திருக்கச்சி நெறிக்காரைக் காடு காரைதிருநாதேஸ்வரர் திருக்காலிமேடு சத்தியநாதர்
மூலவர் : சத்யநாதர் திருகாலீஸ்வரர் காரைதிருநாதர்
அம்பாள் : பிரமராம்பிகை
பாடல் : ஞானசம்பந்தர்
ஸ்தல விருக்ஷம் : காரைசெடி
தீர்த்தம் : இந்திர & சத்யவிரத தீ
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் & தொண்டை நாட்டு 5வது ஸ்தலம்
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மேற்கு பார்த்த சுயம்புவாக அருள் பாலிக்கிறார். NO அம்பாள் IN காஞ்சி. இங்கு கருவறையிலேயே சுவாமிக்கு அருகே தெற்கு பார்த்தபடி உற்சவ வடிவில் அம்பாள் இருக்கிறார்
உற்சவராக இருந்தாலும் மூலவருக்கு உரிய பூஜைகளே இவளுக்கு செய்யப்படுகிறது.
விழாக் காலங்களில் இவளை வெளியே கொண்டு செல்வதில்லை என்பது சிறப்பு.
3நிலை ராஜகோபுரத்துடன் அமைப்பு.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
7 சீடர்களுடன் தக்ஷினாமூர்த்தி, பொதுவாக இவர் சனகர் சனந்தர் சனாதனர் சனத்குமாரர் ஆகிய 4 சீடர்களுக்கு ஞானம் போதித்த நிலையில் தான் காட்சி தருவார்.
ஆனால் இங்கு 7 சீடர்கள் இருக்கின்றனர். இது வித்தியாசமான அமைப்பாகும். இவரிடம் வேண்டி கொண்டால் ஞானம் பிறக்குமன்பது ஐதீகம்.
சத்தியநாத சுவாமி சற்றே சிவந்த நிறத்தில் காட்சியளிக்கி றார். சத்யவிரதேஸ்வரர். So காஞ்சி is “சத்யவிரத க்ஷேத்ரம்”
அம்பாளுக்கு காரார் குழலி என்ற பெயரும் உள்ளது. நந்தியின் கழுத்து மட்டும் தெற்கு முகமாக திரும்பி இருக்கிறது. இதற்கு நேரே ஒரு வாசலும் உண்டு.
பிரகாரத்தில் புதனுக்கு அருகில் இந்திரன் இருக்கிறார். பிரகஸ்பதியை (வியாழன்) குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் கல்வி கற்ற சந்திரன், அவரது மனைவியான தாரையை, குரு பத்தினி என்பதையும் கருதாமல் அவள் மீது ஆசை கொண்டான்.
ஒரு சமயம் அவன் மஹாவிஷ்ணுவின் அருள் பெறுவதற்காக யாகம் ஒன்று நடத்தினான். அந்த யாகத்திற்கு குரு என்ற முறையில் வியாழன் தன் மனைவி தாரையுடன் கலந்து கொண்டார். அவள் மீது காதல் கொண்டிருந்த சந்திரன், அவளை தன்னுடனே இருக்க செய்து கொண்டான்.
சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாக பிறந்தார் புதன். பிரகஸ்பதி சிவனிடம் முறையிட்டு தாரையை கூட்டிச் சென்றார். புதனை சந்திரனே வளர்த்து வந்தார்.
புதன் பெரியவன் ஆனதும் தான் பிறந்த முறையை அறிந்து வெறுப்புற்று சந்திரனைப் பிரிந்து தவவாழ்க்கையை மேற்கொண்டார்.
தாய் தந்தையை பிரிந்திருந்த புதன் இத்தலத்திற்கு வந்து சத்யநாதரிடம் தவம் செய்து வேண்டினார்.
அவருக்கு காட்சி தந்த சிவன் உரிய காலத்தில் கிரஹபதவி கிடைக்கும் என அருள் புரிந்தார். புதன் இத்தலத்தில் பிரகாரத்தில், சுவாமிக்கு வலது புறத்தில், தெற்கு பார்த்தபடி உள்ளார்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்திரன் அகல்யா மீது ஆசை கொண்டதால், விடியும் முன் சேவல் போல் கூவ, கௌதமர் ஆற்றிற்குச் செல்ல, இவன் கணவரை போல் காமுற்றான். விடியாதது கண்டு திரும்பி வந்தார் கௌதமர், பூனை போல் உருவெடுத்து இந்திரன் மெதுவாய் வெளியேற, உனக்கு உடல் முழுவதும் பூனைகண்கள்- என சாபம்.
இந்திரன் பல காலம், பல தலம் வழிபட்டு விமோசனம் தேடி இங்கு வந்து வேண்டாம், இங்கு காரைச் செடிகளின் மத்தியில் சிவன் காட்சி, சாபம் போக்கி So காரை நாதர்
இக்கோவில் காஞ்சி புராணத் தில் குறிக்கப்பட்டுள்ளது.
இந்திரன் வணங்கியதால் இந்திரபுரி. இங்கு வேப்ப மரங்கள் அடர்ந்து, அதனால் தீர்த்தம் வேப்பங்குளம் (முன்னர் இந்திர தீ )
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
புதன் கிரஹதோஷ நிவர்த்தி,
கல்வி மற்றும் அறிவு மேம்பட,
தீராத சாப நிவர்த்தி பெற,
ஞானம் ஆன்மிகமேன்மை பெற,
வாய்மை மற்றும் நியாயமான வழக்குகளில் வெற்றி பெற பிரார்த்தனைகள்..
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மார்கழி திருவாதிரை
மஹா சிவராத்திரி
ஐப்பசி அன்னாபிஷேகம்
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்திரன், புதன், சந்திரன், சம்பந்தர், சேக்கிழார் முதலியோர்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
2 KM காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து, தலைமை அஞ்சல் நிலையத்திற்கு எதிரில்.
7AM to 11AM 6 PM to 8 PM
98438 32997 நமச்சிவாய குருக்கள்
98653 74005
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வாரணவு முலைமங்கை
பங்கினராய் அங்கையினிற்
போரணவு மழுவொன்றங்
கேந்திவெண் பொடியணிவர்
காரணவு மணிமாடங்
கடைநவின்ற கலிக்கச்சி
நீரணவு மலர்ப்பொய்கை
நெறிக்காரைக் காட்டாரே 1
ஞான சம்பந்தர்


Leave a Reply