அம்பல் பிரம்மபுரீஸ்வரர்
மூலவர் : பிரம்மபுரீஸ்வரர், அம்பரீசர், மாரபுரீஸ்வரர்
அம்பாள் : பூங்குழலம்மை, வண்டமர்பூங்குழலி, சுகந்தகுந்தளாம்பிகை
ஸ்தல விருக்ஷம் : புன்னை
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், அன்னமாம் பொய்கை, சூலதீர்த்தம்..
புராணப் பெயர் : அம்பர்பெருந்திருக்கோயில், பிரம்மபுரி
பாடல் : சம்பந்தர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 54
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சோமாசிமாற நாயனார் அவதரித்த தலம்.
மன்மதன் சாபம் நீங்கியது
மன்மத பானம் பலிக்காமல் போகக் கடவது என்ற விசுவாமித்திரரின் சாபம் நீங்க, மன்மதன் இத்தலம் அடைந்து வழிபட்டு சாபம் நீங்க பெற்றான்.
விமலன் அருள் பெற்றது :
விமலன் என்ற அந்தணன் தீர்த்த யாத்திரை செய்து கொண்டு இத்தலத்தில் வந்து தங்கி பல்லாண்டுகள் வழிபட்டான். இறைவன், அவனுக்காக காசி கங்கையை இங்கு வரச் செய்து, வேண்டும் வரங்களை அருளினார்..
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அம்பராம்பரர்களை அழித்தது..
சம்ஹாரசீலனை அழித்தது.. சம்ஹார சீலன் ஒரு அரக்கன். தேவர்கள் இந்த அரக்கனுக்கு பயந்து பிரம்மன் கட்டளைப்படி இத்தலத்தில் குடியேறினர். இறைவனை வேண்டினர். தேவர்களைக் காக்க கால பைரவரை ஏவி அவனைக் கொன்று அமரர்க்கு அருள் புரிந்த ஸ்தலம்.
நந்தராசன் பிரம்மஹத்தி நீங்கியது : நந்தகோபன் எனும் அரசன் புலித்தோல் உடுத்திய முனிவரை புலி என கருதி அம்பு தொடுத்த குற்றத்தினால் பிரம்மஹத்தி தொடரப்பட்டு இத்தலம் அடைந்து தவம் புரிந்து பிரம்மஹத்தி நீங்கினான். பின் அரசன் இக்கோவிலுக்கு நிறைய திருப்பணி செய்தான்.
கோட்செங்சோழ நாயனார் :
திருவானைக்காவில் வெண்ணாவல் மரத்தின் கீழிருந்து ஜம்புகேஸ்வரரை முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து வழிபட்ட பெரும்பேற்றால் அடுத்த பிறவியில் மன்னனாகப் பிறந்து, யானை ஏறாத 70 மாட கோவில் கட்டிய- 63 நாயன்மாரில் ஒருவர்.. இது அவர் கட்டிய கோவில். ஜம்புகேஸ்வரர் சன்னதியும் கோயிலில் உள்ளது குறிப்பிடத்தக்கது..
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவ புராணங்களை கேட்பதில் பெரிதும் விருப்பம் கொண்ட நைமிசாரண்ய முனிவர்கள் , எல்லாப் பெருமைகளையும் உடையதும், முக்தி தருவதுமான தலம் ஒன்றின் பெருமையைக் கூறுமாறு சூத முனிவரிடம் கேட்க, மிக்க மகிழ்ச்சியடைந்த சூதர், கைகளைச் சிரத்தின் மீது கூப்பி, ஆனந்தக் கண்ணீர் பெருகியவராக பிரமபுரி எனப்படும் அம்பர் தலத்தின் பெருமைகளைக் கூறலானார்.
இத்தலத்தின் பெருமையை சிவபெருமான் மட்டுமே கூற வல்லவர். வேண்டுவோர் வேண்டுவன யாவற்றையும் அளிக்கும் இத்தலம், கற்பக விருக்ஷத்தையும் காமதேனுவையும் சிந்தாமணியையும் ஒத்தது. இங்கு சிறிது நேரம் தங்கினாலும் காசியில் தங்கி தருமங்கள் செய்வதற்கு நிகராகும். இங்கு வசிக்கும் எல்லா உயிரினங்களும் சிவலோகப் பதவி பெறுவது நிச்சயம். இதன் அருகில் ஓடும் அரிசிலாறு காவிரியே. அதிலும், கோயிலில் உள்ள அன்னமாம் பொய்கையிலும் நீராடினால் பெறும் பயன் அளவிடற்கரியது. நீராடுவோர் கொடிய பாவங்களில் இருந்து நீங்கப்பெறுவர்.
பிரம்மாவும் விஷ்ணுவும் யார் பெரியவர் என்று போட்ட சண்டையில், அழல் உருவாய் நின்ற சிவனிடம், பன்றி உருவில் மகாவிஷ்ணுவும், அன்னம் உருவில் பிரம்மாவும் அடி முடி தேட, பிரம்மாவின் பொய்யினால் அண்ணமாகும் படி சாபம் பெற்றார். பிரம்மன் பிழை பொறுக்க மன்றாடினான். இறைவன் புன்னாகவனம் எனும் இத்தலத்தை அடைந்து தவம் செய்யுமாறு கூறினார். பிரம்மனும் இத்தலம் அடைந்து, பொய்கை உண்டாக்கி, அதன் நீரால் அபிஷேகம் செய்து, பல ஆண்டுகள் வழிபட்டு, அன்ன உருவம் நீங்கி, பழைய உருவம் பெற்று, படைப்பு தொழிலை மேற்கொண்டார். பிரம்மனுக்கு இறைவன் காட்சி வழங்கிய ஐதீக விழா ஆண்டுதோறும் மாசி மகத்தன்று நடக்கிறது..
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
3 நிலை ராஜகோபுரம் கடந்தால் கொடிமரம் பலிபீடம் நந்தி. படிகளேறி மேலே சென்றால் உயர்ந்த தளத்தில் மூலவர். மூலவருக்கு பின்னால் சோமாஸ்கந்தர் திருவுருவம்.கோயிலின் இடது புறத்தில் அம்மன் சுகந்த குந்தளாம்பிகை சந்நிதி. ஸ்தல விநாயகர், சுப்ரமணியர், ஐயப்பன், மகாலட்சுமி, படிக்காசு விநாயகர், சோமாசிமாறர், சுசீலா அம்பாள், நடராஜர், நவக்கிரகங்கள், பாலசுப்ரமணியர், கோச்செங்கட்சோழர், சம்பந்தர், அப்பர், பிரம்மா, சரஸ்வதி அம்மன், சண்டிகேஸ்வரர், ஜம்புகேஸ்வரர் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளன.
சோழர்கள் கட்டிய கோவில், இராஜராஜ சோழன் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்துக் 4 கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகின்றன.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பில்லி, சூன்யக் கோளாறுகள் நீங்க
புத்திரபாக்கியம் கிடைக்க
வேண்டிய வரங்கள் பெற
நவக்கிரக தோஷங்கள் மற்றும் சாபங்கள் நீங்க
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாசிமகம் & மஹாசிவராத்திரி
மார்கழி திருவாதிரை
ஐப்பசி அன்னாபிஷேகம்
சித்திரை கோடாபிஷேகம்
பௌர்ணமி பிரதோஷம் சிறப்பு
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மா, காளி, மன்மதன், இந்திரன், விமலன், நந்தராஜன்,
சோமாசி நாயனார், சம்பந்தர், சேக்கிழார் முதலியோர்.
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மயிலாடுதுறை – திருவாரூர் மற்றும் கும்பகோணம் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து இந்த ஆலயத்திற்கு எளிதாகச் செல்லலாம்.
மயிலாடுதுறை மற்றும் திருவாரூரை இணைக்கும் சாலை மார்க்கத்தில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து சுமார் 4 முதல் 5 கி.மீ தொலைவில் அம்பல் கிராமம் உள்ளது. பூந்தோட்டத்திலிருந்து அம்பல் செல்ல பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.
கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக அல்லது பேரளம் – கூத்தனூர் வழியாக அம்பல் சாலையை அடையலாம்
7AM – 11.15 AM. 5PM – 8PM
97885 18300 தண்டபாணி குருக்கள்
73588 42714 சுவாமிநாதன் குருக்கள்
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எரிதர அனல்கையில்
ஏந்தி எல்லியில்
நரிதிரி கானிடை
நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல்
அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன்
கோயில் சேர்வரே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply