திருவக்கரை சந்திரசேகரர் சந்திரமௌலீஸ்வரர்u வக்ரகாளியம்மன்
திருவக்கரை சந்திரசேகரர் சந்திரமௌலீஸ்வரர்u வக்ரகாளியம்மன்
திருவக்கரை சந்திரசேகரர் சந்திரமௌலீஸ்வரர்u வக்ரகாளியம்மன்
திருவக்கரை சந்திரசேகரர் சந்திரமௌலீஸ்வரர்u வக்ரகாளியம்மன்
திருவக்கரை சந்திரசேகரர் சந்திரமௌலீஸ்வரர்u வக்ரகாளியம்மன்
திருவக்கரை சந்திரசேகரர் சந்திரமௌலீஸ்வரர்u வக்ரகாளியம்மன்
திருவக்கரை சந்திரசேகரர் சந்திரமௌலீஸ்வரர்u வக்ரகாளியம்மன்
மூலவர் : சந்திரசேகரர் சந்திர மௌலீஸ்வரர்
அம்பாள் : அமிர்தேஸ்வரி வடிவாம்பிகை
ஸ்தல விருக்ஷம் : வில்வம்
பாடல் : ஞான சம்பந்தர்
தீர்த்தம் : பிரம & சந்திர சூரிய ( ஒன்று தூர்ந்தும் மற்றொன்று சிதில மாயும் உள்ளது )
புராணப் பெயர் : வக்ரபுரி
2000 வருடங்கள் பழமையானது.
சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம், தொண்டை நாட்டு ஸ்தலம் 30.
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மூலவர் மூன்று முக லிங்கமாக அருள்பாலிக்கிறார். இது மிகவும் அரிதான வடிவம்.
வக்ராசுரன் வழிபட்ட ஆத்ம லிங்கம், காளி கோவிலுக்கு மேற்குபக்கத்தில், எதிரிலேயே உள்ளது. இந்த லிங்கம், கோடை காலத்தில் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மழைக்காலத்தில் லிங்கத்தின் மேல் நீர்முத்துக்கள் தங்கி இருக்கும்.
கோயிலின் மகத்துவம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பஞ்சமுக லிங்கம்
ONLY 2, நேபால் & காளகஸ்தி.
3 முகம் கொண்ட லிங்கம் – மூமுக லிங்கம் – திருவக்கரையில் மட்டுமே உள்ளது.
கிழக்கு நோக்கிய முகம் – தத்புருஷ லிங்கம்,
வடக்கு நோக்கிய முகம்- வாமதேவ லிங்கம்,
தெற்கு நோக்கிய முகம் – அகோர லிங்கம்
அகோர லிங்கத்தின் பக்கவாட்டில் 2 கூர்மையான பற்கள் உள்ளன. அபிஷேகத்தின் போது மட்டுமே தெரியும்.
கோயிலில் இயற்கையிலேயே வக்கிரமாக இருக்கும் பல விஷயங்கள் உள்ளன
பாரம்பரியத்திற்கு முரணானது.
•கொடிகம்பம் வடக்கு பக்கத்தில் சற்று தள்ளி உள்ளது.
•பொதுவாக பிரதான கோபுரத்தின் கீழ் நுழைவாயிலிலிருந்து தெய்வத்தை தரிசனம் செய்யலாம். இங்கு முடியாது.
• கோயிலின் முக்கிய அம்சங்கள் எதுவும் – ராஜகோபுரம், கொடிக்கம்பம், நந்தி ஒரு நேர்கோட்டில் இல்லை, ஒன்றுக்கொன்று தொலைவில் காணபடுகின்றது.
பௌர்ணமி நாட்களில் நள்ளிரவு 12 மணி, அமாவாசை காலை 12 மணிக்கு வக்ரகாளி அம்மனுக்கு ஜோதி தரிசனம் செய்யப்படும் போது கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுதான் கோபுர மண்டபத்தின் மேல் ஏற்றப்படும் தீபம். இந்த தரிசனம் முக்கியமானது.
ஜகத் குரு ஸ்ரீ சங்கரரால் நிறுவப்பட்ட ஸ்ரீசக்கரம் அன்னை வக்ரகாளியின் இடது புறத்தில் உள்ளது.
வரதராஜ பெருமாளின் சக்கரம் கோயிலில் வித்தியாசமாக உள்ளது.
குண்டலினி சித்தர் சமாதி அடைந்த இடம் இது, கோவிலுக்கு உள்ளேயே உள்ளது.
அன்னை வக்ரகாளியின் காது வளையங்கள் ஒரு சிறு குழந்தையாக உள்ளது.
அன்னை வக்ரகாளி இங்கு
புன்னகைக்கும் கருணையுள்ள வடிவத்தில் – சாந்த ஸ்வரூபியாக அருள் பாலிக்கிறாள்.
வக்ர சனி
°°°°°°°°°°°°°°°°°°°°°°
சனிபகவானின் வாகனம் காகம் மாறி இடதுபுறம் உள்ளது.
