திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர்
மூலவர் : சக்திவனேஸ்வரர்/சிவகொழுந்தீஸ்வரர்/ தழுவகுழைந்தநாதர்.
அம்பாள் : பெரியநாயகி/பிரஹன்நாயகி
ஸ்தல விருக்ஷம் : வில்வம்
தீர்த்தம் : சூல & சூரிய
பாடல் : அப்பர் சம்பந்தர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழநாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 22
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஞானசம்பந்தர் இங்கிருத்து பங்குனி மாதம் உச்ச கோடை நாளில் பட்டீஸ்வரம் சென்ற பொழுது, அடிக்கும் வெயிலிலிருந்து பாதுகாக்க முத்துபந்தல் உருவாக்கி, பூத கணங்கள் மூலம் அனுப்பினார்.
இங்கு தான் ‘திருநாவுக்கரசர்’ தனக்கு “திருவடி தீக்ஷய்” அருௗ வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமான் நல்லூர் வரும்படி அருளினார்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இவ்வாலயத்தில் உள்ள சிவனை பார்வதிதேவி பூஜை செய்து தழுவி முத்தமிட்ட காரணத்தால் ‘திருசத்திமுத்தம்’. மூலஸ்தானத்திற்கு அருகில் அம்மன் சிவலிங்கத்தை கட்டி தழுவி முத்தமிட்ட திருக்கோலத்தை இன்றும் தரிசிக்கலாம். சுவாமி சன்னதி வாசலின் வடபுறத்தில், சக்தி முத்தமளிக்கும், தல ஐதீக மூர்த்தியும் உள்ளனர். இவ்வைதீக சிற்பத்தின் பின்புறம், அம்மன் ஒரு காலில் நின்று தவம் செய்யும் காட்சியையும் காணலாம். காஞ்சியில் அம்பிகை இறைவனை தழவியிருப்பது போலவே இததலத்திலும் நிகழ்ந்ததாக சொல்லபடுதிறது.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°0
“பக்தியே முத்திக்கு வித்து” என்பதை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பிய S & P, இதற்காக சக்தி, காவிரியாற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள சூரிய புஷ்கரணி, சூல தீர்த்தத்தின் அருகே அமைந்துள்ள சக்திமுற்றத்தில் இறைவனை பூஜை செய்து வந்தார். சிவன் காட்சி தர நீண்ட நாட்கள் ஆனது. ஆனால் பார்வதிதேவி உறுதி கலையாமல், தன் பக்தி நிலையானது என்று உறுதி செய்யும் வகையில் ஒற்றைக்காலில் நின்று கடுந்தவம் மேற்கொண்டாள்.
சக்தியை சோதிக்க விரும்பி ஜோதிப் பிழம்பாய் காட்சிதந்தார் சிவன். தீ பிழம்பாக காட்சி தந்தாலும், அதில் ஈசன் இருப்பதை உணர்ந்து PD அந்த நெருப்பை கட்டி தழவினாள்.
சிவர் குளிர்ந்து போனார். குடும்பத்தில் பிரச்சனைகள் நெருப்பென தாக்கினாலும், அதை தம்பதியினர் தங்கள் பரஸ்பர அன்பினால் தீர்த்து கொள்ள வேண்டும் என்பதையே இத்தல வரலாறு தம்பதிகளுக்கு காட்டுகிறது. So Name சிவகொழுந்தீஸ்வரர். & ஸ்தலம் ‘சக்தி முத்தம்’. இங்குள்ள சிவ லிங்கத்தில் அக்னியின் (தீச்சுடர்) தடயங்கள் உள்ளன.
மற்றொரு புராண கதை – PD தவம் – SP காவிரி ஆற்றில் பெரும் வெள்ளத்னத ஏற்படுத்தினார். PD உருவாக்கிய சிவட வெள்ளத்தில் அழிந்து போகும் நிலையில் இருந்தது. உடனே அதை தழுவி வெள்ளத்திலிருந்து பாதுகாத்தாள்.
அவளது தவத்தில் மகிழ்ந்த SP தோன்றி, அவளை ஆசிர்வதித்து மீண்டும் கைலாசமலைக்கு அழைத்து சென்றார். எனவே இங்குள்ள இறைவன், “தழுவக் குழைந்த நாதர்” என்றும் போற்றபடுகிறார்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிழக்கு நோக்கி / 5 அடுக்கு ராஜகோபுரம் / முன்னர் சோழ தலைநகரம் பழையாறை / சோழ அரசி செம்பியன் மாதேவியால் புதுப்பிக்கப்பட்டு, கிரானைட் கற்களால் கட்டப்பட்டது. அதன் வரலாற்று பெயர் ராஜராஜபுரம் & சத்திமுத்தம். திருமண தடை நீக்கும் ஸ்தலம்.
கோவில் தெய்வங்கள் : மனைவியுடன் விநாயகர், முருகன் , நடராஜர் , சரபேஸ்வரர், கஜலக்ஷ்மி , Ag, காசி விஸ்வநாதர், திருநாவுக்கரசர் ஞானசம்பந்தர் சூரியன் சந்திரன், நாகர், சனீஸ்வரர். நவகிரஹம் இல்லை. 2 பார்வதி தேவி சந்நிதி உள்ளது. வாயிலில் வல்லபை விநாயகர் சன்னதி உள்ளது. சுவாமி சந்நிதிப் பிராகாரத்தில் உள்ள பைரவர் சந்நிதியில், பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். கண்ணையும் கருத்தையும் கவரும் அழகு வாய்ந்த சிற்பம். அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியிருக்கிறார். அகழி வடிவில் கருவறை உள்ளது. நாரை விடு தூது எழுதிய கவிஞரின் ஊர்.
இத்தலத்தில் அமாவாசை, பௌர்ணமி வழிபாடு சிறப்பு.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரிந்த தம்பதிகள் இணைவர் / திருமணத் தடைகள் நீங்கும் / முந்தைய பிறவி பாவங்கள் விலகும் / சந்தான பிராப்தி .
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முத்துப்பந்தல் திருவிழா,
ரத சப்தமி, மற்றும் பௌர்ணமி அமாவாசை வழிபாடுகள் சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்கு பார்வதி தேவி, அகத்தியர், அப்பர், சம்பந்தர், சேக்கிழார், கபிலதேவ நாயனார், அருணகிரி நாதர்,
ராமலிங்க அடிகள் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணம் 7KM
பட்டீஸ்வரம் கோவில் மிக அருகில், கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து பட்டீஸ்வரம் செல்லும் நகரப் பேருந்துகள் மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.
8AM – 12 NOON, 4.30PM – 8.30PM
99943 84428 நிஜகணபதி குருக்கள்.
குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கோவாய் முடுகி யடுதிறற்
கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற்
பொறித்துவை போகவிடின்
மூவா முழுப்பழி மூடுங்கண்
டாய்முழங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே. 1


Leave a Reply