திருநனிப்பள்ளி புஞ்சை நற்றுணையப்பர்

மூலவர் : நற்றுணையப்பர்

அம்பாள் : பர்வத ராஜபுத்திரி / மலையான் மடந்தை

ஸ்தல விருக்ஷம் : செண்பக / பின்ன மரம்

தீர்த்தம் : சொர்ண தீர்த்தம்

பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர்

புராண பெயர் : திருநனிபள்ளி சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 43

💐 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹மூலஸ்தானத்திற்கே யானை வந்து வழிபட்ட தலம் என்பதால் இத்தலத்தின் கருவறை மிகவும் பெரியதாக அமைந்துள்ளது.

🌹இங்கு பர்வதராஜபுத்திரி மலையான் மடந்தை என்ற திருநாமங்களுடன் 2 அம்மன் அருள் பாலிக்கின்றனர்.

🌹 விநாயகர் அகஸ்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டிய அருளிய தலம்.

🌹இங்கு சுவாமியுடன் வலது

பக்கம் அம்மன் வீற்றிருக்கிறார். இது தவிர தனி சன்னதியில் மூல ஸ்தானத்திலேயே அம்மனுடன் கல்யாண சுந்தரேசுவரர் அருளுகிறார்.

💐 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹காவிரி நதி இங்கு கிழக்கு முகமாக வந்து மேற்கு முகமாக திரும்பி செல்கிறது இதனை பஸ்வமாங்கினி என்பர்.


🌹பெரும்பாலான கோவில்களில் எருமை தலையின் மீது நின்ற கோலத்தில் அருளும் துர்கை, இத்தலத்தில் கையில் மான் மற்றும் சிங்கத்துடன், சும்பன் நிசும்பனை சம்ஹாரம் செய்த கோலத்தில் அ.பா.

🌹ஞான சம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் பிறந்த தலம். சம்பந்தர் தன் தந்தையின் தோள் மீது அமர்ந்து இத்தலத்தை பாடியுள்ளார். அடியார்களின் வேண்டுகோளுக்கிணங்க பாலையாய் இருந்த இத்தலத்தை நெய்தலாக பாடினார்.

💐 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹விநாயகர், காகம் உருவம் எடுத்து, அகஸ்தியரின் கமாண்டலத்தை கவிழ்த்தார்

அவருக்கு தோஷம் ஏற்பட்டு, தனது அசல் வடிவத்தை மீண்டும் பெற முடியவில்லை. நிவாரணம் பெற விநாயகர் காகம் வடிவில் இக்கோயில் வந்து கோயிலின் புனித குளத்தில் நீராடி இறைவனை வணங்கினார். காகம் தீர்த்தத்தில் இருந்து வெளிவரும் பொழுது அதன் நிறம் தங்கமாக மாறி இருந்தது. எனவே இந்த இடம் ‘பொன் செய்’, காலப் போக்கில் மருவி புஞ்சை.

🌹 மற்றுமொரு காரணம், பாலை வனமாய் இருந்த தரிசு நிலங்கள் சம்பந்தரின் பதிகத்தால், அதன் சிறப்புகளால் நிலமாகிப் பின்னர் கானகமாய் மருதமுமாகிச் செழித்தது என்றும் கூறப்படுகிறது. வயலும் வயல் சூழ்ந்த இடமும் மருதம் எனப்படும்.

வளமான சாகுபடி நிலமாக, நெய்தல் நிலமாக மாறியதால் பொன் செய் என பெயர் பெற்றது.

“நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானகமாக்கி யஃதே     போதின் மலிவயல் ஆக்கிய கோன்”என்ற நம்பியாண்டார் நம்பிகள் அருளிச்செய்த ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில் இச்செய்தி கூறப்பட்டுள்ளது.    

இத்தல இறைவன், பாலை நிலத்தை வயலுமாக ஆக்கி அருளியதால் இங்கு இறைவனை வழிபட்டு விவசாயம் செய்பவர்கள், தங்கள் நிலத்தில் நல்ல விளைச்சலைப் பெற்று மகிழ்வார்கள் என்பது ஐதீகம்.  

” நம் வாழ்வும் வளம் பெற வணங்கலாமே”

💐 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கிழக்கு நோக்கிய கோயில், ஒற்றை நடைபாதை, அடுக்குகள் இல்லாத பிரதான கோபுரம், அங்கு “பஞ்சமூர்த்தி ” ( சிவன் பார்வதி விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் ) சித்தரிக்கும் அழகிய சிற்பங்கள் உள்ளன. சோழர் கால கல்வெட்டு 18 உள்ளன.

🌹 கிழக்கு நோக்கி மூலவர் சொன்னது யானை வழிபடும் அளவிற்கு பெரியது. கோயிலின் மகாமண்டபத்தில் நடராஜர் சபை உள்ளது. மேலும் இங்குள்ள ‘திருநனிபள்ளி கோடி வட்டம்’ எனப்படும் மண்டபம் மற்றும் கொடுங்கை அமைப்பு மிகச்சிறந்த சிற்ப வேலைப்பாடுகளை கொண்டது.

🌹கோவிலின் சுற்று பகுதியில் மிக பிரம்மாண்டமான தோற்றத்துடன் யோக தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். தக்ஷிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இருக்க, அவரது வலது புறம் இரண்டு சீடர்களும், இடது புறம் இரண்டு சீடர்களும் காட்சி அளிக்கிறார்கள்.அவர் எழுந்தருளி இருக்கும் பீடத்தின் கீழ் நாகமும், மானும் எழுந்தருளி இருப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி நாகத்துடனும், மானுடனும் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

🌹 இந்தக் கோயிலில் உள்ள பெரும்பாலான சிலைகள் பெரிய அளவில் அழகாக செதுக்கப்பட்டவை. கருவறையின் வெளிப்புற சுவர்களில் ராமாயண கதைகளை சித்தரிக்கும் பல சிற்பங்கள் உள்ளன.

🌹நடைபாதையில் அழகான தூண், அதில் யாளி, மூக்கின் இடது புறம் சிறு துளை – அதில் சிறிய கயிறு குச்சி சொருகினால், மறுமுனையில் வெளிபடும்.

💐 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹திருமணத்தடை உள்ளோர் இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கினால் விரைவில் திருமணம் நடைபெறும்.

நற்றுணையப்பரை வணங்கினால் செல்வ செழிப்பு குழந்தைகள் படிப்பு சிறக்கும் என்பது நம்பிக்கை

🌹நற்றுணையப்பர்- நம்மை சிறந்த வாழ்க்கைக்கு வழி நடத்தும் இறைவன்.

வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு

குழந்தை பாக்கியம்

💐 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

விநாயகர் சதுர்த்தி

நவராத்திரி

ஐப்பசி அன்னாபிஷேகம்

மஹா சிவராத்திரி

💐 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

விநாயகர், அகத்தியர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார்

💐 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மயிலாடுதுறையிலிருந்து செம்பனார்கோவில் வழியாக திருவெண்காடு/பூம்புகார் செல்லும் சாலையில் சென்றால், பிரதான சாலையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உட்புறமாக இக்கோவில் அமைந்துள்ளது.

மயிலாடுதுறை – திருக்கடையூர் சாலையில் உள்ள திருச்செம்பொன்பள்ளி சிவஸ்தலத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது

செம்பனார்கோவில் 4KM

திருப்பறியலூர் 7KM

மாயவரம் 14KM

9AM – 11AM, 5PM – 7PM

96989 50011 சம்பந்தம் குருக்கள்

82480 75434 குருவிக்னேஷ் குருக்கள்

குருக்களை அழைத்துவிட்டு சொல்வது சிறப்பு.

💐 கோவில் தேவாரப் பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை

படர்தொடரி கள்ளி கவினிச்

சூரைகள் பம்மிவிம்மு சுடுகாட மர்ந்த

சிவன்மேய சோலை நகர்தான்

தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை

குதிகொள்ள வள்ளை துவள

நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும்

நனிபள்ளி போலும் நமர்காள்.  1 ஞான சம்பந்தர்

முற்றுணை யாயி னானை

மூவர்க்கு முதல்வன் றன்னைச்

சொற்றுணை ஆயி னானைச்

சோதியை ஆத ரித்து

உற்றுணர்ந் துருகி யூறி

உள்கசி வுடைய வர்க்கு

நற்றுணை யாவர் போலும்

நனிபள்ளி அடிக ளாரே. 

திருநாவுக்கரசர்

ஆதியன் ஆதிரை யன்அயன்

மால்அறி தற்கரிய

சோதியன் சொற்பொரு ளாய்ச்சுருங்

காமறை நான்கினையும்

ஓதியன் உம்பர்தங் கோனுல

கத்தினுள் எவ்வுயிர்க்கும்

நாதியன் நம்பெரு மான்நண்ணும்

ஊர்நனி பள்ளியதே. 

சுந்தரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *