கற்குடி உய்யக்கொண்டான் உஜ்ஜீவநாதர்
மூலவர் :உஜ்ஜீவநாதர் அம்பாள் :அஞ்சனாட்சி
ஸ்தல விருக்ஷம்
தீர்த்தம் : பொன்னொளிர் ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோணக்கிணறு, நாற்கோணகிணறு என 5 தீ.
புராணப்பெயர் : கற்குடி
ஊர் : உய்யக்கொண்டான்
பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 4
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மார்க்கண்டேயரின் உயிரைக் காப்பதாக வரம் கொடுத்ததால் சிவனுக்கு உய்யக்கொண்டார். ஆடி பௌர்ணமி அன்று இரவில், மார்க்கண்டேயருக்கு சிவன் காட்சி தந்ததாக ஐதீகம். எனவே அந்நாளில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும் தவிர பௌர்ணமி தோறும் இரவில் சிவனுக்கு தேன்,பாலபிஷேகம் நடக்கும்.
இவரே ஜீவன்களுக்கு ஆதாரமாக இருப்பதால் ஒரு உஜ்ஜீவன நாதர்.
சாரமா முனிவரால் பட்டம் சூட்டப்பட்ட மன்னனுக்கு சிவன் இங்கு ஆனந்த தாண்டவ தரிசனம்.
பாதத்தை மட்டுமே பிடிமானமாக கொண்டு இந்த நடராஜர் சிலை விசேஷம்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மலைக்கோவில் ஓம் வடிவில் அமைந்துள்ளது. உஜ்ஜீவநாதர் அஞ்சனாட்சி அம்பாள் இருவரும் மேற்கு நோக்கி இருப்பது இன்னும் சிறப்பு. இவர்களது சன்னதிக்கு நடுவே கிழக்கு நோக்கி பாலாம்பிகை இருக்கிறாள்.
தை மாதத்தில் ஒரு நாள் மாலையில் சிவலிங்கம் அஞ்சனாட்சி அம்பிகை மீது சூரிய ஒளி விழும். அந்நாளிலிருந்து 90 நாட்களுக்கு ஒரு முறை என வருடத்தில் நான்கு முறை இங்கு சூரிய பூஜை நடக்கும்.
பிரகாரத்தில் “இடர் காத்தவர்” என்ற பெயரில் சிவலிங்கம் இருக்கிறது அப்பர் தேவாரத்தில் சிவனை இப்பெயரில் குறிப்பிட்டுள்ளார். ராவணனை தம்பி கரண் வழிபட்ட லிங்கம் இது.
இங்குள்ள சுப்பிரமணியரிடம், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடும் அறிவை கொடு என வேண்டி பாடியுள்ளார். வைகாசி விசாகத்தன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று சுவாமி புறப்பாடும் உண்டு.
ஜேஷ்டாதேவி & வாக்தேவி (ஆதிபராசக்தி ஸ்வரூபம் ) சிறப்பு. இந்த தேவியை தரிசித்தால் விபத்துகளில் இருந்து நம்மை காப்பாற்றுவாள். எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். இங்கு இவளின் இருபுறமும் இரு குழந்தைகள் வைத்திருக்கிறாள். ஒரு குழந்தை நந்திகேஸ்வரர் குழந்தை வடிவத்தில் இருப்பது போல் உள்ளது. இவரை மாடன் என்கிறார்கள். மறுபுறத்தில் அழகிய பெண் வாக்தேவதை. இவளை சேடி என்கிறார்கள். ஆதிபராசக்தியே இங்கு ஜேஷ்டா தேவியாக இருக்கிறாள். இவள் தனது சேடியான ( பணிப்பெண் ) வாக் தேவதையும் அழைத்து வந்திருக்கிறாள். மாறுபட்ட இந்த அம்பிகையை வழிபட்டு வாழ்வில் நிகழ இருக்கும் விபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம்.
50 அடி உயர மலையில் இந்த கோயில் இருக்கிறது. கோயிலை சுற்றி பொன்னொளி ஓடை குடமுருட்டி எண்கோணக்கிணறு நாற்கோண கிணறு ஆகிய தீ உள்ளன. தேவி அஞ்சனாட்சி என வழங்கப்படுகிறார். இவள் மை தீட்டப்பெற்ற கண்களைக் கொண்டவள். மற்றொரு அம்பிகை பாலாம்பிகை. இருவருக்கும் தனித்தனி வழிபாடு.
மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சுவாமி உஜ்ஜீவநாதர், எண்ணிய விருப்பங்களை ஈடேற்றுவதால் கற்பகநாதர்.