வக்ரசனி காலத்தை எதிர்கொள் பவர்கள், அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட இங்கே பிரார்த்தனை.
தகன மைதானம் அன்னையின் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது.
சுவாமிக்கு 3 முகம், ஜடா மகுடம் இருக்கும், அதுக்கு மேலே கங்கை இருப்பாள். கங்கைக்கு பக்கத்திலே பிறை சந்திரன். சுவாமியின் கழுத்துக்கு கீழே ஆவுடையார்.
கிழக்கு பார்த்து சுவாமி,
தெற்கு பார்த்து அம்பாள், வடக்கு பார்த்து காளி, மேற்கு பார்த்து பெருமாள், எல்லா திக்குலயும் எல்லா சுவாமியும், தேவாதி தேவர்களெல்லாம் பூஜை செய்த ஸ்தலம்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வக்ராசுரன் அரிய பல வரங்கள் பிரம்மாவிடம் பெற்று, இந்த பிரம்மாண்டத்தையே தன் ஆளுகைக்கு கீழே கொண்டுவர ஆசைப்பட்டான்.
யார் யாரெல்லாம் யாக யஞ்யங்கள் பண்றாளோ அந்த யாகங்களின் அவிர்பாகத்தை தானே வாங்கிக்கிறான்.
வாங்கிய வரங்களில் ஒன்று, ஒரு பெண்ணால் தான் மரணம் என்று. ஆதலால் யாராலும் நெருங்க முடியாதவனை கொல்ல அனைவரும் அம்பாளை பிரார்த்தனை செய்யகிறார்கள்.
அம்பாள் எழுந்தருளி, மஹா விஷ்ணுவுடன் வந்து, மஹா விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தினாலே அவனை அடிக்க, அவன் கீழே விழ, அவன் அங்கங்களில் இருந்து பல்வேறு உருவங்கள் உண்டாகிறது, அம்பாள் அத்தனை உருவங்களையும் ஒன்னா சேக்கறா.
தன் காலுக்கு கீழே வைக்கிறாள். மிதிச்சுண்டு நின்னு விடுகிறாள். பார்த்தேள்னா வக்ராசுரன் கீழே கிடப்பான். அவன் மூச்சை அடக்கி வதம் செய்து விடுகிறாள்.
ஆனால் அவன் தங்கை பூரண கர்ப்பவதி, இவனை விட சக்தியோடு அவள் ஆவிர்பாவமாகிறாள்.
அனைவருக்கும் தேவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. பூரண கர்ப்பவதி, குழந்தையுடன் அழிக்க கூடாது என்பது தர்மசாஸ்திரம்.
அம்பாள் ஜகன்மாதா பார்த்தா. 2 கையை வயிற்றின் உள்ளே விட்டாள். குழந்தையை கையில் எடுத்தாள்.
அதற்குப் பிறகு அவளை சம்ஹாரம் பண்ணிட்டு, தனது வலது காதில் குழந்தையை குண்டலமா மாட்டிண்டு, ரொம்ப உக்கிரமா நிற்கிறா.
எல்லோரும் பயப்பட ஆரம்பிச்சுட்டா. என்ன பண்றதுன்னு தெரியல. அகஸ்தியர் வந்தார். சாந்தப் படுத்தினார், பூஜை பண்றார்.
தேவாதி தேவர்களெல்லாம் வந்தா பூஜைக்கு. தங்களது கரத்தாலேயே சிவலிங்கம் பிடிச்சு வச்சு பூஜை. அப்பேர்ப்பட்ட திவ்ய க்ஷேத்ரம்.
2000 வருடங்களுக்கு முன்னால் சங்கர பகவத்பாதாள் வந்து, அம்பாளின் இடது காலுக்கு யந்திர பிரதிஷ்டை (ஸ்ரீ சக்கரம்) பன்னி உக்கரத்தை தணிச்சு வச்சிருக்கார்.
கிரஹங்களும் சரி கோள்களும் சரி இருக்கக்கூடிய விக்ரஹங்களும் சரி ராஜகோபுரம், துவஜஸ்தம்பம், நந்தி & கோவிலும் சரி
தன் நிலை மாறி வக்கிர கதியிலே இருக்கின்ற காரணத்தினாலேயே திருவக்கரை.
முண்டமாலையை பூணூலாக சாய்ந்த கோலத்தில் வக்ரகாளி.
வக்ரகாளியம்மன்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வக்ரகாளி சன்னிதியால் தான் இத்திருத்தலம் தற்போது பலருக்கும் தெரிந்திருக்கிறது. பொதுவாக காளி கோவில் ஊரின் எல்லையில் தான். ஆனால் இங்கு ஊரின் நடுவில், ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து வித்யாசமானதாக உள்ளது. பத்ரகாளி பார்ப்பதற்கும் மிகவும் பிரமிப்பு.
சுடர் விட்டு பரவும் தீ கங்குகளை பின்னணியாக கொண்ட தலை, மண்டை ஓட்டு கிரீடம், வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம், 8 திருக்கரங்கள், வலது கையில் பாசம் சக்கரம் வாள் காட்டேரி..
பகைவர்களின் தலைகளையே மாலையாக தொடுத்து, அந்த தலை மாலையையே மார்பு கச்சாக இடத் தோளிலிருந்து இறங்கி, பருத்த தனங்களூடே வந்து படிந்து கீழே தொங்கும் வல கையில் சென்று முடிகிறது.
முண்ட மாலையை அவள் முப்பரி நூலாக அணிந்திருக்கிறாள். இக் கோயிலை வலம் வர நினைப்பவர்கள், வலப்பக்கமாக 5 முறையும்,
இடப்பக்கமாக 4 முறையும் வந்து தொழ வேண்டும்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சந்திர மௌலீஸ்வரர்
சந்திரசேகர் பிறைசூடிய பெருமாள் என்றும் போற்றப்படுகிறார். அன்னை அமிர்தாம்பிகை வடிவாம்பிகை என்றும் போற்றப்படுகிறார்.
இங்கு மரங்கள் கல்லாக மாறி இருக்கும் விந்தை. ‘SILICA’
(நெய்வேலி- உப்புநீர்- நிலக்கரி)
அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களில் இக்கோவிலில் உள்ள முருகனை போற்றி பாடல்.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மன நிம்மதி, கிரஹ தோஷங்கள், காரிய தடைகள், சுபிக்ஷம், பூர்வ ஜென்ம பாவங்கள், வக்ர தோஷம், நாக தோஷம், புத்திர தோஷம்,
பாப தோஷம், திருமணத்தடை, கடன், வழக்கு மற்றும் எதிரி தொல்லை நீங்க & பிரார்த்தனை
காரிய தடைக்கு சிவன், மற்ற வேண்டுதலுக்கு காளி.
நீண்ட நாள்களாக திருமணம் ஆகாதவர்கள் காளி சந்நிதி எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி, எலுமிச்சம் பழ தீபம் ஏற்றுவது வழக்கம். எந்தவிதமான பிரச்சனைகள் கோரிக்கை சீட்டு எழுதி, சூலத்தில் கட்டுகிறார்கள். நேர்த்திக்கடனாக பல வித அபிஷேகம்.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
APR-MAY பங்குனி உத்திரம் சித்ரா பூர்ணிமா வக்கிர காளியம்மன் ஊர்வலம்.
APR 14 சந்திர மௌலீஸ்வரர் பவனி விழாவுடன் தமிழ் நெருங்கிய நாள்.
வைகாசி தெப்பத் திருவிழா
JUL AUG ஆடி கிருத்திகை
JAN FEB தை கிருத்திகை
JAN தை காணும் பொங்கல்
மாசி மஹாசிவராத்திரி
SEP விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி கார்த்திகை தீபம்.
அன்னை வக்ர காளி அம்மனுக்கு சிறப்பு பூஜை. அமாவாசை சந்தன காப்பு, செவ்வாய் ஞாயிறு அஷ்டமி நவமி நாட்களில் கூட்டம் அதிகம்,
சிவன் கோவிலாக இருந்தும் வக்கிரகாளி அம்மன் சந்நிதியில் முதன்மையானவர்.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாவிஷ்ணு, வக்ரகாளி, ஆதிசங்கரர், குண்டலினி முனிவர், வக்கிராசுரன், கபிலதேவ நாயனார், வள்ளலார், அப்பர், சம்பந்தர், சேக்கிழார், அருணகிரிநாதர் முதலியோர் …
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விழுப்புரம் மாவட்டம் 29KM திண்டிவனம் வட்டம் 27KM விக்கிரவாண்டி 19KM அருகில் உள்ளது.
அருகில் உள்ள ரயில் நிலையம் திண்டிவனம்.
திண்டிவனம் மயிலம் வானூர் வழி பாண்டி சொல்லும் பாதையில் பெரும்பாக்கத்தில் இறங்கி 6KM ஷேர் ஆட்டோ
விழுப்புரத்தில் இருந்து பாண்டி செல்லும் பாதையில், திருக்கனூர் இறங்கி 5KM.
6AM-8.30PM மதியம் நடை சாத்துவதில்லை.
96558 29615 சேகர் குருக்கள்
97866 89606 பிரவீன் குருக்கள்
95855 02778 ராஜ்குமர் குருக்கள்
94432 68807 சங்கர் குருக்கள்
99438 13513 பிரவீன் குமார் குருக்கள்
கோயில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கறையணி மாமிடற்றான்
கரிகாடரங் காவுடையான்
பிறையணி கொன்றையினான்
ஒருபாகமும் பெண்ணமர்ந்தான்
மறையவன் தன்றலையிற்
பலிகொள்பவன் வக்கரையில்
உறைபவன் எங்கள்பிரான்
ஒலியார்கழல் உள்குதுமே. 1
ஞான சம்பந்தர்


Leave a Reply