திருவாலம்பொழில் ஆத்மநாதேஸ்வரர் வடமுலேஸ்வரர்
மூலவர் : ஆத்மநாதேஸ்வரர்/ வடமூலேஸ்வரர்
அம்பாள் : ஞானாம்பிகை
ஸ்தல விருக்ஷம் : ஆலமரம் (தற்போதில்லை) & வில்வம்
தீர்த்தம் : காவரி
புராணப்பெயர் : ஆலம்பொழில்
பாடல் : அப்பர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 10.
ஸ்தல சிறப்பு:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆத்மநாதேஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு
அஷ்டவசுக்கள் பூஜித்த தலம்.
சப்த ஸ்தானங்களில் ஒன்று.
இத்தலத்திலுள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்த்தவள்.
தக்ஷிணாமூர்த்தி, இங்கு மேதா தக்ஷிணாமூர்த்தியாக உள்ளார்.
ஸ்தல பெருமை:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காஸ்யபர், அஷ்டவசுக்கள் வழிபட்டது. .
இத்தலத்தில் உள்ள வெண்பொற்றாமரை குளத்தில் இந்திரன் நீராடி, சாப விமோசனம் பெற்றான்.
நந்தியின் திருமணத்தை சுந்தரருக்கு ஞாபக படுத்திய தலம் இது.
இத்தலத்து அம்மனை வழிபட்டால் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தக்ஷனின் பெண்களில், வசுவிற்கு பிறந்த 8 குழந்தைகள் அஷ்டவசு. வசிஷ்டரின் காமதேனுவை திருடியதால் இவர்களுக்கு பூலோகத்தில் பிறக்கும்படி சாபம்.
அதனால் அந்த அஷ்ட வசுக்கள் தங்கள் சாபம் தீர, இங்கு சிவபெருமானை வணங்கி சாபம் நீங்க பெற்றனர்.
இது சர்வ தோஷ நிவாரண திருத்தலம்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தல கல்வெட்டு இறைவனை “தென் பரம்பை குடி திருவாலம் பொழில் உடைய நாதர்” என்று குறிக்கிறது. அப்பரும் தம் திருத்தாண்டகத்தில், “தென் பரம்பைக் குடியின் மேல் திருவாலம் பொழிலானை சிந்தி நெஞ்சே” என்று பாடிபுள்ளார். ஆதலால் ஊர் பரம்பைகுடி & கோவில் திருவாலம் பொழில்.
5 நிலை ராஜகோபுரம்,
மேற்கு நோக்கிய மூலவர் சிறப்பு.
அம்பாள் ஞானாம்பிகை தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள்.
கோவில் பிரதாரத்தில் மூலவிநாயகர், பஞ்ச லிங்கம் , தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதன் விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நவகிரகம், நடராஜர் ஆகியோர் உள்ளனர்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமணதடை நீங்கவும், குழந்தை பேறு வேண்டியும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை Also Pray for பித்ரு தோஷம், பிரிந்த தம்பதி ஒன்று சேருதல், குடும்ப ஒற்றுமை & மகம் நட்சத்திர தோஷ நிவர்த்தி.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆவணி மூலம்
ஐப்பசி அன்னாபிஷேகம்
திருக்கார்த்திகை
திருவாதிரை மஹாசிவராத்திரி நவராத்திரி
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கஷ்யபர், அஷ்டவசுக்கள், இந்திரன், அப்பர் முதலியோர்
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருக்கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் திருப்பூந்துருத்திக்கு அடுத்து திருஆலம்பொழில் தலம் இருக்கிறது.
கண்டியூர் சுமார் 5KM. கண்டியூரிலிருந்து நகரப் பேருந்து செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. திருவையாற்றிலிருந்து பூதலூர் வழியாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்திலேயே இறங்கலாம்.
திருப்பூந்துருத்தி 1.5KM
கண்டியூர் 4.5KM
திருவையாறு 7KM
8AM – 12 NOON, 5PM – 7PM
கோவில் குருக்கள் இல்லாததால் தற்சமயம், திருப்பூந்துருத்தி கோவில் குருக்கள், சரவணன் குருக்கள் மாலை 6 -7.30 வருகிறார். அவரது கைபேசி எண் 97914 80824.
குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக்
கமலத்தோன் றலையரிந்த காபா லியை
உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை
உணர்வெலா மானானை ஓசை யாகி
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை
மறைக்காடும் ஆவடுதண் டுறையு மேய
திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே
திருநாவுக்கரசர்


Leave a Reply