இறைவன் கல்லில் (மலையில்) வீற்றிருப்பதால் கற்குடி.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மிருகண்டு முனிவர் தனக்கு சந்தான பாக்கியம் இல்லாத குறையை நீக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டு தவமிருந்தார். அவரின் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் அவர் முன் தோன்றி, உனக்கு அறிவற்ற 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய அறிவும், படிப்பும், இறை வழிபாட்டில் சிறந்தும் விளங்கும் ஒரு மகன் வேண்டுமா என்று கேட்டபோது, அறிவில் சிறந்த ஒரு மகன் போதும் என்று வரம் பெற்றார். அதன்படி பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டினார்.
மார்க்கண்டேயனுக்கு 16 வயது நெருங்கும்போது, மிருகண்டு முனிவர் அவனுடைய ஆயுள் விவரத்தைக் கூறி, இறைவன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்து பூஜிக்கும்படி கூறினார். மிருகண்டு முனிவரின் மகனான மார்க்கண்டேயர், தனது 16-வது வயதில் எமனிடமிருந்து உயிர் காக்க பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டார்.
எம பயத்திலிருந்து தப்பிக்க மார்க்கண்டேயர் இத்தலத்திற்கு வந்து இறைவனை வேண்டினார். அவரின் பக்தியை மெச்சிய சிவபெருமான், மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்து அருள் புரிந்த தலம் இதுவாகும்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தேவாரப் பாடல் பெற்ற காலத்தில் கற்குடி என்றும், தற்போது உய்யக்கொண்டான்மலை என்றும் வழங்கும் சிவஸ்தலம்.
50 அடி உயர மலையில் அழகாக கட்டப்பட்டுள்ளது கோயில். ராவணனின் சகோதரர்களில் ஒருவனான கரன் இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றவன். இங்கு மூன்றுவாசல்கள் இரண்டு தெற்கு நோக்கியும் ஒன்று கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது.
கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம், 65 படிகள், குன்றின் அடிவாரத்தில் முருகன் சந்நிதி, ஏறும் பொழுது இடப்புறம் விநாயகர், கொடிமரம் முன்பு மார்கண்டேயனை காப்பதற்கு எமனை தடுப்பதற்காக கருவறை விட்டு நீங்கி வந்து நின்ற சுவாமியின் பாதம் உள்ளது. உள்ளே முதலில் மேற்கு நோக்கி காட்சி தரும் அஞ்சனாட்சி அம்பாள். திருமேனி திருக்கரத்தில் பூவின் இதழ் உடைந்து போய் உள்ளது. எனினும் அம்பாள் கனவில் வந்து உணர்த்தியவாறு இப்ப பழைய அம்பாளை அப்புறப்படுத்தாது அப்படியே வைத்துள்ளனர். இதனால் புதிய அம்பாள் பாலாம்பிகை பிரதிஷ்டை. கிழக்கு நோக்கி எதிரில், இருவருக்கும் பூஜை உண்டு.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆயுள் பலம் மற்றும் எம பயம் நீங்க,பிள்ளைப் பேறு மற்றும் ஞானம், நினைத்த காரியம் வெற்றி பெற பிரார்த்தனை.
இத்தலத்தில் வழிபடுவோர் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வங்களையும் பெறுவார்கள்.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பங்குனி பிரம்மோற்சவம்
விநாயகர் சதுர்த்தி
நவராத்திரி
திருக்கார்த்திகை
மஹா சிவராத்திரி மற்றும் பிரதோஷம் சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நாரதர் உபமன்யு மிருகண்டு முனிவர் மார்கண்டேயர் கரன் அப்பர் சம்பந்தர் அருணகிரிநாதர் வழிபட்ட தலம்.
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருச்சியில் இருந்து தென்மேற்கே தில்லை நகர் வழியாக வயலூர் செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் ஒரு சிறிய குன்றின் மேல் இத்தலம் அமைந்திருக்கிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அல்லது சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மூலம் எளிதில் இக்கோயிலை அடையலாம்.
7. 30AM – 12NOON, 5PM – 8PM
99408 53791 கல்யாணசுந்தரம் குருக்கள்
குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வடந்திகழ் மென்முலை யாளைப்
பாகம தாக மதித்துத்
தடந்திரை சேர்புனல் மாதைத்
தாழ்சடை வைத்த சதுரர்
இடந்திகழ் முப்புரி நூலர்
துன்பமொ டின்பம தெல்லாம்
கடந்தவர் காதலில் வாழுங்
கற்குடி மாமலை யாரே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply