கொட்டையூர் கோடீஸ்வரர் கைலாசநாதர்

🌺மூலவர் : கோடீஸ்வரர் கைலாசநாதர்

அம்பாள் : பந்தாடுநாயகி

கந்துக கிரீடாம்பாள்

ஸ்தல விருக்ஷம் : வில்வம் / கொட்டை (ஆமணக்கு)

தீர்த்தம் : அமுதக் கிணறு

பாடல் : அப்பர்,

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 44

🌺 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இத்தலத்தில் வாகனங்களில் எழுந்தருளிய நவகிரகங்கள் காணலாம். வெகு சில கோவில்களில் மட்டுமே இவ்வாறு உள்ளது. மார்க்கண்டேயர் வழிபட்ட தலம்.

மூலவர் பாணம் முழுவதும் கொட்டை கொட்டையாக காய்ந்த மாதிரி காணப்படுகிறது.

இங்கு எல்லாமே கோடி. ஒரு பஞ்சாட்சரம் சொன்னால் ஒரு கோடி சொன்ன பலன். ஒரு ரூபாய் தானம் செய்தால் ஒரு கோடி ரூபாய் தானம் செய்த பலன். ஒரு கோடி சிவாலயம் தரிசனம் செய்த பலன். மூலஸ்தானத்தில் சுவாமி ஒரு பெரிய பலாப்பழத்தை வைத்தார் போல் இருப்பார். சுவாமியின் திருமேனி முழுக்க சின்ன சின்ன முள்ளு முள்ளா இருக்கும். அப்படி என்றால் இந்த சுவாமிய தரிசனம் பண்ணினா திரிகோடி சிவலிங்க தரிசனம் செய்த புண்ணியம். 3 கோடி சிவலிங்கம் இருக்கு. அந்த லிங்கத்துக்குள்ள ஒரு லட்சம் னு கணக்கு. இதை எண்ணி முடிக்கவே அடுத்த ஜென்மம் வந்துடும். அப்பேற்பட்ட சிவாலயம்.

🌺 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹 பந்தாடு நாயகி அம்பாள் :

அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் கட்டி உதைத்து அருள் செய்பவள் என்ற பொருளில் சிலை உள்ளது

🌹 “கொட்டையோடு செய்த பாவம் கட்டையோடே ” 👉

இந்த ஊரில் புண்ணியம் செய்தால் கோடி அளவு கூடிவிடும். அதேபோல் பாவம் செய்தால் அந்த பாவம் கோடி அளவு பெருகிவிடும். அதற்குக் கழுவாயே இல்லாமல் போகும் என்பதைத்தான்”கொட்டையோடு செய்த பாவம் கட்டையோடே”…

எனவே பாவம் செய்தவர்கள், ஒரு காலத்தில் இத்தலத்திற்கு வராமலேயே இருந்தார்கள்.

அவர்களுக்கு பந்தாடு நாயகி ஆறுதல் கூறி பாவங்களை உதைத்து எறிந்தாள். தீராத பாவம் செய்தவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மனம் திரும்பி செல்லலாம்.

🌺 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஒரு சமயம் இந்த ஊர் ஆமணக்கு காடாக இருந்தது. இறைவன் ஆமணக்கன் கொட்டை செடியின் கீழ் இருந்ததால் இவ்வூர் கொடையூர் என பெயர் பெற்றது.

வடநாட்டில் திரிஹர்த்த தேசத்தை ஆட்சி செய்த சத்யரதி என்ற மன்னனின் மகன் சுருசி ஒரு சாபத்தின் காரணமாக பிசாசு வடிவம் பெற்றான். மனித உருவிற்கு மாற வேண்டும் என்று சிவபெருமானை வேண்டினான். சிவபெருமான் கட்டளைப்படி கொட்டையூர் திருத்தலம் வந்து, இங்கு ஹேரண்ட முனிவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து, ஆமணக்கு எண்ணெயில் தீபம் ஏற்றி வைத்து கோடீஸ்வர பெருமானை மனமுருக வேண்டினான். இதை எடுத்து அவனது பேய் உருவம் மறைந்து அழகிய உருவத்தை பெற்றான். இந்த தீர்த்தம் ஹேரண்ட முனிவரால் உருவாக்கப்பட்டது. அமுத கிணறு. இன்றும் அதிலிருந்து தீர்த்தம் தெளித்துக்கொண்டால் அழகாகலாம் என நம்பிக்கை.

பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடி விநாயகராக, கோடி அம்பாளாக, கோடி சுப்பிரமணியராக, கோடி தக்ஷிணாமூர்த்தியாக கோடி சண்டிகேஸ்வரர் ஆக காக்கி தந்ததால் கோடீஸ்வரர். இந்த ஐந்து மூர்த்தங்களையும் தரிசனம் செய்தால் கோடி தரிசனம் கண்ட பலன் பெறுவர்.

🌺 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இங்குள்ள அமுத கிணறு தீர்த்தம், தலையில் தெளித்துக் கொண்டால், புறத்தூய்மை அழகு மட்டுமன்றி, அகத்தூய்மை அழகு கிடைப்பதாகவும் மேலும் கல்வி அறிவு ஒழுக்கம் ஆகியவற்றை இந்த தீர்த்தம் தருவதாக நம்பிக்கை.

வாகனங்களில் எழுந்தருளி இருக்கும் நவக்கிரகங்கள் அழகோ அழகு. முருகனை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.

காவிரி வலஞ்சுழித்து பிலத் துவாரத்தில் சென்றபோது, ஹேரண்ட முனிவர் துவாரத்தில் இறங்கி காவிரியை மேலே கொண்டு வந்த சிறப்புடையது இத்தலம். திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய அவர், இங்கு வெளிய வந்ததாக கூறப்படுகிறது. ஹேரண்ட முனிவருக்கு தனி சன்னதி உள்ளது.

🌺 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இங்கு இறைவனை வழிபடுபவர்களுக்கு, ஒரு கோடி சிவன் கோவில்களில் இறைவனை வழிபடும் பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

அழகு மற்றும் தோற்றப் பொலிவு

பாவ விமோசனம்

வாழ்வில் செல்வம் பெருக

🌺 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஆவணி விநாயகர் சதுர்த்தி

புரட்டாசி அம்பு திருவிழா

ஐப்பசி அன்னாபிஷேகம் மார்கழி திருவாதிரை

மாசி மஹாசிவராத்திரி

பங்குனி உத்திரம் + பிரதோஷம் சிறப்பு.

🌺 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மார்க்கண்டேயர் ஹேரண்டமகரிஷி

பத்திரயோகி முனிவர்

சத்யரதி சுருசி மன்னர்கள்

அப்பர் முதலியோர்

🌺 அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°′′°°°°°

கும்பகோணம் – திருவையாறு சாலையில், கும்பகோணத்தில் இருந்து மேற்கு திசையில் சுமார் 4KM. கும்பகோணத்தில் இருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது

7AM – 12NOON, 4PM – 8PM

916501 74502 கார்த்திகேய குருக்கள்.

🌺 கோவில் தேவாரப் பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்

கல்லால் நிழற்கீ ழிருந்தான் கண்டாய்

பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்

பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்

வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்

மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்

குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற்

கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. 1

திருநாவுக்கரசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *