கீழப்பழுவூர் ஆலந்துறைநாதர், வடமூலநாதர்

🌸மூலவர் : ஆலந்துறைநாதர், வடமூலநாதர்

அம்பாள் : அருந்தவநாயகி

ஸ்தல விருக்ஷம், : ஆலமரம்,

தீர்த்தம் : பிரம்ம / பரசுராம தீ

பாடல் : சம்பந்தர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரிவடகரை ஸ்தலம் 55

🌸 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹இத்தல இறைவனுக்கு சாம்பிராணி தைலம் பூசப்படுகிறது. லிங்கம் மிக சிறியது என்பதால் அடையாளம் காட்ட அதன் மீது ஒரு குவளை கவிழ்த்த பட்டு இருக்கிறது. இந்த குவளைக்கே அபிஷேகம் நடக்கும்.

🌹 பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலம். அவர் உருவாக்கிய குளம், “பரசுராம தீர்த்தம்”

🌹 மூலவர் சந்நிதி நுழைவு வாயில் மேற்பகுதியில் கஜலக்ஷ்மி இல்லை, பரசுராமர் சயன கோலத்தில் உள்ளார்.

🌹 அம்மன் ஒற்றைக் காலில் ஊசி முனையில் தவம் செய்யும் அற்புதமான சிற்பமும், கஜமுகாசுரனை வதம் செய்த பின் ஆனந்த நடனம் ஆடும் நிருத்த விநாயகர், சண்டிகேஸ்வரரின் பஞ்சலோக சிலை அழகு, வித்தியாசமானது.

🌹பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான்.

🌸 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹 பார்வதி தேவி தவம் செய்த யோக வனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை So, அருந்தவநாயகி ஸ்ரீ யோக தபஸ்வினி. யோகக்கலையும் , திருமண வரத்தையும் ஒரு சேர அளிப்பவள் இவள்.

🌹ஆலயத்திற்கு வெளியே ஸ்தல விருக்ஷமான ஆலமரம் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

🌹பழு என்றால் ஆலமரம், ஆகவே சுவாமி ஆலந்துறையார்,

ஸ்தல விருக்ஷம் ஆலமரம் & இப்பகுதியில் ஆலமரம் அதிகம், அதனால் பழுவூர்..

🌸 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹ஒருமுறை கயிலாயத்தில், பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் இரு கண்களையும் தன் கரங்களால் மூடினார். சூரிய சந்திரர்களாக விளங்கும் இறைவனின் கண்கள் மூடப்பட்டதால், அகில உலகமும் திடீரென இருளில் மூழ்கி ஸ்தம்பித்தது. விளையாட்டாகச் செய்தாலும், உலக உயிர்களுக்குத் துன்பம் விளைவித்தது பாவமே என்று கூறிய சிவபெருமான், அதற்குப் பிராயச்சித்தமாகப் பூலோகம் சென்று தவம் செய்யுமாறு தேவிக்குக் கட்டளையிட்டார். மேலும், தான் “யோக வனம்” என்று அழைக்கப்படும் இந்த ஆலந்தறையில் வந்து அவளை ஆட்கொள்வதாகவும் கூறினார்.

🌹அதன்படி, பார்வதி தேவி இப்பகுதிக்கு வந்து, எறும்புப் புற்றின் மண்ணால் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, ஒற்றைக் காலில் ஊசி முனையில் நின்று கடும் தவம் புரிந்தார். அம்பாளின் தவத்திற்கு மெச்சி சிவபெருமான் இங்கு தோன்றி, அவளைத் திருமணம் செய்து கொண்டார். அம்பிகை இங்கு கடுமையான தவம் புரிந்ததால் “அருந்தவநாயகி” என்ற திருநாமம் பெற்றார்.

🌸 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கிழக்கு நோக்கி 5 நிலை ராஜகோபுரத்துடன் 2 பிரகாரங்கள் உள்ளன. உள்பிரகாரத்தில் கமலகணபதி முருகன் பஞ்சபூதலிங்கங்கள் மகாலக்ஷ்மி, லிங்கோத்பவர், 63வர், சூரியன், சந்திரன், நடராஜர் , சிவ துர்க்கை, சப்த கன்னியர் சன்னதிகள் உள்ளன.

🌹பராந்தக சோழன் மற்றும் உத்தம சோழன் காலத்தில் செங்கற்கோவிலாக இருந்தது கற்றளியாக (கற்கோவில்) மாற்றியமைக்கப்பட்டதால், சுவர்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகளும் நிறைந்துள்ளன. கல்கி புகழ் குறுநில பழுவேட்டையர்களின் தலைநகரம்.

🌸 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர

பிரம்மஹத்தி மற்றும் பழி தோஷங்கள் நீங்க

சுக்கிர தோஷ நிவர்த்தி

தீராத நோய்கள் குணமாக

🌸 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பங்குனி உத்திரம் மற்றும் பிரம்மோற்சவம்

ஏழூர் திருவிழா (சப்தஸ்தான பெருவிழா)

நவராத்திரி உற்சவம் (புரட்டாசி மாதம்)

மஹாசிவராத்திரி (மாசி மாதம்)

ஐப்பசி அன்னாபிஷேகம்

கந்தசஷ்டி திருவாதிரை பிரதோஷம் சிறப்பு

🌸 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அம்பாள் மகாவிஷ்ணு சூரியன் மஹாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன், சந்திரன், சுக்கிரன், அகத்தியர், வியாசர், சம்பந்தர்,

🌸அமைவிடம்,நேரம்,தொடர்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தஞ்சாவூர் – அரியலூர் மற்றும் கும்பகோணம் – திருச்சி ஆகிய பிரதான சாலைகளின் சந்திப்பில் அமைந்துள்ளது.

திருச்சி, தஞ்சாவூர், திருவையாறு, அரியலூர், மற்றும் கும்பகோணம் ஆகிய நகரங்களில் இருந்து கீழப்பழுவூர் செல்ல நேரடி பேருந்து வசதிகள் ஏராளமாக உள்ளன.

8AM – 9AM 5PM – 6PM

FRIDAY 7AM – 1PM, 4PM – 7.30PM

94869 44150 கௌரி சங்கர் குருக்கள்

கிராமத்து கோவில். குருக்களை அழைத்துவிட்டு செல்வது சிறப்பு

🌸 கோவில் தேவார பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

முத்தன்மிகு மூவிலைநல்

வேலன்விரி நூலன்

அத்தன்எமை யாளுடைய

அண்ணலிட மென்பர்

மைத்தழை பெரும்பொழிலின்

வாசமது வீசப்

பத்தரொடு சித்தர்பயில்

கின்றபழு வூரே.

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *