திருமணஞ்சேரி உத்வாகநாதர்
மூலவர் : உத்வாகநாதர் / கல்யாண சுந்தரேஸ்வரர்
அம்பாள் : கோகிலா / யாழ்மொழியம்மை
ஸ்தலவிருக்ஷம் : கருஊமத்தை, வன்னி, கொன்றை
தீர்த்தம் சப்தசாகரம், குபேரகிணறு
பாடல் : அப்பர், சம்பந்தர், சுயம்பு தேவார பாடல் பெற்ற ஸ்தலம்.
சோழநாட்டு வடகரை ஸ்தலம் 25
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவனும் பார்வதியும் கைகோர்த்தபடி திருமண கோலத்தில் அருள் பாலிப்பது தனி சிறப்பு..
மாப்பிள்ளையாக சிவபெருமான்
மைத்துனராக தாரைவார்த்த மஹாவிஷ்ணு, திருமணம் நடத்தி வைத்த ஆச்சாரியராக பிரம்மா என மும்மூர்த்திகளும் அருள் பாலிக்கும் ஸ்தலம்..
திருமண வரத்திற்கு உலகப் புகழ்பெற்ற கோவில் இது. இங்கு ஒரு தடவை வந்து இறைவனை வழிபட்டு சென்று விட்டால் போதும். எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தகர்த்து திருமணம் உடனே நடந்து முடிகிறது. திருமணப் பிரார்த்தனைக்காக இத்தலத்தில் நடைபெறும் கல்யாண அர்ச்சனை மிகவும் பிரசித்தமானது..
கல்யாண வரம் வேண்டுவோர் ஒரு வரிசையாகவும், இத்தலத்தில் வேண்டிக் கொண்டு கல்யாணம் ஆகப்பெற்ற புதுமணத் தம்பதிகள் ஒரு வரிசையாகவும் – மண்டபம் முழுவதும் அமர்ந்திருக்கிறார்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் என்று அர்ச்சகர் மைக் பிடித்து தான் அறிவிக்கிறார்..
இங்கு அர்சித்து தரப்படும் எலுமிச்சை ஆரோக்கியத்தையும் மாலை சந்தோஷத்தையும் விபூதி இஷ்டபூர்த்தியையும் குங்குமம் லட்சுமி கடாக்ஷத்தையும், மஞ்சள் சுப காரிய அனுக்கிரகத்தையும் அளிக்கிறது என்று பொருள்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காமன் சாபம் நீங்க பெற்ற தலம்:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவபெருமானின் தியானத்தை கலைக்கும் பொருட்டு மலர்களை விட்டு அவரது கோபத்துக்கு ஆளாகி அவரது நெற்றிக்கண்ணால் திருக்குறுக்கை என்ற தலத்தில் மன்மதன் எரிந்து போனான். அறியாமை மேலிட்டதால் மன்மதன் சர்வேஸ்வரன் மீது தன் கனைகளை தொடுக்க, அதனால் பஸ்பம் ஆனதால் ரதிதேவி துதிக்க எம்பெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறுபெற வரம் அருளியதும் இத்தலத்தில் தான்.
குழந்தை வரம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்கு ராகு பகவான் முழு உருவத்தோடு, கவச குண்டலத்தோடு, மனித உருவில் இருப்பது விசேஷம்.
இவருக்கு அமாவாசை அன்று பால் அபிஷேகம் செய்து, அதை பால் பாயாசம் செய்து பூஜை நெய்வேத்யம் செய்து சாப்பிட்டால் குழந்தை வரம் விரைவாக கிடைக்கப்பெறுவர்.
குழந்தை பிறந்தவுடன் இத்தலத்திற்கு மீண்டும் வருகிறார்கள். ஆண் குழந்தை வரம் வேண்டி கிடைத்தால் சுவாமிக்கு “தண்டக் கொலுசு” & பெண் குழந்தை வரம் வேண்டி கிடைத்தால் “கொலுசு வளரி” போடுகிறார்கள்.
ஸ்தல வரலாறு :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவபெருமானும் உமாதேவியும் ஒருநாள் கைலாயத்தில் இருக்கும் பொழுது உமை ஈசனை வணங்கி, மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் என வரம் கேட்க தாராளமாக என்றார் ஈசன். ஆனால் எப்போது எங்கே என்று சொல்லாமல் இருந்ததால் நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன. அம்மையும் கோபத்தால் ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க, சினம் கொண்ட ஈசன், உமா தேவியை பூலோகத்தில் பசுவாகப் பிறக்கச் செய்துவிட்டார். பின் சாப விமோசனம் வேண்டி பல இடங்களில் பசுவாக அலைந்து திரிந்து ஈசனை வழிபடலானார்.
ஒரு நாள் அம்பிகை பொழிந்த பாலால் திருமேனி குளிரப் பெற்று, குளம்பின் ஸ்பரிசத் தழும்பும் பெற்று மகிழ்ந்த சிவபெருமான், உளம் கனிந்து அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்து கொள்ளவும் சம்மதித்து பரத மகரிஷி நடத்திய காமேஷ்டி யாக வேள்வி குண்டத்தில் தோன்றிய உமையாளை திருமணஞ்சேரியில் திருமணம் செய்து அருளினார் என்பது ஸ்தல வரலாறு.
ஸ்தல சிறப்பு தகவல்கள் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்கு நவகிரஹங்கள் கிடையாது.
மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மனக்கோலத்தில் மணப்பெண்ணிற்கு உரிய நானத்துடன் அமர்ந்து உள்ளார்.
குழந்தை பாக்யம் வேண்டி வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள தேவஸ்தானத்தை சேர்ந்த பூஜை சாமான்கள் விற்கும் இடத்திலேயே பொருட்களை வாங்கி பூஜை செய்வது சிறப்பு.
சோழர் காலத்தைச் சேர்ந்த 28 கல்வெட்டுகள் உள்ளன. சோழ மன்னன் கண்டராதித்தன் மனைவி செம்பியன் மாதேவி புதுப்பித்த கோவில்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமணம் கை கூடாது தடைபட்டு நிற்பவர்கள்இத்தல ஈசன் கல்யாண சுந்தரபெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவிலேயே திருமணமாக பெறுவர் என்பது இத்தல ஈசன் மகிமைகளுள் மிகப் பிரசித்தமானது.
ராகு கிரக தோச நிவர்த்திக்கும் இந்த தலம் சால சிறப்புடையது. ராகு தோசம் பிடிக்கப்பட்டு புத்திர பாக்கியம் இத்தலத்தில் வழிபட்டு குழந்தைப்பாக்கியம் பெறுகிறார்கள்.
பிரிந்த தம்பதியர், மற்றும் அண்ணன் தம்பியர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டால் மீண்டும் இணைந்து இன்புறுவர் என்பது இத்தலத்தின் விசேசமான மற்றொரு அம்சம்.
இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் உத்வாகநாதர் சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
திருமணம் ( பரிகார ஸ்தலம் ) & குழந்தை வரம் மட்டுமல்லாது வேண்டும் வரம் கிடைக்கும் ஸ்தலம்..
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்திரை மாதம்- திருக்கல்யாண உற்சவம் & மாசி மகம் உற்சவம் – மிகச் சிறப்பு.
ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்), நவராத்திரி, ஆடிப்பூரம், பிரதோஷம் வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாவிஷ்ணு பிரம்மா முப்பத்து முக்கோடி தேவர்கள், மன்மதன், ஆமை, பரத்வாஜ மஹரிஷி, சம்பந்தர், அப்பர் சேக்கிழார் முதலியோர்.
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியிலுள்ள குத்தாலம் சென்று அங்கிருந்து திருமணஞ்சேரி செல்லலாம்.
குத்தாலத்தில் இருந்து 5 KM
எதிர்கொள்பாடி < 1 KM.
7. 30AM – 1PM, 4PM – 8. 30PM
94862 67971 உமாபதி சிவாச்சாரியார்
88705 04114 பாலாஜி குருக்கள்
99432 09667 & 77082 63071 கணேஷ் குருக்கள்
93602 62692 ஐயப்பன் குருக்கள்
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அயிலாரும் அம்பத
னாற்புர மூன்றெய்து
குயிலாரும் மென்மொழி
யாளொரு கூறாகி
மயிலாரும் மல்கிய
சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின்
றார்க்கில்லை பாவமே. 1
சம்பந்தர்


Leave a Reply