பாடி திருவலிதாயம் வல்லீஸ்வரர்

💐மூலவர் : திருவல்லீஸ்வரர் அகஸ்தீஸ்வரர் வலிதாயநாதர் 

அம்பாள் : ஜெகதாம்பிகை தாயம்மை 

ஸ்தல விருக்ஷம் : பாதிரி, கொன்றை

தீர்த்தம் : பரத்வாஜ தீர்த்தம் 

ஆகமம் : காமிகம்

பாடல் : சம்பந்தர்,சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் 

தொண்டை நாட்டு ஸ்தலம் 21

💐ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கிருதயுகத்தில் அகஸ்தியர் மணலால் பிடித்து பூஜை செய்த லிங்கம். அகஸ்தியர் வயிற்றில் வாதாபி ஜீரணம்,தோஷம் நீங்க இத்தலம் வந்து பூஜித்து போக்கிக் கொண்டார். அகஸ்தியர் பிரதிஷ்டை செய்த க்ஷனிக லிங்கம் ஸ்தல விருக்ஷம் பாதிரி கொன்றை மரத்தின் நடுவில் உள்ளது.

🌹ஸ்தல விநாயகர் வரசித்தி விநாயகர்.

🌹சுவாமியை வணங்கிட திருமண தடை நோய்கள் நீங்கும் ஸ்தலம். தக்ஷிணாமூர்த்தியை வணங்க ஞானம் கிடைக்கும். பௌர்ணமியில் சுவாமியை வழிபட்டால் நற்பெயர் கிடைக்கும்.

🌹கோயிலில் கஜபிருஷ்ட விமானம் (ஐராவதம் வழிபாடு.).

பறவைகளுக்கு நாம் செய்த தோஷம் நிவர்த்தியாகும் ஸ்தலம்.

💐ஸ்தல பெருமை👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹 ஸ்தலம் தீர்த்தம் மூர்த்தி என்ன மூன்றாலும் சிறப்பு.

🌹பிரகஸ்பதி தான் செய்த தவறால், தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால் பாவம் நீங்கி, மோக்ஷம் கிட்டும் என்றார். அதன்படி இங்கு வந்த வியாழன் புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார். இத்தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தோஷங்கள் நீங்கும்.

🌹ராமரும் தன் சாயாகத்தி தோஷ நிவர்த்திக்கு இங்கு பூஜை செய்தார். அனுமனும் ராவண வத சகாய தோஷ நிவர்த்தி பெற்றார்.

🌹இத்தலத்திற்கு வந்தாலே முக்தி கிட்டும் என்பது ஐதீகம். பிரகாரத்தில் சுவாமியை நோக்கியபடி தனி சன்னதியில் குரு பகவான், சிவலிங்கத்தை வழிபட்ட நிலையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.

🌹பிரம்மபுத்திரிகளான கமலி வல்லி ஆகிய இருவரையும் விநாயகர் இத்தலத்தில் தான் திருமணம் செய்து கொண்டார் என வரலாறு சொல்கிறது. இதற்கு சான்றாக இங்கு கமலை வல்லியுடன் இருக்கும் விநாயகரின் உற்சவர் சிலை உள்ளது.

🌹நடுநாயகமாக இக்கோவில் இருக்க சுற்றிலும் சிவபெருமானுக்கு ஹாரம்,  மாலையிட்டது போல் 11 திருத்தலங்கள் அமைந்திருப்பது சிறப்பு.

🌹சிவன் தனக்கு பூஜை பெறுவதை உரிமையாக உடையவர் என்பதால் இவர் பலிதாயர் என்றும் பெயர். பலி=பூஜை தாயம்=உரிமை 

💐ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

குருவின் மகனான பரத்வாஜர், ஒரு சாபத்தால், கரிக்குருவியின் (வலியன்) பிள்ளையாகப் பிறந்தார். தான் பறவையாக பிறந்ததை கண்டு வருத்தமடைந்த பரத்வாஜர், பல புண்ணிய தலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி வந்தார். இங்கு வந்த பொழுது, கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார். லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன் விமோசனம் கொடுத்து பறவைகளின் தலைவனாகும்படி அருளினார். ஆதலால் இத்தலம் திருவலிதாயம் இறைவன் வலியநாதர் பெயர் பெற்றார்.

💐ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹இது திருமுறை தலம் மட்டுமல்ல, அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலும் உள்ளது.

🌹 தீர்த்தக் கிணற்றில் நீர் இளநீரைப் போன்று சுவை.

🌹 பிரகாரத்தில் விநாயகர் சன்னதி இருக்கும் இடத்தில் சோமாஸ்கந்தர், அதற்குப் பக்கத்தில் தான் விநாயகர்.

 மேலும் சுப்பிரமணியர் சன்னதியும் உரிய இடத்தில் இல்லை, கருவறையின் நேர் பின்புறத்திற்கு எதிரில் உள்ளது.

🌹சன்னதியில் சுப்பிரமணியர் முன்னால் சிவலிங்கம் உள்ளது.

63வர் முழுவதும் இல்லை. சில திருமேனிகளே உள்ளது.

🌹 பரத்வாஜர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது,

🌹14 கல்வெட்டுகள் உள்ளன. ராஜராஜ சோழனின் முன்னோர்களால் கட்டப்பட்ட ஆலயம்.

🌹விஜயநகர காலத்தில் இந்த இடத்தில் படைகள் அனைத்தும் வைக்கப்பட்டிருந்ததால் இந்த இடம் பாடி என்றானது.

🌹புராதானமான புண்ணியபூமி ஸ்வாமியின் தரிசனத்திலேயே மன அமைதி கிடைக்கிறது.

💐 பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரசித்தி பெற்ற குரு பரிகார ஸ்தலம் ஆகும்.

மேலும் குழந்தைகளுக்கு கல்வி ஞானம் சிறக்க வேண்டுதல்.

திருமணத் தடை உள்ளவர்கள் இங்குள்ள விநாயகரை வழிபட்டுப் பலன் பெறுகின்றனர்.

தோஷங்கள் நீங்குவதற்கு ( அகஸ்தியர் குரு பரத்வாஜர் ராமர் அனுமன் ) வேண்டுதல். 

💐திருவிழா👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°

சித்திரை பிரம்மோற்சவம்

குரு பெயர்ச்சி

தை கிருத்திகை விழா 

மஹா சிவராத்திரி

இங்கு பௌர்ணமி பூஜைகளும் சிறப்பு.

பிரதோஷம் & குருவார பூஜை சிறப்பு

💐வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இராமர், ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன், இந்திரன், அகஸ்தியர், பிரகஸ்பதி,பரத்வாஜர், வால்மீகி ஐராவதம், லவ, குசா, சம்பந்தர், சேக்கிழார், வலியன், (கருங்குருவி) முதலானோர். 

💐அமைவிடம்,நேரம்,தொடர்பு 👉 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

5 KM FROM கோயம்பேடு பேருந்து நிலையம்

சென்னை ஆவடி நெடுஞ்சாலையில் பாடியில் அமைந்துள்ளது.

பாடி பேருந்து நிறுத்தம்  or லூகாஸ் TVS / சரவணா ஸ்டோர்ஸ் ஸ்டாப்.

கொரட்டூர் ரயில் நிலையத்திலிருந்தும் ஆட்டோவில் வரலாம்.

6AM to 12NOON,  4PM to 8.30PM

95510 39009 ஞானசம்பந்தன் சிவாச்சாரியார்

💐 கோயில் தேவார பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பத்தரோடுபல ரும்பொலியம்மலர் 

 அங்கைப் புனல்தூவி

ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு 

 தேத்த உயர்சென்னி

மத்தம்வைத்தபெரு மான்பிரியா

 துறைகின்ற வலிதாயம்

சித்தம்வைத்தஅடி யாரவர்மேல 

 டையாமற் றிடர்நோயே. 1

திருஞான சம்பந்தர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *