இலம்பையங்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் அரம்பேஸ்வரர்
மூலவர் : தெய்வநாயகேஸ்வரர் / அரம்பேஸ்வரர் / சந்திரசேகரர்
அம்பாள் : கனக குஜாம்பிகை / கோடேந்து முலையம்மை
ஸ்தல விருக்ஷம் : பவளமல்லி & வில்வம்
தீர்த்தம் : மல்லிகா புஷ்கரணி சந்திரதீ
பாடல் : ஞானசம்பந்தர்
ஊர் : எலுமியன்கோட்டூர்,
ஆகமம் : காமீகம், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் தொண்டை நாட்டு ஸ்தலம் 13
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்கு சிவன் சுயம்பு அருள் பாலிக்கிறார்.
தீண்டா திருமேனியானா சிவன், கொன்றை மலரின் இதழை போன்று காட்சி தருகிறார்.
தினமும் கோபூஜை நடக்கும் இத்தலத்து சிவனை, வருடத்தில் APR 2-7, SEP 5-11, சூரியன் தனது ஒளிக்கற்றையை பரப்பி பூஜை.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தேவர்களின் படைக்கு தலைமை ஏற்று திரிபுர சம்ஹாரத்திற்கு சென்றதால் இத்தலத்து இறைவன், தெய்வநாயகேஸ்வரர் என்றும் அரம்பையர்களுக்கு அருளிய தால் அரம்பேஸ்வரர் என்றும் அழைக்க, இதனால் ஊர்
அரம்பையங்கோட்டூர் மருவி எலுமியன்கோட்டூர்.
தக்ஷனால் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி சென்றுள்ளார். இதில் நீராடி சுவாமியை வணங்கினால் மறுபிறவி இல்லை.
அரம்பையர் தங்கள் அழகை எவ்வாறு பாதுகாத்து கொள்வது, புதுப்பித்துக் கொள்வது என்ற ஆலோசனை கேட்க, தேவ குரு பிரஹஸ்பதியை அணுகினர். அவர் அவர்களை தெய்வநாயகேஸ்வரரை வழிபடுமாறு கூறினார். அதைக்கேட்ட தேவ கன்னியர் தங்கள் தோழியருடன் கூவம் நதிக்கரையில் வந்து தெய்வநாயகேஸ்வரரை கண்டனர்.
ரம்பை ஒரு தீர்த்தம் அமைக்க, அதில் நீராடிய அனைவரும்
தெய்வநாயகேஸ்வரரை வழிபட்டனர். அவருக்கு மல்லிகை மற்றும் ரோஜா மலர்களால் அர்ச்சனை செய்ததோடு,
அருகே ஒரு 16 பட்டைகள் கொண்ட ஷோடச லிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர். வழிபாட்டுக்குப் பின் அவர்கள் தங்கள் அழகு புதுப்பொலிவுடன் மிளிர்வதை கண்டு பேரானந்தமடைந்தனர்.
தெய்வநாயகேஸ்வரர் தீண்டா திருமேனியாகும். பூஜையின் போது கூட அர்ச்சகர்கள் தொடுவதில்லை. ஒரு குச்சியின் உதவியுடன் வஸ்திரங்கள் மற்றும் மாலைகள் அணிவிக்கப்படுகின்றன.
1983 இவ்வூரில் பெரிய இடி விழுந்தது. பெருத்த சேதம் ஏற்படாமல், தன் விமானத்தில் இடியினை தாங்கி ஊரைக் காத்தார் தெய்வநாயகேஸ்வரர்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தேவர்களை கொடுமைப்படுத்திய திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்வதற்காக, மர மல்லிகை வனமாக இருந்த இவ்வழியே சிவன் சென்றார்.
அப்போது சிவனுடன் சென்ற தேவர்கள் விநாயகரை வணங்காமல் சென்றதால், அவர் சிவனது தேரில் அச்சை முறித்தார். தேர் நிலை குலைந்து சாய்ந்தது
தேர் கீழே விழாமல் இருக்க, வில்லை பூமியில் ஊன்றி (அம்பு வடிவில் மஹாவிஷ்ணு ) தாங்கி பிடித்தார். அப்போது சிவன் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை இவ்விடத்தில் விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.
ஒரு சமயம் சிவதலங்களுக்கு சென்று பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் இவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சிறுவன் மற்றும் முதியவர் வடிவேல் வந்த சிவன், அவரிடம், “இவ்விடத்தில் சிவன் குடி கொண்டிருக்கிறார், அவரைக் குறித்து பதிகம் பாடு!’ என்றார்.
அதன்படி இங்கு வந்த ஞான சம்பந்தர் சிவன் இருக்கும் இடத்தை தேடிவிட்டு அவரை காண முடியாமல் திரும்பினார். மீண்டும் பசு வடிவில் சென்று அவரை மறித்த சிவன், தான் இருக்கும் இடத்தை காட்டினார். அதன் பின் ஞானசம்பந்தர் சிவனைக் குறித்து பதிகம் பாடினார்.
தேவகன்னியர்கள் வழிபாடு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அரம்பையர்களான (தேவ கன்னிகள் ) ரம்பா ஊர்வசி மேனகா ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்து…
அவர்களுக்கு சிவன், யோக தக்ஷிணாமூர்த்தியாக காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படி அருளினார். கோஷ்டத்தில் இருக்கிறார்.
பேரின்ப நிலையில் உள்ள இவரை வணங்கினால், காண்போரை வசீகரிக்கும் முகப்பொலிவையும், மன அழகையும் பெறலாம். குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகை பெறுவர்.
கோயில் நுழைவாயிலின் அருகே தேவதையர்கள் வணங்கிய சிவன் , ரம்பாபுரி நாதராக, 16 பேறுகளை அளிக்கும்படி, 16 பட்டைகளுடன் ஷோடச லிங்கமாக மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.
குரு தோஷத்தால் பாதிப்பு உள்ளவர்கள் பிரார்த்தனை.
திரிபுரம் எரிக்க புறப்பட்டார் பரமன். திரிபுர அசுரர்களிடமிருந்து தேவர்களை காக்க வந்ததால் தெய்வநாயகேஸ்வரர் என்று பெயர்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மூர்த்தி ஸ்தலம் தீர்த்தம் 3ம் சிறப்பு..
அம்பாள் தெற்கு நோக்கியபடி ஸ்ரீ சக்கர பீடத்துடன் அருள் பாலிக்கிறார்.
ஸ்தல விநாயகர் – குறுந்த விநாயகர் . இங்கு சுத்தானம் நைவேத்யம்.
சிவலிங்க திருமேனி வெளிர் நிறமுடைய, செம்மண் நிறத்தில் உள்ளது. பெரிய ஆவுடையார். அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் உள்ளது.
அன்னை கனக குஜாம்பிகை பாதத்தில் காஞ்சி மஹா பெரியவா ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை.
யோக தக்ஷிணாமூர்த்தி, தலை சாய்த்து கண்களை மூடி, கைகளால் சின் முத்திரைகாட்டி அதை தன் யக்ஞோபவீதத்தின் பிரம்ம முடிச்சின் மேல் வைத்து ஒரு கரத்தில் திரிசூலமும் மறுகரத்தில் அக்கமாலையும் தாங்கி இருக்கும் கோலத்தை காண கண்கள் கோடி போதாது.
குரு பெயர்ச்சி நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் யோக தக்ஷிணாமூர்த்தி அருள் பெற்று பலனடைகிறார்கள். அரம்பையர் அமைத்த அரம்பேசுவரர் கோவிலின் தென்கிழக்கு பகுதியில் வீற்றிருந்து தன்னை வணங்குவோருக்கு 16 செல்வங்களும் வழங்க தயாராக இருக்கிறார்.
கோவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு, ஒரு புது பொலிவுடன் இருக்கிறது. ஒரு வேத பாடசாலையும் செயல்பட்டு வருகிறது, நிறைய கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குரு தோஷ நிவர்த்தி
ஞானம் மற்றும் கல்வி
அழகு மற்றும் ஆயுள் வரம்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குருபெயர்ச்சி விழா,
மஹா சிவராத்திரி,
ஆருத்ரா தரிசனம்,
ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை,
ஆடிபெருக்கு,
விநாயகர் சதுர்த்தி மற்றும் பிரதோஷம் பௌர்ணமி…
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ரம்பை, ஊர்வசி, மேனகா, சந்திரன், சம்பந்தர் சேக்கிழார், மலையினார் பருப்பதந் முதலியோர்.
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சென்னையிலிருந்து வருபவர்கள் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் (NH 4) ஸ்ரீபெரும்புதூர் தாண்டியவுடன், மப்பேடு மற்றும் பேரம்பாக்கம் வழித்தடத்தில் வலதுபுறம் திரும்பி கூவம் மற்றும் இலம்பையங்கோட்டூரை எளிதாக அடையலாம்.
சென்னையிலிருந்து புறநகர் ரயில்- கடம்பத்தூர் ரயில் நிலையம். அங்கிருந்து ஆட்டோ பஸ் செல்லலாம்.
சென்னை கோயம்பேடு (CMBT) அல்லது பூந்தமல்லியிலிருந்து பேரம்பாக்கம் (Perambakkam) அல்லது அரக்கோணம் (Arakkonam) செல்லும் அரசுப் பேருந்துகளில் ஏறி, கூவம் கூட்டுரோடு (Koovam Kootroad) அல்லது பேரம்பாக்கத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆட்டோ வசதி உண்டு.
கோயில் நேரம்
7AM – 11AM & 4PM – 7PM
பிரம்மேச சிவம் குருக்கள் 9600043000
கோயில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மலையினார் பருப்பதந் துருத்திமாற் பேறு
மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம்
நிலையினான் எனதுரை தனதுரை யாக
நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக்
கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும்
இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply