பழையாறை வடதளி சோமேசர் சோமநாதர்
மூலவர் : சோமநாதர்/சோமேசர்
அம்பாள் : சோமகலாம்பிகை
ஸ்தல விருக்ஷம் : நெல்லி
தீர்த்தம் : சோம தீர்த்தம் , கருடன் தனியே தன் பெயரால் உண்டாக்கிய தீர்த்தம். சடாயு தீ, புராண பெயர் : பழையாறை வடதளி, ஆறை வடதளி,
பாடல் : அப்பர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 24.
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிருதயுகத்தில் வேப்ப மரங்கள், திரேதா யுகத்தில் வாழை மரங்கள், துவாபர யுகத்தில் கடம்ப மரங்கள்,
கலி யுகத்தில் – ஆம்லா (நெல்லி) அடர்ந்த காடாக இருந்தது.
63 நாயன்மாரில் ஒருவரான மங்கையர்கரசியார் பிறந்த ஊர். இவர் பழையாறை சோழமன்னன் மணிமுடி தேவரின் மகள்.
சோழ மன்னன் மணிமுடிதேவன் வடதளி கோவில் சிவலிங்கத்தை கண்டுபிடிப்பதில் (அப்பருடன்) தொடர்பு + திருப்பனந்தாள் சிவலிங்கம் நிமிர்த்துவதிலும் தொடர்பு.
63ரில் -அமர்நீதிநாயனார் அவதார தலமும் கூட..
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சந்திரன் இத்தல இறைவனை வழிபட்டு கலைகள் வளரவும், க்ஷயரோகம் நீங்கவும் அருள்பெற்ற தலம்.
அப்பர் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை. சிதிலமான கோவில் உள்ளது.
கோயிலுக்கு பக்கத்தில் துறையூரர் சிவபிரகாசர் சமாதியுள்ளது.
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இத்தலத்திற்கு உள்ளது.
கோயில் முன்மண்டபத்தில் உள்ள கைலாசநாதர் உருவமும், மஹாமண்டபத்தில் உள்ள துர்கை உருவமும் அழகுடையன.
பிற்கால சோழர் ஆட்சியில் இத்தலம் இரண்டாவது தலைநகரமாக விளங்கியது.
இத்தலத்தை சுற்றியுள்ள 1)நல்லூர் 2)வலஞ்சுழி 3)சக்திமுற்றம் 4)பட்டீஸ்வரம் 5)ஆவூர் என்னும் 5 தலங்களையும் ஒரே நாளில் தக்ஷிணாயன புண்ணிய நாளில் வழிபடுவது சிறப்புடையது என்று மக்கள் வழக்கில் சொல்லபடுகின்றது.
இங்குள்ள கைலாசநாதரை ராஜராஜசோழன் தினமும் வழிபட்டதாக கூறப்படுகிறது. இவரை வழிபட்டால் கடன் பிரச்சனகள் தீரும்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முன்னொரு காலத்தில் கருடன் தன் தாயின் அடிமைத்தனம் நீங்க தேவேந்திரனிடம் அமிர்த கலசம் பெற்று இத்தலத்தின் வழியே வரும் பொழுது அசுரர்கள் இதை கண்டு, கருடனுடன் சண்டை மூண்டது. குடத்திலிருந்து மூன்று துளிகள் நெல்லிவனமான இத்தலத்தில் சிந்தின. அத்துளிகள் சிவலிங்கம், அம்பிகை, தீர்த்தம் என மூன்றாயின. கருடன் தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும் அம்பிகையையும் வழிபட்டு உய்ந்தது. கருடன் தனியே தன் பெயரால் உண்டாக்கிய தீர்த்தம், சடாயு தீர்த்தம் என வழங்கபடுதிறது.
வள்ளலார் கோயில் என்றும் அழைக்கபடும் இந்த கோயில் “வைப்பு ஸ்தலங்களில்” ஒன்றாக கருதபடுகின்றது. கோட்செங் சோழன் கட்டிய மாடக்கோவில் இது.
சமணர்கள் சிலரால் இந்த ஆலயம் மூடப்பட்டு பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டதாக நம்பப்படுறது. திருநாவுக்கரசர் பழையாறைக்கு வந்த பொழுது வடதளியில் ஏதோ அசாதாரணம் இருப்பதை உணர்ந்தார். அப்பகுதி மக்களிடம் விசாரித்த பொழுது, அந்த கிராமத்தில் உள்ள கோயில் சமணர்களால் பூமிக்கு அடியில் மறைத்து வைக்கபட்டிருப்பதாக தெரிவித்தனர்.
பின்னர் அவர் சிவலிங்கம் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பிடிப்பதற்காக இங்கு உண்ணாவிரதம் தொடங்கினார். சிவபெருமான் உள்ளூர் சோழமன்னன் மணிமுடி தேவன் கனவில் வந்து அப்பருக்கு உதவ சொன்னதாக நம்பபடுகின்றது. கோவிலும், சிவலிங்கமும் கண்பிடிக்கப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பழங்கால சோழர்களின் தலைநகர் பழையாறை, பல சோழ மன்னர்கள் இங்கு ஆண்டனர். அந்த காலத்திலேயே 8KM நீளமும் 3.5 KM அகலமும் கொண்ட நகரம். சோழ மன்னன் ஆதித்தனால் கட்டப்பட்ட இந்த கோவில் ராஜராஜனால் புதுப்பிக்கப்பட்டது.
சோழ வரலாற்று சிறப்புமிக்க ஊர். இன்று சிதிலமடைந்து உள்ளது. பழையாறை கோயிலும் பழையாறை வடதளியும் சேர்ந்து பாடப்பட்டதாக கொள்ள வேண்டும். அருகில் வைணவ திவ்யதேசம் நந்திபுர விண்ணகரம். இக்கோயில் தேர் போன்ற அமைப்பில் உள்ளது.
வெளி பிரகாரத்தில் அம்பாள் கோயில் தெற்கு நோக்கி உள்ளது. இத்தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று வீரதுர்கை அம்மன். அர்த்த மண்டபத்தில் ஒரே கல்லால் ஆன வீர துர்க்கை சன்னதியும், கடன் நிவர்த்தி தரும் கைலாசநாதர் சன்னதியும் உள்ளன. முகம் மண்டபத்தில் நாயன்மார்களில் ஒருவரான மங்கையர்க்கரசியார் திருவுருவம் காணப்படுகிறது. இக்கோயிலில் இராவணன் கயிலாய மலையைத் தூக்கும் சிற்பம், எட்டு கைகளுடன் ஹிரண்யனை வதம் செய்யும் நரசிம்மர் சிற்பம் மற்றும் நரசிம்மர் அருகில் உள்ள சிலைகள் சோழர் காலத்துச் சிற்பப் பணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
திருச்சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர், சூரியன், சந்திரன் மற்றும் சேக்கிழார் ஆகியோரின் சிலைகளும் சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கடன் நிவர்த்தி
மன அமைதி
குடும்ப நலன்
இழந்த பதவிகளை மீண்டும் பெற
வழக்குகளில் நீதி கிடைக்க
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாசிவராத்திரி
ஆடிப்பூரம்
ஐப்பசி அன்னாபிஷேகம்
திருவாதிரை திருவிழா
பங்குனி உத்திரம்
திருக்கார்த்திகை நவராத்திரி மற்றும் பிரதோஷம் சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சந்திரன் ஆதிசேஷன் கருடன் கங்கை & காமதேனுவின் மகள் விமலி மணிமுடிசோழன் மங்கையர்க்கரசி அப்பர் நம்பியாண்டார் நம்பி சேக்கிழார் முதலியோர்.
அமைவிடம்,நேரம், தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணத்தில் 7KM இருந்து ஆவூர் செல்லும் சாலையில் பயணம் செய்து, முழையூர் கிராமத்தை அடைய வேண்டும். அங்கிருந்து கிளைச் சாலையில் சென்று பழையாறை சோமேசர் கோயிலை அடையலாம். தாராசுரத்தில் இருந்து 5KM
நாதன் கோவில் அருகில் உள்ளது.
8AM – 12NOON, 4PM – 6.30PM
94434 14685 தண்டபாணி குருக்கள்.
குருக்களை அழைத்துவிட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தலையெ லாம்பறிக்
குஞ்சமண் கையருள்
நிலையி னான்மறைத்
தான்மறைக் கொண்ணுமே
அலையி னார்பொழி
லாறை வடதளி
நிலையி னானடி
யேநினைந் துய்ம்மினே. 1
திருநாவுக்கரசர்


Leave a Reply