ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர்

🌼மூலவர் : தான்தோன்றியப்பர்

உற்சவர் : ஆயிரத்தில் ஒருவர்

அம்பாள் : வாள்நெடுங்கண்ணி,

ஸ்தல விருக்ஷம் : கொன்றை, பாக்கு, வில்வம்

தீர்த்தம் : கடகநேத்ரி தீ, குமுத தீ

பு.பெ : யாருக்கு ஊர்,

ஊர் : ஆக்கூர்

பாடல் : அப்பர் சம்பந்தர்

சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தெற்கரை ஸ்தலம் 46.

🌼 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷63ரில் ஒருவரான கோச் செங் சோழன் கட்டிய 70 மாடக் கோவில்களில் ஒன்றாகும். ஊர் மக்கள் கோயில் கட்ட வேண்ட, அரசனும் இசைய, இடம் தேர்வு செய்யும் நாளில் மிகப்பெரிய ஒலி எழ, அந்த இடத்தை அகழ்ந்து பார்க்கும் பொழுது ஆதிரையானின் அருள் மேனி மின்னொளியாக பிரகாசிக்க கண்டு, அந்த இடத்திலேயே கோயில் அமைத்திருக்க வேண்டும்.

🌷இறைவன் தானாக கிடைக்கப்பெற்றமையால் தான்தோன்றி அப்பர். இவர், அவ்வாறு அகழும் பொழுது கிடைக்கப்பெற்றமையால், லிங்கத்தின் பானம் பிளந்து சிதைந்த நிலையில் இன்றும் காணலாம்.

🌷மார்க்கண்டேயருக்காக காலனை (யமனை ) வதம் செய்ய சுவாமி சிரசு வெடித்து விஸ்வரூபத்தில் எழுந்து வதம் செய்தார்👉 செவி வழி செய்தி. இது போன்ற அமைப்பு எந்தக் கோவிலிலும் இல்லை.

🌷இந்த சிவலிங்கம் கோச்செங்க சோழனுக்கு முன்னும் ஒரு காலத்தில் வழிப்பட்டு வந்திருந்து பிறகு யாதொரு காரணத்தினாலோ மண்மூடி கிடந்திருத்தல் வேண்டும். எனவே ஞானசம்பந்தர், “தொன்மையால் தோற்றம் கேடு இல்லாதான்,தொல் கோயில்” என சிறப்பித்துக் கூறுகிறார்.

🌷கோச்செங்சோழன் காலம்

4ம் நூற்றாண்டின் கடை என கணிக்கப்படுகிறது. எனவே இக்கோயில் 4 நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.

🌷சீறப்புலிநாயனார் பிறந்து வாழ்ந்து முக்தி அடைந்த ஸ்தலம்.

🌷 இறைவனே வந்து பந்தியில் அமர்ந்து விருந்து உண்ட பெருமையை உடைய தலம்.

🌼 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷காசியை விட வீசமதிகம்.

கோயிலில் பின்புறத்தில் உள்ள விநாயகர் – பொய்யா விநாயகர். இவர் அந்தன ரூபத்தில் மன்னனிடம் வந்து என்ன பிரச்சனை எனக் கேட்டார். அதற்கு மன்னன், ‘சிவனுக்கு கோயில் கட்ட வேண்டும். ஆனால் சுவர் இடிகிறது” என்றார். அதற்கு இங்குள்ள குளத்தில் மூன்றே முக்கால் நாழிகை மூழ்கு, பதில் கிடைக்கும் என்றார். ராஜாவுக்கோ குளத்தில் மூழ்கினால் எப்படி பதில் கிடைக்கும் என சந்தேகம்.

🌷இதை அறிந்த விநாயகர், காசியை விட வீசம் அதிகம் இந்த குளத்தில், காசியில் விட்ட பொருள்கள் எல்லாம் இந்தக் குளத்தில் கிடைக்கவே, மன்னனின் சந்தேகம் தீர்ந்தது. குளத்தில் மூழ்கிய மன்னன் இறைவனை நினைத்து எழுந்தான். கூடவே கோயிலின் கர்ப்ப கிரகமும் வந்தது. மகிழ்ச்சி அடைந்த மன்னன் மீதி கோவிலை கட்டி முடித்தான்.

🌷வாள்நெடுகண்ணி அம்மை 👉

ஒரு சமயம் சிவனும் பார்வதியும் பூலோகத்தை சுற்றி வரும் பொழுது பார்வதி இறைவனிடம் பூலோகத்தில் அழகிய மாளிகை அமைத்து, அதில் வாசம் செய்ய வேண்டும் என்று இறைவனிடம் கூறிய போது, சிவபெருமான் இந்த ஆசை வேண்டாம் என்றார்.

🌷அம்பிகை பிடிவாதமாக இருக்க இறைவனும் அம்பாளின் கோரிக்கைக்கு அப்படியே ஆகட்டும் எனக்கூறி தேவதச்சன் விஸ்வகர்மா தலைமையில் தேவர்களைக் கொண்டு மாளிகை அமைக்கப்பட்டது.

🌷மாளிகை முழுமை பெற்று கிரஹப்பிரவேசம் செய்ய முனிவர் புலஸ்தியர் தலைமையில் பல ரிஷிகள் கிரஹப்பிரவேசம் செய்தனர்

🌷இறைவனும் இறைவியும் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ள இவ்வேளையில் புலஸ்திய முனிவரிடம் உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்ற பொழுது புலஸ்திய முனிவரும், இதர அனைத்து முனிவர்களும் உங்களது அருள் மட்டும் போதும் இறைவா என்றனர்.

🌷ஆனால் புலஸ்திய முனிவரின் தர்மபத்தினி, இந்த மாளிகை வேண்டும் என தெரிவித்தார். இதனை சற்றும் எதிர்பாராத பார்வதி தேவி இந்த மாளிகை என்றும் ரணகளமாகட்டும் என

சாபமிட்டு இறைவனிடமிருந்து விடை பெற்று பூலோகத்தில் அத்ரி மகரிஷியின் வளர்ப்பு மகளாக பிறந்து வளர்ந்தார்.

🌷பார்வதி தேவியை பிரிந்து இறைவன் கைலாயத்தில் தியானத்தில் மூழ்கினார். இப்படியே பல ஆண்டுகள் கடந்த போது இறைவனிடம் அகத்திய முனிவர் இறைவா அம்பிகையுடன் சேர்ந்து எப்போது அருள்புரிவீர்கள் என வினவினார்.

🌷இதற்கு சிவபெருமான் அம்பிகை தற்போது அத்ரி மகரிஷியின் மகளாக கட்கநேத்ரியாக, பூலோகத்தில் பிறந்து வளர்ந்து வருகிறாள். அம்பிகை என்னை சேரும்

நாள் நெருங்கி விட்டது என்றார். ஆனால் தன் திருமணத்திற்கான மந்திரத்தை அம்பிகை ஜபம் செய்து வந்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.

🌷பார்வதி தேவியும், அகத்திய முனிவரிடம் இறைவனிடம் சேர என்ன செய்யவேண்டும் என கேட்டபொழுது அகஸ்தியர், சுயம்வர மந்திரத்தை உபதேசித்தார். அன்று முதல் அம்பிகை நாள்தோறும் தவம் செய்ய, இறைவனே நேரில் வந்து அம்பிகையை ஆட்கொண்டார்.

🌷அம்பிகையை ஆட்கொண்ட மாதம் பங்குனியில் வரும் வசந்த

நவராத்திரி காலம். ஆதலால் இன்றும் இக்கோயிலில் வசந்த நவராத்திரியில் திருமண வைபவம் நடைபெற்று வருகிறது.

🌷 அம்பிகை நாள்தோறும் ஜபம் செய்த இடம் ஆக்கூர் ஆகும். ஜபம் செய்த மந்திரம் சுயம்வர பார்வதி மந்திரம் ஆகும். அகஸ்தியருக்கு மணக் கோலத்தில் காட்சியளித்த ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இன்றும் ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் தேவஸ்தானத்தில் மணக் கோலத்தில் இறைவனும் இறைவியும் அருள் பாலிக்கிறார்கள்.

🌷அம்பிகை அமர்ந்த மாளிகை இலங்கையில் உள்ளது. புலஸ்திய முனிவரின் பேரன்கள் தான் குபேரன் இராவணன் ஆகியோர் ஆவர்.

🌷புலஸ்தியர் விஷ்ரவஸ் அகத்தியர் நிதாகர் அத்ரி மகரிஷி வாழ்ந்த ஸ்தலம் ஆக்கூர். இங்குதான் தினம் 5 வேள்விகளை செய்தும், 4 வேதங்களைக் கற்றும், 6 அரங்கங்களை கற்றும் குபேரன் வாழ்ந்தான் என புராண வாயிலாக அறியப்படுகிறது. குபேரன் பிறந்த ஊரும் குபேரன் வழிபட்டு வந்த தான்தோன்றீஸ்வரர் சுவாமியையும் வாள்நெடுங்கண்ணி அம்மையையும் ஒவ்வொரு செவ்வாய் வெள்ளி ஞாயிறு தரிசித்தும் அர்ச்சனை செய்தும் வந்தால் வாழ்வில் எல்லா வளமும் கிடைக்கும் என்பது திண்ணம்.

🌷 இது ஒரு சிறந்த பரிகார ஸ்தலமாகும். சுவாமிக்கு வலப்பக்கத்தில் மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார் அம்பாள். திருமணம் வேண்டி சுயம்வர பார்வதி ஹோமம் செய்தால் திருமணம் நிச்சயம்.

🌼 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷தீராத வயிற்று வலி நோயால் (ULCER) அவதிப்பட்டான் கோச்செங் சோழன். வேண்டினான். அசரீரி. 3 ஸ்தல விருக்ஷம் உள்ள இடத்தில் கோயில் கட்டு.

தேடி தேடி ஆக்கூர் வருகிறான். இங்கு கொன்றை பாக்கு வில்வம் ஒரே இடத்தில் இருப்பதை பார்க்கிறான் . உடனே இங்கு சிவாலயம் கட்ட துவங்குகிறான். ஒரு நாள் கட்டிய சுவர் மறுநாள் விழுந்து விடும். மீண்டும் இறைவனை வணங்க, 48 நாட்கள், 1000 அந்தணர்கு அன்னதானம் என வாக்கு. தினமும் 999 அந்தனர் மட்டும் வரவே, மீண்டும் இறைவனை மனம் உருகி வேண்ட..

🌷ஆயிரத்தில் ஒருவர் 👉 மன்னனின் குரலுக்கு செவி சாய்த்து 48 ஆவது நாள் 1000/1000. இலையில் ‘ஆயிரத்தில் ஒருவராக’ அமர்ந்திருந்த வயதான அந்தணரிடம் சென்ற மன்னன், ‘ஐயா, தங்களுக்கு எந்த ஊர்'(இதுவரை அவரை பார்த்ததில்லை, ஆதலால்). அதற்கு அந்த வயதான அந்தணர் “யாருக்கு ஊர்”

என எதிர் கேள்வி கேட்கிறார்

இதனாலேயே அந்த ஊருக்கு “யாருக்கு ஊர்” மருவி ஆக்கூர் ஆனது.

🌷மன்னனை எதிர் கேள்வி கேட்ட அந்த வயதானவரை அடிப்பதற்காக சிப்பாய்கள் விரட்டுகின்றனர். ஓடி சென்ற வயதானவர் நெடுங்காலமாக அங்கிருந்த புற்றுக்குள் விழுந்து விட்டார்.

🌷புற்றை கடப்பாரையால் விலக்கி பார்த்த பொழுது உள்ளே இருந்து சுயம்பு

மூர்த்தியாக தான்தோன்றீஸ்வரர் தோன்றுகிறார்.

🌷கடப்பாரையால் புற்றை குத்திய போது கடப்பாரை லிங்கத்தின் மீது பட்டு விடுகிறது. கடப்பாரை பட்ட அடையாளமாக இன்றும் கூட லிங்கத்தின் மீது தலை பகுதியில் பிளவு இருப்பதை காணலாம்.

🌷அ/மி ஆயிரத்தில் ஒருவர், கையில் தண்டு ஊன்றிய நிலையில் நின்ற வண்ணமாக காட்சி அளிக்கும் உற்சவமூர்த்தி ஆவார். மூலவர் சிலா விக்ரஹம் இல்லை.

🌷இறைவனை அப்பர் சம்பந்தர் போற்றி வழிபடும் பாடல்களில் ஆயிரத்தில் ஒருவர் பற்றிய குறிப்புகள் ஒன்று கூட இல்லை என்பது நோக்கப்பட வேண்டிய ஒன்று. சுந்தரர் தன் திருத்தொண்டர் புராணத்தில் சீறப்புலியை பற்றி குறிப்பிடுகிறார். ஆனால் ஆயிரத்தில் ஒருவர் பற்றி குறிப்பிடவில்லை.

🌷 எனவே சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்பு விநாயகர்கு. அந்தண ரூபத்தில் காட்சியளித்த விநாயகரின் திருஉருவே ஆயிரத்தில் ஒருவராக இருக்கவேண்டும்.

🌼 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷190 காவிரி தென்கரை சிவ தலங்களில் 46வது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம். ஆக்கூர் பேருந்து நிலையத்தின் வட பாகத்தில் இக்கோயில் அமையப்பட்டுள்ளது. வயல்கள் சூழ்ந்த ஊராகும்.

🌷 கிழக்கு நோக்கி கோவில். 3 நிலை ராஜகோபுரம், 2 பிரகாரம், கொடிமரம் இல்லை.

🌷மடம் என 2 கோவில்கள் உள்ளன. மடம் என்பது கோவில்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட மலையின் மேல் அமைந்திருப்பதை குறிக்கிறது. பென்னாகடத்தில் உள்ள தூங்கானை மடம், ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மடம்.

🌷48வது நாளில் ஆண்டவரே கையில் தடியை ஏந்தியபடி முதியவர் வடிவில் வந்ததால் உற்சவர் ஆயிரத்தில் ஒருவர் என்று அழைக்கப்படுகிறார். உற்சவருக்கு தனி சந்நிதி உள்ளது.

🌷கோஷ்டத்தில் விநாநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் அமைந்துள்ளனர். இங்கு பொய்யா பிள்ளையார் சன்னதி, தேர் வடிவில் முருகன் சன்னதி , சரஸ்வதிக்கு தனி சன்னதி, இத்தலத்தில் அவதரித்து முக்தி பெற்ற சிறப்புலி நாயனார் தனி சன்னதி உள்ளது.

🌷11ம் திருமுறையில் கபிலர் பாடிய பாடலிலும் இடம் பெற்றுள்ளது. சோழர்களால் கட்டப்பட்டது.

🌼 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

குழந்தை வரம்

திருமணத் தடைகள் நீங்குதல்

தீவினைகள் மற்றும் தோஷங்கள் நீங்குதல்

வறுமை நீங்கி, செல்வம் பெருக

நோய் நிவர்த்தி..

🌼 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

குரு பூஜை மற்றும் ஆயிரத்தில் ஒருவர் விழா

மார்கழி திருவாதிரை

ஆனித் திருமஞ்சனம்

மஹா சிவராத்திரி

வளர்பிறை அஷ்டமி

ஐப்பசி அன்னாபிஷேகம்

🌼 வழிப்பட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பார்வதிதேவி, அகஸ்தியர், மார்கண்டேயர், சிறப்புலி நாயனார், அப்பர், சம்பந்தர், சுந்தரர், கபிலதேவ நாயனார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார்

🌼 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் / தரங்கம்பாடி செல்லும் சாலையில் சுமார் 16 கி.மீ தொலைவில் ஆக்கூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.

செம்பனார்கோவில் 5 KM

திருக்கடையூர் 5 KM

மயிலாடுதுறை மற்றும் தரங்கம்பாடியில் இருந்து ஆக்கூருக்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.

7AM – 10 AM, 5PM – 8PM

90802 59159 சந்தோஷ் குருக்கள்

93454 58213 கணேஷ் குருக்கள்.

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🌼 கோவில் தேவார பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அக்கிருந்த ஆரமும்

ஆடரவும் ஆமையும்

தொக்கிருந்த மார்பினான்

தோலுடையான் வெண்ணீற்றான்

புக்கிருந்த தொல்கோயில்

பொய்யிலா மெய்ந்நெறிக்கே

தக்கிருந்தார் ஆக்கூரில்

தான்தோன்றி மாடமே.

ஞான சம்பந்தர்

முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்

மூவுலகுந் தாமாகி நின்றார் போலுங்

கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலுங்

கல்லலகு பாணி பயின்றார் போலுங்

கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர்

குற்றேவல் தாமகிழ்ந்த குழகர்போலும்

அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்

ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 

திருநாவுக்கரசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *