அம்பர்மாகாளம் திருமாகாளம் மாகாளநாதர்
மூலவர் : மாகாளநாதர் காலகண்டேஸ்வரர்
அம்பாள்: பயரக்ஷாம்பிகை, அச்சம் தவிர்த்த நாயகி
ஸ்தல விருக்ஷம் : மருதமரம் கருங்காலி
தீர்த்தம்: மாகாள தீர்த்தம் / அமிர்த வாவி
பாடல் : அப்பர் சுந்தரர் சம்பந்தர்
கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கம்
தேவார பாடல் பெற்ற சிவாலயம்
சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 55
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆதி மனித முக விநாயகரும் ஆதிஸ்கந்தரும் காட்சி அளிக்கின்றனர். விநாயகர் சோமாசி நாயனார் நடத்திய யாகத்திற்கு மனித முகத்துடன் வந்ததால் அதே வடிவில் இங்கு தங்கியதாக சொல்வர்.
இந்த உலகத்தை 8 நாகங்கள் தாங்குவதாக சொல்வர். அதில் ஒன்று சிவனின் கழுத்தில் உள்ள வாசுகி. இதற்கு இங்கு தனி சன்னதி உள்ளது.
இங்கு உறையும் இறைவன் மனிதனின் ஆயுளை நிர்ணயிப்பவராக உள்ளார்.
இங்கு மற்றும் உஜ்ஜைன் , விழுப்புரம் அருகே உள்ள இரும்பை ஆகிய தலங்களில் மட்டுமே இத்தகைய சிறப்புடைய மஹா காளேஸ்வரரை தரிசிக்க முடியும்.
மோஹினி தேவி
தனி சன்னதி, தீண்டாதிருமேனி,
பூசாரிகள் கூட.. ஆடைகள் மாலைகள் அலங்கரிக்க குச்சி உபயோகிக்கிறார்கள்..
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
துர்வாச முனிவருக்கும் மதலோலா என்ற தேவகன்னி கைக்கும் தோன்றியவர்கள் – அம்பரன் & ஆம்பரன். சிவ பக்தர்கள் – தவம் – வரம் – உலகிற்கு இடையூறு – பெருமானின் கட்டளைப்படி அம்பிகை காளியை நோக்கினாள். காளி தேவி ஒரு அழகிய பெண்ணின் உருவத்தில் தோன்றினார். அவருடன் மகாவிஷ்ணுவும் ஒரு முதியவர் வேடத்தில் வந்தார். அந்தப் பெண்ணைக் கண்டதும், அவளை யார் திருமணம் செய்துகொள்வது என்பதில் இந்த இரு சகோதரர்களும் ஒருவருக்கொருவர் சண்டையிடத் தொடங்கினர். அவர்களின் சண்டையில், மூத்த சகோதரன் அம்பாசுரன் கொல்லப்பட்டான், இளைய சகோதரனை காளி தேவி தோற்கடித்தார். இளைய சகோதரன் அம்பன் கொல்லப்பட்ட இடம் “அம்பகரத்தூர்” என்று அழைக்கப்படுகிறது. இது அம்பலுக்கு மிக அருகில் உள்ளது.
அவளை தோஷம் பற்றிக்கொள்ள, அம்பாளின் அறிவுரையின் பேரில், திருமாகாளத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்து இறைவனை பூஜித்து அருள் பெற்றாள். காளி சிவபூஜை செய்ததால் மாகாளநாதர்.
மாகால மகரிஷி வழிபட்டதாலும் இப்பெயர் என்கிறார்கள்.
அம்மனின் ஆவல்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மதங்க மகரிஷி குழந்தை வரம் வேண்டி தவம் செய்து பெற்ற பெண் குழந்தை ராஜ மாதங்கி. பக்தியுடன் வளர்த்து இறைவனையே மணமுடிக்க விரும்பினார். திருமணம் செய்து கொண்ட இறைவனும் அவளிடம் என்ன வரம் வேண்டும் என கேட்க, அவள் திருமண கோலத்தில் இறைவனுடன் இங்கேயே தங்க ஆசை, இங்கு வந்து பிரார்த்தனை செய்பவர்களுக்கு திருமண வரம் அளிக்குமாறு இறைவனை வேண்டினாள்.
இதன் அடிப்படையில், திருமணத்தடை உள்ளவர்கள் பார்வதி தேவிக்கு இரண்டு மாலைகள் சமர்ப்பித்து, பின்னர் ஒன்றை திரும்பப்பெற்று, கழுத்தில் அணிந்து செல்கிறார்கள்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
63 நாயன்மாரில் ஒருவரான சோமாசிமாறர்+ சுசீலா தேவி இங்கு வசித்தனர். அவருக்கு சோமாசி யாகம் செய்ய வேண்டும் என்று ஆசை. யாகத்தின் அவிர்பாகத்தை சிவபெருமானே நேரில் வந்து பெற வேண்டும் என விரும்பினார். இறைவனை நேரடியாக அழைக்க வேண்டுமானால் அவரது நண்பர் சுந்தரரின் நட்பை முதலில் பெற நினைத்தார்.
அந்நேரத்தில் இருமல் நோயால் அவதிப்பட்ட சுந்தரர், பல வைத்தியம் செய்தும் பலனடையாமல் இருந்தார். இவர் தினமும் இங்கிருந்து அவர் வீட்டிற்கு தூதுவளைக் கீரை கொண்டு சென்று கொடுத்து வருவார். சுந்தரருக்கு யார் கொடுத்தது என்று தெரியாது. அவர் மனைவி சங்கிலி நாச்சியாருக்கு தெரியும்.
நோய் தீர்ந்ததும் சுந்தரர் இவரை பார்க்க வந்தார். அப்போது தான் நடத்தும் யாகத்திற்கு இறைவனை அழைத்து வர வேண்ட, சுந்தரரும் சம்மதம் தெரிவித்து இறைவனிடம் வேண்டினார். இறைவனும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் சோமயாகத்திற்கு வருவதாக வாக்களித்தார்.
இறைவனே நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வந்த வேத விற்பன்னர்கள் முனிவர்கள் ஆன்றோர்கள் சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது.
நான்கு வேதங்களை நான்கு நாய்களாக மாற்றி இறந்த ஒரு கன்றினை சுமந்தபடி நீச்சனாக வந்தார் இறைவன். அவருடன் பார்வதி தேவி தலையில் மது குடத்துடன் வந்தார். விநாயகரும் முருகனும் சிறு பிள்ளைகளாக அவர்களுடன் வந்தனர். இவர்களை அடையாளம் தெரியாததால் யாகத்தில் ஏதோ தவறு நடந்து விட்டதாக கருதி வேதியர்கள் ஓடி விட்டனர்.
உடனே விநாயகர் தன் சுய ரூபத்தில் சோமாசிமாரருக்கும் சுசிலா தேவிக்கும் காட்சி தந்து, வந்திருப்பது சிவன் என்பது உணர்த்தினார். மகிழ்ந்த சோமாசி மாறர் சிவனாகிய தியாகராஜருக்கு அவிர்பாகம் கொடுத்து சிறப்பு செய்தார். தியாகராஜரும் நீசக்கோலம் நீக்கி பார்வதி சமேதராக சோமாசிமாரருக்கு காட்சி கொடுத்து, அவரை 63 நாயன்மார்களில் ஒருவராக்கினார்.
இறைவன் யாகத்திற்கு நீசவடிவில் எழுந்தருளியபோது அம்பிகையின் தலையிலிருந்த கள்குடம் பொங்கிய இடம் “பொங்கு சாராயநல்லூர்” (இன்று வழக்கில் “கொங்கராய ‘ நல்லூர்”) என்றும், இறைவன் சுமந்து வந்த பறை தானாக அடிப்பட்ட இடம் “அடியுக்க மங்கலம்” (இன்று வழக்கில் “அடியக்கமங்கலம்”) என்றும், இறந்தக் கன்றை ஏந்திய இடம் “கடா மங்கலம்” என்றும் இன்றும் வழங்குகின்றது. சோமாசி நாயனார் யாக குண்டம் அமைத்து யாகம் செய்த இடம் அம்பர் மாகாளத்திற்கு அம்பர்பெருந்திருக்கோயிலுக்கும் இடையில் உள்ளது. அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது; இன்று அந்த இடம் “பண்டாரவாடை திருமாளம்” என்று வழங்குகின்றது. இன்றும் சோம யாக உற்சவம் இவ்விடத்தில்தான் நடைபெறுகிறது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிழக்கு நோக்கி 5 நிலை ராஜகோபுரம், இரண்டாவது நிலையில் 3 நிலை ராஜகோபுரம்
மூலவர் சிறிய லிங்கம் குவளை சாத்தப்பட்டு இருக்கிறார். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை.
அம்பாள் பயரக்ஷாம்பிகை கிழக்கு நோக்கிய தனி சந்நிதி.
தெற்குப் பிரகாரத்தில் காளி கோயில் அமைந்துள்ளது.
விநாயகரும் முருகப்பெருமானும் இங்கு குழந்தைகளாக (ஆதி விநாயகராகவும் மனித முகத்துடனும், ஆதி ஸ்கந்தராகவும்) காட்சியளிக்கின்றனர்.
இத்தலத்தில் வன்மீக நாதர் மற்றும் சோமாசி மாறர் (மனைவியுடன்) சன்னதிகளும் உள்ளன
சிவபெருமான் காலணியுடன், நான்கு நாய்கள், தோளில் கன்று குட்டி, கையில் மேளம் –
பார்வதிதேவி தலையில் பானை
“காட்சி கொடுத்த நாயகர்”
( சோமாசிக்கு ) வேடன் வடிவில் வந்த சிவன் பார்வதி, காளி, சோமாஸ்கந்தர், நடராஜர் அத்தனையும் அழகு..
தனுசு சுப்பிரமணியர் மற்றும் அனைத்து உற்சவர் சிலைகளும் நுணுக்கமான வேலைப்பாடு.
இதுவும் கோட்செங்சோழன் கட்டிய மாடக்கோவில்..
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமணத்தடை நீங்க
குழந்தை பேறு பெற
தோஷ நிவர்த்தி
பயம் மற்றும் அச்சம் நீங்க &
மரண அவஸ்தையில் உள்ளவர்கள் இங்கு உள்ள மோட்ச லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறார்கள்.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சோமாசிமாறர் யாக உற்சவம் / சோமயாகப் பெருவிழா
மஹா சிவராத்திரி
ஐப்பசி அன்னாபிஷேகம்
கந்த சஷ்டி
நவராத்திரி
விநாயகர் சதுர்த்தி
திருவாதிரை
மகர சங்கராந்தி மற்றும் பௌர்ணமி பிரதோஷம் சிறப்பு
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காளி தேவி, சோமாசிமாற நாயனார், சுசீலா தேவி, மாகாள இருடியர், இந்திரன், வாசுகி பாம்பு, வியாசர், துர்வாச முனிவர், நாககன்னி, சப்தரிஷிகள், அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார்
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
• திருவாரூர் – மயிலாடுதுறை வழித்தடத்தில் பேரளம் அல்லது பூந்தோட்டம் வழியாகச் செல்லலாம்.
• பூந்தோட்டம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ அல்லது lokal வாகனம் மூலம் கோயிலை எளிதில் அடையலாம்.
அம்பல் 1.8 KM
திருமீயச்சூர் 7.8 KM
7AM – 11.30AM, 5PM – 8PM
94866 01401 மாதுபுரீஸ்வரர் குருக்கள்
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
புல்கு பொன்னிறம் புரிசடை
நெடுமுடிப் போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க்
கொன்றையும் பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை அரிசிலின்
வடகரை வருபுனல் மாகாளம்
அல்லும் நண்பக லுந்தொழும்
அடியவர்க் கருவினை அடையாவே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply