திருவலம் திருவல்லம் வில்வநாதேஸ்வரர்
மூலவர் : வில்வநாதேஸ்வரர் வல்லநாதர்
அம்பாள் : தனுமத்யாம்பாள் வல்லாம்பிகை
ஸ்தல விருக்ஷம் : வில்வம்
பாடல் : ஞானசம்பந்தர் அப்பர்
தீர்த்தம் : நிவா நதி, கௌரி தீ, சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், தொண்டை நாட்டு ஸ்தலம் 10
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுயம்பு நந்தி சிவனை நோக்கி இராமல், கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது.
5 ஏக்கர் நிலப்பரப்பில், 7நிலை ராஜகோபுரம் , 3 பிரகாரம் என பிரம்மாண்டமான கோவில். உள் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர் , பெருமாள் சுப்ரமணியன், சகஸ்ரலிங்கம், மீனாட்சி சுந்தரேசுவரர், பைரவர் சூரியன், பாகாளேஸ்வரர் சந்நிதிகளும், கிழக்கு நோக்கிய பெரிய நந்தியும் காட்சி.
ஊருக்குள் நிவா நதி ஓடுகிறது. நதியின் கரையிலேயே கோவில். இறைவன், தீர்த்தத்தின் பொருட்டு நீ வா என்றழைக்க இந்நதி அருகில் ஓடிவந்து பாய்ந்ததால் இப்பெயர் பெற்றது. நீவா மருவி நிவா மற்றும் பொன்னை நதி. இந்நதியிலிருந்து தான் பண்டை நாளில் சுவாமிக்கு தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. இப்போது கோவிலுள் கௌரி தீர்த்தம், தீர்த்த கிணறும் உள்ளது
ஒரு காலத்தில் வில்வ காடாக இருந்தமையால் இத்தலம் வில்வவனம், வில்வாரண்யம். அக்காட்டில் ஒரு பாம்பு புற்றில் சிவL இருந்தது. தினமும் ஒரு பசு பாலை சொரிந்து வழிபட, புற்று சிறிது சிறிதாக கரைந்து, நாளடைவில் சிவலிங்கம் வெளிப்படலாயிற்று. ஆதலால் சிவன் வில்வநாதேஸ்வரர்.
இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது. இதை சாப்பிட்டால் மந்த புத்தி நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முழுமுதற் கடவுளான விநாயகர், அம்மையப்பன் தான் உலகம் உலகம் தான் அம்மையப்பன் என உலகிற்கு அறிவித்த தலமே திருவல்லம். வலம் வந்ததை உணர்த்துவதால் திருவலம் என்றாகி மருவி திருவல்லம் ஆயிற்று.
இங்குள்ள ஸ்தல விநாயகர், “கனி வாங்கிய பிள்ளையார்” என அழைக்கப்படுகிறார். அதற்கேற்றார் போல் துதிக்கையில் மாங்கனியை வைத்து வடக்கு நோக்கி அருள்
பாலிக்கிறார்.
கைலாயத்திற்கு ஒப்பான, கைலாயத்திற்கு சமமான திவ்ய க்ஷேத்ரம். திருவிளையாடல் புராணத்தில் பரக்க பேசப்படுகிறது. நாரத பகவான் மா(துளம்) கனியோட கைலாயத்திற்கு வருகிறார். பார்வதி பரமேஸ்வராளோட திவ்யமான சரணத்தில் வைத்து நைவேத்யம் பண்றார். இந்தக் கனியின் உன்னதத்தை உரைக்கிறார்.
160 வருடங்களுக்கு ஒரு முறை கற்பக விருக்ஷத்தில் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான கனி. 160 வருடம் தேவலோக கணக்கு, எத்தனையோ சதுர்யுகம் நம் கணக்குப்படி.
அதனால அதை ஸ்வாமிக்கு சமர்ப்பணம் பண்ணிட்டு, பிரசாதமா தான் எடுத்துக்கலை. ஸ்வாமி கையிலே கொடுத்து, இதை யாருக்காகவாது அனுக்கிரஹம் பண்ணி கொடுக்கணும். இதை ஒருவரே ஸ்வீகரிக்கனும், பிரித்துக் கொடுக்கப்படாதுனு சொல்லி நமஸ்காரம் செய்து கிளம்புகிறார்.
அப்பத்தான் 2 பேர் உள்ள வரா. அவா கணபதி, முருகன். வந்தது 2, இருப்பதோ 1. இந்த லோகத்தை யார் முதலில் பிரதக்ஷிணம் பண்ணிக்கொண்டு வருகிறார்களோ அவாளுக்கு தந்துடறேன் என்கிறார். லோகம் என்றால் பிரம்மாண்டம். நாம நினைக்கிற மாதிரி இல்லை.
அதள… பாதாள… பூ… சத்ய…
ஈரேழு 14 புவனங்களையும் யார் பிரதக்ஷணம் செய்வது?
உடனே முருகப்பெருமான் – வாயுவேகம் மனோ வேகம் – மயில் மேல் – 33/4 நாழிகை கால அவகாசத்தில் பிரதக்ஷணம் – பார்க்கிறவாளுக்கு FRACTION OF A SEC – கடந்துடறார் – அவ்வளவு வேகமான பிரதக்ஷணம். உள்ளே நுழைகிறார் – கனி கணபதியின் கைகளில்..
கணபதி என்ன செய்தார்? லோகத்துல முதல் கடவுள் அம்மா அப்பா! அம்மா அப்பா தான் உலகம்! அந்தர்முகமா பாக்கறச்சே அம்மா அப்பாவை யே இந்த பிரம்மாண்டமா பார்க்கிறார்.
காளிதாசன் சொல்றானே,
” வாகர்த்தாவிவ… ஜகதஃ பிதரௌ வந்தே” அப்படி கணபதிக்கு கனி கொடுத்த இடம். (மாதுளம் பழம் சமஸ்கிருதத்ல மனோரத பழம்)
கணபதி
அம்மா அப்பாவை யே உலகமா பார்த்தார்
முருகன் இந்த உலகத்தையே அம்மா அப்பாவை பார்த்தார்.
இங்கு விநாயகர், தன் வாஹனமான மூஷிகனின் (பெருச்சாளி) மீது அமர்ந்திருப்பது காண்பதற்குரிய சிறப்பம்சம். விநாயகருக்கும் முருகனுக்கும் சிவன் வைத்த போட்டியில், விநாயகர் ஞானப்பழத்துடன் இத்தலத்தில் வந்து அமர்ந்ததாக வரலாறு. எனவே இவரை வணங்குவோர் பிறப்பற்ற நிலையை அடைவர்.
இத்தல முருகனை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.
ஸ்வாமி சன்னிதியில் வலது பக்கம் தொட்டி போன்ற அமைப்பில் ஜலகண்டேஸ்வரர் எனும் பாதாளேஸ்வரர் அருள்பாலிக்கிறார். மழைவேண்டி இவருக்கு வழிபாடு.
சனகர் சமாதி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வில்வநாதேஸ்வரருக்கு நேர் எதிரில் நந்திக்கு நடுவில் தக்ஷிணாமூர்த்தியின் சீடரான சனகரின் சமாதி உள்ளது. இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதால் பூர்வ ஜென்ம பாவங்கள் நிவர்த்தியாகிறது என்று கூறுகிறார்கள்.
சிவானந்த மௌனகுரு சுவாமிகள் இங்குள்ள பலா மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து இறைவன் அருள் பெற்றார். இவருக்கு கோவில் அருகே தனி மடம் உள்ளது. கஞ்சன் மலையிலுள்ள சுயம்பு லிங்கத்திற்கு பௌர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கொடி மரத்தின் பின்னால் உள்ள நந்தியும், மூலவர் சந்நிதியில் உள்ள நந்தியும் ஸ்வாமியை நோக்கி இராமல் கிழக்கு நோக்கி உள்ளது. இத்தலத்தில் 4KM தொலைவில் கஞ்சனகிரி என்றொரு மலை உள்ளது. இம்மலையில் கஞ்சன் எனும் அசுரன் இருந்தான். இம்மலையில் இருந்து தான் மிகப் பழங்காலங்களில் சுவாமிக்கு தீர்த்தம் கொண்டு வரப்பட் டது. இவ்வாறு தீர்த்தம் கொண்டு வருவதை கஞ்சன் தடுத்தான்.
செய்வதறியாது அர்ச்சகர் இறைவனிடம் முறையிட, நந்தியம் பெருமானை கஞ்சனுடன் போரிட்டு அழிக்க அனுப்பினார். அவ்வாறு அழித்த போது அசுரனின் லலாடம் வீழ்ந்த இடம் லாலாபேட்டை, சிரசு வீழ்ந்த இடம் சீகராஜபுரம், வலது கால் அறுபட்டு வீழ்ந்த இடம் வடகால், தென்கால் (இடது) கால் வீழ்ந்த இடம் தென்கால், மணிக்கட்டு வீழ்ந்த இடம் மணியம்பட்டு, மார்பு வீழ்ந்த இடம் குகைய நல்லூர், என்று வழங்கப்படுகிறது (WITHIN 3KM).
அவனது பாகங்கள் விழுந்த இடத்தில் மீண்டும் முளைத்தான் கஞ்சன். அவன் மீண்டும் வருகிறானா என்பதை கண்காணிக்கும் வகையில் நந்தி சிவனை நோக்கி இராமல் கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது.
காஞ்சனகிரியில் அசுரனின் குருதி பட்ட இடத்தில் எல்லாம் or விழுந்த இடத்தில் எல்லாம் சிவலிங்கங்கள் உண்டாயின. கஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க வில்வ நாதேஸ்வரர் தைப்பொங்கல் கழிந்த 3ம் நாள் கஞ்சனின் உடல் உறுப்புக்கள் விழுந்த 8 இடங்களிலும், கட்டப்பட்டுள்ள கோவில்களுக்கு எழுந்தருளி, கஞ்சனுக்கு மோக்ஷமளிக்கும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
இங்குள்ள அம்பாளுக்கு ஆதியில் தீக்காலி அம்பாள் (ஜடாகலாம்பாள்) என்று பெயர் இருந்ததாகவும், உக்கிரவடிவில் இருந்த இந்த அம்பாளை ஆதி சங்கரர் சாந்தப்படுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.
இங்குள்ள பெருமானை, மஹாவிஷ்ணு வழிபட்டதால், மஹாவிஷ்ணுவின் பாதம் பத்மபீடத்தில் கொடி மரத்தின் முன்பு உள்ளது.
திருவண்ணாமலை கிரிவலம் வந்தால் என்ன பெருமை உண்டோ, அப்பேர்ப்பட்ட பெரும் பெருமை, திருவலம் பிரகாரத்தை பிரதக்ஷணம் செய்தால் அனுக்கிரகம். சுவாமியும் அம்பாளையும் சேர்த்து பிரதக்ஷணம் செய்யும் அமைப்பு, பிரதக்ஷணம் பண்ணி கோவிலுக்குள்ள போகணும்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மூளை வளர்ச்சி குறைபாடு நீங்கவும், கல்வி மற்றும் ஞானம் பெருகவும், முக்தி அடையவும் சிறப்புப் பிரார்த்தனைகள்.
நட்சத்திர தோஷ நிவர்த்தி பிரார்த்தனை
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாசி அமாவாசை கழிந்து 5ம்நாள் பஞ்சமியில் கொடிஏற்றி பிரம்மோற்சவம் 10 நாள்.
சித்ரா பௌர்ணமி ஜோதி தரிசனம்.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விநாயகர், பார்வதி தேவி, மஹாவிஷ்ணு, ஆதிசேஷன், கங்கை, காவிரி, பிருகு முனிவர், காசிப முனிவர், கண்வ முனிவர், அகத்திய முனிவர், வசிஷ்ட முனிவர், வாமதேவர், சனக முனிவர்,
வரகுண பாண்டியன், கோச்செங்கட்சோழன்,
இடைக்காடர், மௌன சுவாமிகள், அப்பர், சம்பந்தர் சேக்கிழார், அருணகிரிநாதர் முதலியோர்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
FROM ராணிப்பேட்டை சிப்காட் 6KM, சிப்காட் தாண்டி இரும்பு பிரிட்ஜ் கடந்தால் திருவலம்.
20 KM FM வேலூர்.
7AM – 12 NOON, 4PM – 8PM
9487045698 & 9363671928
T.N. செல்லப்பா சிவாச்சாரியார் தலைமை அர்ச்சகர்
(1ம் தேதிமுதல் 10ம் தேதிவரை)
98949922166 உமாபதி சிவாச்சாரியார்
(11ம் தேதிமுதல் 20ம்தேதிவரை)
9360040807 கந்தசாமி குருக்கள்
(21ம்தேதிமுதல் 30ம் தேதிவரை)
கோயில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே. 1
திருஞானசம்பந்தர்
திருஞானசம்பந்தர்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே. 1
திருஞானசம்பந்தர்
திருஞானசம்பந்தர்


Leave a Reply