ஐயர்மலை திருவாட்போக்கி இரத்தினகிரீஸ்வரர்

🌼மூலவர் : ரத்னகிரீஸ்வரர்/ வாள்போக்கிநாதர்/ ராஜலிங்கம் அம்பாள் : கரும்பார்குழலி

ஸ்தல விருக்ஷம் : வேம்பு

தீர்த்தம் : காவிரி

புராண பெயர் : ஐயர்மலை / சிவாய மலை / ரத்னகிரி

பாடல் : அப்பர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், காவிரி தென்கரை ஸ்தலம் 1

🌼 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷சித்திரை மாதத்தில் சூரிய கிரகணங்கள் சுவாமி சன்னதிக்கு நேரே உள்ள நவ துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகிறது.

🌷 சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்த பச்சை பால், மாலை வரை கெடுவதில்லை. பத்தி கற்பூரம் விழுந்த போதும் கெடுவதில்லை. அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகின்றது. இது இக்கோயிலில் இன்று வரை நடக்கும் அதிசயமான ஒன்றாகும்.

🌷 இங்கு இறைவனுக்கு கேந்தி பூ சாத்துவதில்லை.

🌷கார்த்திகை ஒன்றாம் தேதி மாணிக்கம் பதித்த விலை மதிப்பற்ற கிரீடம் சூட்டி சுவாமி காட்சியளிப்பார்.

🌷சுற்றிலும் எட்டு பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். 1200 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த சிவஸ்தலம். இம்மலையில் உள்ள பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை.

🌷இறைவன் நவ ரத்தினங்களாக இருப்பதால் இம்மலையைச் சுற்றி அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் பூமிக்கு அடியில் பச்சைக் கற்கள் சிவப்பு கற்கள் ஆகியவை நிறைய கிடைக்கின்றன.

🌼 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷 மணிமுடி இழந்து தேடி வந்த ஆரிய மன்னனுக்கு ரத்தினமும், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பொற்கிழியும் இறைவன் கொடுத்தது இத்தலத்தில் தான்.

🌷காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இவர் தனக்கு குழந்தை பிறந்தால் தன் சிரசை தருவதாக வேண்டினார். வேண்டியபடி சிரசை சுவாமிக்கு காணிக்கையாக கொடுத்த வைராக்கிய பெருமாள். கீழே பாதமும் மேலே சிரசும் வந்தது. தேனும் தேங்காய் பாலும் மட்டும்தான் இவருக்கு அபிஷேகம். பூஜை முடிந்த பிறகு சுவாமியின் மாலை இவருக்குத்தான் போடப்படும். இத்தலத்தில் மிகவும் விசேஷமானவர். முதலில் இவரை வணங்கி சுவாமியிடம் செல்கிறோம்.

🌷நைமிசாரண்யத்தில் சூத முனிவர், “ரத்தினகிரீஸ்வரரை பார்த்தவுடன் பாவம் விலகும் என்கிறார்.”

🌷 அகலிகை பாவம் தீர இந்திரன் வழிபட்ட ஸ்தலம். அகத்தியர் ஆதிசேஷன் வாயு வழிபட்ட ஸ்தலம். கண்டவுடனே பாவங்கள் நீங்கும் இரத்தின கிரிக்குச் சென்றால் உனது பிரேத வடிவம் நீங்கப் பெறுவாய்

என வீரசேனனுக்கு உரோமச முனிவர் வழிகாட்டி, பாவங்கள் நீங்கிய தலம். மஹாவிஷ்ணு அக்னி திசையில் தீர்த்தம் உண்டாக்கி வேண்டி வராஹ அவதாரம் எடுத்தார். பரத்வாஜ முனிவர் தீர்த்தம் உண்டாக்கி தவம் செய்தார். துர்கா தேவி கன்னியா தீர்த்தம் உண்டாக்கி மகிஷாசுரனை வதைத்த பாவம் நீங்க பெற்றாள்.

🌷ஆயர் ஒருவர் அபிஷேகத்திற்காக கொண்டு வந்திருந்த பாலை காகம் கவிழ்த்ததால் எரிந்து போனது. அப்படி கவிழ்த்த எல்லைக்கு மேல் காகம் இப்போதும் பறப்பதில்லை.

🌷தினமும் கால்நடையாகவே காவிரி தீர்த்தம், 8KM நடந்து எடுத்துக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம். ROPECAR வந்த பிறகும் நடந்தே தான் கொண்டு வருகிறார்களாம்

🌷 இயற்கை எழில் சூழ்ந்த காட்சியுடன் விளங்கும் இம்மலை மேருமலையின் ஒரு சிகரம். சோதி லிங்க வடிவமானது.

🌼 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷மணி முடி இழந்த ஆரிய மன்னன் இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்ய கொப்பறையில் காவிரி தீர்த்தம் ஊற்றி நிரப்பப்பட்டது. ஊர் மக்கள் அனைவரும் ஊற்றியும் முற்றிலும் நிரம்பாததால் மன்னன் கோபம் கொண்டு தன் வாளை உருவி சுவாமி மீது வீசினான். இதனால் சுயம்புவில் ரத்தம் வந்தது. பதறிய மன்னன் தவறை உணர்ந்து இறைவனை வணங்கி, இறைவனும் தோன்றி அருளாசி வழங்கி ரத்தினங்களை வழங்கினார். அந்தத் தழும்பு இன்னும் ஸ்வாமியின் முடியில் உள்ளது.

🌼 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

1140 படிகள் கொண்ட மலைக்கோவில்.மலையின் அடிவாரத்தில் ஒரு புஷ்கரணியும் (தீர்த்தக்குளம்) மற்றும் வைராக்கிய பெருமாளின் பாதமும் அமைந்துள்ளன.மலைப் பாதையில் சித்தர்கள் வாழ்ந்ததாக நம்பப்படும் பல இயற்கை குகைகளைக் காண முடியும்.உச்சியை அடைந்ததும் முதலில் வருவது சுரும்பார்குழலி (அராளகேசி) அம்பாளின் சன்னதியாகும். நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அம்பாள் காட்சியளிக்கிறார். அடுத்து இரண்டு அடுக்குகளாக அமைக்கப்பட்ட தனி அமைப்பில் மூலவர் சன்னதி மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இந்த லிங்கத்தின் தலைப் பகுதியில் வெட்டுப்பட்ட தழும்பு (வாள் வடு) காணப்படுகிறது. மூலவர் லிங்கத்திற்கு நேரே ஒன்பது துளைகள் கொண்ட சாளரம் (ஜன்னல்) அமைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் முன்பாக எப்போதும் வற்றாத நீர் நிறைந்த ‘பொய்வாசிக் கொப்பரை’ என்ற சிறிய நீர்த்தொட்டி அமைப்பு உள்ளது.

சென்ற வருடம் மிக எளிதாக ROPE CAR ல் சென்று தரிசனம். Rs.50 one side (2*4=8 பேர்).

காலை 11 மணிக்கு மேல் கோவிலை அடைந்தால் அபிஷேகம் பார்க்கலாம்.

🌼 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷தங்கள் குலதெய்வம் தெரியாதவர்கள் ரத்தனகிரீஸ்வரரை தங்கள் குலதெய்வமாக வழிபடலாம். தவிர இங்கு வழிபட்டால் கல்யாண வரம், தொழில்விருத்தி, புத்திர பாக்யம் ஆகியவை நிறைவேறுகின்றன, மேலும் மன நிம்மதி வேண்டி நிறைய பேர் இம்மலைக்கு வருகின்றனர். இம்மலையில் படிகள் வழியே மலை ஏறும் போது ஏராளமான மூலிகை மரங்கள் இருபுறமும் உள்ளன. இத்தகைய அபூர்வமான மூலிகை காற்றை சுவாசிப்பதால் உடலில் உள்ள ஆஸ்துமா ரத்தக்கொதிப்பு நெஞ்சுவலி கைகால் மூட்டு வலி இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் ஒருமுறை மலை ஏறி விட்டு வந்தாலே அதிசயமான மாற்றத்தை அடைவதை முழுமையாக உணர முடியும். இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி வந்து வழிபட்டால் கூடிய விரைவில் குணமடைவது கண்கூடாக நடந்து வரும் அதிசயமான உண்மை.

🌼 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சித்திரை பெருந்திருவிழா

கார்த்திகை சோமாவார திருவிழா

தைப்பூசம் மற்றும் தெப்பத் திருவிழா

கிரிவலம் (பௌர்ணமி விழா)

மஹா சிவராத்திரி

ஐப்பசி அன்னாபிஷேகம்

🌼 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சம்பந்தர், அப்பர், இந்திரன், சயந்தன், வாயு, ஆதிசேஷன், அகத்தியர், சித்தர்கள், பஞ்ச பாண்டவர்கள், ஆரிய மன்னன், வைராக்கிய பெருமாள், மஹாவிஷ்ணு, துர்கை, பரத்வாஜ முனிவர் முதலியோர்.

🌼அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

குளித்தலையிலிருந்து 10 KM குளித்தலை பேருந்து நிலையத்திலிருந்து மணப்பாறை செல்லும் பேருந்துகளில் ஏறி, ‘அய்யர்மலை’ நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.

திருச்சியிலிருந்து குளித்தலை சென்று, அங்கிருந்து மணப்பாறை மார்க்க பேருந்துகள் மூலம் அய்யர்மலையை அடையலாம.

10AM to 5PM

98428 45228 சண்முகசுந்தரம் சிவாச்சாரியார்

97880 66514 சுவாமிநாத சிவாச்சாரியார்

88527 66787 சிவராஜ் சிவாச்சாரியார்

90951 75011 ஜம்புநாதன் சிவாச்சாரியார்

94889 76135 சிவசங்கரன் சிவாச்சாரியார்

9566828612 ஸ்ரீபவன் சிவாச்சாரியார்

🌼 கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கால பாசம்

பிடித்தெழு தூதுவர்

பால கர்விருத்

தர்பழை யாரெனார்

ஆல நீழ

லமர்ந்தவாட் போக்கியார்

சீல மார்ந்தவர்

செம்மையுள் நிற்பரே. 1

திருநாவுக்கரசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *