திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கபர்த்தீஸ்வரர்

🌺 மூலவர் : வலஞ்சுழிநாதர் / கபர்த்தீஸ்வரர் / கற்பகநாதேஸ்வரர் / செஞ்சடைநாதர்

அம்பாள் : மங்களநாயகி பிரஹன்நாயகி / பெரிய நாயகி

தீர்த்தம் : காவிரி ஆறு, அரசலாறு, ஜடா தீர்த்தம்.

ஸ்தல விருக்ஷம் : வில்வம்

பாடல் : அப்பர் சம்பந்தர்

சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 25

🌺 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹இங்குள்ள “பலகணி” – ஒரே கல்லால் செய்யப்பட்ட க்ரில் ஜன்னல் – நுணுக்கமான வேலைப்பாடுகளுடன்.. இதைப்போல் இனி உருவாக்க முடியாது.. இதன் சிறப்பு என்னவென்றால் 👇

திருவலஞ்சுழி பலகனி, திருவீழிமிழலை வவ்வால் நந்தி மண்டபம், ஆவுடையார் கோயில் கொடுங்கை, தஞ்சாவூர் கோவில் கோபுரம், கடாரம் கொண்டான் மதில் போன்ற கட்டிடப் பணி தவிர்த்து பிறவகையான கட்டிட அமைப்புகளை கட்டித் தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதிப்பத்திரம் கூறுவதுண்டு. இதன் மூலம் இக்கோயிலில் கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும்..

🌹இது விநாயகரின் 10 படை வீடுகளில் ஒன்று.

🌺விநாயகர் திருமண தலம்👉

🌹மஹாவிஷ்ணுவின் நேத்ர கமலங்களில் இருந்து தோன்றிய இந்திர தேவியாகிய கமலாம்பாளையம், பிரம்மாவின் வாக்கில் இருந்து தோன்றிய புத்தி தேவியாக வாணியையும், இத்தலத்தில் ஸ்வேத விநாயகர் திருமணம் செய்து கொண்டார்.

இந்த விநாயகரை வழிபட்டால் எண்ணிய எண்ணம் ஈடேறும்.

🌹சிவராத்திரி அன்று ஆதிசேஷன் இங்கிருந்து, குடந்தை நாகேஸ்வரம், திருநாகேஸ்வரம் திருப்பாம்புரம் திருநாகைக்காரோணம் சென்று வழிபாடு.. இன்றும் பக்தர்கள் சிவராத்திரி அன்று இதே வரிசையில் தரிசனம் செய்கிறார்கள்..

🌹 துர்வாச மகரிஷி இங்கு நடத்திய யாகத்தில் பல முனிவர்கள் கலந்து கொண்டனர். வந்த ஒவ்வொருவரும் இங்கு ஒரு சிவலிங்கத்தை நிறுவினர். 22 லிங்கங்கள் அவரவர் பெயரிலேயே வெளிப்புற நடைபாதையில் உள்ளன..

🌺 ஸ்தல பெருமை👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹 இந்த விநாயகர் வந்த வரலாறு 👉 இங்கு ஸ்வேத விநாயகர் வெள்ளை விநாயகர் மிகவும் பிரபலம். தேவர்கள் திருப்பாற்கடலை கடைந்த பொழுது ஆலஹால விஷம் வந்தது.. சங்கடம் தவிர்க்க சங்கரனை வேண்ட, அவர் விநாயகரை வழிபட மறந்ததை சொல்ல, தேவர்களும் அங்கேயே கடல் நுரையிலிருந்து விநாயகர் சிலை உருவாக்கி வழிபட சங்கடம் தீர்ந்தது.. அமிர்தமும் பெற்றனர். அதிலிருந்து இந்திரன் எப்போதும் தன்வசமே விநாயகரை வைத்திருந்து வழிபட்டான்.

🌹அகல்யையினால் சாபம் பெற்ற இந்திரன், பூமியில் ஒவ்வொரு சிவாலயமாக பரிகாரம் தேடும்பொழுதும் சிவபெருமானை வணங்குவதற்கு முன் இந்த விநாயகரை வழிபட்டான். விநாயகர் இங்கேயே தங்க விரும்புவதால், எடுக்க வரவில்லை. விநாயகரும் அசரீரியில், ஒவ்வொரு விநாயக சதுர்த்தியும் இங்கே வந்து வணங்கு, தினமும் வணங்கிய பலன் தருகிறேன்.. மகிழ்ச்சி அடைந்த இந்திரனும், விஸ்வகர்மாவை அழைத்து, அங்கேயே தேர்வடிவில் கோவில் அமைத்து விநாயகரை அமர்த்தியதாக வரலாறு. இதில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பல கலைநயம் மிக்க தூண்கள் நிறைந்துள்ளன. இந்த விநாயகருக்கு முன்பாக, ஆறு அடி உயரமுள்ள மூன்று கல் விளக்குகளும், ஒரே கல்லால் செய்யப்பட்ட ஒரு பெரிய கம்பிச் சாளரமும் அமைக்கப்பட்டுள்ளன இப்போதும் ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியன்றும் இந்திரன் வருவதாக நம்பிக்கை.

🌹திருவிடை மருதூரானது மகாலிங்கத் தலமாக விளங்க, அதற்குரிய பரிவாரத் தலங்களுள் இது, விநாயகர் தலம். விநாயகர் நுரையால் ஆனவர் என்பதால் அபிஷேகம் இல்லை.. புனுகு, பச்சை கற்பூர பொடி தூவப்படுகிறது.. NO TOUCH.. தீண்டா திருமேனி என்பதும் சிறப்பு.. தும்பிக்கை வலப்பக்கம் உள்ள விநாயகர் என்பதால் அள்ளிக் கொடுக்கும் விநாயகர்.. மேலும் நுரை பிள்ளையார், வலஞ்சுழி விநாயகர் என்றும் பெயர். சிறிய திருமேனி.

🌺 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌺 இத்தலத்தின் மற்றொரு பெருமை, சிவராத்திரி அன்று ஆதிசேஷன் சிவபெருமானை வழிபட பாதாள லோகத்தில் இருந்து வெளியே வர, பெரிய துளை உண்டானது (பிலா துவாரம்). அங்கே பாய்ந்து கொண்டிருந்த காவிரி ஆறு, வலப்பக்கம் சுழியில் விழுந்தாள். ஆகவே இத்தலம் வலஞ்சுழி.

🌹காவிரி பாதாள உலகிற்கு செல்ல, சோழ நாட்டின் வளமும் பாதிக்க, சோழமன்னன் ஹரித்வஜன் சிவனை வேண்ட 👉 “அரசனோ/முனிவரோ பிலா துவாரத்தில் நுழைந்து உயிர் தியாகம் செய்தால் காவிரி மீண்டும் பூமிக்கு வரும் என அசரீரி உரைத்தது. கோட்டையூரில் தவம் செய்து கொண்டிருந்த ஹேரந்த மஹரிஷியுடன் (ஆத்ரேய) ஆலோசனை செய்ய, அவரும் ஞான திருஷ்டியில் அறிந்து ஆமோதிக்க, தன் நாட்டின் நலனுக்காக மன்னனும் உயிர் தியாகம் செய்ய தயாரானான்.

முனிவர் மன்னனை தடுத்து, தன்னுயிரை தியாகம் செய்ய பிலத்தில் இறங்கினார். நதி மீண்டும் மேலே பூமிக்கு வந்த இடம்தான் “மேல காவிரி”.

இங்கே உள்ளே சென்ற முனிவர், மீண்டும் பூமிக்கு வந்த இடம் “மேல பெரும்பள்ளம்”

(திருவலம்புரம்).

🌺 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கிழக்கு நோக்கி உள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயில் கடந்து நீண்ட வழியே சென்று மூன்று நிலை கோபுரத்தை அடையலாம். மூலவர் கிழக்கு நோக்கிய சந்நிதி. அம்பாள் பெரியநாயகி இறைவன் சந்நிதிக்கு வலப்புறம்

இருப்பது திருமண தோரணை.. இந்த கோவிலுக்கு சென்றாலே புண்ணியம்.

இங்கு அஷ்டபுஜகாளி சிறப்பு.

இங்கு பைரவர் மிகவும் உக்கிரம். அதை தணிப்பதற்கு சிறிது பின்ன படுத்தப்பட்டது.

சனீஸ்வரனுக்கும் இவ்வாலயத்தில் தனி சந்நிதி உள்ளது.

இங்கு உள்பிராகாரத்தில் உள்ள முருகப் பெருமான், ஆறு திருமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் அருகில் நிற்கின்றனர். திருப்புகழில், இத்தல முருகர் மீது ஒரு பாடல் உள்ளது. கோவில் முழுவதும் ஒவ்வொரு தூணிலும் நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்திருக்கிறது..

🌼 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருமணப் பிரார்த்தனை

நிறம் மேம்பட

தடை நீங்குதல்

நினைத்த காரியம் நிறைவேற

🌼 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

விநாயகர் சதுர்த்தி விழா

மஹா சிவராத்திரி

திருக்கார்த்திகை

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி – வள்ளி கல்யாண வைபவம்

கும்பகோணம் சப்தஸ்தானத் திருவிழா (ஏழூர்த் திருவிழா) &

பிரதோஷம் பௌர்ணமி சிறப்பு

🌼 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

உமையம்மை, திருமால், இந்திரன், பிரமன், ஆதிசேஷன், ஹேரண்டமுனிவர் சம்பந்தர், அப்பர், சுந்தரர், நக்கீரதேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், சேக்கிழார் முதலியோர்

🌼அமைவிடம்,நேரம், தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கும்பகோணம் (6KM) இருந்து சுவாமிமலை (1KM) செல்லும் வழியில் அமைந்துள்ளது.

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் நெடுஞ்சாலையில் அல்லது சுவாமிமலை செல்லும் சாலையில் பயணித்தால் இக்கோயிலை எளிதில் அடையலாம். ஏராளமான பேருந்துகள் உள்ளன.

7 AM – 12 NOON, 4PM – 8PM

94430 92442 கபர்தீஸ்வரர் குருக்கள்

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🌼 கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

என்ன புண்ணியஞ் செய்தனை

நெஞ்சமே யிருங்கடல் வையத்து

முன்னம் நீபுரி நல்வினைப்

பயனிடை முழுமணித் தரளங்கள்

மன்னு காவிரி சூழ்திரு

வலஞ்சுழி வாணனை வாயாரப்

பன்னி யாதரித் தேத்தியும்

பாடியும் வழிபடும் அதனாலே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *