திருமழப்பாடி வைத்தியநாதர்

🪷மூலவர் : வைத்தியநாதர் வஜ்ரஸ்தம்பர்/ வைரத்தூண் நாதர்

அம்பாள் : சுந்தராம்பிகை அழகாம்பிகை பாலாம்பிகை

தீர்த்தம் : கொள்ளிடம், சிவகங்கை தீ, லக்ஷ்மி தீ

ஸ்தல விருக்ஷம் : பனைமரம்

பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர் சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் சோழ நாட்டு வடகரை ஸ்தலம் 54

🪷 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷 நந்திக்கு திருமணம் நடைபெற்ற இடம்.

🌷 இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் 4 வேதங்களும் 4 நந்தி களாக அமர்ந்துள்ளன.

🌷பிரம்மனின் சத்தியலோகத்தில் இருந்து புருஷாமிருகம் லிங்கத்தை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டது.

இதை அறிந்த பிரம்மன் லிங்கத்தை மீண்டும் எடுக்க முயல, அது அவரின் கைக்கு வர மறுத்து, அது முடியாமல் போகவே, இது வைரத்தூணோ என கூறினான். So, வைரத்தூண்நாதர் வஜ்ரஸ்தம்பேஸ்வரர்.

🌷மேலும் சோழர் காலத்தில், அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைந்திருந்ததால் மழப்பாடி என பெயர் வந்தது என்றும்

🌷மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவP, மழு ஏந்தி நடனமாடியதால் மழுவாடி என பெயர் பெற்று பின்னர் மழப்பாடி மருவி…

🌷 தக்ஷனிடம் சாபம் பெற்ற சந்திரனின் நோயை நீக்கியதால் “வைத்தியநாதன்”.

🌷முனிவரின் சாபத்தால் நோய் பெற்ற மஹாலக்ஷ்மி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வணங்கி நோய் நீங்கி.. So ” லக்ஷ்மி தீ “

இந்த நீரை உடலில் தெளித்துக் கொண்டாலே (ப்ரோக்ஷணம்) சரும நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

🌷கொள்ளிட நதி, இத்தலத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாகச் செல்கிறது. 

🪷 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷சுந்தரரை குரல் கொடுத்து அழைத்து, ” மழப்பாடி வர மறந்தனையோ ” என உணர்த்திட, சுந்தரரும் இங்கு “பொன்னார் மேனியனே” பதிகம்..👉 தங்களை மறந்து விட்டு வேறு யாரை நினைப்பேன் எனும் கருத்து அமைத்து பதிகம்.

🌷சுந்தரருக்கு கோயில் கைலாயமாக காட்சி கொடுத்தது. நாம் இந்த க்ஷேத்ரத்தில் கால் வைத்தால் கைலாயம் போனதற்கு சமானம்.

🌷கர்ப்பகிரஹத்திற்கு எதிரில் இரண்டு தீபம் எரிந்துகொண்டு இருக்கும் அதுவே நவகிரஹம்.

இங்கு சிபி சக்கரவர்த்தியின் நவகிரஹ தோஷமும் நீங்கியதாக வரலாறு.

🪷 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷 நந்தி கல்யாணம்👉

“நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்” என்று சிறப்பித்து சொல்லப்படும் நந்தி தேவரின் திருக்கல்யாணம் நடைபெற்ற திருத்தலம் இது.

சிவபெருமான் அருளால் சிலாத முனிவருக்கு, பஞ்சாட்சரம் ஜபித்துக் கொண்டே குழந்தை பிறந்தது👉 ஜபேசர் என பெயரிட்டார்.

🌷இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தன் மகனுக்கு, திருமழப்பாடியில் ஆசிரமம் அமைத்து தவமும் அறமும் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும் வியாக்ரபாதரின் மகளுமான சுயபிரகாசாம்பிகையை பங்குனி மாசம் புனர்பூசம் திருமணம் செய்து வைத்தார்.

🌷 இதற்காக நந்திகேஸ்வரர் திருவையாறில் இருந்து குதிரை வாஹனத்தில் புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்நின்று திருமணம் செய்து வைப்பதற்காக, ஐயாரப்பர் & அறம் வளர்த்த நாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்கு சென்றனர்.

🌷திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை சமேத வைத்தியநாதப் பெருமான், கொள்ளிடம் சென்று மங்கள வாத்தியங்கள் முழங்க ஐயாரப்பர் அறம வளர்த்த நாயகி நந்தியம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள திருமண மேடைக்கு அழைத்து வந்தார்.

🌷 இருவருக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது இந்நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக இன்றும்

நந்தியம் பெருமான் + சுயபிரகாசாம்பிகையை திருமணம் திருமழப்பாடியில் விமரிசையாக நடைபெறுகிறது.

🪷 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷கிழக்கு நோக்கி அமைந்த கம்பீரமான ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம், 2 முக்கிய பிரகாரங்களை கொண்டது.

கிழக்கு நோக்கிய சந்நிதிகளில் ஐயன் வைத்தியநாதரும் அன்னை சுந்தராம்பிகையும் திருக்காட்சி தர, பாலாம்பிகை தெற்குப் பார்த்த சந்நிதியில் அருட்காட்சி தருகிறாள். மேலும் இந்தக் கோயிலில் காத்தியாயினி அம்மனும் மயில் வாகனத்தில் காட்சி தருவது குறிப்பிடத்தக்க விசேஷம்.

🌷விசேஷமாக இந்தக் கோயிலில் விநாயகர் தெற்குப் பார்த்துக் காட்சி தருகிறார்

🌷ஒரே கல்லில் ஆன சோமாஸ்கந்தர், 2 அம்பிகை, 2 நந்தி, 2 மனைவிகளுடன் விநாயகர், ரிஷப வாகனத்தில் அமர்ந்த நிலையில் தக்ஷிணாமூர்த்தி, நிறைய சிற்பங்கள் பார்த்துக் கொண்டே இருக்கலாம்..

🌷இந்தக் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் ஜுரஹரருக்கு புழுங்கலரிசி சாதமும் மிளகு ரசமும் நைவேத்தியம் செய்து வழிபட்டால், தீராத காய்ச்சலும் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

🪷 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருமண தடை நீங்கும்

நோய் தீர்க்கும்

நவகிரக தோஷ நிவர்த்தி

மன அமைதி மற்றும் ஆயுள் விருத்தி

தீராத காய்ச்சல் தீர

🪷 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நந்தி கல்யாணத் திருவிழா (பங்குனி மாதம்)

மாசிமகப் பெருந்திருவிழா மற்றும் தேரோட்டம்

மஹாசிவராத்திரி

ஐப்பசி அன்னாபிஷேகம்

திருக்கார்த்திகை

மார்கழி திருவாதிரை மற்றும் பிரதோஷம் சிறப்பு

🪷 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேக்கிழார், நந்தி தேவர், திருமால், இலக்குமி, பிரம்மா, மார்க்கண்டேயர், இந்திரன், புருஷாமிருக ரிஷி, வசிஷ்டர், அகஸ்தியர், சோழ மன்னர்கள் முதலியோர்

🪷அமைவிடம், நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருவையாறில் இருந்து 15 KM திருமானூர் செல்லும் சாலையில் சென்று, அங்கிருந்து திருமழபாடி க்ஷேத்திரத்தை அடையலாம். (திருவையாறில் இருந்து டவுன் பஸ், லால்குடி பேருந்துகள் செல்லும், மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன).

7AM – 12NOON, 5PM – 8PM

98433 60716 கணேஷ் சிவாச்சாரியார்

கிராமத்து கோவில், குருக்களை அழைத்துவிட்டு செல்வது சிறப்பு

🪷 கோவில் தேவாரப் பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பொன்னார் மேனியனே

புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல்

மிளிர்கொன்றை யணிந்தவனே

மன்னே மாமணியே

மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால்

இனியாரை நினைக்கேனே. 1

சுந்தரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *