திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் அண்ணாமலையார்
மூலவர் : அருணாசலேஸ்வரர் அண்ணாமலையார்
அம்பாள் : அபிதகுசலாம்பாள், உண்ணாமுலையம்மன்
ஸ்தல விருக்ஷம் : மகிழமரம்
தீர்த்தம் : கோயிலுக்கு உள்ளேயும், வெளியிலும், மலைப்பகுதியிலும் 360 தீர்த்தங்கள் உள்ளன. பிரம்மா தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், அக்னி தீர்த்தம் மற்றும் இந்திர தீர்த்தம் ஆகியவை முக்கிய குளங்களில் அடங்கும்.
பாடல் : அப்பர் சம்பந்தர் சுயம்பு
54வது தேவார பாடல் பெற்ற சிவாலயம், நடுநாட்டு ஸ்தலம்22
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அண்ணுதல் என்றால் நெருங்குதல் இவர் நெருங்க முடியாதவர், So அண்ணாமலை..
“அருணம்” என்றால் “சிவப்பு”. “சலம்” என்றால் “மலை”. So “அருணாச்சலம்”
கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு.
இங்கு லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலை சிறப்பு.
பஞ்சபூத அக்னி ஸ்தலம்.
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம். நான் என்ற அகந்தையை அழித்த ஸ்தலம்.. சித்தர்கள் வாழ்ந்த, வாழும் பூமி.. 51 சக்தி பீடங்களில் அருணை பீடம்.. ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், விசிறி சாமியார் என சித்தர்கள் வாழ்ந்த பூமி..
25 ஏக்கரில், 9 கோபுரம், 7 பிரகாரம், 217 அடி உயர கோபுரம், 142 சந்நிதி, 22 விநாயகர், 306 மண்டபங்கள், 1000 தூண், என 1000 வருடங்கள் கட்டப்பட்ட கோவில்..
பௌர்ணமி, மாதப்பிறப்பு, பிரதோஷம் கிரிவலம் சிறப்பு.. 14 KM.. எட்டு திசைகளிலும் எட்டு லிங்கங்கள். “இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம்” என “அஷ்டதிக் பாலகர்கள்” எனப்படும் எட்டு திசைகளின் அதிபதிகள் ஸ்தாபித்து வழிபட்ட லிங்கம் உள்ள கோவில்கள் இருக்கின்றன. இந்த அஷ்ட லிங்கங்களையும் வழிபடுவதால் நமது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
இந்த கிரிவழிப் பாதையிலேயே “இடுக்கு பிள்ளையார்” கோவில் இருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் ஒரு மண்டபத்தில் இருக்கும் சிறிய இடுக்கின் வழியாக உள்ளே நுழைந்து, முன்பக்கமாக வெளியில் வந்து விநாயகரை வேண்டிக் கொள்வதால் குழந்தை பேறில்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பது திடமான நம்பிக்கை.
மலையின் உயரம் 2688 அடி ( 800 மீட்டர் ), கிரிவலப் பாதையில் 20 ஆஸ்ரமம், 360 தீர்த்தம், அஷ்டலிங்கம், 26 சித்தர்கள் வாழ்ந்த இடம், நிறைய சன்னிதிகள் உள்ளன.. ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனம் கிடைக்கும்.. 27 வகை தரிசனம்..
விஞ்ஞான அடிப்படையில் பௌர்ணமி நாட்களில் நிலவின் ஒளி மலை மீதும் மலைகள் உள்ள மூலிகை செடிகளின் மீதும் பட்டு பிரதிபலிக்கிறது. அந்த நாட்களில் மலையை சுற்றி வந்தால், அந்த ஒளிக்கதிர்கள் நம் மீது பட்டு உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது.
சந்திரன் ஒளஷதபதி என்றும் அழைக்கப்படுகிறார்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்கு முதல் வணக்கம் முருகனுக்கே.. கம்பத்திளையனார்.. சம்பந்தாண்டான் என்னும் புலவன் முருகனை நேரில் காட்டும்படி அருணகிரியாரின் பக்தியை இகழ்ந்தான்.. காளி உபாசகனான சம்பந்தாண்டான், முருகனை தன் மடியில் எங்கும் செல்லாமல் வைத்துக் கொள்ள காளியை வேண்டி..
இதை அறிந்த அருணகிரியார் அன்னை மீது பாட, அன்னை பாடலில் மயங்கி இருக்க, முருகனும் மடியிலிருந்து இறங்கி வந்து கம்பத்தில் காட்சி தருகிறார்..
முருகனுக்கு அறுபடைவீடு போல் விநாயகருக்கும் உண்டு. இங்கே விநாயகரின் முதல் படை வீடு. கிளி கோபுரத்தில் இடதுபக்கம் அல்லல் போக்கும் விநாயகர்..
பாதாள லிங்கம், ஆணவம் அடக்கும் பைரவர், நான்கு முக பிரம்ம லிங்கம், அருணகிரி யோகீசர் சன்னதிகளும் உள்ளன..
இத்தலத்தில் தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.
திருவண்ணாமலை தீபம் ஏழு அடி உயர செப்பு கொப்பரையில் 3000 கிலோ பசு நெய் ஊற்றி, 1000 மீட்டர் காடா துணி 2 கிலோ கற்பூரம் இட்டு, 11 நாட்கள் எரியும், இரவில் 10 KM தெரியும்.. மீனவ இன பரத்வாஜ குலத்தவர், தீபத்தன்று காலை கோவில் வர, கௌரவம்i செய்யப்பட்டு, தீபம் ஏற்றும் பொருள்கள் கொடுக்கப்பட, மூன்றே மணி நேரத்தில் மலை ஏறி விடுகிறார்கள்..
இறைவனை எப்போதும் பிரியாதிருக்க அம்பாள் இங்கே தவம் செய்ய, ஜோதி சொரூபமாய் காட்சி கொடுத்ததை நினைவு கூர்வதே அண்ணாமலை மகாதீபம்..
அம்பாள் தவமிருந்து, கிரிவலம் வர, கார்த்திகை பௌர்ணமி கிருத்திகை சேரும் நாளில், சிவராத்திரி இரவில், தன் மேனியில் இடப்பாகத்தை அளித்து அர்த்த நாரீஸ்வரராக காட்சி கொடுத்ததும் இங்கேதான்.. வருடத்தில் இந்த ஒரு நாள் மட்டும் அர்த்தநாரீஸ்வரர் வெளியே வர, அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றி, மலையில் மஹாதீபம்.. சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய ஸ்தலம் இது.
நரசிம்மர் இரண்ய வதம் போது அருகில் இருந்த சிறு பாலகன் பிரகலாதனை மட்டும் நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத்துளி மலை மீது பட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்க பலம் கொடுத்தது. கிரிவலம் அத்தனை சக்தி வாய்ந்தது.
ஸ்தலபுராணம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அனைவருக்கும் தெரியும். பிரம்மா விஷ்ணு யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட, ஜோதிப் பிழம்பாய் இறைவன் நிற்க, அடிமுடி காண்பவரே பெரியவர்.. வராஹ அவதாரம் எடுத்து விஷ்ணுவும் அடி காணச் சென்று தோல்வியை ஒப்புக்கொண்டார். அன்னப்பட்சி ரூபத்தில் பறந்த பிரம்மாவோ, பல வருடங்களாய் கீழே விழுந்து கொண்டிருக்கும் தாழம்பூவை சாட்சிக்கு அழைத்து வந்தார்..
கோபம் கொண்ட இறைவனும் பிரம்மாவிற்கும் பூமியில் கோவில் கிடையாது என்றும், தாழம் பூ இனி தன் மேனியை தீண்டாது எனவும் சாபமிட்டார்..
உண்மையைச் சொன்ன விஷ்ணுவிற்கு தனக்கு இணையாக இனி கோவில்கள் உண்டு என்று வரமளித்தார்..
பிரம்மாவையும் மன்னித்து இங்கு லிங்கோத்பவர் ஆக காட்சியளித்தார். லிங்கோத்பவர் உருவான தலமும் இதுவே..
அடிமுடி காண முடியாத பரம்பொருளின் பாத தரிசனம் வேண்டி தவம் செய்ய விஸ்வரூப தரிசனமும் தந்தார். இன்றும் அந்த இடத்தில், பாவம் போக்கும் அண்ணாமலையார் திருப்பாதம் காணலாம்.. தனி சன்னதி உள்ளது.
தினமும் பூஜை உண்டு.
மலை உச்சியிலும் திருப்பாதம் காணலாம்..
இங்குள்ள வேணுகோபாலர் சன்னதியில் பெருமாளும் வைகுண்ட ஏகாதேசி அன்று ஜோதி சொரூபத்தில் தான் சொர்க்கவாசல் கடக்கிறார்..
மாட்டுப் பொங்கல் & பிரதோஷம்
நந்திக்கு விசேஷ பூஜை அபிஷேகம் அலங்காரம் நடக்கின்றது..
திருவண்ணாமலை ஆர்கேயன் காலத்தியது என்றும் மலையின் வயது 260 கோடி ஆண்டுகள் என்றும் கணக்கிட்டுள்ளனர்.. ( REF : BIRBAL SAHANI SCIENTIST )..
இன்னும் சொல்ல எவ்வளவோ உள்ளது..
அனைத்தும் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி..
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனதுயர் நீங்கும், கேட்கும் வரம் கிடைக்கும். கிரிவலம் சிறப்பு.
திருமண வரம் குழந்தை வரம் உத்தியோக உயர்வு வியாபார விருத்தி, வேலை வாய்ப்பு என அனைத்து வேண்டுதல்களும்..
உடல் பிணி, குடும்பப் பிரச்சனை, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர என அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன. மேலும் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி என்பது வழக்கு.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் கார்த்திகை தீபம் 10 நாட்கள். மாசி மஹா சிவராத்திரி, மாசி மகம் தீர்த்தவாரி, தை மாட்டுப்பொங்கல், ஆடிப்பூரம் தீமிதி திருவிழா, ஒவ்வொரு மாதமும் ஏதாவது திருவிழா நடந்து கொண்டே இருக்கும்.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சூரியன், , அஷ்டவசு, பிரம்மா, சந்திரன், இந்திரன், விஷ்ணு, புலஸ்தியர், விஸ்வாமித்ர, பதஞ்சலி, வியாக்ரபாத, அகஸ்திய, சனந்தனா, சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நக்கீரர், பரணர், கபில, பட்டினத்தார், சேக்கிழார், இடைக்காட்டு சித்தர், ஐந்தகிரி சித்தர்., பிரதத்தராஜன், ஞானதேசிகர், குரு நமச்சிவாயர் , குஹ நமசிவாயர், ரமண மஹரிஷி, சேஷாத்ரி ஸ்வாமி, யோகி ராம்சுரத்குமார், அம்மனியம்மன், சைவ எல்லப்பநாவலர் என எண்ணற்ற தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், பக்தர்கள் என ஒரு சிலரின் பெயர்.
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நகரின் மையப் பகுதியிலேயே உள்ளது. எல்லா ஊரிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.
5AM – 12.30PM, 4PM – 9.30PM
94441 37788 கீர்த்திவாசன் குருக்கள்
94436 30239 ராஜன் குருக்கள்
94895 64676 & 80723 63920 கோகுல் குருக்கள்
நிர்வாக அதிகாரி 04175 252438
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உண்ணாமுலை உமையாளொடும்
உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை
திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள்
மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை
வழுவாவண்ணம் அறுமே. 1
ஞான சம்பந்தர்


Leave a Reply