கீழை திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் ஆரண்யசுந்தரர்

🌷மூலவர் : ஆரண்யேஸ்வரர் ஆரண்யசுந்தரர்

அம்பாள் : அகிலாண்டேஸ்வரி

ஸ்தல விருக்ஷம் : பன்னீர் மரம்

தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்

பாடல் : அப்பர் சம்பந்தர்

ஊர் : (கீழை) திருக்காட்டுப்பள்ளி

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் 66, சோழ நாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 12.

🌷 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஆலய திருச்சுற்றில், உள்ள பிரம்மேசரை பூஜை செய்து வழிபடுபவர்கள், 100 அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள். பிரம்மன் இத்தலத்தில் வியாக்ரபாதேஸ்வரர், கபாலீசர், அகஸ்தியேசர், ஸ்ரீமுனீசர், சுக்ரேஸ்வரர், பிரம்மேஸ்வரர் உள்ளிட்ட 10 சிவலிங்க திருவுருவங்களை நிறுவி வழிபட்டார்.

இது ஆரண்ய முனிவர் வழிபட்ட அருள் பெற்ற தலம். இவர் மாகாளரை தம் பூஜை முடியும் வரை காவலாக இருக்குமாறு கேட்டுக் கொண்டு இறைவனை வழிபட்டார்.

🌷 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹6 சீடர்களுடன் தக்ஷிணாமூர்த்தி 👉 மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் ஆரண்யஸ்வரர். அம்பாள் தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இங்கே சுவாமியே பிரதானம் என்பதால் நவகிரக சன்னதி இல்லை.

இங்கு கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி 6 சீடர்களுடன் காட்சி 👉 பொதுவாக 4 சனகாதி முனிவர்கள் + இங்கு சிவயோக முனிவரும் பதஞ்சலி முனிவரும். இவர் “ராஜயோக தக்ஷிணாமூர்த்தி” என அழைக்கப்படுகிறார். அருகே மன்னன் ஒருவன் சிவபெருமானை பூஜை செய்யும் கற்சிற்பம் அழகு.

🌹 நண்டு விநாயகர் 👉

மேற்கு திருச்சுற்றில் கற்கட மஹா கணபதி. நண்டு பூஜித்த கணபதி. இவரது பீடத்தில் நண்டு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. முனிவரால் சாபம் பெற்ற கந்தர்வர் நண்டு ரூபமாய் பூஜித்து சாப விமோசனம் பெற்றார். கடக ராசிக்காரர்கள் இந்த விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், அவர்களுக்கு ஏற்பட்ட தோஷங்கள் விலகும்.

இந்த விநாயகரை அடுத்து இரட்டை லிங்கம் உள்ளது. இந்த அமைப்பு சிறப்பு. இந்த இரட்டை லிங்கத்தை அபிஷேகம் செய்து ஆராதித்து வழிபட்டால் இழந்த பதவியை மீண்டும் பெறலாம்.

🌹ஆரண்ய முனிவர் 👉

இங்கு ஆரண்ய முனிவர் வழிபட்டதாலும் சுவாமிக்கு ஆரண்யேஸ்வரர் என பெயர் என்றும் சொல்கிறார்கள். கோஷ்டத்தில் மாகாளர் சிவ வழிபாட்டிற்காக சங்கு ஊதிக் கொண்டிருக்க, ஆரண்ய முனிவர் சிவ பூஜை செய்யும் சிற்பம் உள்ளது.

🌷ஸ்தல புராணம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இந்திரன் ஒருமுறை தேவர்கள் குருவாகிய பிரகஸ்பதியை அவமதித்தான். பின்னர் அசுர குலத்தைச் சேர்ந்த விஸ்வரூபன் என்பவனை குருவாகக் கொண்டு ஒரு வேள்வியைச் செய்தான். ஆனால் விஸ்வரூபம் தேவர்கள் அழியுமாறு வேலை செய்கிறான் என கேட்டு அவனை இந்திரன் கொன்று விட்டான்.

விஸ்வரூபனின் தந்தையான துவஷ்டா, தனது மகனின் இறப்பை அறிந்து இந்திரனை அழிக்க ஒரு வேள்வி நடத்தினார்

அதிலிருந்து விருத்திராசுரன் என்பவன் தோன்றி தேவர்களை துன்புறுத்தினான். அவனை அழிக்க புதியதொரு ஆயுதம் தேவைப்பட்டது. எனவே ததீசி என்ற முனிவரின் முதுகு தண்டுவடத்தில் ஆயுதம் செய்யப்பட்டது. அதுவே வஜ்ராயுதம். அதைக் கொண்டு விருத்திராசுரணை அழித்தான்.

வேள்வியில் தோன்றிய விருத்தாசுரனை அழித்ததால் இந்திரனுக்கு தோஷம் ஏற்பட்டது அந்த தோஷம் நீங்குவதற்காக பல்வேறு ஸ்தலங்களுக்கு சென்று ஈசனை வழிபட்டான். பின்னர் திருவெண்காடு வணங்கி, இத்தலம் வந்த போது அடர்ந்த வனத்தின் மத்தியில் சிவன் சுயம்பு மூர்த்தியாக இருப்பதை கண்ட இந்திரன் இங்கு சிவ பூஜை செய்து தோஷம் நீங்க பெற்று மீண்டும் தேவலோக ஆட்சியை கைப்பற்றினான்.

🌷ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மேற்கு நோக்கி ஆலயம் நீண்ட பிரகாரம் பலிபீடம் நந்தி, இடது புறம் 2 சிவலிங்கம், முருகன் சந்ததி. வடக்கு பிரகாரத்தில் சண்டீசர், கிழக்குப் பிரகாரத்தில் பைரவர் சூரியன்.

ஆலய மஹாமண்டபத்தின் இடதுபுறம் அன்னை அகிலாண்டேஸ்வரி தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.

🌷 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கல்வி மற்றும் ஞானம் 👉 தக்ஷிணாமூர்த்தி

பதவி உயர்வு மற்றும் வேலை, இழந்த சொத்துக்களை மீட்க 👉 மூலவர்

சாப நிவர்த்தி & தீராத வினைகள் நீங்க 👉 விநாயகர்

யாக பலன் & தோஷ நிவர்த்தி👉 பிரம்மேசர் போன்ற பிரார்த்தனைகள்..

🌷 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மஹா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், விநாயகர் சதுர்த்தி கந்த சஷ்டி, பிரதோஷம் சிறப்பு.

🌷 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரம்மா இந்திரன் நண்டு ஆரண்யமுனிவர் சம்பந்தர் சேக்கிழார்..

🌷அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சீர்காழி தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ளது.

திருவெண்காடு கோவில் 1.5 KM

பல்லவனேஸ்வரம் 6 KM

சீர்காழி 15 KM

8.30AM – 10.30AM, 5.30PM – 7.30PM

93447 25843 & 87545 42584

ராஜகணபதி குருக்கள்

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🌷கோயில் தேவாரப் பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

செய்யரு கேபுனல் பாயவோங்கிச்

செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்

கையரு கேகனி வாழையீன்று

கானலெல் லாங்கமழ் காட்டுப்பள்ளிப்

பையரு கேயழல் வாயவைவாய்ப்

பாம்பணை யான்பணைத் தோளிபாகம்

மெய்யரு கேயுடை யானையுள்கி

விண்டவ ரேறுவர் மேலுலகே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *