திருபுறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் சாட்சிநாதர்

💐மூலவர் : சாட்சிநாதேஸ்வரர் சாட்சிநாதர் புன்னைவன நாதர்

அம்பாள்:கரும்படு சொல்லம்மை, இக்ஷுவாணி

ஸ்தல விருக்ஷம் : புன்னை

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்

பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 46

💐 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹இங்குள்ள பிரளயம் காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தேன் வெளியே வராது. மற்ற நாட்களில் திருமுழுக்கு இல்லை.

🌹கி.பி 800 ல் ஆதித்த சோழன் கற்றளியாக மாற்றியதாக வரலாறு. பிரளயத்திற்கு புறம்பாய் (புறம்பு – அயம் ) இருந்தமையால் திருப்புறம்பயம்

மிதுன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குரு பரிகார ஸ்தலம்.

தனி கோவிலில் அனுகிரஹ மூர்த்தியாக குரு பகவான் குடி கொண்டிருக்கிறார்.

தமிழகத்திலேயே தனி கோவிலில் தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளி அருள் வழங்கும் திருத்தலம் இது ஒன்றுதான். அறம் உரைத்த நாயனார்.

பல்லவர்களும் சோழர்களும் மோதிக்கொண்ட இடம் இது. இந்தப் போரில் தான் பல்லவ சாம்ராஜ்யம் முற்றுப்பெற்றது.

🌹இத்தல இறைவனை சூரியன் பங்குனி 3, 4, 5 சூரிய ஒளியை பரப்பி வழிபடுகிறார். அருணகிரிநாதர் முருகனை திருப்புகழில் பாடியுள்ளார். பட்டினத்தார் இறைவனை போற்றிப் பாடியுள்ளார்.

💐 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹திருபுறம்பியம் போர் 👉

பல்லவ பாண்டிய சோழ வரலாற்றை மாற்றிய போர் இது. பல்லவப் பேரரசின் கடைசி மன்னன் அபராஜித வர்ம பல்லவன். காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவன். கிபி 250 முதல் கிபி340 வரை தமிழ்நாட்டில் பெரிய பேரரசாக ஆட்சி செய்தவர்கள். பல்லவ நாட்டை விட பன்மடங்கு பெரிதான சாளுக்கிய பேரரசையும், சமுத்திரகுப்தனின் சமுத்திரம் போன்ற படைகளையும் எதிர்த்து நின்று வெற்றி பெற்றவர்கள்.

🌹திருப்புறம்பியதில் நிருபதுங்க பல்லவரின் சார்பாக அவர் மகன் அபராஜித பல்லவன் தலைமை தாங்கினான்.

அபராஜிதன் = அ + பர + ஜிதன் = எதிரிகளால் வெல்ல முடியாதவன். 862 -63 திருப்புறம்பியத்தில் நடந்த போரில் பாண்டிய மன்னன் வரகுண பாண்டியனை தோற்கடித்தார். இருப்பினும் இதே இடத்தில் சோழ மன்னன் ஆதித்தன் இவரை கொன்று ஆட்சியை கைப்பற்றினார். இவனது அழிவுடன் பல்லவ சாம்ராஜ்யம் முடிவுற்றது.

🌹அரித்துவஜன் என்ற மன்னனுக்கு துர்வாசர் மூலமாக ஏற்பட்ட முயலக நோய் நீங்கிய ஸ்தலம்.

🌹கோவிலுக்கு விறகு கொண்டு வந்த ஏழைக்கு இறைவன் தட்சிணாமூர்த்தி ரூபமாக இறைவன் தரிசனம் கொடுத்தார்

💐 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பெருவெள்ளம் இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்று விட்டது. பிரளயம் ஏற்பட்ட பொழுது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்தில் உள்ள கிணற்றில் அடங்கி விடும்படி விநாயகர் செய்தமையால் இத்தலத்து விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். நாளையத்திற்கு புறம்பாய் இருந்தமையால் (புறம்பு -அயம் ) திருப்பறம்பயம் என பெயர் பெற்றது.

🌹வணிகர் ஒருவர், தன் மாமன் மகள் ரத்தினவல்லியுடன் இவ்வூருவுக்கு வந்தார். இரவு தங்கி இருந்த போது மனிதன் பாம்பு கடித்து இறந்தமையால் ரத்தினவல்லி வருந்தி அழுதாள்.

அவ்வூருக்கு வந்திருந்த ஞான சம்பந்தர் திருப்பதிகம் பாடி அவனை எழுப்பியருளி ரத்தினவல்லிக்கு திருமணம் செய்து வைத்தார். இறைவன் சான்றாக நின்று அருளினார். இதனால் இறைவன் சாட்சிநாதர் என பெயர் பெற்றார். இதற்கு வன்னி மரமும் ஒரு சான்றானது. இரண்டாம் பிரகாரத்திலுள்ளது. சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடல் புராணத்திலும் (64வது திருவிளையாடல்) ஸ்தல புராணத்திலும் வருகிறது.

🌹தக்ஷிணாமூர்த்திக்குரிய 24 முக்கிய ஸ்தலங்களில் இத்தலமும் ஒன்றாகும்.

🌹இத்தலத்தில் உள்ள விநாயகர், வருண பகவானால் உருவாக்கப்பட்டவர். நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல் நுரை போன்ற கடல் சார்ந்த பொருட்களால் விநாயகர் திருமேனியை உருவாக்கினார். இந்த விநாயகருக்குத்தான் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி என்று இரவு முழுவதும் தேன் கொண்டு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்யப்படும் தேன் யாவும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்பட்டு விடும். வேறு நாட்களில் விநாயகருக்கு எந்தவிதமான அபிஷேகம் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

💐 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹சோழ வரலாற்றை திருத்தி எழுதிய, பிற்கால சோழ பேரரசு உருவாக காரணமாக இருந்த சிறப்புமிக்க போர் நடந்த ஊர் இது. வெற்றியின் நினைவாக செங்கல் கோயிலை அழகிய கருங்கல் கோவிலாக கட்டினான் ஆதித்ய சோழன். இது மதுரை திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்திற்கு சொந்தமானது.

🌹5 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கிய கோவில். இரண்டாம் பிரகாரத்தில் இடப்புறமாக, இடையில் குழந்தை ஆறுமுகனை தாங்கி நிற்கும் குகாம்பிகை சன்னதி சிறப்பு வாய்ந்தது. திருமண பரிகார ஸ்தலம். சாம்பிராணி தைலம் மட்டுமே. அடுத்து கரும்படு சொல்லயம்மை சன்னதி. குளத்தின் தென்கரைல தக்ஷிணாமூர்த்தி கோவில் உள்ளது. இதற்கு மேலே சட்டை நாதர் சன்னதி அழகு.

💐 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வழக்கு மற்றும் சட்டச் சிக்கல்கள் தீர

தடைகள் நீங்க

கல்வி மற்றும் ஞானம் பெற

குடும்ப நலன் / திருமண வரம் / குழந்தை செல்வம் பெற பிரார்த்தனைகள்.

*விநாயக பெருமானை வழிபடுவதால் தொழில் மேன்மையும்.

* குஹாம்பாளை வழிபடுவதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.


💐 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாசி மகம் 10 நாட்கள்

விநாயகர் சதுர்த்தி

மஹா சிவராத்திரி

திருக்கார்த்திகை

மார்கழி திருவாதிரை

ஐப்பசி அன்னாபிஷேகம்

💐 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரம்மா, அகஸ்தியர் புலஸ்தியர், சனகாதி முனிவர்கள் (சனகர், சனந்தனர்), விசுவாமித்திரர், அரித்துவசன், ஆதித்ய சோழன், அப்பர், சம்பந்தர், சுந்தரர்,

💐அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

10KM கும்பகோணம்.

கும்பகோணம் திருவையாறு சாலையில் புளியஞ்சேரி தாண்டியதும் திருப்புறம்பியம்.

7AM – 12NOON, 5PM – 8PM

89038 46023 முத்து குருக்கள்

94432 46023 நாகநாத குருக்கள்

87548 42894 சீனிவாச குருக்கள்

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

💐 கோவில் தேவார பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மறம்பய மலைந்தவர்

மதிற்பரி சறுத்தனை

நிறம்பசுமை செம்மையொ

டிசைந்துனது நீர்மை

திறம்பய னுறும்பொருள்

தெரிந்துணரு நால்வர்க்

கறம்பய னுரைத்தனை

புறம்பயம் அமர்ந்தோய். 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *