பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர்
மூலவர் : தேனுபுரீஸ்வரர் / பட்டீஸ்வரர்
அம்பாள் : ஞானாம்பிகை /பால்வளைநாயகி
ஸ்தல விருக்ஷம் : வன்னி,
தீர்த்தம் : ஞானவாவி,கோடி தீ, காயத்ரி தீ,
பாடல் : சம்பந்தர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 23.
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஞா.ச அருகிலுள்ள சிவன் கோவிலான சக்திமுற்றத்தில் இறைவனை வணங்கிவிட்டு இந்த கோவிலுக்கு வந்தார். அது ஒரு உச்ச கோடை நாள், மற்றும் அவரை எரிக்கும் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, சிவP ‘முத்து பந்தல்’ உருவாக்கி, பூதகணங்கள் மூலம் அனுப்பினார். முத்து பந்தலின் கீழ் ஞா.ச வரும் அழகிய காட்சியை காண நந்தியை சிறிது விலகுமாறு அறிவுறுத்தினார். முன்பு பல km தூரம் வரை கட்டிடங்கள் எதுவில்லாமல் வழி நன்றாக தெரியும்.
முனிவர் விஸ்வாமித்ரர் இங்குள்ள இறைவனை வழிபட்டு, காயத்ரி மந்திரத்தின் முழு சக்தியையும் அடைந்து, பிரம்மரிஷிப் பட்டத்தையும் பெற்றதாக நம்ப்பப்படுகிறது. இங்குள்ள காயத்ரி தீ விஸ்வாமித்ரரால் உருவாக்கபட்டது. விஸ்வாமித்திரரால் ஏற்றப்பட்ட தீபம் இன்றும் கர்பகிரகத்தில் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது.
காம்பீலியின் சித்ரசேன மஹாராஜா தனது மனைவியுடன்
இங்கு தங்கி ‘புத்திர காமேஷ்டி யாகம் நடத்தி குழந்தை பாக்கியம் பெற்றார். தமிழ் – தை மாதம் – உத்திரட்டாதி நக்ஷத்திர நாளில் மன்னன் ஒரு திருவிழாவையும் நட்த்தினான்.
மார்க்கண்டேய முனிவரும் இங்குள்ள இறைவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இராவணன், வாலி மற்றும் பிறரை கொன்றதன் மூலம், தனக்கு ஏற்பட்ட பாவங்களுக்கு (சாயாஹத்தி தோஷம் ) பிராயசித்தம் வேண்டி ராமர் இங்கு வழிபட்டார். இந்நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கொண்டாடப்படுகிறது. இங்கு கிணறு அமைத்து, அந்த நீரால் சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்தார். அந்த கிணறு ‘ராமதீ’ or ‘கோடி தீ’ இந்த தீர்த்தம், தனுஷ்கோடி தீர்த்தத்திற்கு சமம்.
ப்ரதேச முனிவர் நடத்திய யாகத்தில், மாலுவா சாம்ராஜ்யத்தின், மேதாவி முனிவர் கலந்து கொள்ள வந்தார். மேதாவி முனிவர் தனது மாணவர்களில் ஒருவரான ‘தர்மசர்மா’ என்ற பிராமண பையனிடம் ஆசிரமத்தையும் பசுக்களையும் பராமரிக்கும் படி கேட்டார். திரும்பிவந்து பார்த்த பொழுது, பசுக்கள் சரியாக பராமரிக்க படாததை கண்டு, கோபம் கொண்டு – “நாயாக” மாறும்படி சபித்தார். மானவன் தர்மசர்மா மன்னிப்பு கேட்ட பொழுது, முனிவர் அவனை இந்த கோவிலுக்கு வந்து இங்குள்ள இறைவனை வணங்குமாறு அறிவுறுத்தினார். தர்மசர்மா இங்கு வந்து, ஞானவாவி தீ – புனித நீராடி, வன்னி மரம் சுற்றி வந்து, இறைவனை வணங்கி தனது அசல் வடிவத்தை மீண்டும் பெற்றதாக வரவாறு.
பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கபட்ட மன்னன் ‘சக்தியும்னன்’, காஸ்யப முனிவரால், இக்கோயில் சென்று நிவாரணம் பெற அறிவுறுத்தப்பட்டு, ஞானவாவி தீ ( காசி மணிகர்ணிகா தீ = நிகராக பெருமையுடையது ) நீராடி வழிபட்டான். ஒரு கிளி அவருக்கு பஞ்சாட்சர மந்திரத்தை (நமசிவாய) உபதேசித்ததாகவும் அதன் பிறகு தோஷம் நீங்கியதாகவும் வரலாறு.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தெய்வீக பசுவான காமதேனுவின் மகளான பட்டி இங்குள்ள இறைவனை பால் சொரிந்து வழிபட்டாள். So, பட்டீஸ்வரம். இறைவன் தேனுபுரீஸ்வரர் (தமிழில் பட்டீஸ்வரர்)
பார்வதி தேவி இங்கு தவம் செய்ததாக நம்பபடுதிறது. அவளை பாதுகாக்கவும், சுற்று சூழழை பசுமையாக்கவும், தேவர்கள் மரங்கள் மற்றும் செடிகள் வடிவில் இங்கு வந்தனர். காமதேனு தன் மகள் பட்டியை பார்வதி தேவிக்கு உதவியாக அனுப்பினார். அவளது தவத்தில் மதிழ்ந்த சிவபெருமான், அவளுக்கு ஜடாமுடியுடன் தரிசனம் அருளினார்.
துர்க்கை அம்மன் கோவில்:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இக்கோயிலின் வடக்கு வாசலில் அமைந்துள்ள ‘விஷ்ணு துர்க்கை சன்னிதி பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. பெரிய ராஜ ராஜ சோழன் உள்ளிட்ட சோழ மன்னர்கள் துர்கா தேவியின் தீவிர பக்தர்கள். சோழர்களின் கோட்டையின் வடக்கு வாசலில் காக்கும் தெய்வமாக இருந்தார். சோழ பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு, அவர்களின் கோட்டையிலிருந்து துர்க்கையின் சிலை கோவிலில் நிறுவப்பட்டது. “ஸ்ரீ கோட்டை வாயில் துர்க்கை” என்றும் அழைக்கப்படுகிறாள்.
மற்ற கோயில்களை போலல்லாமல், இங்குள்ள துர்க்கா தேவி, ஒரு இனிமையான தோற்றத்துடன் (சாந்த ஸ்வரூபி) இருக்கிறார்.
8 கைகள், 3 கண்கள், காது வளையம் (குண்டலம்) அணிந்து, இடது கையில் கிளியும், சங்கு சக்கரத்தினுடனும், தனுர் பானம், வில், கத்தி கேடயத்தோடு, சர்வாபரண பூஷிதையாக, மகிஷாசுரன் என்ற அரக்கனின் மேல் நின்றபடி த்ரிபங்கி கோலத்தில் சௌபாக்யத்தை அருளுகிறாள். பொதுவாக அவளது சிங்கம் வலது பக்கம் பார்க்கும். இங்கே அது இடது பக்கம் பார்க்கிறது.
துர்க்கை அம்மனுக்கு புடவை வாங்கி கொடுத்தால், உடனே அழகாக கொசுவம் வைத்து கட்டி நமக்கு தரிசனம் செய்விப்பதும் வரம்..
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிழக்கு நோக்கிய கோவில், 7 அடுக்கு ராஜ கோபுரம், 4.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய கோவில்.
மேலும் சிவன், பார்வதி தேவி தவிர நிறைய பிரகார தெய்வங்கள் +63 நாயன்மார்கள் உள்ளது.
சோழர் / நாயக்கர் காலத்து கோயில். அழகான சிற்பங்கள், கலை தூண்கள், மண்டபங்கள் உள்ளன.
இங்குள்ள விநாயகர்கள் – ஸ்வர்ண விநாயகர்,
அணுக்கை விநாயகர், மாதவரண பிள்ளையார் என போற்றபடுகின்றனர்.
கோவிந்த தீக்ஷிதரால், சோழர்களால் வெவ்வேறு இடங்களில் வழிபட்ட, அழகிய விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், துர்க்கை இங்கு 4 புறமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இது பஞ்ச நந்தி க்ஷத்ரம். இங்குள்ள 5 நந்திகளும் வழக்கமான கோலத்தில் காணப் படாமல், சற்று பக்கவாட்டில் இடம் பெயர்ந்துள்ளன. அம்பாள் சன்னதியில், தூண்களில், பல அழகிய யாளி சிற்பங்கள். சுழலும் ஒற்றை கல்லால் ஆன சங்கிலியும் உள்ளது. அழகிய ஒவியங்களும் உள்ளன.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தோஷ நிவர்த்தி,
திருமணத் தடை நீங்கவும்,
கல்வி மற்றும் ஞானம் பெறவும், தீராத கடன் தொல்லைகள் மற்றும் எதிரிகளின் தொல்லைகள் அகலவும் இங்குள்ள இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றனர்.
ஆன்மீக முன்னேற்றத்திற்கான பிரார்த்தனை
துர்கை அம்மன் வழிபாடு சிறப்பு.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முத்துப்பந்தல் திருவிழா
சித்திரை பிரம்மோற்சவம்
வைகாசி விசாகம்
• ஆனித் திருமஞ்சனம்
• ஆடிப்பூரம்
• நவராத்திரி
• கந்த சஷ்டி மற்றும் அன்னாபிஷேகம்
• மகா சிவராத்திரி
• மார்கழி மாத தீர்த்தவாரி மற்றும் திருவாதிரை திருவிழா.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பார்வதி தேவி, காமதேனு, பட்டி,
ராமர், விசுவாமித்திரர், மார்க்கண்டேயர், சித்ரசேன மஹாராஜா, தர்ம சர்மா, சக்தியும்னன், அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலியோர்.
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணம் 7KM
சுவாமிமலை 3KM
கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பட்டீஸ்வரத்திற்கு அடிக்கடி நகரப் பேருந்துகள் (Town Buses) இயக்கப்படுகின்றன. (பேருந்து எண்கள்: 8, 11, 25, 35, 61, 62 & 67 )
தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் ஒரு சில பேருந்துகள் பட்டீஸ்வரம் வழியாகச் செல்கின்றன. அல்லது கும்பகோணம் வந்து அங்கிருந்தும் எளிதாகச் செல்லலாம்.
6.30AM – 12.30PM 4.30PM – 8.30PM
75022 22733 குருநாத குருக்கள்
99948 07777 குருமூர்த்தி குருக்கள்
63815 10213 பாலு குருக்கள்
80562 78592 பஞ்சாபகேச குருக்கள்
99525 30576 சுந்தரமூர்த்தி சபேசன் குருக்கள்
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பாடன்மறை சூடன்மதி பல்வளையொர்
பாகமதில் மூன்றோர்கணையாற்
கூடஎரி யூட்டியெழில் காட்டிநிழல்
கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாடமழ பாடியுறை பட்டிசர
மேயகடி கட்டரவினார்
வேடநிலை கொண்டவரை வீடுநெறி
காட்டிவினை வீடுமவரே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply