அன்பிலாந்துறை அன்பில் சத்தியவாகீஸ்வரர்

🌼மூலவர் : சத்தியவாகீஸ்வரர்

அம்பாள் : சௌந்தரநாயகி

ஸ்தல விருக்ஷம் : ஆலமரம்

தீர்த்தம் : காயத்ரி சந்திர தீர்த்தம்

பாடல் : அப்பர் சம்பந்தர்

சுயம்பு தேவாரப் பாடல் பெற்ற சிவாலயம் சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 57

🌼 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷அன்பில் ஈசனை வணங்குவோரை வானோரும் வணங்குவர் என்பது வாக்கு.

🌷அன்பில் ஊரின் பெயர் ஆலந்துறை கோவிலின் பெயர் இரண்டும் இணைந்து அன்பிலாலந்துறை ஆனது.

🌷பராந்தக சோழனால் பல திருப்பணிகள் செய்யப்பட்டு 108 அக்னிஹோத்ரி அந்தணர்களை குடியமர்த்தி இந்த வட்டாரத்தில் வேள்விகள் நடத்த ஏற்பாடு செய்தான்.

🌷இந்தஈசனை வணங்கினால் ஏழேழு ஜென்மங்களிலும் செய்த தீவினைகள் விலகி நல்வாழ்வு அடையலாம். ஒவ்வொரு பிறவியிலும் அடைந்திருக்கும் மூன்று விதமான கடன்களில் இருந்து மீளலாம்.

🌼 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷ஞா.ச இங்கு வந்த பொழுது நதியில் வெள்ளம் ஓட, எதிர் கரையில் நின்றவரே ஈசனை பாடினார்.அதனை கேட்க செவி சாய்த்ததால் செவி சாய்த்த விநாயகர். இவரை வணங்க காது சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

🌷ஞா.ச தரிசிக்கவென்று நந்தி இங்கு சுவாமியை விட்டு சற்றே விலகி இருக்கிறது..

🌷முதலில் மாட கோயிலாக இருந்து, பரந்தக சோழன் காலத்தில் கற்றளியாகியது.

🌼 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷ராவணன் குபேரனை தந்திரத்தால் வென்று அவனது புஷ்பக விமானத்தை கவர்ந்தான். மித மிஞ்சிய ஆணவத்தால் கயிலையை அடைந்த ராவணன் ஈசன் வாழும் மலையை பெயர்த்தெடுக்கத் தொடங்கினான். அவன் ஆணவத்தை அடக்க ஈசன் தனது வலது கால் பெருவிரல் நுனியை அழுத்த ராவணனின் கைகள் சிக்கிக் கொண்டது.

🌷 கடுமையான வலியால் துடித்த ராவணனின் அழுகுரல் அங்கு தவம் செய்து கொண்டிருந்த வாகீச முனிவரின் காதில் விழுந்தது. கண்ணை திறக்காமலேயே யாரென்று வினவிய வாகீசருக்கு, பிரம்மாவின் பேரன் என்றார் என்றான். இதனால் மனம் இளகி, “ஈசனின் மனம் கனிய உனது இசையால் சாமகானம் பாடு” இப்படி தான் உபாயம் கூறினார். அவனும் அவ்வாறே செய்ய ஈஸ்வரனின் கருணையால் உயிர் தப்பினான். தன்னால் தண்டிக்கப்பட்ட ராவணனுக்கு உதவிய வாகீசரின் செயல் பரம்பொருளுக்கு கோபத்தை உண்டு பண்ணியது.

இதனால் வாகீச முனிவர் பூலோகத்தில் பிறக்க கடவது என சாபம் பெற்றார்.

🌷இதனால் கலங்கிய வாகீசர், அன்பில் ஈசனை வணங்கி, திருஆமூரில் மருள் நீக்கியர் / அப்பர் ஆக பிறந்தார்.

🌼 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷கோவில் 5 நிலை ராஜகோபுரம் தோரணவாயில், மண்டபங்கள் 2 பிரகாரங்கள் உள்ளன. சதுர ஆவுடையாரின் கிழக்கு நோக்கி மூலவர், கிழக்கு நோக்கிய அம்பாள் சௌந்தரநாயகி, மற்றும் விநாயகர் முருகன் காசி விஸ்வநாதர் விசாலாட்சி சப்த மாதர் பிக்ஷாடனார் பைரவர் சனீஸ்வரர் நவகிரக சந்நிதிகள்.

இத்தலம் பிரம்மன் வழிபட்ட தலம் என்பதால், துவாரபாலகர் அருகே பிரம்மா சிவனை வணங்கும் நின்றகோல சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது.

🌷இக்கோயிலின் தூண்களில் எண்ணற்ற அழகான புடைசிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில: முருகப்பெருமான் சிவபெருமானை வழிபடுதல்; ஒரு தூணைச் சுற்றிக் கிடக்கும் பாம்பு; சிவலிங்கத்திற்கு இடையில் இணைந்திருக்கும் இரண்டு பாம்புகள்; ஒரு விலங்கை விழுங்கும் பாம்பு; விலங்கின் உடலுடன் இருக்கும் ஒரு ரிஷி; ஒரு மானைப் பிடித்திருக்கும் சிங்கம் மற்றும் மற்றொரு விலங்கால் பிடிக்கப்பட்ட யானையின் தும்பிக்கை.

🌷 அறநிலையத்துறைக்கு உட்பட்டது, பாழ்பட்டுள்ளது!!

🌼 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

காது மற்றும் செவித்திறன் குறைபாடுகள் நீங்க

பாவங்கள் மற்றும் சாபங்கள் விலக

திருமணத் தடை நீங்க

வாக்கு பலிதம் மற்றும் கல்வி சிறக்க

🌼 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மஹாசிவராத்திரி

மார்கழி திருவாதிரை

பங்குனி உத்திரம் மற்றும் பௌர்ணமி பிரதோஷம் சிறப்பு

🌼 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரம்மா, வாகீச முனிவர், அப்பர், சம்பந்தர், அருணகிரிநாதர், சேக்கிழார் சோழ பாண்டிய மன்னர்கள் முதலியோர்.

🌼அமைவிடம், நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

30 KM திருச்சி

8KM லால்குடி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அன்பில் கிராமத்திற்கு நேரடி நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அல்லது திருச்சியிலிருந்து லால்குடி சென்று, அங்கிருந்து ஆட்டோ அல்லது உள்ளூர் பேருந்துகள் மூலமாகவும் கோயிலை அடையலாம்.

7.30AM – 12NOON 4PM – 8PM

94436 48417 முத்துசாமி குருக்கள்

73588 73381 & 99657 39750

சண்முகம் குருக்கள்.

அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து குருக்கள் வருகிறார்கள்.

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🌼 கோவில் தேவார பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வானஞ் சேர்மதி

சூடிய மைந்தனை

நீநெஞ் சேகெடு

வாய்நினை கிற்கிலை

ஆனஞ் சாடியை

அன்பிலா லந்துறைக்

கோனெஞ் செல்வனைக்

கூறிட கிற்றியே. 1 அப்பர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *