திரு குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர்

🌺 மூலவர் : வாலீஸ்வரர், கொய்யாமலர் நாதர்

அம்பாள் : இறையார் வளையம்மை

ஸ்தல விருக்ஷம் : இலந்தை

ஆகமம் : காமீகம் 

தீர்த்தம் : காக்கை மடு / வாயசை தீ

பாடல் : சம்பந்தர் , சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் & தொண்டை நாட்டு ஸ்தலம் 6,

🌺 ஸ்தல சிறப்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும், எமன் முட்டம் (காகம்) வடிவிலும் இறைவனை வழிபட்ட தலம். எனவே குரங்கணில் முட்டம்.

🌹வாலியார் சிவ பெருமானை பூஜை செய்வதற்கு கையால் மலர்களைப் பறிக்காமல் மரத்தை உலுக்கி பூஜை செய்தார். அதனால் பறிக்காது (கொய்யாது ) இறைவனுக்கு👉 கொய்யா மலர் நாதர்.

🌹இங்கு சுவாமி சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. இக்கோயில் பாலாற்றில் தென்கரையில் அமைந்திருக்கிறது.

🌹இங்குள்ள விநாயகர் தாமரை மலர் பீடத்தின் மேல் இருக்கிறார். இவர் பீடத்திற்கு கீழே ஆவுடையாரும் இருக்கிறது. இதனை விநாயகரை சக்தி தாண்டிக் கொண்டிருக்கும் வடிவம் என்கிறார்கள்.

🌹இங்கு சாந்த முகத்துடன் இருக்கும் விஷ்ணு துர்கையின் வலது கையில் பிரயோக சக்கரம் இருப்பதுடன், இடது கையில் சக்கர முத்திரையும் இருக்கிறது. இவள் காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை. இது விசேஷமான அமைப்பு.

🌹பிரகாரத்தில் காசி விஸ்வநாதர் பைரவர் நவகிரகம் சப்தமாதர், நாக தேவதை உள்ளனர். கருவறைக்கு பின்புறத்தில் மஹாவிஷ்ணு  பிரயோக சக்கரத்துடன் தனி சந்நிதியில் உள்ளார்.

🌺 ஸ்தல பெருமை👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கொய்யா மலர் நாதர் : வாலி ( கையால் பறிக்காத மலர்களால்) பூஜை செய்ததால். 

இங்கு விசேஷமாக கரும்புசாறு அபிஷேகம் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் என்றும் இனிமையான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை. 🌹இவரை ஐந்தறிவு கொண்ட பறவை மற்றும் விலங்கு வழிபட்டு மீண்டும் ஆறறிவு கொண்டவர்களாக மாறினர். எனவே இங்கு வேண்டிகொள்ள பாவ விமோசனம் ஞானம் மற்றும் அறிவுத்திறனும் வளரும்.

🌺 ஸ்தல  வரலாறு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹 தனது 16ஆவது வயதில் இறக்கும்படியான வரம் பெற்று இருந்த மார்க்கண்டேயர், சிவ தல யாத்திரை மேற்கொண்டார். எமதர்மன் அவரை பிடிக்க வரும் பொழுது, தப்பி சென்று, சிவனை கட்டிப்பிடித்துக் கொண்டார். மார்க்கண்டேயர் மீது வீசப்பட்ட பாசக்கயிறு சிவன் மீதும் விழுந்ததால், தன் பணியை சரியாக செய்யாததால், அவர் பதவியை பறித்து எமனுக்கு தண்டனை. எமதர்மன் சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டார்.

🌹அவரிடம் சிவன், பூலோகத்தில் குறிப்பிட்ட காலத்தில் தன் தரிசனம் கிடைக்கப்பெற்று இழந்த பதவி மீண்டும் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகம் வந்த எமன், முட்டம் (காகம்) வடிவில் பல தலங்களுக்கும் யாத்திரை சென்று சிவனை வணங்கி வந்தார்.

🌹கௌதமரின் மனைவி மீது ஆசை கொண்டதால் தன் உடல் முழுவதும் கண்களாக தெரியும்படி முனிவரிடம் சாபம் பெற்றான் இந்திரன் . அவன் தன் தவறை மன்னிக்கும்படி சிவனிடம் வேண்டினான்.

🌹சிவன் அவனிடம், ‘ தகுந்த காலத்தில் பூலோகத்தில் தான் சாப விமோசனம் தருவதாகவும் அதுவரையில் பூமியில் சிவதல யாத்திரை மேற்கொள்ளும் படியும் கூறினார். அவரது சொல் கேட்ட இந்திரன் அணில் வடிவில் பூலோகம் வந்தான்.

🌹இவ்விருவரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது சிவ பக்தனான வாலி குரங்கு வடிவத்தில் இங்கு வந்து சிவனை வழிபட்டார்.

🌹இதனைக் கண்ட எமன் இந்திரன் இருவரும் வாலியுடன் சேர்ந்து சிவனை வழிபட்டனர். சிவன் மூவருக்கும் காட்சி தந்ததோடு எமன் இந்திரன் இருவருக்கும் சாப விமோசனமும் கொடுத்தார்.

🌹பின் அவர்களது வேண்டுதலுக்காக இவ்விடத்திலேயே  சுயம்புவாக  எழுந்தருளினார். தலமும் “குரங்கு அணில் முட்டம்” என்றானது. கோவில் முன் மண்டபத்தில் அவர்கள் மூவரும் வழிபட்ட சிற்பங்கள் இருக்கிறது.

🌹கோயிலுக்கு சற்று தொலைவில் ஒரு பாறை குகை கோயிலாக காட்சியளிக்கிறது. 

6 கல்வெட்டுகள் உள்ளன.

🌺 வளையல் அணிந்த அம்பாள்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இங்குள்ள அம்பாள் 👉 இறையார் வளையம்மை, இவள் தனி சன்னிதியில் தெற்கு நோக்கிய படி உள்ளாள்.

🌹வாலி இந்திரன் எமன் – சிவனை வணங்கும் முன்பு அம்பாளை வணங்கினார்களாம். அவர்களுக்கு அருள் செய்யும்படி அம்பாள், சிவனிடம் பரிந்துரை செய்தாளாம். அதனால் இந்தப் பெயர் 

🌹தன்னை வணங்குபவர்களுக்கு வளைந்து கொடுத்து செல்பவர் என்ற பொருளில் இப்பெயரால் அழைக்கின்றனர்.

🌹ஞான சம்பந்தர்  தனது பதிகத்தில் அம்பாளை குறித்தும் பாடியிருக்கிறார். இவள் கைகளில் வளையல் அணிந்து மகிழ்ந்த முகத்துடன் காட்சி தருவது சிறப்பு.

🌹திருமணமான பெண்களும் கர்ப்பிணிகளும் இவளுக்கு வளையல் போட்டு பின்பதனை அணிந்து கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் புத்திர பாக்யம், சுகப்பிரசவம் ஆகும் என நம்பிக்கை.

🌺 முக்தி ஸ்தலம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹சிவனை வழிபடும் முன்பு காக வடிவில் இருந்த எமன் தன் அலகால் நிலத்தில் கீறி தீர்த்தம் உண்டாக்கினான். பின் அதில் மூவரும் நீராடி சிவனை வணங்கினர். இந்த தீர்த்தம் பிறை சந்திர வடிவில் கோவிலின் 3 புறங்களிலும் சூழ்ந்து இருக்க, நடுவில் சிறிய பாறையின் மீது சிவபெருமான் வீற்றிருக்கிறார். இத்தீர்த்தத்தை காக்கை மடு தீர்த்தம் / வாயசை தீர்த்தம் என்கின்றனர்.

🌹எமன் சனீஸ்வரனுக்கு அதிபதி. எனவே சனி தோஷங்கள் நீங்க, எமன் வழிபட்ட வாலீஸ்வரரையும், நவகிரஹத்தில் உள்ள சனீஸ்வரையும் வழிபடலாம்.

🌹ஞான சம்பந்தர் தனது பதிகத்தில் இத்தலத்தை, “குரங்கணில் முட்டம்” என்றும் “பறவா வகை வீடு” ( முக்தி கிடைக்கும் தலம் ) என்றும் சொல்லி பதிகம் பாடியுள்ளார். எனவே இங்கு வேண்டிக் கொள்ள முக்தி நிச்சயம் என்கிறார்கள்.

🌺 பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹பாப விமோசனம், ஞானம், அறிவு திறன் வளரவும் சனி தோஷம் நீங்கவும் பிரார்த்தனை மேலும் குறைவிலாத வாழ்வும், பிறப்பில்லா நிலையும் கிடைக்கும்.

🌹அம்பாளை திருமணமான பெண்கள் & கர்ப்பிணிகள் அம்பாளுக்கு வளையல் பூட்டி பின்பு அணிந்து அணிந்து கொள்கின்றனர். அதனால் புத்திர பாக்யம் & சுகப்பிரசவம்.

பாலாரிஷ்ட தோஷமுள்ள குழந்தைகளுக்கு குணமாகவும் அம்பாளிடம் வேண்டுதல்.

🌺 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருகார்த்திகை லட்ச தீப திருவிழா,

மாசி மஹாசிவராத்திரி,

ஐப்பசி அன்னாபிஷேகம்,

🌺 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வாலி இந்திரன் எமன் அப்பர் சம்பந்தர் சுந்தரர் சேக்கிழார் 

🌺அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

10 KM from KANCHIPURAM காஞ்சி வந்தவாசி பாதையில் பாலாறு தாண்டி தூசி கிராமம்  கிழக்கே 2KM

7AM – 10 AM, 4 PM – 7 PM

9943295467 நடராஜ குருக்கள் 

9380920199 சம்பத் குருக்கள் 

கிராம கோயில், குருக்களை அழைத்துவிட்டு சொல்லவும்.

🌺கோயில் தேவாரபதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்கும்

கழுநீர் குவளைம்மல ரக்கயல் பாயும்

கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம்

தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே. 1 

ஞானசம்பந்தர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *