திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கல்யாணசுந்தரர்
மூலவர் : வீழிநாதேஸ்வரர் கல்யாணசுந்தரர்
அம்பாள் : சுந்தர குஜாம்பிகை
ஸ்தல விருக்ஷம் : வீழிச்செடி
தீர்த்தம் : விஷ்ணு தீர்த்தம் & 25 தீர்த்தங்கள்
பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 61.
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்கு பாதாள நந்தி உள்ளது. முழு கோவிலும் நந்திக்கு மேலே அமைந்திருப்பது போல் உள்ளது.
இங்கு இறைவன் காசி யாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள் பாலிப்பதால் மாப்பிள்ளை சுவாமி..
மஹாமண்டபம் திருமண மண்டபம் போல் பந்தக் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு..
அர்த்த மண்டபத்தில் அரசாணிக்கால் அமைந்திருப்பதும் இங்கு மட்டும்தான்..
கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்..
சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட வவ்வால் நந்தி மண்டபம் வேறெங்கும் இல்லாதது.. வவ்வால் நந்தி மண்டபத்தில் வவ்வால்கள் தொங்க முடியாது. இங்கு சஷ்டியப்தபூர்த்தி திருமணங்கள் நடக்கின்றது.
திருவலஞ்சுழி பலகனி, திருவீழிமிழலை வவ்வால் நந்தி மண்டபம், ஆவுடையார் கோயில் கொடுங்கை, தஞ்சாவூர் கோவில் கோபுரம், கடாரம் கொண்டான் மதில் போன்ற கட்டிடப் பணி தவிர்த்து பிறவகையான கட்டிட அமைப்புகளை கட்டித் தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதிப்பத்திரம் கூறுவதுண்டு. இதன் மூலம் இக்கோயிலில் கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும்..
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பார்வதி திருமணம் : காத்தியாயன முனிவர், குழந்தை வரம் வேண்டி மனைவியுடன் கடும் தவம்.. தவத்தை மெச்சிய பார்வதியும் தானே அவருக்கு மகளாக, கார்த்தியாயினி என்ற பெயருடன்.. அவள் திருமண வயது வந்தவுடன் இறைவனை மனம் செய்ய வேண்டினார். முனிவரின் வேண்டுகோளின் படி சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தில் இறைவன் இத்தலம் எழுந்தருளி அம்மனை திருமணம் செய்தார். அப்பொழுது முனிவர் என்றென்றும் இதே திருமண கோலத்தில் அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார். அதன்படி இறைவன் மூலஸ்தானத்திலேயே திருமண கோலத்தில் அருள் பாலிக்கிறார்
பெயர் காரணம் : இத்தலம் முழுவதும் வீழி எனப்படும் செண்பகம் பலா விளா ஆகிய மரங்கள் அடங்கிய காடுகளாக இருந்தன. மிழலை குறும்பர் என்ற வேடுவர், இத்தல இறைவன் மேல் கொண்ட அன்பால், தினமும் விளாங்கணியை பறித்து வந்து நைவேத்யம். இறைவன் அவரது அன்பிற்கு இறங்கி அஷ்டமா சித்திகளை வழங்கினார். வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் வலது பாதத்தில் இன்றும் உள்ளது. ஆகவே இத்தலம் திரு + வீழி + மிழலை..
படிக்காசு : சம்பந்தரும் திருநாவுக்கரசரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருவீழிமிழலையில் தங்கினர். அப்பொழுது நாட்டில் பஞ்சம் அதிகரிக்க, இருவரும் வீழிநாதரை பணிந்து பஞ்சம் போக்க வேண்டினர் (பாடினர்). இருவரின் கனவிலும் ஈசன் தோன்றி தினமும் பொற்காசு தருவதாகவும், அடியார்களின் பசி தீர்க்கும் படியும் கூறினார். தினமும் கிழக்கு பீடத்தில் சம்பந்தர் & மேற்கு பீடத்தில் நாவுக்கரசருக்கும் பொற்காசு வைக்க,அவர்கள் அடியார்களின் பசி போக்கினர். இப்போதும் இங்கு படிக்காசு பீடம் உள்ளது. இங்குள்ள விநாயகர் படிக்காசு விநாயகர்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒருமுறை மஹாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்திரன் கவர்ந்த செல்ல, மஹாவிஷ்ணு மகேஸ்வரனிடம் வேண்ட, பூலோகத்தில் வீழிச் செடிகள் அடர்ந்த இடத்தில் தான் இருப்பதாகவும், அங்கு பூஜை செய்தால் சக்கராயுதம் கிடைக்கும் என்று கூறினார். மஹா விஷ்ணுவும் இத்தலத்தில் தன் பெயரால் தீர்த்தம் உண்டாக்கி தினமும் அபிஷேகம் & 1000 தாமரை மலர்களால் வழிபாடு செய்கிறார். ஒருநாள் சிவனின் திருவிளையாடலால் ஒரு தாமரை குறைந்தது. அந்த ஒரு தாமரைக்கு விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராக தந்தார். இதனால்தான் கோவில்களில் கண்மலர் காணிக்கை தரும் பழக்கம் உருவானது. இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன் சலந்திரனை வதம் செய்து, சக்கராயுதத்தை கொடுத்து அருளினார். மஹாவிஷ்ணு சிவனுக்கு பூஜை செய்த கன்மலர் இன்றும் சிவனின் வலது பாதத்தில் இருப்பதை காணலாம். ( இரண்டும் கண்மலர் & விளா )
திருமண கோலத்தில் சிவனும் பார்வதியும் நிற்பதும், அருகே நந்தியும் அண்ணாந்து பார்த்து அவர்கள் அழகை ரசிப்பதும் காணக் கண் கோடி வேண்டும்.. அர்ச்சகர் அழகாய் விளக்கி, பூஜை அர்ச்சனை செய்து, அம்மையப்பன் கழுத்தில் இருந்த மாலைகளை முதலில் அவர்களுக்கு மாற்றி அம்மா அப்பாவிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளச் சொல்லி, பிரசாதம் வழங்கி வாழ்த்தியது
மிக்க மகிழ்ச்சி.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
3 நிலைகளும் 5 கலசங்களும் கொண்ட கிழக்கு நோக்கிய 80 அடி ராஜகோபுரம். 4 ஏக்கர் பரப்பளவில் பெரிய மாடக்கோவில். மூலவர் சன்னதி சற்று உயர்ந்த தளத்தில் (மாடக்கோயில்) அமைந்துள்ளது. இதன் ஒருபுறம் 12 மாதங்கள் மற்றும் ராசிகளைக் குறிக்கும் 12 படிக்கட்டுகளும், மறுபுறம் வாரத்தின் 7 நாட்களைக் குறிக்கும் 7 படிக்கட்டுகளும் அமைந்துள்ளன.
மூலவர் சன்னதி விமானம், 16 சிம்மங்கள் தாங்கும் ‘விண்ணிழி விமானம்’ இங்குள்ளது.
இறைவி சுந்தரகுசாம்பிகை / பிருஹத்சுந்தரகுசாம்பிகை தனிக் கோயிலில் தெற்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
தெற்கு பிரகாரத்தில் ஸ்தல விநாயகர் படிக்காசு விநாயகர் சன்னிதியில் மேற்கே சோமாஸ்கந்தர் முருகன் மஹாலக்ஷ்மி சன்னிதிகளும் வடக்கே சண்டிகேஸ்வரர் சன்னிதியும் உள்ளது. நடராஜர் சன்னதி சிறப்பு.
கோவிலில் எதிரில் மிகப்பெரிய குளம் உள்ளது.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமணம்/ குழந்தை/ கல்வி சிறந்து விளங்க பிரார்த்தனை.
செல்வம் மற்றும் செழிப்பு
தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி
கண் பார்வை மற்றும் விழி நலம்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்திரைப் பெருவிழா
மஹா சிவராத்திரி
மார்கழி திருவாதிரை
நவராத்திரி கந்தசஷ்டி
தமிழ் புத்தாண்டு ஆருத்ரா தரிசனம் மற்றும் பிரதோஷம் சிறப்பு
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பார்வதி தேவி, மஹாவிஷ்ணு, கலைவாணி, கார்த்தியாயினி முனிவர், மிழலை குறும்பர், வசிஷ்டர், காமதேனு, ரதிதேவி, மனு சக்கரவர்த்தி, ஸ்வேத கேது,
அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேந்தனார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலியோர்.
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய முக்கிய ஊர்களில் இருந்து பூந்தோட்டம் வந்து, அங்கிருந்து நகரப் பேருந்துகள் அல்லது ஆட்டோ மூலம் திருவீழிமிழலை கோயிலை அடையலாம்.
கோனேரிராஜபுரம் 7KM
7AM – 12NOON, 5PM – 8PM
86106 20732 & 75980 07177
S.பிச்சைமணி குருக்கள்
80723 29033
D.K.மஹாலிங்கம் குருக்கள்
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே. 1.92.1
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே. 1.92.2
ஞானசம்பந்தர்


Leave a Reply