திருக்கடைமுடி கீழையூர் கடைமுடிநாதர்

🍁மூலவர் : கடைமுடிநாதர்

அம்பாள் : அபிராமி

ஸ்தல விருக்ஷம் : கிளுவை

தீர்த்தம் : கருணா தீர்த்தம்

புராணப் பெயர் : கீழூர் கிளுவையூர், திருக்கடைமுடி

ஊர் : கீழையூர்

பாடல் : சம்பந்தர், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் 72, சோழநாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 18

🍁ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மேற்கு பார்த்து அமைந்த சிவதலம் இது. 1000 சிவாலய தரிசன பலன்.

காவிரி இங்கு வடக்கு முகமாக வந்து மேற்காக ஓடுவது சிறப்பு.

உலகம் அழியும் இறுதிக்காலத்திலும் காப்பாற்றுபவராக இங்கு சிவபெருமான் அருள்கிறார். எனவே இவருக்கு கடைமுடிநாதர் என பெயர்.

இவர் பதினாறு பட்டைகளுடன் அமைந்து ஷோடசலிங்க அமைப்பில் உள்ளார். இவரை வேண்டிக் கொண்டால் 16 பேறுகளையும் பெறலாம்.

பிரகாரத்தில் உள்ள நவகிரகம் வலதுபுறம் திரும்பிய ஆவுடையார் மீது அமைந்திருக்கின்றன. எண்கோண வடிவில் உள்ள ஆவுடையாரில் கிரகங்கள் ஒவ்வொன்றும் நேர் வரிசையில் இல்லாமல் முன்னும் பின்னும் ஆக அமைந்திருப்பது சிறப்பான அமைப்பு.

கீழையூர் என்பது ஏழு ஊர்கள் சேர்ந்த மிகப் பெரிய ஊர்.

🍁ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹வளையம் அணிந்த தக்ஷிணாமூர்த்தி :

இங்கு கோஷ்டத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி இடது காதில் வளையம் அணிந்தும் வலது காதில் வளையம் இல்லாமலும் காட்சி தருகிறார். இவரைப் போலவே பைரவரும் வலது காதில் வளையம் இல்லாமல் இருப்பது வித்தியாசமான அமைப்பு.

🌹இங்கு அம்பாள் வரப் பிரசாதியாக இருக்கிறாள் தெற்கு நோக்கி இருக்கும் இவளது சன்னதி எதிரே ஒரு வாசல் இருக்கிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு வித்தியாசமாக தாலி கட்டி வேண்டிக் கொள்கின்றனர். வரன் அமைந்த பிறகு மீண்டும் அம்பாள் கழுத்தில் இருக்கும் தாலியை தங்களது கழுத்தில் கட்டி அம்பாளை வணங்கி விட்டு மீண்டும் அதனை அம்பாளுக்கே கட்டி விடுகின்றனர். இவ்வாறு செய்வதால் பெண்கள் சுமங்கலிகளாக இருப்பர் என்பது நம்பிக்கை.

🍁 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஆணவம் கொண்டதால் / பொய் சொன்னதால் சிவனிடம் சாபம் பெற்ற பிரம்மன், பூலோகத்தில் பல இடங்களில் சிவபூஜை செய்து வழிபட்டார். இங்கு சிவன் அவருக்கு ஒரு கிளுவை மரத்தின் அடியில் காட்சி தந்தார். பிரம்மா தனக்கு மன்னிப்பு கேட்ட போது தகுந்த காலத்தில் விமோசனம் கிடைக்கப்பெறும் என ஆறுதல் கூறினார். பின் பிரம்மனின் வேண்டுதல் படியே இத்தலத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.

பிற்காலத்தில் கண்வ மஹரிஷியும் இங்கு சிவனை வழிபட்டு முக்தி பெற்றார்.

🍁ஸ்தல சிறப்பு செய்திகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ் கிளுவைநாதர் இருக்கிறார். இவரே இக்கோவிலில் ஆதிமூர்த்தி. இவருக்கு எதிரே நந்தியும் இருக்கிறது. சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் தனி சன்னதியில் இருக்கிறார். இத்தல விநாயகர் கடைமுடி விநாயகராக அருள்பாலிக்கிறார்

🍁 பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருமணத்தடை நீங்க

ஆயுள் விருத்தி & அந்திம கால பயம் நீங்க

மன அமைதி & செய்த தவறுகளுக்கு மன்னிப்பு

16 வகை செல்வங்கள் பெற

🍁 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாசி மஹா சிவராத்திரி,

ஐப்பசி அன்னாபிஷேகம்,

திருக்கார்த்திகை, பிரதோஷம் சிறப்பு

🍁 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரம்மா கண்வ மகரிஷி சம்பந்தர் அப்பர் சுந்தரர் சேக்கிழார் முதலியோர்

🍁அமைவிடம்,நேரம்,தொடர்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மயிலாடுதுறை – பூம்புகார் சாலையில்; மேலையூர் மேலப்பாதி தாண்டி, கீழையூர் என்று பெயர்ப்பலகையுள்ள ஊரையும் கடந்து, சற்று மேலே சென்று ‘சத்திரம் Stop’ என்னுமிடத்தில் கீழையூர் 2 கி.மீ.

8AM – 9 AM, 5.30PM – 8PM

90951 20653 சங்கர் குருக்கள்

குருக்களை தொடர்பு கொண்டு விட்டு செல்வது சிறப்பு.

🍁 கோவில் தேவார பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அருத்தனை அறவனை அமுதனைநீர்

விருத்தனைப் பாலனை வினவுதிரேல்

ஒருத்தனை யல்லதிங் குலகமேத்துங்

கருத்தவன் வளநகர் கடைமுடியே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *