திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர்

💐 மூலவர் : வியாக்ரபுரீஸ்வரர், புலியூர்நாதர்

அம்பாள் : சவுந்திரநாயகி, அழகம்மை

ஸ்தல விருக்ஷம் : சரக்கொன்றை 

 தீர்த்தம் : காவிரி தீ, கோயில் தீ,

பாடல் : சம்பந்தர் , சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 53

💐 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷பொதுவாக நவகிரஹங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். இங்கு 9ம் சூரியனைப்பார்த்தபடி உள்ளது சிறப்பாகும்.

🌷4 அடுக்குகளால் ஆன தாமரை மலரின் மேல் ஸ்வாமி மூலஸ்தானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

🌷அம்பாள் சௌந்தர்யநாயகி கிழக்கு நோக்கிய தனி கோவில்

💐 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷இத்தலத்து இறைவனையும் இறைவியையும் தரிசனம் செய்வது, சிதம்பரம் நடராஜர் – சிவகாமி அம்பாளை தரிசிப்பதற்குச் சமம் என்று நம்பப்படுகிறது

🌷புதர் மண்டி கிடந்த இத் தலத்தை சுந்தரர் தான்

வெளியுலகிற்கு தெரியபடுத்தினார்.

🌷புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதர் வழிபட்ட ஸ்தலங்கள் திருப்பாதிரிபுலியூர்,

பெரும்பற்றபுலியுநர் (சிதம்பரம்), எருக்கத்தம்புலியூர், ஓமாம்புலியூர்

பெரும்புலியூர் ஆகியன. பஞ்சபுலியூர் ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

💐 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷வியாக்ரபாத முனிவருக்கு (புலிப் பாதம் உடையவர் என்று பொருள்) அவரது தந்தை மதியாந்தன் சிவபெருமானின் மகிமையைப் பற்றிக் கூறினார். எனவே அந்த முனிவர் , அதிகாலையில் தேனீக்கள் கூடத் தீண்டாத புத்தம் புதிய மலர்களுடன் சிதம்பரத்தில் சிவபெருமானை வழிபட விரும்பினார் . இருப்பினும், இதற்காக அவர் மிகவும் முட்கள் நிறைந்த பரப்புகளில் நடக்க வேண்டியிருந்தது, மேலும் அதிகாலையில் குறைந்த வெளிச்சம் காரணமாக அவரால் தெளிவாகப் பார்க்கவும் முடியவில்லை. அவர் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து, ஒரு புலியின் பாதங்களையும் கூர்மையான கண்களையும் பெற்றார். அதன் விளைவாக, அவரால் அதிகாலையில் நன்றாக பார்த்து, தன் பாதங்களுக்குக் காயம் ஏற்படாமல் மலர்களைச் சேகரிக்க முடிந்தது.

🌷அவர் வழிபட்டதால் ஸ்தலம் பெரும்புலியூர் என்றும் இறைவன் வியாக்ரபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்

💐 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷3 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு பார்த்த கோவில், பிரகாரத்தில் சித்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் , தக்ஷிணாமூர்த்தி, நால்வர் அர்த்தநாரீஸ்வரர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் , சோமாஸ்கந்தர் வாராஹி பைரவர், சூரியன், சந்திரன் , நடராஜர் சன்னதிகள் உள்ளன.

🌷லிங்கோத்பவர் அருகில் அர்த்தநாரீஸ்வரர் அருள் பாலிக்கிறார்..

🌷நடராஜர் சன்னதியில் ஒருபுறம் வியாக்ரபாதரும் மறுபுறம் பதஞ்சலி மகரிஷியும் உள்ளனர்.

🌷 அருணகிரிநாதர் இத்தல முருகனை பாடியுள்ளார்.

💐 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷புது வாஹன பூஜை,

குடும்ப ஒற்றுமை, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர வேண்டுதல்.

💐 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மஹா சிவராத்திரி மற்றும் சிவபெருமானின் அனைத்து திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றது.

💐 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வியாக்ரபாதர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார் முதலியோர்

💐 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருவையாறு இருந்து வடமேற்கு திசையில் 4KM தொலைவில் பசுமையான சூழலில் உள்ளது.

குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து உண்டு. ஆட்டோ எப்போதும் கிடைக்கும்.

9AM – 12NOON, 5PM – 7PM

94434 47826 தியாகராஜகுருக்கள்

7904097528 சுவாமிநாத குருக்கள்

கிராமத்து கோவில் குருக்களை அழைத்துவிட்டு செல்வது சிறப்பு

💐 கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மண்ணுமோர் பாகம் உடையார்

மாலுமோர் பாகம் உடையார்

விண்ணுமோர் பாகம் உடையார்

வேதம் உடைய விமலர்

கண்ணுமோர் பாகம் உடையார்

கங்கை சடையிற் கரந்தார்

பெண்ணுமோர் பாகம் உடையார்

பெரும்புலி யூர்பிரி யாரே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *