திருவைகல் வைகல்நாதர்

💐 மூலவர் : வைகல்நாதர் ( செண்பகாரண்யேஸ்வரர் )

அம்பாள் : கொம்பியல் கோதை

( சாகா கோமளவல்லி )

ஸ்தல விருக்ஷம் : செண்பகம்

தீர்த்தம் : செண்பக தீர்த்தம்

புராணபெயர் : வைகல் மாட கோவில்

பாடல் : அப்பர் சம்பந்தர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 33

💐 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கோட்செங்க சோழன் கட்டிய 72 மாடக்கோவில்களில் இதுவும் ஒன்று. So வைகல் மாடகோவில். இவவூரில் சிவனின் மூன்று கண் போல் மூன்று கோவில்கள்.

வலக்கண் விசாலாட்சி விஸ்வநாதர் – விஷ்ணு வணங்கியது..

இடக்கண் பெரியநாயகி பிரம்மபுரீஸ்வரர்- பிரம்மா வணங்கியது..

நெற்றிக்கண்- கொம்பியல் கோதை வைகல்நாதர் – பிரம்மா விஷ்ணு லக்ஷ்மி பூதேவி அகஸ்தியர் வணங்கியது, பாடல் பெற்ற ஸ்தலம்..

💐 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹தனது குட்டியை தேடி வருந்திய யானை, தனது பாதத்தால் எறும்பு புற்றை மிதித்து பல எறும்புகள் சாக, யானை உடலை மற்ற எறும்புகள் அனைத்தும் கடித்து கொன்றன. தங்கள் தவறை உணர்ந்த யானை குட்டியும் எறும்பும் இறைவனை வழிபட்டு அருள் பெற்றன என புராணம் கூறுகிறது.

💐 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹முன்னொரு காலத்தில் பூமாதேவி திருமாலை மனம் செய்ய விரும்ப, இறைவனும் மணந்து கொள்கிறார். கோபம் கொண்ட லட்சுமியும் இங்கு தவம் செய்கிறார். பெருமாளும் பூமா தேவியும் லட்சுமியை தேடி இங்கு வந்து வணங்கினார். இவர்களைத் தேடி வந்த பிரம்மனும் இத்தல இறைவனை வழிபட்டார். சிவனின் திருவருளால் பெருமாள், லட்சுமி பூமாதேவி இருவரையும் மனைவியாக பெற்றார்..

💐 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ராஜகோபுரம் இல்லை. வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறம் விநாயகர் உள்ளார். வெளி திருச்சுற்றில் வலப்புறம் அம்மன் சன்னதியும், இடப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதியும் அமைந்துள்ளன.திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய பெருமாள் மற்றும் கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. மேலும் காலபைரவரும் சனி பகவானும் இத்தலத்தில் அருள்பாலிக்கின்றனர்.

எப்பொழுதும் மெய் காவல் இருக்கிறார்கள். தரிசனம் செய்விக்கிறார்கள்.

💐 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

லக்ஷ்மி கடாக்ஷம்

ஞானம் மற்றும் கல்வி

குடும்ப நலம்

குடும்ப அமைதி நிம்மதி

💐 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மஹாசிவராத்திரி

நவராத்திரி

ஐப்பசி அன்னாபிஷேகம் திருக்கார்த்திகை மற்றும் பிரதோஷம் சிறப்பு.

💐 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரம்மன், மஹாலக்ஷ்மி, மஹாவிஷ்ணு, பூமிதேவி, அகத்தியர், அப்பர், சம்பந்தர்

💐 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பேருந்து வழித்தடத்தில் பயணித்து, திருநீலக்குடி மற்றும் எஸ். புதூர் ஆகிய ஊர்களைத் தாண்டி பழியஞ்சியநல்லூர் (அல்லது பழிஞ்சநல்லூர்) பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து தெற்கு நோக்கிய பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 1 முதல் 2 கி.மீ. தூரம் சென்றால் வைகல் கிராமத்தையும் வைகல்நாதர் கோயிலையும் அடையலாம்.

சொந்த வாகனம் / கார் 👉

கும்பகோணம் – காரைக்கால் சாலையில் உள்ள பழியஞ்சியநல்லூர் கூட்ரோட்டில் வலப்புறமாகத் திரும்பி, ‘நாட்டார் வாய்க்கால்’ பாலத்தைக் கடந்து நேரே சென்றால் இக்கோயிலை அடையலாம். (குறிப்பு: நாட்டார் வாய்க்கால் பாலம் குறுகலாக இருப்பதால் பெரிய பேருந்துகள் அவ்வழியே செல்வது கடினம், கார் அல்லது ஆட்டோ போன்ற வாகனங்கள் தடையின்றி செல்ல முடியும்).

8AM – 12NOON, 4PM – 8PM

094439 96256 கார்த்திகேயன் குருக்கள்.

ஒரு கால பூஜை, 10AM – 12 NOON குருக்கள் இருப்பார். அழைத்துவிட்டு செல்வது சிறப்பு

மெய்க்காவல் அருகிலேயே இருப்பதால் எப்பொழுது சென்றாலும் சுவாமி தரிசனம் செய்ய இயலும்.

💐 கோவில் தேவார பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

துளமதி யுடைமறி

தோன்று கையினர்

இளமதி யணிசடை

எந்தை யாரிடம்

உளமதி யுடையவர்

வைக லோங்கிய

வளமதி தடவிய

மாடக் கோயிலே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *