திருமுதுகுன்றம் விருத்தாசலம் பழமலைநாதர் விருத்தகிரீஸ்வரர்

🌻மூலவர் : விருத்தகிரீஸ்வரர் (பழமலைநாதர், முதுகுந்தர் )

அம்பாள் : விருத்தாம்பிகை (பாலாம்பிகை இளையநாயகி)  ஸ்தல விருக்ஷம்  : வன்னி தீர்த்தம் : மணிமுத்தா நதி, நித்யாநந்த கூபம், அக்னி, சக்கர, குபேர தீ,

பாடல் : அப்பர் சுந்தரர் சம்பந்தர்

ஆகமம்  : காமிகம்,

புராணபெயர் : திருமுதுகுன்றம் ஊர் : விருத்தாச்சலம், சுயம்பு,  

41வது தேவார பாடல் பெற்ற சிவாலயம், நடுநாட்டு ஸ்தலம் 9

🌻ஸ்தல சிறப்பு 👉 

°°°°°°°°°°°°°°°°°°°°°

ஸ்தல விருக்ஷம் வன்னி  2000 ஆண்டுகள் பழமையானது. இத்தலத்தில் பிறந்தால் வாழ்ந்தால் வழிபட்டால் நினைத்தால் இறந்தால் என இந்த 5ல் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட முக்தி நிச்சயம். முருகன் 6 படை வீடு இருப்பது போல, விநாயகருக்கு 👉 6 படை வீடு உள்ளது. இத்தலத்தில் ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் 2வது படை வீடு ஆகும். காளஹஸ்தியில் உள்ளது போல் இவர் 18 படி இறங்கி தரிசிக்கும்படி அமர்ந்துள்ளார். இந்த ஆழத்து விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர். ஒருமுறை உலகம் அழிந்த போது இத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராண சிறப்பை பெற்றுள்ளது. சிறப்பான 1008 சிவ தலங்களில் 4 முக்கிய தலங்களில் ஒன்று இது. இங்கும் பௌர்ணமி கிரிவலம் சிறப்பு,

🌻பொது தகவல்-28 லிங்கங்கள்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக  👉 முருகன் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கோயிலின் வடமேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்து, இதில் தெற்கு வரிசையில் லிங்கங்களின் நடுவே விநாயகரும், மேற்கு வரிசையில்  லிங்கங்களின்  நடுவே வள்ளி தெய்வானையோடு முருகனும் அருள் பாலிக்கிறார்கள். 28 ஆகமங்களுக்குரிய பெயர்கள் அவற்றிற்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயில் ஆகம கோயில் என்றும் அழைப்பார்கள்.

விருத்தாசலம் பெயர்காரணம் 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° 👉விருத்த= முதுமை, அசலம் = மலை, So பழமலை. தேவார திருப்பதிகங்களில் அதே பொருளில் திருமுதுகுன்றம் என்றும் போற்றப்படுகிறது.

 🌻ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சக்கரங்கள் அமைந்த முருக பெருமான் : ஈசன் & விருத்தாம்பிகை சந்நிதிக்கு இடையில் அமைந்துள்ளது. 28 சிவலிங்கங்களுடன் உடனுறையும் முருகன் வள்ளி தெய்வானை காட்சியாகும். சிறப்பு நின்ற திருக்கோலத்தில் முருகன் வள்ளி தெய்வானை மேலே சக்கரங்கள் அமைந்தது. எல்லா வளமும் கிட்டும் என்பதை நினைவுறுத்துகின்றன. இதுபோல சக்கரங்கள் சில திருத்தலங்களில் மட்டும் தான்.

🌻எல்லாமே 5 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இக்கோயில் எல்லாமே 5 தான்.

🌹5 மூர்த்தங்கள் 👉 விநாயகர் முருகன் சிவன் சக்தி சண்டிகேஸ்வரர் 

🌹5 திருநாமம் 👉 விருத்தகிரீஸ்வரர் பழமலைநாதர் விருத்தாச்சலேஸ்வரர் முதுகுன்றீஸ்வரர் விருத்தகிரி 

🌹5 விநாயகர் 👉ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார் தசபுஜகணபதி வல்லபகணபதி 

🌹5 பேர் தரிசனம் கண்டனர் 👉 உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்த்தினி 

🌹5 கோபுரம் 👉 கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு & கண்டராதித்தன்  கோபுரம் 

🌹5 பிரகாரம் (திருச்சுற்று) 👉 தேரோடும் திருச்சற்று , கைலாய, வன்னியடி, 63வர், பஞ்சவர்ண திருச்சற்றுகள்..

🌹5 கொடிமரம் 👉 இந்த கொடி மரங்கள் முன்புள்ள நந்தி 👉 இந்திர வேத ஆத்ம மால்விடை தர்ம – நந்தி 

🌹5 உள் மண்டபம் 👉 அர்த்த இடைகழி தபன மஹா இசை மண்டபங்கள்.

🌹5 வெளிமண்டபம் 👉20 கால், தீபாராதனை, 100 கால், விபசித்து, சித்திர மண்டபங்கள்.

🌹5 வழிபாடு 👉 திருவனந்தல் காலசந்தி உச்சிகால சாயரட்சை அர்த்தஜாமம் 

🌹5 தேர் 👉 விநாயகர், முருகன் , பழமலைநாதர் பெரியநாயகி  சண்டிகேஸ்வரர்  தேர்கள் 

🌹 5 பேர் ( தலத்தின் ) 👉 திருமுதுகுன்றம் விருத்தகாசி விருத்தாச்சலம்  நெற்குப்பை முதுகிரி 

🌻முத்தா நதியில் பொன் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஒருமுறை சுந்தரர் திருவாரூரில் பங்குனி உத்திர விழாவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய பொருள் சேகரிக்க ஒவ்வொரு தலமாக சென்றார். இத்தலம் வரும்பொழுது இறைவன் சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னை தந்தார். திருவாரூர் செல்லும் வழியில் உள்ள கள்வருக்கு பயந்து, இந்த பொன் அனைத்தையும் இங்குள்ள மணிமுத்தா நதியில் போட்டுவிட்டு இறைவனின் அருளால் திருவாரூர் குளத்தில் மூழ்கி எடுத்தார். இதை அடிப்படையாக கொண்டே “ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுவது போல்” என்ற பழமொழி தோன்றியது. இறைவன் தந்த பொன் மாற்றுக் குறையாத தங்கம் தானா என்று சுந்தரர் மனம் அலை பாய்ந்ததை உணர்ந்த இறைவன், நம்பிக்கைக்காக தும்பிக்கை நாயகனை சாட்சியாக அமைத்து பொன்னை மாற்றுரைத்து  காட்டினார். திருவாரூர் குளத்தில் பெற்றுக் கொள்ளவும் செய்தார். எனவேதான் இத்தலத்தில் உள் சுற்றுப் பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயகர் 👉மாற்றுரைத்த விநாயகர்.

🌹முருகன் சிவனை பூஜித்த தலம் இது. விபசித்து முனிவரால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில் முதுகுன்ற திருக்கோயில். மணிமுத்தா நதிக்கரையில் அமைந்துள்ளது. மற்ற சிவ தலங்களில் துர்க்கை அம்மன் சிவன் சன்னிதியில்  ஆட்சி செய்வதாக அமைந்திருக்கும். ஆனால் இந்த முதுகுன்றத்தில் துர்க்கை உமையவள் விருத்தாம்பிகையின் வடக்கு பக்கத்தில் நின்ற கோலத்தில் இருந்து அருளாட்சி செய்வது சிறப்பு.

🌹தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக்காக ஆடிய தலம் என்றும், இத்தலம் சிவன் சந்தோஷத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர்.

🌹இங்குள்ள அர்த்த மண்டபத்தில் 4 வேதங்களே 4 தூண்களாக அமைந்துள்ளன.

🌹ஸ்தல விருக்ஷம் வன்னி 2000 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் திருப்பணி செய்த விபசித்து முனிவர், தன் வேலையாட்களுக்கு சம்பளமாக இம்மரத்தின் இலைகளை பறித்து தருவார். அது அவரவர் உழைப்பிற்கு ஏற்ப பொற்காசுகளாக மாறிவிடும்.

🌹இத்தல தீர்த்தமான மணிமுத்தாறு நதியில், இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால், அது கல்லாக மாறி நதியிலேயே தங்கி விடுவதாக ஸ்தல புராணம் கூறுகிறது.

🌹பெரியநாயகி அம்மை பதிகம், க்ஷேத்திர கோவை வெண்பா, பழமலைநாதர் அந்தாதி, பெரிய நாயகிவிருத்தம், கலித்தொகை, பிக்ஷாடன நவமணி மாலை, குரு தரிசன பதிகம், பிள்ளை தமிழ் ஆகிய நூல்களும் இத்தலத்திற்குரியது.

🌹கர்நாடக மன்னன் இத்தலம் வந்த போது பசியால் வாடினான். அப்போது பெரியநாயகி இளமை வடிவெடுத்து பாலூட்டி அவனுக்கு குமார தேவர் என்று பெயர் சூட்டினாள்.

🌻முக்தி தலம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

காசியைப் போன்று விருத்தாச்சலமும் முக்தி தலமாகும். இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவரை வழிபட்டால், காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இத்தலம் ‘விருத்த காசி’.  “காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி” என்ற பழமொழி கூட உண்டு. இத்தலத்தில் இறக்கும் உயிர்களை அன்னை விருத்தாம்பிகை தன் மடியில் வைத்து, தன் புடவை தலைப்பால் விசிறி, அவர்களின் பாவங்களை விலக்குகிறாள். சிவ பெருமான் அருகே அமர்ந்து கொண்டு, உயிர்கள் மோக்ஷம் அடைவதற்காக “நமசிவாய” எனும் பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேசிக்கிறார் என ஸ்தலபுராணம் கூறுகிறது.

“தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறிஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்தகாசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்.”

கந்தபுராணம்-வழிநடைப்படலம்

🌻பாலாம்பிகை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

யுகம் கொண்ட தலமான இங்குள்ள அம்மனின் திருநாமம் விருத்தாம்பிகை. ஒருமுறை திருவண்ணாமலை யிலிருந்து, சிதம்பரம் செல்ல இங்கு வந்த குரு நமச்சிவாயர், இத்தலத்தில் இரவு தங்கினார். அப்போது அவருக்கு பசி ஏற்பட்டது. இத்தல பெரிய நாயகியிடம், சோறு வேண்டி கிழத்தி என்ற சொல் வரும்படி ஒரு பாடல் பாடினார். இதைக் கேட்ட பெரிய நாயகி கிழவி ரூபத்தில் அங்கு வந்து, ” கிழவி எவ்வாறு சோறு கொண்டு வர முடியும்? இளமையுடன் இருந்தால் தான் நீ கேட்டது கிடைக்கும் ” எனகூறி மறைந்தாள். இதைக் கேட்ட குரு நமச்சிவாயர்,

“முத்தி நதி சூழும் முதுகுன் றுறைவாளே 

பத்தர் பணியும் பதத்தாளே -அத்தன்

இடத்தாளே, முற்றா இளமுலை மேலாற

வடத்தாளே! சோறு கொண்டு வா ” என பாடினார். இந்தப் பாட்டில் மயங்கிய அம்மன், இளமை கோலத்துடன் காட்சி தந்து சோறு போட்டாள். அன்று முதல் “பாலாம்பிகா” என்ற பெயர் ஏற்பட்டது.

🌹இத்தலத்து முருகன் மீது அருணகிரிநாதர் திருப்புகழில் 10 பாடல் பாடி இருக்கிறார். குமார தேவர், குரு நமச்சிவாயர், சிவப்பிரகாசர், இராமலிங்க அடிகளார் ஆகியோரும் பாடல்.

🌻ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அப்பர் சம்பந்தர் சுந்தரர் காலத்தில் இத்தலம் பழமலை என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் விருத்தாச்சலம் என வடமொழிச் சொல்லால் அழைக்கப்பட்டது. விருத்தம்= பழமை, அசலம் = மலை. காலத்தால் மிகவும் முற்பட்டது இந்த மலை. சிவபெருமான் முதல் முதலில் இங்கு மலை வடிவில் தோன்றினார் என்றும், இந்த மலை தோன்றிய பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் தோன்றியது என்றும் திருவண்ணாமலைக்கும் முந்தைய மலை என்றும் புராணங்கள் கூறுகின்றன.

இத்தலம் முன்பொரு காலத்தில் குன்றாக இருந்தது. விபசித்து முனிவர் முத்தா நதியில் மூழ்கி, இரவு திருக்கோயிலில் தங்கியதால் அருள் கிடைக்கப்பெற்று, திருப்பணி செய்யும் பேறு பெற்றார். இத் திருக்கோவில் தல மரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை பறித்து கூலியாக கொடுத்தார்..

இத்தலத்து ஈசனான முதுகுன்ற பெருமானை பாட மறுத்து சென்ற சுந்தரரை இறைவன் தடுத்தாட்கொண்டு தன்னை பாட வைத்து 12000 பொற்காசுகளை கொடுத்ததோடு அல்லாமல் மணிமுத்தா நதியில் போட்டு திருவாரூரில் எடுக்க வைத்தார்.

🌻பிரார்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

விநாயகர் – மன நிம்மதி, உடல் நோய் 

துர்க்கை- திருமண வரம் குழந்தை வரம் ஐஸ்வர்யம் 

பைரவர்-ஞாயிறு-ராகு காலம்- வடை மாலை 👉 அடுத்தடுத்து வரும் இடர்கள் தூள் தூள் 

மூலவர்👉 இம்மை பயன் + மறுமை பயன் + முத்தா நதியில் நீராடினால் = சித்தி+முக்தி 

+ 3 KM கொளஞ்சியப்பர் கோவில்.

🌻திருவிழா 👉 

°°°°°°°°°°°°°°°°°°

பிரம்மோற்சவம்👉 மாசி மாதம் 10 நாட்கள் 9 ஆவது நாள் தேர். ஆடிப்பூரம் 👉 10 நாட்கள் -அம்பாள் விசேஷம்- திருக்கல்யாணம், 

வசந்த உற்சவம்👉 10 நாட்கள் வைகாசி, ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், ஒவ்வொரு பௌர்ணமி அமாவாசை பிரதோஷம் சிறப்பு. பௌர்ணமி பெரிய நாயகருக்கு (உற்சவர்) சிறப்பு அபிஷேகம்.

🌻வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

முருகப்பெருமான், விபச்சித்து முனிவர், உரோமேச முனிவர், சுக்கிராசாரியார், யாஞ்யவல்கிய முனிவர், சிகண்டி, கோசிகன், விதர்க்கண செட்டி, குபேரன் தங்கை, சம்பந்தர், அப்பர், சுந்தரர், சுவேத மன்னர், நாதசர்மா, அநவர்த்தினி, பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், பிரமன், அகஸ்தியர் , குருநமசிவாயர், சிவப்பிரகாசர், இராமலிங்க வள்ளலார் முதலியோர்

🌻அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

விருதாச்சலம் ரயில் நிலையம் அருகில் உள்ளது.

6AM to 12NOON, 4PM to 8.30PM

96290 01721 தினேஷ் சபாபதி குருக்கள்

88707 10240 கணேஷ் குருக்கள் 

04143-230203, 98656 64649 (OFF)

🌻 கோயில் தேவாரம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பொன்செய்த மேனியினீர்

  புலித்தோலை அரைக்கசைத்தீர்

முன்செய்த மூவெயிலும்

  எரித்தீர்முது குன்றமர்ந்தீர்

மின்செய்த நுண்ணிடையாள்

  பரவையிவள் தன்முகப்பே

என்செய்த வாறடிகேள்

  அடியேனிட் டளங்கெடவே. 1

 சுந்தரர் 

மத்தாவரை நிறுவிக்கடல் 

 கடைந்தவ்விடம் உண்ட

தொத்தார்தரு மணிநீள்முடிச் 

 சுடர்வண்ணன திடமாம்

கொத்தார்மலர் குளிர்சந்தகில் 

 ஒளிர்குங்குமங் கொண்டு

முத்தாறுவந் தடிவீழ்தரு 

 முதுகுன்றடை வோமே. 1

 சம்பந்தர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *