ்வதி சிந்து காவிரி சரயு ஆகிய 9 நதிகளும் தங்களது பாவங்களைப் போக்கிக் கொள்ள நீராடுவதாக ஐதீகம். மகாமக தினத்தன்று இத்தீர்த்தத்தில் நீராடுபவருக்கும் அவரைச் சார்ந்த ஏழு சந்ததிகளுக்கும் குலத்தார்க்கும் புண்ணியம் உண்டு என புராணங்கள் கூறுகின்றன.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும், பிரவேசிக்கும் நன்னாளில் மகாமக திருவிழா.
அனைத்து நதிகளும் தங்கள் பாவங்களை தொலைக்க இங்கு வருவதாக ஐதீகம். இங்கு நடக்கும் மகாமக திருவிழா தமிழகத்தின் பெரிய திருவிழா.
விநாயகர் & முருகன்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவனும் அம்பாளும் ஆதியில் இத்தலம் வருவதற்கு முன்பே விநாயகர் இங்கு வந்து காத்திருந்ததால் இத்தல விநாயகர் “ஆதி விநாயகர்” எனப்படுகிறார்.
“முருகப்பெருமான்” சூரசம்ஹாரத்திற்கு செல்லும் முன் இங்கு வந்து மந்திர பீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார். இங்கே உள்ள கார்த்திகேயன், ஆறுமுகம் + ஆறு திருக்கரங்களுடன் உள்ளார். இது போன்ற அமைப்பு வேறு எங்கும் இல்லை. இவரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.
“கிராத மூர்த்தி”
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° சிவபெருமான் வேடர் (கிராதர்) வடிவில் வந்து அமிர்தம் நிறைந்த குடத்தை உடைத்தார். அதன் அடிப்படையில் இங்கு கிராத மூர்த்திக்கு சன்னதி உள்ளது. மகம் நட்சத்திர நாளில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தால் விரும்பியது கிடைக்கும் என்பது ஐதீகம்.
கும்பகோணம் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. காவிரி மற்றும் அரசலாறு
இந்த இடத்தை அலங்கரிக்கும் மாலைகள் போல் காட்சியளிக்கின்றன.
மகாமக திருவிழாவில் பங்கு பெரும் புகழ்பெற்ற 12 கோவில்கள்
1) காசி விஸ்வநாதர்
2)ஆதி கும்பேஸ்வரர்
3)சோமேஸ்வரர்
4)நாகேஸ்வரர்
5)காளஹஸ்தீஸ்வரர்
6)கௌதமேஸ்வரர்
7) கும்பகோனேஸ்வரர்
8)அமிர்தகலசநாதர் கலயநல்லூர்
9)பாணபுரீஸ்வரர்
10) அபிமுகேஸ்வரர்
11)ஆதிகம்பட்ட விஸ்வநாதர் 12)ஏகாம்பரேஸ்வரர்
அதே நேரத்தில் கும்பகோணத்திலிருந்து ஐந்து வைணவ கோவில்களும் இவ்விழாவில் பங்கேற்கின்றன.
ஆனால் மகாமக குளத்தில் அவர்கள் தீர்த்தவாரிக்கு பதிலாக காவிரி ஆற்றில் தீர்த்தவாரி கண்டருள்கிறார்கள்.
1)சாரங்கபாணி
2)சக்கரபாணி
3)ராமஸ்வாமி
4)ராஜகோபால ஸ்வாமி 5)ஆதிவராஹப் பெருமாள்
ஸ்தல புராணம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்து புராணங்களின்படி ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க வழி வகுக்கும் “பிரளயம்”.
சிவபெருமான் பிரம்மா மூலம் அனைத்து உயிரினங்களின் விதைகள் “பீஜம்”, 4 வேதங்கள், புராணங்கள் + அமிர்தம் நிரப்பப்பட்ட அமுதகலசம், கும்பம் வைத்து பூக்கள் மற்றும் துணிகளால் அலங்கரித்து அதில் சரம் கட்டப்பட்டது. இது கைலாச மலையின் உச்சியில் வைக்கப்பட்டது.. மஹாபிரளயம் தொடங்கிய போது பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழித்தது. அமுத கலசமும் இடம்பெயர்ந்து பல வருடங்களாக கடலில் மிதக்க ஆரம்பித்தது. இறுதியில் பிரளயம் நின்றதும் கலசம் நின்ற இடம் கும்பகோணம். அப்பொழுது சிவபெருமான் வேட்டைக்காரன் (கிராதமூர்த்தி) உருவம் எடுத்து தனது அம்பினால் பானையைப் பிளந்தார். (Ref குடவாசல் பதிவு).
கலசத்தில் இருந்து வந்த அமிர்தம் மகாமகம் மற்றும் பொற்றாமரை குளங்களை அடைந்ததாக நம்பப்படுகிறது.
கலசத்தில் இருந்து பரவிய அமிர்தம் வெண்மணலுடன் கலந்து ஒரு லிங்கம் உருவானது
இந்த லிங்கமே கும்பேஸ்வரர்..
லிங்கம் மணலால் ஆனது என்பதால் தான் அபிஷேகம் இல்லை. எப்போதாவது புனுகு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது
ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் உண்டு. லிங்கம் பெரிய அளவில் சாய்ந்த நிலையில் உள்ளது. அது எப்போதும் தங்க கவசத்தால் மூடப்பட்டிருக்கும்.
வாரணாசியை (காசி) விட கும்பகோணம் மிகவும் புனிதமானது. அருகில் உள்ள புண்ணிய ஸ்தலத்திற்கு செல்வதன் மூலம் சில இடங்களில் பாவங்கள் கழுவப்படும். புனித ஸ்தலங்களில் ஒன்றில் செய்த பாவம் வாரணாசிக்கு யாத்திரை செல்வதன் மூலம் கழுவப்படுகிறது. ஆனால் வாரணாசியிலேயே பாவம் செய்தால் கும்பகோணத்தில் தான் கழுவ முடியும். அதேபோல கும்பகோணத்தில் எந்த பாவச் செயலை செய்தாலும் அங்கேயே கழுவி விடுகிறார்கள்
மூர்த்தி ஸ்தலம் தீர்த்தம் 3ம்
சிறப்பு..
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணத்தின் மத்தியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில், 3 பிரகாரங்களுடன், கிழக்கு நோக்கிய 11 நிலை 128 அடி உயர ராஜகோபுரம், தெற்கே ஒரு பிரதான கோபுரம் முற்றுப் பெறவில்லை “மொட்டை கோபுரம்” கோவிலின் அறியப்பட்ட அடையாளம்..
கோவிலில் பல மண்டபங்கள் உள்ளன. குறிப்பிடத்தக்கது 16 தூண்கள் கொண்ட நவராத்திரி மண்டபம். இதில் 27 நட்சத்தி ரங்களும் 12 ராசிகளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது கோவிலின் மிகப்பெரிய கலை சிறப்பம்சம். நவராத்திரி மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் செதுக்கப்பட்டுள்ள சிங்க வாகனம் (யாளம் போன்ற அமைப்பு) தனது தலையாலும், முன் இரண்டு கால்களாலும் நீண்ட படுக்கைக் கற்களைத் (கொடுங்கைகள்) தாங்கியபடி கம்பீரமாக நிற்கிறது. ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட இந்தச் சிற்பம், தமிழர்களின் மிக உன்னதமான சிற்பக் கலைத் திறனைப் பறைசாற்றுகிறது.
விநாயகர், ஆறு கைகளுடன் கூடிய முருகன், சப்த கன்னியர்கள் மற்றும் அறுபத்து மூவர் சன்னதிகள் இங்கு சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளன.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கோவிலில் கல்வி, தொழில், திருமணம், குழந்தைப்பேறு, குடும்ப அமைதி, குபேரவாழ்வு பெற, தோஷங்கள் நீங்க வேண்டிக்கொள்கிறார்கள்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மகாமகம் திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை
மாசி மகம் திருவிழா
மஹா சிவராத்திரி
வெண்ணெய் தாழி திருவிழா
சித்திரை பிரம்மோற்சவம்
ஆடிப்பூரம்
திருக்கல்யாணம்
தைப்பூச தெப்ப திருவிழா
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மா, மஹாவிஷ்ணு, இந்திரன், அஷ்டதிக் பாலகர்கள், காமதேனு, கார்த்தவீரியன், வீரவன்மன், மாந்தாதா, ஏமரிஷி, கர்மசன்மா, சுவர்ணரோமன், காசிபர், அப்பர் சம்பந்தர், சேக்கிழார் முதலியோர்.
அமைவிடம்,நேரம், தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பகோணத்தின் மிக முக்கிய அடையாளமான மகாமக குளத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
6. 30AM – 12.30PM, 4.30PM- 8.30PM
86675 70626 விக்னேஷ் கும்பேஸ்வரர் குருக்கள்
99421 13423 சிவகுரு குருக்கள்
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அரவிரி கோடனீட
லணிகாவிரி யாற்றயலே
மரவிரி போதுமௌவல்
மணமல்லிகை கள்ளவிழுங்
குரவிரி சோலைசூழ்ந்த
குழகன்குட மூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி
யிருந்தானவன் எம்மிறையே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply