திருப்பாதிரிப்புலியூர் கடலூர் பாடலீஸ்வரர்
மூலவர் : பாடலீஸ்வரர், கன்னிவனநாதன், தோன்றாத் துணைநாதன், சிவக்கொழுந்தீசன்
அம்பாள் : பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவ நாயகி, பிருஹந்நாயகி
ஸ்தல விருக்ஷம் : பாதிரி மரம், பாடல் : நால்வரும்- அப்பர் சம்பந்தர் சுந்தரர் மாணிக்கவாசகர்,
தீர்த்தம் : சிவகரை, பிரம்ம தீ (கடல்), சிவகர தீ ( திருக்குளம் ), பாலோடை, கெடில நதி, தென்பெண்ணை ஆறு
புராணப் பெயர் : கடைஞாழல் கூடலூர், புதுநகரம்
ஊர் : திருப்பாதிரிப்புலியூர் சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் 50,
நடு நாட்டு ஸ்தலம் 18,
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுயம்பு, நால்வராலும் தேவார பாடல் பெற்ற சிவாலயம். சமயக்குரவர்கள் நால்வருள் அப்பர் சம்பந்தர் ஆகிய 2 நாயன்மார் காலத்திற்கு முன்பே இவ்வூர் தோன்றா துணை நாதரும் அவர் கோவில் கொண்டருளிய திருக்கோவிலும் மிகவும் சிறப்புடையதாக விளங்கி உள்ளது.
அகத்தியர் கங்கை அக்னி வியாகிரப்பாகர் உபமன்யு முனிவர் மங்கணமுனிவர் அப்பர் சம்பந்தர் சேக்கிழார் வழிபட்ட தலம்
பாதிரியை தல மரமாக + புலிக்கால் முனிவர் வழிபாடு = பாதிரிப்புலியூர்.
மங்கண முனிவர் பூசித்து, தான் பெற்ற முயல் வடிவ சாபம் நீங்க பெற்ற தலம்.
மத்யந்தின முனிவரின் மகன், சிவ பெருமானின் வழிபாட்டிற்காக, வண்டுகள் வருவதற்கு முன் பூப்பறிக்க, புலியின் கண்களும் பாதங்களும் பெற்று புலிக்கால் முனிவரான (வியாக்ர பாதர்) தலம்.
அப்பர் கரையேறிய இடம் தற்போது கரையேறவிட்ட குப்பம் – வண்டி பாளையம். அப்பர்சாமி குளகரையில் ஒரு சிறிய 4 கால் மண்டபம்.
அப்பர் சுவாமிகள் உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காணமுடியும்
இத்தலத்தில் திருக்கோவிலூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீர சைவ மடம் உள்ளது.
21 கல்வெட்டுகள்
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பள்ளியறை
இறைவி அரூபமாக இருந்து ( உருவமில்லாமல் ) இறைவனை எண்ணி தவம் இருந்த இடம். பள்ளியறை in சுவாமி சன்னதி.
நாள்தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது எங்கும் இல்லாத தனி சிறப்பு.
1000 கலைகளோடு உறையும் இடம் ஆதலால், அவனை பூசித்து, தவமியற்றி, மணம் புரிந்து கொண்ட அன்னையே பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள்.
ஐங்கரன் கரங்களில் ஆயுதமேதுமின்றி பாதிரி மலர் கொத்துகள் உள்ளது வேறு எங்கும் காண முடியாது.
திருநாவுக்கரசர் கரையேறிய கதை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மருள்நீக்கியார், தருமசேனர், திருநாவுக்கரசர் எனும் அப்பரடிகளை மகேந்திரவர்மன் (கி.பி 600 – 630) கல்லுடன் சேர்த்து கட்டி, கடலில் தள்ளிய போது அப்பரடிகள், “கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சிவாயவே.” என பாடி துதிக்க, அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கரையேறிட, நகர மக்களெல்லாம் அதிசயமுற்று அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள்.
அந்நிலையில் அப்பரடிகள் திருப்பாதிரிப்புலியூருக்கு எழுந்தருளி பாடலநாதனாம் இறைவனை, “ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் ” என பதிகம் பாடி வழிபட்டார். இத்தகைய சிறப்பு வாய்ந்த தலம் இது. இன்றும் அப்பர் கரையேறிய இடம், “கரையேற விட்ட குப்பம்” என்ற பெயரில் விளங்குகிறது.
சிவகரை தீர்த்த சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவன் சித்தராக இருந்து விளையாடி கை வைத்த இடம் “சிவ கர” தீர்த்தமானது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்தது. வாஸ்துப்படி ஈசானிய மூலையில் இந்த தீ இருப்பது விசேஷம்.
கங்கை தன் பாவத்தை தீர்க்க சிவ கர தீர்த்தத்திற்கு வந்ததாக ஐதீகம். ( சிவ கீதை
கங்கை இங்கு ஸ்நானம் )
திருநாவுக்கரசரை முதல் முதலில் அப்பர் என்று ஞானசம்பந்தர் அழைத்தது இத்தலத்தில் தான்.
அருணகிரிநாதர் முருகப்பெருமானை வழிபட்டு திருப்புகழில் பாடல் அருளிச் செய்தார்.
ஸ்தல விநாயகர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வலம்புரி விநாயகர்
மேற்கு மதில் விநாயகரது மேல் திருக்கரங்கள் 2லும் பாதிரி மலர் கொத்துக்களே காணப்பெறும்.
அம்பிகை இறைவனை பூசித்த போது உதவி செய்த திருக்கோலம், எனவே கன்னி விநாயகர்.
பஞ்சமஹா பாதகங்கள் தீர்க்கும் க்ஷேத்ரங்களில் ஒன்று
பிரளய காலத்தில் ஸ்வாமி யின் திவ்யமான காட்சியும், சிருஷ்டி பண்ணுவதற்கு உண்டான ரகசியமும் நமக்கு கிடைப்பதற்கு உண்டான ஷேத்ரம். 64000 சிவக்ஷேத்ரம் புண்ணியம்.( 274 பாடல் பெற்ற சிவாலய தரிசனம் பண்ணின புண்ணியம்
உஷத் கால பூஜையில் )
அக்னி பகவானுக்கு இடக் கூடிய “ஆஹுதி”கள் எல்லாம் போய் சேரல. அக்னி, 7 நாக்கு, (சப்த ஜிஹ்வா, இரண்ய கனகா) எந்தெந்த தேவதைகளுக்கு கொடுக்கணுமோ கொடுக்க முடியல. அக்னி இங்கு சுவாமியை பூஜை பண்ணி, தோஷ நிவர்த்தியாகி, ஹவிர் பாகம் எடுக்கிறதுக்கு இங்கு பூஜை பண்ணி அனுகிரஹம் பெற்றார்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவன் திருவிளையாடல் நிகழ்த்த திருஉளம் கொண்டு, இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பிராட்டி தன் திருக்கரங்களால் புதைத்தாள்.
இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்களை கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூஜிக்கும் படியும், அவ்வாறு பூஜிக்கும் பொழுது எந்த தலத்தில், இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்த தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார்.
அதுபோல் இறைவியும் பல தலங்கள் தரிசித்துவிட்டு இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும் இடது தோளும் துடித்ததால், இத்தலத்திலேயே தங்கி அரூபமாக (உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்ற தலம்.
இறைவன் சித்தர் வடிவம் பூண்டு மக்களின் துன்பங்களை நீக்கிய தலம்.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தடைகள் நீங்க
எடுத்த காரியம் வெற்றி பெற
அபயம் மற்றும் பாதுகாப்பு
தம்பதியர் ஒற்றுமை
தோஷ நிவர்த்தி
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வைகாசி விசாகம் 10 DAYS – வெள்ளி ரிஷப வாகனம், தங்க கைலாச வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு.
5ம் நாள் தெருவடச்சான் நிகழ்ச்சி. (தேர் அகலமாக இருப்பதால் யாரும் தெருவில் நடந்து செல்ல முடியாது. தேர் அந்த அளவு தெருவை அடைத்து செல்லுமாம் ). 1000 கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் மிகச் சிறப்பான திருவிழா.
மாசி மஹா சிவராத்திரி ஆடிப்பூரம் – நவராத்திரி- திருவாதிரை உற்சவம் –
தை அமாவாசை மாசி மகம் -2க்கும் கடல் தீர்த்தவாரி நடக்கும். தேவனாம்பட்டினம் என்ற ஊருக்கு சுவாமி செல்லும்.
பௌர்ணமி பஞ்சப்பிரகார வலம் வருதல் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. தவிர பிரதோஷ காலங்களில் கோவில் மிக அதிக அளவில் பக்தர்கள்.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அகத்தியர், கங்கை, அக்னி, மங்கண முனிவர், உபமன்யு முனிவர், வியாக்ரபாதர், மாணிக்கவாசகர்,
சம்பந்தர், அப்பர், சேக்கிழார்,
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் அருகில்.
7AM to 12NOON , 4PM to 8PM
98949 27573 நாகராஜகுருக்கள்
9487237608 பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்
7904893536 மணிகண்டன் சிவாச்சாரியார்
91504 54546 S.கார்த்திகேயன் குருக்கள்
88257 67662 சிவ கணேஷ் குருக்கள்
கோயில் தேவாரம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஈன்றாளு மாயெனக் கெந்தையு
மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந்
தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன்
திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன்
றன்னடி யோங்களுக்கே. 1
அப்பர்


Leave a Reply