திருக்கழிப்பாலை பால்வண்ண நாதர்
மூலவர் : பால் வண்ண நாதர்
அம்பாள் : வேதநாயகி
ஸ்தல விருக்ஷம் : வில்வம்
தீர்த்தம் : கொள்ளிடம்
பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர் புராணப்பெயர் : காரைமேடு
சுயம்பு, 58வது தேவாரப் பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 4
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
(சுயம்பு லிங்கத்தின் மீது) குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவன் பார்வதி திருமண கோலத்தில் உள்ளனர்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல் நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன், பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞான் அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனி கோவிலில் அருளுகிறார். காசியில் பைரவரை வடிவமைத்த சிற்பியே இங்குள்ள பைரவரையும் வடிவமைத்ததாக கூறப்படுகிறது.
இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இப்போது மக்கள் இத்தலத்தை பைரவர் கோவில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அகத்தியருக்கு திருமணக் காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. வால்மீகி முனிவர் இங்கு வழிபாடு. அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார். இங்குள்ள நடராஜர் சடை முடி அள்ளி முடிந்த கோலத்தில் உள்ளார். அருகில் சிவகாமி அம்மை, தன் தோழிகள் விஜயா சரஸ்வதியுடன் இருப்பது தனி சிறப்பு.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கபில முனிவர் ஒவ்வொரு சிவ தலமாக தரிசித்து வரும் பொழுது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால் சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது.
முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு மணல் லிங்கத்தின் மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது. வருந்திய முனிவர் பிளவு பட்ட லிங்கத்தை எடுத்து விட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்தபோது இறைவன் பார்வதி சம்மதராக காட்சி தந்து, “முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவு பட்டிருந்தாலும், அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசு வடிவில் இங்கு வந்து பால் சொரிந்துள்ளது. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள் என்றார்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தலம் முன்பு கொள்ளிட ஆற்றின் வடகரையில் காரைமேடு எனுமிடத்தில் இருந்ததால் இத்தலத்திற்கு “கழிப்பாலை” என்ற பெயர் இருந்தது. கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கால் கோவில் முழுவதும் சிதிலமடைந்து விட்டத. எனவே தற்போது உள்ள இடத்தில் கோவில் கட்டி கழிப்பாலை இறைவனையும் இறைவியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
ALSO SAYS வெள்ளத்தில் அடித்து இங்கு வந்து தங்கினார், அதனால் இங்கு கோவில்.
இங்கு கிழக்கு நோக்கிய 3நிலை ராஜகோபுரம். உள்வாசலில் அதிகார நந்தி துணைவியுடன். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியன் லிங்கோத்பவர் விஷ்ணு பிரம்மா மூவரும், முயலகன் மாறிய நிலையில் தக்ஷிணாமூர்த்தி, புவனேஸ்வரி, சதுராதுர்கை etc..
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்க இங்குள்ள விஜய விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியில் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வைகாசி பிரம்மோத்ஸவம்,
ஆவணி தபசு திருவிழா &
மஹா சிவராத்திரி நவராத்திரி அன்னாபிஷேகம் பிரதோஷம் பௌர்ணமி சிறப்பு பூஜைகள்.
மேலும் தேய்பிறை அஷ்டமி & ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் பைரவ பூஜை சிறப்பு..
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கபில முனிவர், வால்மீகி முனிவர், அகஸ்தியர், சுந்தரர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சேக்கிழார், பரணதேவ நாயனார் முதலியோர்..
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தாண்டி உள்ளது. 4KM, ஆட்டோ பேருந்து வசதி உண்டு. அருகிலேயே சிவபுரி திருநெல்வாயில் பாடல் பெற்ற சிவாலயம். ( Just 300 மீ / 1 நிமிடம் )
7AM – 11AM, 5PM – 7PM
99449 05818 சீதாராம குருக்கள்.
முதல் நாளே குருக்களை அழைத்துவிட்டு செல்வது சிறப்பு
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
புனலா டியபுன்
சடையாய் அரணம்
அனலா கவிழித்
தவனே அழகார்
கனலா டலினாய்
கழிப்பா லையுளாய்
உனவார் கழல்கை
தொழுதுள் குதுமே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply