திருப்பைஞ்ஞீலி ஞீலிவநேஸ்வரர் நீலகண்டேஸ்வரர்
மூலவர் : ஞீலிவநேஸ்வரர் / நீலகண்டேஸ்வரர்
அம்பாள் : விசாலாட்சி / நீள் நெடுங்கண்நாயகி
ஸ்தல விருக்ஷம் : கல்வாழை
தீர்த்தம் : 7தீர்த்தங்கள்
புராண பெயர் : கதலிவனம்
பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர் சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு வடகரை ஸ்தலம் 61
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இக்கோவில் “தென் கயிலாயம்” என்றும் “மேலை சிதம்பரம்” என்றும் ஆன்மீகப் பெரியோர்களால் போற்றப்படுகிறது.
ஞீலி என்பது ஒரு வகை வாழைமரம். இதனுடைய இலை காய் கனி அனைத்தும் இறைவனுக்கே படைக்கப்படுகிறது. மக்கள் பயன்படுத்தினால் பாதிக்கிறது. இவ்ஊரைத் தவிர வேறு எவ்வூரிலும் பயிராவது இல்லை.
பங்குனி புரட்டாசி 3 நாட்கள் சூரிய பூஜை.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஞீலிவனநாதரை தரிசிக்க வந்த அப்பர் பசியால் களைப்படைந்து ஓரிடத்தில் நின்றார். அப்போது அர்ச்சகர் ஒருவர் அவர் முன்
சென்று, சோறு (அன்னம்)
கொடுத்து அவரது பசியை போக்கினார். பின் அப்பர் அவரிடம் திருப்பைஞ்ஞீலி தலம் எங்கிருக்கின்றது என கேட்டார். தான் வழிகாட்டுவதாக கூறிய அர்ச்சகர் அவரை இங்கு அழைத்து வந்தார். அருகில்
வந்தவுடன் அவர் திடீரென
மறைந்துவிடவே கலங்கிய
அப்பர் சிவனை வேண்ட, சிவன் அவருக்கு காட்சி தந்து தானே அர்சகராக வந்ததை உணர்த்தினார். அவரது வேண்டுதலுக்காக லிங்கமாக எழுந்தருளினார்.
கட்டமுது கொடுத்து ஆட்கொண்ட இறைவன் சோற்றுடைஈஸ்வரர்
கோயில் முன்புறம் தனி சன்னதியில். சித்திரை மாதம் அவிட்ட நக்ஷத்ரத்தில் இச்சன்னதியில் சோறு படைத்த விழா நடக்கிறது.
சிதம்பரத்தில் தைப்பூசத்தன்று சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தைக் காண விரும்பிய வசிஷ்ட முனிவருக்கு, இறைவன் இத்தலத்தில் உள்ள ‘ரத்தின சபை’யில் தனது நடனக் காட்சியைக் காட்டியருளினார். இதனால் இத்தலம் ‘மேலை சிதம்பரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
சப்த கன்னியர்கள் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம் வந்து அம்பாள் தரிசனம் வேண்டி தவம் செய்து, அம்பாளிடம் வரம் பல பெற்று, அவர்களும் அம்பாளை இங்கே எழுந்தருளும்படி வேண்டினர் எனவே அம்பாள் இங்கே எழுந்தருளினாள். அம்பாளும் சப்த கன்னிகளிடம் நீங்கள் வாழை மரத்தின் வடிவில் இங்கிருந்து நீண்ட காலத்திற்கு என் தரிசனம் காண்பீர்கள். அதன்படி வாழை மரங்களாக இங்கேயே தங்கினர்.
இக்கோவிலில் உள்ள கல்வாழை மரத்திற்கு தாலி கட்டி பரிகார பூசைகள் (குறிப்பாக வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) செய்வதன் மூலம் நெடுநாட்களாகத் தள்ளிப்போகும் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. மாற்று மதத்தினரும் இப்பரிகாரத்தில் நம்பிக்கையுடன் பங்கேற்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு. இது உலகப் புகழ்பெற்ற திருமணப் பரிகாரத் தலம். பரிகார பூஜை பொருட்கள் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
கோயில் ராஜகோபுரம் ‘ராவணன் வாயில்’. இங்கு கீழே சுவாமி சன்னதிக்கு செல்ல 9 படிக்கட்டுகள் அமைந்திருக்கிறது. இந்த படிகள் ராவணனிடம் அடிமையாக இருந்த நவகிரஹங்களை குறிப்பதாக சொல்கின்றனர்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எமதர்மராஜாவை திருக்கடையூரில் காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவன். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் உயிர்கள் அனைத்தும் நீண்ட ஆயுளுடன் இருந்தது. பாரம் தாங்காத பூமாதேவி சிவனிடம் முறையிட்டாள். ஒரு தைப்பூச தினத்தன்று சிவபெருமான் இங்கு எமனை தன் பாதத்தின் அடியில் குழந்தையாக எழும்படி செய்தார். தர்மம் தவறாமல் நடக்கும் படி அறிவுறுத்தி அவருக்கு மீண்டும் பணி கொடுத்தார். இதனடிப்படையில் இங்கு பிரகாரத்தில் சிவபெருமான் , அம்பாள் மற்றும் முருகருடன் சோமாஸ்கந்தராக இருக்க, ஸ்வாமியின் பாதத்தின் கீழ் குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். இச்சந்நிதி
குடைவரையாக அமைந்திருப்பது சிறப்பு.
எமன் சனிக்கு அதிபதி என்பதால் நவக்கிரகங்கள் இல்லை. நந்திக்கு முன்புறம் உள்ள தீபங்களையே கிரஹங்களாக எண்ணி வணங்குகின்றனர்.
இக்கோயிலில் 2 அம்மன் சன்னதி, ஒரு சன்னதியில் நீல்நெடுங்கண்நாயகியும், மற்றொன்றில் விசாலாட்சி.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
4 பிரகாரம், ராவணன் திருவாயில் கோபுரம் மொட்டை கோபுரம் கொண்டது கோவில். ராவணன் வந்து வழிபட்டுச் சென்றதால் இப்பெயர். பொதுவாக படி ஏறி போய் வழிபடுவோம். இங்கே கீழே இறங்கி சென்று தரிசனம்.
கருவறை சந்நிதி அர்த்த
மண்டபத்தில் வசிஷ்டருக்கு நடராஜர் நடனக்காட்சி அருளிய இடம் உள்ளது. மூலவர் சந்நிதி விமானம் பத்ர விமானம்.
பிரகாரத்தில் உள்ள விநாயகர், சிவன் மற்றும் செந்தாமரைக் கண்ணன் எனும் பெருமாளுடன் சேர்த்தபடி இருப்பதும், தக்ஷிணாமூர்த்தி கீழ் நந்தி இருப்பதும் வித்தியாசம். கொடி மரத்திற்கு அருகில் சுயம்பு நந்தி உள்ளது சிறப்பு.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கல்வாழை பரிகாரம் (திருமணத் தடை நீங்க)
ஆயுள் மற்றும் எம பயம் நீங்க
நாக தோஷ நிவர்த்தி
நவக்கிரக வழிபாடு
சஷ்டியப்தபூர்த்தி மற்றும் பீமரத சாந்தி
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்திரை பிரம்மோற்சவம் 10Days
அப்பர் கட்டுச்சோற்று விழா
மஹா சிவராத்திரி
நவராத்திரி திருவிழா
தைப்பூசத் திருவிழா எமதர்மர் சிறப்பு பூஜை
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எமதர்மராஜன், வசிஷ்டர், அகத்தியர், அப்பர், சம்பந்தர், சுந்தரர் பரணதேவ நாயனார் சேக்கிழார்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பைஞ்ஞீலி செல்ல நேரடி நகரப் பேருந்துகள் மற்றும் சிற்றுந்து (Mini bus) வசதிகள் உள்ளன. மண்ணச்சநல்லூர் வழியாகவும் கோயிலை எளிதில் அடையலாம்.
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் 17KM
8 AM – 12NOON 4PM – 8PM
98426 33907 சங்கர் கணேசன் குருக்கள்
97907 17562 சங்கர் ராஜா குருக்கள்
99766 04071 சிவக்குமார்குருக்கள்
94437 06051 பிரபாகர் குருக்கள்
அலுவல் உதவி பாலு
9788838758, 9944254032
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆரிடம் பாடிலர்
அடிகள் காடலால்
ஓரிடங் குறைவிலர்
உடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை
யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும்
பயில்பைஞ் ஞீலியே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply