ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் பிரணவவியாக்ர புரீஸ்வரர்

🌻மூலவர் : பிரணவவியாக்ரபுரீஸ்வரர் / துயர்தீர்த்தநாதர்

அம்பாள் : பூங்கொடி நாயகி புஷ்பலதாம்பிகை

ஸ்தல விருக்ஷம் : இலந்தை

தீர்த்தம் : கொள்ளிடம் கௌரி தீ

புராண பெயர் : உமாபுலியூர்

பாடல் : அப்பர் சம்பந்தர், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் சோழ நாட்டு வடகரை ஸ்தலம் 31

🌻ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்தது என்றும், ஹோம புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார். உமாதேவி அருள் பெற்ற தலம் என்பதால் “உமாப்புலியூர்’ என்ற பெயர் “ஓமாப்புலியூர்’ என மாறிவிட்டதாகவும் கூறுகின்றனர். காவிரியின் வடகரையில் 63 சிவ ஸ்தலங்கள் உள்ளன. இவற்றில் தெட்சிணாமூர்த்திக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமையப்பெற்ற 31வது ஸ்தலம் ஓமாப்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயிலாகும்.

தீர்த்த சிறப்பு: துர்வாச முனிவரின் சாபத்தால் இரண்டு தேவகன்னிகள் மானிடப் பெண்ணாகவும், பன்றியாகவும் உருவெடுத்தனர். இவர்களை ஒரு புலி துரத்தியது. அவர்கள் இக்கோயிலில் உள்ள கௌரி தீர்த்தத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு நீராடிய ஒரு பெண் கரையில் நின்று கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்தாள். கூந்தலிலிருந்து தெறித்த நீர்த்திவலைகள் அந்த பெண்களின் மீது பட்டன. அவர்கள் தங்கள் முந்தைய உருவத்தை பெற்றனர். அந்த அளவிற்கு இது முக்கியமான தீர்த்த ஸ்தலமும் ஆகும்

பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த சதானந்தன் என்ற அரசன் தொழுநோயால் பாதிக்கப்பட்டான். இவன் சிவபக்தன். அசரீரியின் வாக்குப்படி இவ்வூரிலுள்ள குளத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றான்.

🌻ஸ்தல பெருமை👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சிவன் தக்ஷிணாமூர்த்தியாக உபதேசித்ததால் இது குருமூர்த்தி ஸ்தலமாக கருதப்படுகிறது.

குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது. குரு சன்னதி பொதுவாக கோயில் பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும். ஆனால் இந்த தலத்தில் சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் மத்தியில் மஹாமண்டபத்தில் தக்ஷிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார். இப்படிப்பட்ட அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. குரு ஸ்தலங்களில் தலைசிறந்ததாக கருதப்படுவதற்கு இதுவே. காரணம் ஆகும்.

🌻 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

புலியூர் க்ஷேத்ரம் 5 இருக்கிறது.

சிதம்பரம், பெரும்புலியூர், பெரும் பற்றப்புலியூர், சிறு புலியூர், இந்த ஓமாம்புலியூர். இந்த புலியூர் க்ஷேத்ரங்கள் எல்லாம் பதஞ்சலியும் வியாக்ரபாதரும் பூஜை செய்த க்ஷேத்ரம். எல்லா இடங்களிலும் அவர்கள் சுவாமியை நடராஜர் ஆகவே தரிசனம் செய்தார்கள். அதில் ஓமாப்புலியூர் மிகவும் விசேஷம்.

உமாதேவியார் “ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவன் அதற்குரிய விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக்கும் போது அவரது கவனம் திசை திரும்பவே, அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி சிவன் தண்டனை கொடுத்து விட்டார். அதன்படி பார்வதிதேவி, பூமிக்கு வந்தார். அவர் ஓமாப்புலியூரில் தங்கியிருந்து சிவனை வணங்கி உபதேசம் பெற்றார். உமா என்கிற ஜகன்மாதாவிற்கு சிவபெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த காரணத்தினால் உமாபுலியூர் இப்போ ஓமாம்புலியூர்.

விசித்திராங்கதன் எனும் மன்னனுக்கு சுவாமி மேல் ரொம்ப ஈடுபாடு பக்தி. சுவாமியிடம் பிரார்த்தனை செய்து எனக்கு புரியும் படியாக பிரணவம் மந்திரம் சொல்லிக் கொடுக்கணும் என்று வேண்டிய பொழுது, அகஸ்தியரை வைத்து உனக்கு உபதேசம் செய்கிறேன் என்றாராம். நமக்கெல்லாம் மிகவும் சுலபமாக புரியும் வண்ணம், ” இந்த ஜீவன் எந்த இடத்தில் தோன்றுகிறதோ, எந்த இடத்தில் ஐக்கியம் ஆகிறதோ, எதைப் பற்றி நினைத்தால் அதற்கு மேல் ஒன்றுமே இல்லையோ – அதுதான் எல்லாவற்றிற்கும் காரணமான பிரணவம். அகஸ்தியர் இங்கு அரசனுக்கு அனுக்கிரஹம் செய்த க்ஷேத்ரம்.

🌻ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

3 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கிய கோவில்.

மூலவர் – சதுர பீடத்தில் உயர்ந்த பாணத்துடன் காட்சி தருகிறார். 

அம்பாள் நின்ற கோலத்தில் தனி சன்னதியில்.

இத்தலத்தில் தக்ஷிணாமூர்த்தி சிறப்புடையது; குருமூர்த்தத் தலம். உபதேசம் செய்த தக்ஷிணாமூர்த்தி கோயிலுக்குள்ளேயே மூலமூர்த்தியாக உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சித் தருகிறார். 

சந்நிதியின் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும்; மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

கோயிலில் விநாயகர் சண்முகர் பஞ்சலிங்கங்கள், சண்டிகேஸ்வரர் நடராஜர் பைரவர் சூரியன் சன்னதிகள் உள்ளன.

🌻 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

குரு தோஷம் நீங்க

கல்வி, கேள்விகளில் சிறக்க

துயரங்கள் அகல

மீன ராசி பலன்

ரேவதி நட்சத்திர பரிகாரம்

🌻 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாசி மகப் பெருவிழா

மஹா சிவராத்திரி

நவராத்திரி திருக்கார்த்திகை

🌻 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அம்பிகை வியாக்ரபாதர் பதஞ்சலி அகஸ்தியர் விசித்திராங்கதன் சதானந்தன் அப்பர் சம்பந்தர் சேக்கிழார்

🌻அமைவிடம்,நேரம்,தொடர்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சிதம்பரம் மற்றும் காட்டுமன்

னார்கோயிலில் இருந்து ஓமாப்புலியூருக்கு பஸ் உள்ளது.

சென்னையிலிருந்து எய்யலுர் என்ற ஊருக்கு செல்லும் பஸ்கள் இவ்வூர் வழியே செல்லும்.

8AM – 12NOON, 5PM – 8PM

74021 87572 ஜெகதீச குருக்கள்

90433 55146 வெங்கடேச குருக்கள்

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🌻 கோவில் தேவார பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பூங்கொடி மடவாள் உமையொரு பாகம்

புரிதரு சடைமுடி யடிகள்

வீங்கிருள் நட்டம் ஆடுமெம் விகிதர்

விருப்பொடும் உறைவிடம் வினவில்

தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச்

செறிதரு வண்டிசை பாடும்

ஓங்கிய புகழார் ஓமமாம் புலியூர்

உடையவர் வடதளி யதுவே.

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *