காஞ்சி காமாக்ஷி கோவில்

🌼தொண்டை மண்டலம் என்றாலே காஞ்சிபுரம் தான் ஆரம்பம். காஞ்சிபுரம் என்றாலே காமாக்ஷி தான் ஆரம்பம். எனவே முதலில் அவளை வணங்கி தரிசனம் செய்து…..

🌼மூலவர்: காமாக்ஷி

ஸ்தல விருக்ஷம்: செண்பகம்

தீர்த்தம் : பஞ்சகங்கை 

ஆகமம் : சிவாகமம்

பாடல் : ஆதிசங்கரர் 

புராணப் பெயர் : கச்சி

விழா : மாசி 10 நாள் பிரம்மோற்சவம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அவதார உற்சவம்.

🌼காஞ்சி குறைந்தது 1வாரம் தங்கனும் 

🌼 காளிதாசன்👉 முக்தி தரும் ஏழில் முதன்மையானது காஞ்சி 

🌼 புஷ்பேஷு ஜாதி, பத்ரேஷு வில்வம், அது போல் நகரேஷு காஞ்சி..

🌼இது ஆகாசத்தில் இருந்து

பார்த்தால் ஒரு ஸ்ரீ சக்கரம் எப்படி இருக்குமோ அந்த ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பு காஞ்சிக்கு.

🌼கணபதி ஆனந்த லோகம் 

சிவன் கைலாசம், மஹாவிஷ்ணு வைகுண்டம், ஜகன்மாதா ஸ்ரீபுரம், அந்த ஸ்ரீபுரம் தான் காஞ்சி.

🌼காஞ்சியில எங்கேயும் தனியான தேவி சன்னதி கிடையாது. இங்கேயே மூலஸ்தானத்திற்கு பின்னாடி கவனித்தோம் என்றால் உமையொரு பாகனாக சுவாமி இருப்பார்.

🌼 சுவாமி அம்பாள் பிரதானம். தனியா எங்கேயும் அம்பாள் சன்னதி கிடையாது. எந்தக் கோவிலா இருந்தாலும் அந்த கோவிலினுடைய வாசல் காமாட்சியம்மனை நோக்கியதாக இருக்கும்.

🌼வேற எங்கும், எந்த கோவில் உற்சவமா இருந்தாலும், அந்த உற்சவர் அந்தக் கோவிலின் 4 ராஜ வீதில தான் ஊர்வலம். ஆனால் இந்த ஊர்ல, எந்த கோவிலாக இருந்தாலும், காமாட்சி அம்மனை சுற்றி இருக்கிற ராஜ வீதியில் தான் ஊர்வலம் வரும். இங்கு காமாட்சி அம்மனே பிரதான தேவதை, பிரதான அம்பிகை.

🌼 நம்மாத்துல அம்பாளை பிரார்த்தனை பண்ணி ரெண்டு பத்திர புஷ்பத்தை சாத்தினா ஓடி வந்துடுவா.

🌼காமாட்சி உட்கார்ந்து கொண்டிருக்கிற பீடம் ரத்ன சிம்ஹாசனம். அம்பாள் பத்மாசனத்தில் பாங்காக கர்ப்ப கிரஹத்துல இருக்கா.

🌼அம்பாளுக்கு பக்கத்துல, கர்ப்ப கிரஹத்தில், (நாமெல்லாம் பார்க்க முடியாது ) ஒத்த கால்ல நின்னுண்டு தபஸ் பண்ணின்டு இருக்கா.

🌼அப்புறம் அர்த்தமண்டபத்துல ஒரு பெரிய பிலம் இருக்கு. அந்த துவாரத்துல வசின்யாதி  தேவதைகள் இருக்கா. அந்த பிலத்துக்குள்ள தான் பண்டாசுரனை சம்ஹாரம் பண்றதுக்காக அம்பாள் வந்தா.

🌼கர்ப்ப கிரகத்தை ஒட்டிய அந்த மண்டபத்திற்கு காயத்ரி மண்டபம் என்று பெயர். 24 அக்ஷரம் போல் 24 தூண்.

🌼காயத்ரி மண்டபத்தை ஒட்டி வந்தாக்க ஜயஸ்தம்பம். அங்கே (உள்ளுக்குள்ள) இருக்கு. அம்பாள் அந்த இடத்தில் உள்ளுக்குள்ள நாபி ஸ்தானமா இருக்கா.

🌼உலகில் உள்ள அத்தனை உயிர்களும் (நாம வயித்துக்குள் இருக்கும் பொழுது எப்படி தொப்புள் கொடி மூலமாக நமக்கு உணவு போகிறதோ அது மாதிரி) அத்தனை பேரையும் தன் கண்களால் காத்து ரக்ஷிக்கிறாள். அந்த இடம்தான் தொப்புள் கொடி.

🌼அதுக்கு பக்கத்துல அஞ்சன காமாக்ஷினு. அந்த காலத்துல உள்ள வரைக்கும் சன்னதியில் விட்டுண்டு இருந்தா. அர்ச்சகர் குங்குமம் தருவார். அதை எடுத்துண்டு போய் அவளுக்கு சாத்தணும். அது அவளிடமிருந்து  கீழே விழும். அதுக்கப்புறம் அதை எடுத்துண்டு பிரசாதமா வச்சுக்கணும்.

🌼அப்படியே அதனுடைய கோஷ்டத்தில் வாராஹி இருக்கா. அருகில் ராஜசியாமளை. அதுக்குப் பக்கத்துல பெருமாள். இதெல்லாம் சேர்ந்தது அந்த கர்ப்பகிரஹ மண்டபம்.

🌼 இதைத் தவிர உற்சவ மூர்த்தியா காமாக்ஷி ஒரு பக்கம் சரஸ்வதி ஒரு பக்கம் மஹாலட்சுமியா நடுவுல ஜகன் மாதாவா, பராபரி நின்ன கோலத்தில் உற்சவ காமாக்ஷி.

இது தவிர பங்காரு காமாக்ஷி இங்கே இருந்தா. இப்போ யஞ்ய சாலையா இருக்கு.

🌼தங்கத்தாலேயே செய்யப்பட்ட பிரதான உற்சவமூர்த்தி பங்காரு காமாக்ஷி. மிலேச்சர்களின் படையெடுப்பு👉 உற்சவமூர்த்தி to உடையார்பாளையம், Near கங்கைகொண்ட சோழபுரம்.

🌼இந்த உடையார் பாளையத்தில் தான்- வரதராஜ பெருமாள் விக்ரஹம், பங்காரு காமாட்சி விக்ரஹம், சிதம்பர நடராஜர் பெருமானின் விக்ரஹம், ஸ்ரீரங்கம் நம் பெருமாளின் விக்ரஹம், திருவஹீந்திரபுரம் ஹயக்ரீவரின் விக்ரஹம் – இப்படி பற்பல தேவதைகள் பற்பல தெய்வங்களுக்குரிய பாதுகாக்கப்பட்ட தெய்வத்திருமேனிகள் அங்கே வைக்கப்பட்டது. 

🌼பிற்காலத்தில் அதை எல்லாம் எப்படி எடுத்துண்டு வந்தா? இஸ்லாமியர்கள் பிணத்தை கண்டால் பயப்படுவா. அம்மை போட்டிருக்குன்னா பயப்படுவா.

பிணம் எதாவது போச்சுன்னா ஓடி போய்டுவா. அதனால இவா அந்த உற்சவர் எல்லாம் எடுத்துண்டு வரச்சே, பிணத்தை தூக்கிண்டு போற மாதிரி, உற்சவரை பிணம் மாதிரி வெச்சுண்டு தான் எடுத்துண்டு வந்தா.

🌼அப்படி பாதுகாக்கப்பட்ட பங்காரு காமாட்சி இங்கே இருந்து கிளம்பி வந்து தஞ்சம் புகுந்த இடம் தஞ்சாவூர். தஞ்சாவூர்ல மேல வீதியில் வந்து பங்காரு காமாக்ஷியை தரிசனம் பண்ணினால்தான் காமாக்ஷி அம்மன் தரிசனம் சம்பூர்ணமாகும்.

🌼அப்புறமா காமாக்ஷியை பிரதக்ஷணம் பண்ணின்டு வரச்சே துர்வாச மகரிஷி இருப்பார்.

🌼அழகான கோவில் ஒவ்வொரு யுகத்தில் ஒவ்வொருவரால் பூஜிக்கப்பட்டவள்- பரசுராமர் துர்வாசர் ஜமதக்னி தௌம்யர் ஆதிசங்கரர்.

🌼எல்லா கோவில்களுக்கும் உண்டான மூலமூர்த்தி அன்னை காமாக்ஷி

51 சக்திபீடத்தில் நாபிஸ்தானம்.

🌼சப்த மோக்ஷ புரிகள்ள காசிக்கும் காஞ்சிக்கும் ரொம்ப தூரம் கிடையாது. ஒரு அங்குலம் தான். நடுவுல இருக்கிற  ‘ஞ்’, INCH தான்.

🌼இங்கு எல்லாமே கோடி. அம்பாள் காமகோடி. ஸ்வாமியின் விமானம் ‘ருத்ரகோடி’. வரதராஜ பெருமாள் கோவில் விமானம்  புண்ணியகோடி’. வாசல்ல 1ரூ தானம் செய்தால் 1 கோடி. ஒருவருக்கு அன்னதானம் செய்தால் 1 கோடி பேருக்கு செய்த பலன். அப்பேர்ப்பட்ட விசேஷமான திவ்யக்ஷேத்ரம்.

🌼லோகநாயகி ஜகத்ஜனனி ஸ்ரீசக்கர ராஜ பீடத்திலே எழுந்தருளி இருக்கக்கூடிய சிம்ஹாசனேஸ்வரி லலிதாம்பிகை ஆதிபராசக்தி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி கருணை கடலாக பக்தர்கள் அத்தனை பேரையும் ரக்ஷிக்கக்கூடிய தேவி, நமக்கு அனுகிரஹம் பண்ணக்கூடிய பரமேஸ்வரி ஒய்யாரமாக எழுந்தருளி வீற்றிருக்கிறாள்.

🌼ஸ்ரீ சக்கர மஹாமேரு எவ்வாறு அமைந்திருக்குமோ, ஸ்ரீ சக்கரத்திலே எவ்வாறு தேவதைகள் எல்லாம் உறைந்து அருள் புரிவார்களோ அப்படியே உண்டாக்கி தரப்பட்ட ஆனந்த மயமான ஆலயம் ஷேத்திரம்.

🌼51 சக்தி பீடத்திலே காமகோடி பீடமாக, அறம் பொருள் இன்பம் பேரின்பம் என எல்லாவற்றையும் நமக்குத் தந்தருளி செய்யக் கூடிய ஜகன்மாதா அருள் பாலிக்கிறாள்.

🌼காஞ்சியிலே எத்தனையோ சிவாலயங்கள் பெருமாள் கோவில்கள் 👉 அத்தனைக்கும் காரண காரிய வித்தாக / அனைத்துமே காஞ்சி காமாக்ஷி கோவிலின் வரலாற்றை ஒட்டியே காணப்படும். அப்படி ஒரு மகத்துவம், மகிமை.

🌼ஏனென்றால் இவளே மூலப் பிரக்ருதி. இவளே எல்லாவற்றி ற்கும் காரண காரியம், இவளே  மூலம். இவளே ஆதி. காஞ்சி காமாக்ஷி காசி விசாலாக்ஷி மதுரை மீனாக்ஷி திருவாரூர் கமலாம்பிகை. 

🌼கிருத யுகம்-  பரசுராமர் திரேதா யுகம் – துர்வாசர் துவாபர யுகம் – தௌம்யர் 

கலியுகம் – ஆதிசங்கரர் .

பல்லாயிரக்கணக்கான மந்திரங்களினாலே கூட்டி தரப்பட்ட மூலப் பிரக்ருதி அவள். பூஜையோ வழிபாடோ எல்லாம் துர்வாச கல்பம் எனும் மஞ்சரியிலேயே அனுஷ்டித்து செய்யப் படுகிறது.

🌼உஷத் காலத்திலே கோ பூஜையுடன் தன் கண்களை பக்தர்களுக்கு கடாக்ஷித்து அருளுகிறாள். கர்பகிரகத்திலே பத்மாசனத்திலே  4 கரங்களிலே பாசாங்குசத்தோடு கரும்பு வில்லோடு அழகிய திருமுக மண்டலத்தோடு நாம் எல்லோரு க்கும் எல்லாவற்றையும் தர வீற்றிருக்கிறாள். தென்கிழக்கு  நோக்கிய திருமுகம்.

🌼யார் வந்து நின்று பார்த்தாலும் ஒரு தாயோடு கன்று சேரக்கூடிய நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. சப்தமோக்ஷபுரியில் ஒன்றே ஒன்று தெற்கில், அது இதுவே.

🌼ஸ்தல சிறப்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹51சக்தி பீடத்தில் ஒன்று காமகோடி. தங்க விமானத்தின் கீழ் பத்மாசனத்தில் அருள் பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரம். இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.

🌹காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் அன்னபூரணி சந்நிதி உள்ளது. ஐப்பசி மாதம் இங்கு அன்னாபிஷேகம் நடக்கும். இந்த சந்நிதியில் தர்ம துவாரம் பிக்ஷதுவாரம் உள்ளது.

🌹 அம்பிகையை வணங்கி பிக்ஷ துவாரத்தில் வழியாக ” “அன்னபூர்ணே சதா பூர்ணே- பவதி பிக்ஷாம் தேஹி” என்ன கையேந்தி பிக்ஷை கேட்க வேண்டும் என்பது விதி. இப்படி செய்து வழிபட்டால் அம்பாள் நம்மை எவ்வித சிரமமும் இன்றி உணவு கொடுத்து காப்பாற்றுவாள்.

🌼ஸ்தல பெருமை👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹துர்வாச முனிவரால் கிருத யுகத்தில் 2000 ஸ்லோகமும் 

பரசுராமரால் திரேதா யுகத்தில் 1500 ஸ்லோகமும், துவாபர யுகத்தில் தௌமியாசார்யாரால் 1000 ஸ்லோகங்களும், கலியுகத்தில் ஆதிசங்கரரால் 1500 ஸ்லோகங்களும் பாடப் பட்ட பெருமை காமாக்ஷிக்கு..

🌹இங்கு அம்பிகைக்கு 3 வடிவங்கள் உள்ளன. அவற்றை ஸ்தூலம் சூட்சுமம் காரணம் என்று கூறுவார்கள். பார்த்தவுடனேயே சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்து அருள்வதால் காமகோடி காமாக்ஷி என அழைக்கப்படுகிறாள்.

🌼 தொண்டை மண்டலம் பெயர் காரணம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹 கோவிலின் விசேஷ அம்சம் துண்டீர மஹாராஜா சந்நிதி ஆகும். இங்கு ஆட்சி செய்த ஆகாச பூபதி என்ற அரசனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவன் காமாக்ஷியை தினந்தோறும் மனமுருகி வழிபட்டு வந்தான்.

🌹இவனது பக்திக்கு மகிழ்ந்த அம்பாள், தனது மகன் கணபதியையே மன்னனுக்கு மகனாக கொடுத்தாள். கணபதியும் மன்னரின் குடும்பத்தில் துண்டீரர் என்ற பெயரில் அவதரித்தார். ஆகாச ராஜனுக்கு பிறகு துண்டீரரே சிறப்பாக ஆட்சியும் செய்தார்.

🌹 துண்டீரர் ஆட்சி செய்த காரணத்தினால் தான் இப்பகுதி தொண்டை மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. துண்டீர மகாராஜா அம்மனை வணங்கிய நிலையில், காமாக்ஷி சந்நிதிக்கு எதிரில் உள்ளார்.

🌹சக்தி பீடத்தில் மிக முக்கிய மான தலம். பிரம்மா விஷ்ணு ருத்ரன் ஈஸ்வரன் சதாசிவன் ஆகிய பஞ்சபிரம்மாக்களை தனக்கு ஆசனமாகக் கொண்டு ம், 4 கைகளுடன், தென்கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறாள். கைகளில் பாசம் அங்குசம் புஷ்ப பானம் கரும்புவில் ஏந்தி இருக்கிறாள். காமாக்ஷிக்கு  லலிதா ராஜராஜேஸ்வரி திருபுர சக்கர நாயகி ஆகிய பெயர்களும் உண்டு. 

🌼 துர்வாச சிறந்த தேவி பக்தர். லலிதாஸ்தவ ரத்னம் என்ற நூலை இயற்றியவர். இவரே இப்போதுள்ள அம்மனின் மூலவிக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தவர். அம்மன் முதன்முதலில் காட்சி தந்ததும் இவருக்கே.

🌼 அம்மனின் எதிரில் உள்ள ஸ்ரீ சக்கரம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினாராம். இங்கு காமகோடி காமாக்ஷி தபஸ் காமாக்ஷி பங்காரு காமாக்ஷி அஞ்சன காமாக்ஷி உற்சவர் காமாக்ஷி ஆகிய ஐந்து காமாக்ஷிகள் உள்ளனர்.

🌼 காமாக்ஷி தத்துவம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

காம எனும் 51 அக்ஷரங்களை பார்வையாக கொண்டவள்.

கா என்றால் 1, ம என்றால் 5, க்ஷி என்றால் 6, அதாவது 5 திருநாம ங்களையும், சக்தி பேதம் 3, சிவபேதம் 2 , விஷ்ணு பேதம் 1 எனும் 6 வகை பேதங்களை  கொண்டவள். மற்றும் கா என்றால் சரஸ்வதி மா = மகேஸ்வரி, க்ஷி= லக்ஷ்மி இம்மூன்று தேவதைகளும் ஒன்றாக இணைந்தவள்.

🌹காம கடவுளாகிய மன்மதனிடம் தான் கரும்பும் புஷ்ப பானமும் இருக்கும். இவை இரண்டையும் காமாக்ஷி வைத்திருப்பதன் காரணம், மன்மதன் ஜீவன்களிடையே இந்த வில்லையும் அம்பையும் வைத்துக்கொண்டு அடங்காத காம விகாரத்தை உண்டாக்கி வரும்படி அவனுக்கு அச்சக்தியை அளித்திருக்கிறாள். பக்தர்களிடமும் ஞானிகளிடமும் உன் கைவரிசையை காட்டாதே என்று மன்மதனிடம் கூறி அவனிடமிருந்து கரும்பையும் புஷ்ப பானங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு விட்டாள் தேவி என்று காஞ்சி பெரியவா சொல்றா.

🌼ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹பண்டாசுரன் எனும் அசுரன், யாரையும் வெல்லும் வரமும், தன்னால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதையும் தனக்கே கிடைக்கும் வகையிலான வரமும் பெற்றிருந்தான்.

🌹ஆனால் அனைவருக்கும் மரணம் உண்டு என்ற பொது விதியின் அடிப்படையில் அவனுக்கு  9 வயது பெண் குழந்தையால் தான் மரணம் நிகழும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

🌹அவனால் தேவர்களுக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டதால், அன்னை பராசக்தி, காமாக்ஷி யாக  அவதாரம் எடுத்து, அவனை அழித்து இத்தலத்தில் எழுந்தருளினாள். கோபமாக இருந்த அம்மனை சாந்தப்படுத் துவதற்காக ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் ஏற்படுத்தி, உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினார்.

🌼பிரார்த்தனை👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹திருமண வரம், குழந்தை வரம் ஆகியவையே இந்த தலத்திற்கு வரும் பக்தர்களின் முக்கிய வேண்டுதலாக உள்ளது. இங்குள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

🌹தசரத சக்கரவர்த்தி இங்கு வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்து தான் ராமர், லட்சுமணர் ஆகியோர் பிறந்ததாக வரலாறு சொல்கிறது.

🌼அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கும், பஸ் நிலையத்திற்கும் மிக அருகிலேயே இக்கோவில் அமைந்துள்ளது.

6AM to 11AM, 4PM to 8PM

044 27222609, 9498812609

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *