திருவேற்காடு வேதபுரீஸ்வரர்
மூலவர் : வேதபுரீஸ்வரர் பிரம்மபுரீஸ்வரர்
அம்பாள் : பாலாம்பிகை வேற்கண்ணி
ஸ்தல விருக்ஷம் : வெள்வேல மரம்
தீர்த்தம் : வேத, வேலாயுத தீ, பாலி நதி
பாடல் : ஞான சம்பந்தர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம்,
தொண்டை நாட்டு ஸ்தலம் 23
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுயம்பு லிங்கம் , லிங்கத்தின் பின்னால சிவ பார்வதி திருமண கோலத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள்.
63 நாயன்மார்களில் மூர்க்க நாயனார் அவதார ஸ்தலம். கோயில் 11/2 ACRE நிலப்பரப்பில் கிழக்கு நோக்கி 5 நிலை ராஜகோபுரம், 3 பிரகாரங்களோடு கூடியது,
மூலவர் சந்நிதி விமானம் – கஜபிருஷ்டம. இத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்த நோய்கள் தீரும் என நம்பிக்கை.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருவேற்காடு பாலாம்பிகை, திருவலிதாயம் ஜகதாம்பிகை,
திருவொற்றியூர் வடிவாம்பிகை- ஒரேநாளில் வழிபடுவோர் இம்மையிலும் மறுமையிலும் அனைத்து நலன்களையும் பெறுவர். இக்கோயில் சோழ அரசனால் கட்டப்பட்டது.
சிவன் ஒருமுறை பார்வதி தேவியிடம், இத்தலத்தை மனதால் நினைத்தாலும், ஒரு பொழுதாவது இங்கு தங்கி இருந்தாலும் இத்தலம் வழியாக சென்றாலும் முக்தி அடைவார் எனக் கூறியுள்ளார்.
பாற்கடலை விநாயகர் பருகி விளையாடும் போது மஹாவிஷ்ணு, தன் கையில் இருந்த வலம்புரி சங்கை தவறவிட்டார். பின் இத்தல சிவனை வழிபட்டு பெற்றார்.
மஹாவிஷ்ணு சங்கை பெறுவதற்காக இத்தலத்தை அடைந்து பூஜை செய்தபோது, உடனிருந்த ஆதி சேஷனும் இங்கு வழிபட்டு, இத்தலத்தில் எல்லை வரை வாசம் செய்பவர்களை தீண்டமாட்டேன் என கூறியதாக வரலாறு.
அன்றிலிருந்து இத்தலத்தில் யாரும் பாம்பு கடித்து இறந்தது கிடையாது. ஆதலால் இது விடந்தீண்டாபதி.
முருகப்பெருமான் பிரம்மனை சிறையில் இருந்து நீக்காத குற்றத்திற்காக, இங்கு தீர்த்தம் உண்டாக்கி, வெள்வேல மரத்தடியில் வழிபட்டு பிழை நீங்க பெற்றார். அருணகிரிநாதர் பாடல்.
மூர்க்க நாயனார்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
63ரில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதார தலம். இவர் தினமும் அடியார்களுக்கு உணவு அளித்துவிட்டு தான் உண்பதை கடமையாக கொண்டிருந்தார். ஒரு முறை இவர வறுமை வாட்டியது.
இதனால் தனக்குத் தெரிந்த சூதாட்டத்தால் பலரிடம் வென்று வென்றதை மறுத்தவர்களை குத்தி, அதில் கிடைத்த பணத்தை வைத்து அடியவர்களுக்கு உணவளித்து வந்தார். இவரது மூர்க்க செயலால் இவரை மூர்க்க நாயனார் என்றழைத்தனர்.
இறைவன் திருவருளால் இவரது குற்றங்கள் நீங்கின. பின் சிவ பதவி அடைந்தார். இவர் அவதரித்த கார்த்திகை மூலம் இங்கு திருவிழா. இவருக்கு கோவில் வெளிச்சுற்று பிரகாரத்தில் தனி சன்னதி உள்ளது.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவ பார்வதி திருமணம்- வட திசை தாழ்ந்து தென்திசை உயர, சமன் செய்ய அகஸ்தியர் தென்திசை நோக்கி அனுப்ப – வேண்டும் போதெல்லாம் திருமணக் காட்சி காணும் வரம் பெற்ற அகஸ்தியருக்கு திருவேற்காடு ஸ்தலத்தில் திருமண கோலம் காட்சி.
ப்ருகு முனிவரின் சாபத்தால் பெருமாள் ஜமதக்னி முனிவர் ரேணுகா தேவிக்கு மகனாக அவதரித்தார், பரசுராமர் கதை. இங்கே மாத்ரு ஹத்தி தோஷ நிவர்த்திக்காக சிவபூஜை புரிந்து அருள் பெற்றார் பரசுராமர். அதற்குப் பிறகு தன் தாயின் வடிவை இங்கே பிரதிஷ்டித்து- ரேணுகா தேவியாக, திருவேற்காடு கருமாரியம்மனா நாம் வணங்கி வழிபடுவதற்கு உண்டான தேவியாக அருள் பெறுகிறோம்.
பிரளய காலத்தில் இந்த உலகம் மூடப்பட்ட பின் சிவன், மீண்டும் இந்த உலகை படைக்க துவங்கும் பொழுது, வெள்ளத்தை வற்றச் செய்து, பின் ரிக் யஜுர் சாம அதர்வன வேதங்களை இத்தலத்தில் வெள்ளெருக்கு மரங்களாக வடிவெடுக்குமாறு கட்டளையிட்டிருந்தார். அதன்படி வேதங்கள் இத்தலத்தில் வெள்வேல மரங்களாக மாறி, இறைவனை வழிபட்டு வந்தன. இவ்வூரின் ஸ்தல விருக்ஷம் வெள்வேல மரமாகும். இதனால் வேல்காடு மருவி வேற்காடு திருவேற்காடு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வேதங்கள், முருகப்பெருமான், பராசரமுனிவர், அத்ரி, பிருகு, குச்சரர், ஆங்கீரசர், வசிஷ்டர், கௌதமர், காஷ்யபர், திண்டி, முண்டி, வாலக்கில்யர், விரதாக்னி முதலிய முனிவர்கள், ஆதிசங்கரர், பஞ்சபாண்டவர்கள், சிபிசோழன், வாணன், நவகோள்கள், அஷ்டதிக் பாலகர்கள், சம்பந்தர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலோர்.
திருவிழா
°°°°°°°°°°°°°°°°°°°°
மாசி மகம் பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம் திருக்கல்யாணம், மஹா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, நவராத்திரி மற்றும் இதர விழாக்கள்.
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சென்னை புறநகர் பகுதியில் திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம் நதி கரையில் அமைந்துள்ளது.
1 KM FROM கருமாரியம்மன் கோவில்,
1.1 KM FROM திருவேற்காடு பேருந்து நிலையம்
14 KM FROM கோயம்பேடு பேருந்து நிலையம்.
6AM to 12 NOON, 4 PM – 8PM
044 26800430
044 26800487
98414 32122 மணி குருக்கள்
89399 27468 கார்த்திகேயன் குருக்கள்
கோயில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி
வெள்ளி யானுறை வேற்காடு
உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்
தெள்ளி யாரவர் தேவரே. 1
ஞான சம்பந்தர்.


Leave a Reply