வன்பார்த்தான் பனங்காட்டூர் பனங்காட்டீஸ்வரர் தாளபுரீஸ்வரர்

🌼மூலவர் : தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர் ) & கிருபாபுரீஸ்வரர் (2 மூலவர்கள்)

உற்சவர் : சோமாஸ்கந்தர் 

அம்பாள் : அமிர்தவல்லி கிருபாநாயகி

ஸ்தல விருக்ஷம் : பனை

ஆகமம் : சிவாகமம் 

தீர்த்தம் : ஜடாகங்கை, சுந்தரர், ஊற்று தீ 

புராணப் பெயர் : வன்பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனங்காடு 

பாடல் : சுந்தரர், சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் &

தொண்டை நாட்டு ஸ்தலம்  9,

🌼ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சுயம்பு, 2  மூலவர்கள், கிருபாபுரீஸ்வரர் கருவறைக்கு முன்புள்ள துவார பாலகர்கள் தாமரை பீடங்களின் மேல் நின்றிருப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

சூரியன் உடலில் நந்தி போன்றும், சந்திரன் தலையில் பிறை சந்திரன் இருப்பதும், யானை மீது ஐயப்பன் அமர்ந்திருப்பதும் வித்தியாசம்.

🌼ஸ்தல பெருமை👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹 இங்கு ஆண் பெண் என 2 பனை மரங்கள் ஸ்தல விருக்ஷமாக உள்ளன.

🌹 அகஸ்தியருடன் வந்து அவரது சிஷ்யர் புலஸ்தியர், தாளபுரீஸ்வரருக்கு அருகிலேயே மற்றோர்  லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவர் கிருபாபுரீஸ்வரராக சதுர பீடத்தில் அருள் பாலிக்கிறார்.

🌹அகஸ்தியர் வழிபட்ட தாளபுரீஸ்வரர் பிரதானமான மூலவராக இருக்கிறார்.

கிருபாபுரீஸ்வரர், நேர் எதிரே பிரதான வாயில் உள்ளது. இருவரும் தனிதனியே கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் உள்ளனர்.

🌹தாளபுரீஸ்வரர்  கருவறை சுவரில், லிங்கோத்பவர், துர்கை & கிருபாபுரீஸ்வரர்  கருவறை பின்புறம் மஹாவிஷ்ணு & இடதுபுறம்  சண்டிகேஸ்வரர். ஒரு பள்ளியறை மட்டும் இருக்கிறது.

🌹இருவருக்கும் அம்பாள் தனி தனி சன்னதிகளில் தெற்கு பார்த்தபடி அடுத்தடுத்து இருக்கின்றனர். இதில் பிரதான அம்பாள் அமிர்தவல்லி உயரமாகவும் கிருபாநாயகி சற்று உயரம் குறைந்தவளாகவும் இருக்கிறாள்.

🌹கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி தன் இடக்காலை மடக்கி வைத்த படி வித்தியாசமாக அமர்ந்துள்ளார். இவருக்கு கீழே நந்தியும் உள்ளது. பிரகாரத்தில் உள்ள  விநாயகர் சன்னிதியில் விநாயகருக்கு இடப்புறம் நாக தேவதையும் வலப்புறம் மடியில் அம்பாள் வைத்தபடி மற்றொரு விநாயகரும் உள்ளனர். 

🌹 கோவிலுக்கு வெளியே வன்னி மரத்தடியில் சனி பகவான். வன்னி இலைகளால் அர்ச்சனை செய்தால் தோஷம் நீங்கும். இவருக்கு அருகில் வேம்பு மரத்தின் கீழ் தவம் செய்த YOGA தந்த முனீஸ்வரர் தனி சந்நிதி. இவர்களை முதலில் வணங்கி ஆலயம் உள்ளே செல்ல வேண்டும்.

🌹சுந்தரர் இங்கு தல யாத்திரை  வரும்பொழுது, நண்பகல், வெயில் பசி என்ன வாட்ட  ஒரு முதியவர் உணவு கொடுக்க, அவரிடம் பருக நீர் கிடைக்குமா என சுந்தரர் வினவிய போது  நீர் கிடைக்கும் என நகர, அவர் நின்றிருந்த இடத்தில் நீரூற்று-

🌹சுந்தரர் அவரை யார் என வினவ- உன் திருமணத்தில் வம்பு செய்தவன்- பனங்காட்டில் குடியிருப்பவன் என்று கூறி மறைந்தார்.வந்தது சிவன் தான் என மகிழ்ந்து வணங்கி 🌹“வம்பு செய்பவன் கள்ளன்” என உரிமையுடன் திட்டி பதிகம் பாடினார். சிவன் பாதம் அடியில் உருவான தீர்த்தம், கோயிலின் சற்று தூரத்தில். எப்போதும் நீர் வற்றாத இந்த தீர்த்தம்- சுந்தர தீ. மாசி மாத பிரம்மோற்சவத்தில் கட்டமுது படைக்கும் விழா நடக்கிறது.

🌹இத்தலத்தின் விநாயகர் – பெரிய  விநாயகர்,

மூலவரின் விமானம்- கஜபிருஷ்ட விமானம் 

3 நிலை ராஜகோபுரம்.

🌼ஸ்தல வரலாறு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹அகஸ்தியர் தெற்கு நோக்கி வரும்போது இவ்விடத்தில் சிவனை வழிபட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. எனவே சிவணை மானசீகமாக எண்ணி வழிபட்டார்.

🌹அப்போது அருகில் உள்ள ஒரு வேம்பு மரத்தின் அடியில் தான் சுயம்பு லிங்கமாக இருப்பதா சிவன் ஆசரீரி. அகஸ்தியர் அங்கு சென்று பார்த்த பொழுது வேம்பு மரத்தின் அடியில் முனிவர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

🌹அகஸ்தியரை  கண்ட முனிவர் அவரிடம், வேம்பு மரத்தின் அடியிலிருந்த சுயம்பு லிங்கத்தை காண்பித்து விட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்து விட்டார்.

🌹அகஸ்தியர் லிங்கத்திற்கு பூஜை செய்ய எண்ணினார். அங்கு தண்ணீர் இல்லை. அகஸ்தியரின் மனதை அறிந்த சிவன், தலையில் இருந்த கங்கை நீரை இவ்விடத்தில் பாயவிட்டார்.

🌹அந்நீர் தீர்த்தமாக அருகில் தேங்கியது. இந்த தீர்த்தம், “ஜடா கங்கை” என கோவிலுக்கு அருகில் உள்ளது. அதிலிருந்து நீரை எடுத்து அபிஷேகம் பூஜை செய்து வணங்கினார். 

🌹பின் சிவனுக்கு நைவேத்யம் செய்ய பழங்கள் இல்லாததால் அருகில் பழம் தேடினார். சிவன் அருகில் இருந்த பனை மரத்திலிருந்து கனிகளை உதிர செய்தார். அகஸ்தியர் ஸ்வாமிக்கு பூஜை நைவேத்யம் முடிக்க, அகஸ்தியர் பூஜையில் மகிழ்ந்த சிவன், அவருக்கு காட்சி தந்தருளினார். பனங்காட்டில் எழுந்தருளியவர் என்பதால் தாளபுரீஸ்வரர் (தாளம்=பனை) என்று பெயர் பெற்றார்.

🌹புறவார் பனங்காட்டூரின்றும் வேறுபாடு அறியவும் சுந்தரர் இத்தலத்தை வன்பார்தான் பனங்காட்டூர் என பாடினார். மக்கள் வழக்கில் திருப்பனங்காடு.

🌹ஜடாகங்கை கரையில் கங்கா தேவி சிலை உள்ளது. மாசி மகத்தில் தீர்த்தவாரி & தெப்பம் சிறப்பு.

🌹 வள்ளி தெய்வானையுடன் கூடி முருகப்பெருமான்  தரிசனம், மயிலின் முகம் திசை மாறி உள்ளது.

🌹தாளபுரீஸ்வரர் கோஷ்டத்தில் சண்டிகேஸ்வரர் இல்லை ,  கிருபாபுரீஸ்வரர் கோஷ்டத்தில் மட்டும், தனி விமானத்துடன், உள்ளார். 

🌹கிருபாபுரீஸ்வரர் தக்ஷிணாமூர்த்தி அற்புதம் – வலதுகாலை தொங்கவிட்டு இட காலை மேலே உயர்த்தி குத்து காலிட்டு, சின்முத்திரை பாவத்தில், அபயகரத்துடன் வரத கரமும் கூடி அற்புதக் காட்சி.

🌹மாசி மகம்- தாளபுரீஸ்வரர் , கார்த்திகை சோமவாரம்-கிருபாபுரீஸ்வரர்👉விசேஷம்

🌹கோயில் உள்மண்டபத்தில் கல் தூண்களில் மிக அரிய சிற்பங்கள் உள்ளன. சில நாகலிங்க சிற்பம், ராமர், வாலி-சுக்ரீவன் போரிடும் சிற்பம், ராமர் சிற்பத்திடம் நின்று பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் சிற்பம் தெரிகிறது. ஆனால் வாலி சுக்ரீவன் சிற்பத்தின் பார்வைக்கு ராமர் சிற்பம் தெரியவில்லை. இன்னும் சில அறிய சிற்பங்கள்.

🌼ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹பிரகாரத்தில் நடராஜர் திருப்பதி வெங்கடாஜலபதி மீனாட்சி சொக்கநாதர் மகாலிங்கம் ஆகியோரும் உள்ளனர். 

🌹குழந்தை பாக்யம் இல்லாதவர்கள் சுவாமிக்கு பனம்பழம் படைத்து வழிபட்டு அதனை சாப்பிடுகின்றனர். இவ்வாறு செய்தால் புத்திர பாக்கியம் கிடைப்பதாக நம்புகின்றனர். 

🌹மேலும் சுவாமியை வழிபட ஐஸ்வர்யமுண்டாகும். கண் தொடர்பான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. ஸ்தல விருக்ஷத்தை சுற்றி வந்து வழிபட்டால் திருமண தடைகள்  நீங்கும் என்கிறார்கள்.

🌼 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருமணத்தடை நீங்குதல் புத்திர பாக்கியம் 

கல்வி மற்றும் ஞானம் வளர

சனி தோஷ நிவர்த்தி 

மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியம் 

🌼 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சித்திரை பெருவிழா பிரம்மோற்சவம் &

தாளபுரீஸ்வரர் மாசி 10 நாள் பிரம்மோற்சவம்,

ஆருத்ரா தரிசனம்,

ஐப்பசி அன்னாபிஷேகம்,

மஹா சிவராத்திரி, பிரதோஷம்

🌼வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அகஸ்தியர், புலஸ்தியர், கண்வ முனிவர், சூரியன், சிபி சக்கரவர்த்தி, தக்ஷன்,  சுந்தரர், சேக்கிழார் முதலியோர். 

🌼அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 17 KM. காஞ்சி கலவை பெருங்காட்டூர் சாலையில், கூட்டு ரோடில் திருப்பனங்காடு வழியில் செல்ல வேண்டும்.

7AM – 11AM, 5PM – 8PM

9843568742 தேவராஜ்குருக்கள்

044 24312807

🌼 கோயில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

விடையின்மேல் வருவானை

  வேதத்தின் பொருளானை

அடையில்அன் புடையானை

  யாவர்க்கும் அறியொண்ணா*

மடையில்வா ளைகள்பாயும்

  வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்

சடையிற்கங்கை தரித்தானைச்

  சாராதார் சார்பென்னே.

(*அறிவொண்ணா என்றும் பாடம்) 1

சுந்தரர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *