இன்னம்பூர் எழுத்தறிநாதர் அக்ஷரபுரீஸ்வரர்
மூலவர் : எழுத்தறி நாதர் அம்பாள் : சுகந்த குந்தலாம்பாள்
நித்திய கல்யாணி
ஸ்தல விருக்ஷம் : செண்பக மரம். பலா
தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்
பாடல் : அப்பர், சம்பந்தர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 45
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சூரியன் பூஜித்த தலம்
அகத்தியருக்கு இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம்
பங்குனி 13, 14, 15 ஆவணி 31 புரட்டாசி 1, 2 ஆகிய தேதிகளில் சூரியன் தன் கதிர்களை பரப்பி பூஜை செய்கிறான்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இது பாஸ்கர க்ஷேத்ரம்.
அம்பர் என்றால் ஆகாயம், இன்னன் என்றால் சூரியன். இன்னன் நம்பூர் என பெயர் இருந்தது. இன்னம்பூர் என மாறிவிட்டது. ஆகாயத்தில் வலம் வரும் சூரியன் இழந்த தன் ஆற்றலை பெற வேண்டி இத்தல இறைவனை பூஜித்து பேறு பெற்றான். அதனால் இப்பெயர்
இறைவன் அகத்தியருக்கு இலக்கணம் உபதேசித்த தலமாதலால், எழுத்தறிநாதர் அக்ஷரபுரீஸ்வரர். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
மூலவர் நீண்டுயர்ந்த பாணம்.
கல்லால் ஆன நடராஜர் சிலை.
நந்தி விலகிய தலங்களில் ஒன்று.
ஐராவதம் வழிபட்டதால் ஐராவதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
2 அம்பாள் சன்னதிகள்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிருத யுகத்தில் தான் பெற்ற சாபம் காரணமாக சூரியன் தன்னுடைய பொலிவை இழந்து ஒளி குறைந்து இருக்கும் சமயம், தனக்கு எங்கு சாப நிவர்த்தி கிடைக்கும் என்று யோகிகளிடம் கேட்க, பூர்வ ஜென்ம பாப நிவர்த்தி ஸ்தலமான, ஐராவதம் வழிபட்ட (ஐராவதேஸ்வரர்) இன்னம்பூரில் சுயம்பு நாத சுவாமியை வழிபட்டால் சாபம் நிவர்த்தியாகும் என கூறுகின்றனர்.
இங்கு வந்து சிவபெருமானை தரிசனம் செய்ய முயலும் போது, நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியன சிவபெருமானை மறைக்கவே, தன் நிலைமையை அவர்களிடம் கூறி, தனக்கு சாப விமோசனம் கிடைக்க உதவுமாறு வேண்டினார். சூரியனின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியோர் சூரியன் வழிபட சற்று விலகி வழி கொடுத்தனர். நந்தி விலகிய தலங்களில் இந்த தலமும் ஒன்று.
இப்பகுதியை ஆண்டு வந்த சோழ மன்னனிடம் கணக்கராக இருந்தார் சுதன்மன். கோவில் கட்டுமான பணிகளை மேற்பார்வை செய்து வந்த இவரிடம், ஒருமுறை அரசன் வரவு செலவு கணக்குகளைப் பற்றி விசாரித்தார். அரசரிடம் கணக்கை ஒப்படைத்தார் சுதன்மன். கணக்கில் அரசருக்கு ஐயம் ஏற்பட்டது. உரிய கணக்கை சரியாக காட்டும் படி கடுமையாக உத்தரவிட்டான். சரியாக கணக்கு எழுதியும் தன் மீது வீண்பழி வருமோ என கவலைப்பட்ட சுதன்மன் இத்தல இறைவனிடம் வேண்டினார்.
ஈசன் சுதன்மன் உருவில் மன்னரிடம் சென்று மன்னருக்கு கணக்கில் ஏற்பட்ட ஐயத்தை போக்கினார். சுதன்மன் சற்று நேரம் கழித்து கணக்குடன் செல்லவே, “ஏற்கனவே காட்டிய கணக்கை மீண்டும் ஏன் காட்ட வருகிறீர்? ” என மன்னன் சொல்ல, தனக்கு பதிலாக இறைவனே வந்து கணக்கு காட்டிய விவரத்தை மன்னரிடம் எடுத்துரைத்தார். வருந்திய மன்னன் சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டதுடன், ஈசனுக்கு கோவிலும் எழுப்பினான். இது சுயம்பு லிங்கம் என்பதால் தான்தோன்றீஸ்வரர் என்றும் பெயர் உள்ளது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சோழர்களால் கட்டப்பட்டது.
கிழக்கு நோக்கி 5 நிலை ராஜகோபுரம். கஜபிருஷ்ட விமானம். இதில் ஐந்து கலசங்கள் உள்ளன. இவை சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் திரோபாவம் அனுக்ரஹம் என இறைவனின் ஐந்து தொழில்களை குறிக்கின்றன.
கோவிலில் கொடிமரம் இல்லை இரண்டு அம்பாள் சன்னதிகள் உள்ளன. கிழக்கு வெளிப்பிரகாரத்தில் வலது புறம் தெற்கு நோக்கி சன்னதியில் அம்பாள் சுகந்த குந்தலாம்பிகை, இவளே பிரதான அம்பாள், தவக்கோலத்தில் காட்சி தருகிறார். மற்றொரு அம்பாள் நித்திய கல்யாணி. தினமும் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணம் ஆகாத பெண்கள் இந்த அம்மனை வழிபட்டு நல்ல கணவனை அடைகிறார்கள். மூலவர் பெரிய நீண்டுயர்ந்த பானத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறார். கல்லால் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலையும் கோஷ்டத்தில் உள்ளது. அழகான பைரவர் காண வேண்டிய ஒன்று.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கல்வித் தடை நீங்க
அரிச்சுவடி பயிற்சி
பேச்சுத் திறன் பெற இறைவனிடம் பிரார்த்தனை.
மேலும் திருமணத்தடை குழந்தை பாக்யம் பிரார்த்தனை.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விஜயதசமி அக்ஷராப்பியாசம்
மஹா சிவராத்திரி
ஐப்பசி அன்னாபிஷேகம்
திருக்கார்த்திகை
மார்கழி திருவாதிரை
நவராத்திரி & பிரதோஷம் சிறப்பு
வழிப்பட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அகத்தியர் ஐராவதம் சூரியன் அப்பர் சம்பந்தர் சுந்தரர் சேக்கிழார் முதலியோர்.
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும்.
பேருந்து ஆட்டோ வசதிகள் உண்டு.
7KM கும்பகோணம்
3KM திருப்புறம்பியம்
7AM – 12NOON, 4PM – 8PM
86102 44175 முத்துக்குமார் குருக்கள்.
குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எண்டிசைக் கும்புகழ் இன்னம்பர் மேவிய
வண்டிசைக் குஞ்சடை யீரே
வண்டிசைக் குஞ்சடை யீருமை வாழ்த்துவார்
தொண்டிசைக் குந்தொழி லோரே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply