திருப்பாசூர் திருப்பாச்சூர் வாசீஸ்வரர்
மூலவர் : வாசீஸ்வரர் பசுபதீஸ்வரர் பாசூர்நாதர் உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்பாள் : பசுபதிநாயகி, பணைமுலை நாச்சியார், மோகனாம்பாள், தம் காதலி (தங்காதலி)
ஸ்தல விருக்ஷம் : மூங்கில் மரம்
தீர்த்தம் :சோம, மங்கள, சோழ தீ
பாடல்: அப்பர் சுந்தரர் சம்பந்தர்
ஆகமம் காமீகம், சுயம்பு,
தேவார பாடல் பெற்றசிவாலயம் & தொண்டை நாட்டு ஸ்தலம் 16
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக – சதுர வடிவ பீடத்தில் அருள் பாலிக்கிறார்.
இவர் தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன், தன் உடலின் மேல்பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருப்பது சிறப்பு.
காயம்பட்ட லிங்கம் என்பதால் இவரை கையால் தொட்டு பூஜைகள் செய்யப்படுவதில்லை.
அர்த்தமண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரம் உள்ளது.
மூங்கில் வனத்தின் அடியில் தோன்றிய சிவன் என்பதால் பாசுர நாதர் (பாசு=மூங்கில்). இங்கு சிவன் , லிங்க வடிவில், பெருமாள் வினை தீர்த்த ஈஸ்வரன் என்ற பெயரில் தனியாகவும் இருக்கிறார். அம்பாள் சந்திரன் திருமால் வழிபட்ட தலம்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவன் சன்னதி வலப்புறம் அம்பாள் சந்நிதி. இதை திருமண கோலம் என்று கூறுகிறார்கள்.
இருவரது சந்நிதிகளுக்கும் இடையே விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் என ஒரே வரிசையாக சிவ குடும்ப தெய்வங்கள் இருக்கிறது. இவ்வாறு அமைவது அபூர்வம்.
ராஜகோபுரத்திற்கு நேரே நடராஜர் தனி சன்னதி. மூலவர் விமானம் கஜபிருஷ்ட விமானம் அம்பாள் விமானம், கோபுரம் போன்று வித்தியாசமாக உள்ளது. கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை காலுக்கு கீழே மகிஷாசுரன் இல்லை.
தாழம்பூ பூஜை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தனது தலைமுடியை பிரம்மா கண்டதாக பொய் சொன்ன தாழம்பூவை பூஜைகளிலிருந்து ஒதுக்கி வைத்தார் சிவன். தாழம்பூ சிவனிடம் தன்னை மன்னித்து பரிகாரம் வேண்டவே, சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்கு பயன்படும்படி சிவன் வரம் கொடுத்தாராம். இதன் அடிப்படையில் இங்கு சிவராத்திரி இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவனின் உச்சியில் வைத்து பூஜை செய்கின்றனர். இந்த நேரத்தில் சிவ தரிசனம்
ஆணவம் பொய் சொல்லும் குணங்கள் மறையும்.
தங்காதலி அம்பாள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தக்ஷனின் யாகத்திற்கு சென்றதால் பார்வதி தேவி பூலோகத்தில் சாதாரண பெண்ணாக பிறந்து, இத்தலத்திற்கு வந்த அம்பாள், சிவனை வேண்டி தவம். அவளுக்கு இரங்கிய சிவன், அம்பாளை “தன் காதலியே” என்று சொல்லி அன்போடு அழைத்து அவளை மன்னித்து அருளினாராம். இதனால் இங்குள்ள அம்பாள், “தங்காதலி அம்பாள்”. இவளை வேண்டி கொண்டால் தம்பதியர்களுள் ஒற்றுமை உண்டாகும். So இவ்வூருக்கும் தங்காதலிபுரம் என்ற பெயரும் உள்ளது.
விநாயகர் சபை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாவிஷ்ணு, மது கைடபர் எனும் இரண்டு அரக்கர்களை
பிரம்மாவின் வேதத்தை கடலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டனர். இதனால் பிரம்மாவால் படைப்பு தொழிலை செய்ய முடியவில்லை.
மத்ஸ்யாவதாரம் எடுத்து அவர்களை அழித்து வேதத்தை மீட்டு வந்தார். இதனால் அவரை தோஷம் பிடித்தது. இத்தோஷம் விலக சிவனை வேண்டினார். விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் தன்னிடமிருந்த 16 செல்வங்களில் 11 செல்வங்களை இழந்தாராம்.
சிவபெருமானது ஆலோசனையின் படி இத்தலத்தில் 11 விநாயகர்களை பிரதிஷ்டை செய்து, வணங்கி இழந்த செல்வங்களை பெற்றார். இதனை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் 11 விநாயகர் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் காட்சி தருகின்றனர். இதனை விநாயகர் சபை என்கின்றனர்.
இதில் 3 விநாயகர் கிழக்கு பார்த்தும், இவர்களுக்கு பின்புறத்தில் இருபுறமும் சிறிய விநாயகர்களுடன் நடுவில் ஒரு பெரிய விநாயகரும், இடப் புறத்தில் 5 விநாயகரும் இருக்கின்றனர். அருகிலேயே கேது பகவான் தனியே இருக்கிறார்.
திருபுராந்தகர்களை அழிக்க சென்ற சிவன், விநாயகரை வணங்காமல் செல்லவே, அவரது தேர் சக்கரத்தின் அச்சை முடித்து விட்டார் விநாயகர். அவர் ஒரு சபை அமைத்து சிவனிடம், தன்னை வணங்காமல் சென்றது ஏன்? என கேட்டு விசாரணை செய்த தாகவும், விநாயகர் சபை உண்டானதற்கு மற்றொரு வரலாறு சொல்கிறது
சொர்ண காளி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இப்பகுதியை ஆட்சி செய்து வந்த குறும்பன் எனும் சிற்றரசன் ஒரு காளி உபாசகன். சோழ நாட்டுக்கு வரி கட்டாமல் இருந்ததால் அரசன் கரிகாலன் படை எடுத்தான். காளி பக்தன் அவளை ஏவி விட்டு சோழப் படைகளை விரட்டி அடித்தான்.
கரிகாலன் சிவனிடம் தனக்கு உதவும் படி வேண்டினான். அவனுக்காக சிவன் காளியை அடக்க நந்தியை அனுப்பி வைத்தார். பூலோகம் வந்த நந்தி காளியுடன் போரிட்டு வெற்றி பெற்றார்.
மேலும் காளியின் 2 கால்களி லும் பொன்விலங்கு பூட்டி அவளை கட்டுப்படுத்தினார். மன்னன் வெற்றி பெற்றார்.
நந்தியால் அடக்கப்பட்ட சொர்ண காளி இக்கோயில் பிரகாரத்தில் 4 கைகளுடன் தனியே நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது கால்களில் விலங்கு போடப்பட்டிருக்கிறது. பௌர்ணமி தோறும் மாலை வேலைகளில் இவளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பல்லாண்டுகளுக்கு முன்பு இத்தலம் மூங்கில் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அருகில் உள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து இங்கு சிறு மேட்டின் மீது அடிக்கடி பால்
சொரிந்தது.
இதனைக் கண்ட இடையன் இத்தகவலை மன்னரிடம் தெரிவித்தான். மன்னன் மண்ணிற்கு அடியில் தோண்டி பார்க்க உத்தரவிட்டன். காவலர் கள் இவ்விடத்தில் வாசி எனும் கருவியால் தோண்டி பார்த்தனர்
அப்போது மண்ணிற்கு அடியி லிருந்து ரத்தம் வெளிபட்டது. அதிர்ந்த மன்னன் அடியில் பார்த்த பொழுது சிவன், சுயம்பு லிங்கமாக இருந்தார். பயந்து போன மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான்.
மறுநாள் மன்னனின் எதிரிகள், (குறும்பனின்) கரிகாலனை பழி தீர்ப்பதற்காக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை குடத்தில் இட்டு (சமணர்களால்) கொடுத்து விட்டனர். மன்னன் குடத்தை திறந்து பார்ப்பதற்கு முன்பு, அங்கு வந்த ஒரு பாம்பாட்டி குடத்தில் இருந்த பாம்பை பிடித்து விட்டு, ஏதும் சொல்லாமல் சென்று விட்டார்.
அன்றிரவில், தானே பாம்பாட்டியாக வந்ததையும், மூங்கில் காட்டிற்குள் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதையும் மன்னனுக்கு உணர்த்தினார் சிவன். அதன் பின் மன்னன் இத்தலத்தில் கோயில் எழுப்பினான். வாசி எனும் கருவியால் வெட்டப்பட்ட சிவன் என்பதால் இவர் வாசீஸ்வரர்.
புராணத்தில் மஹாவிஷ்ணு இங்கு விநாயகர் சபை அமைத்து வணங்கி இழந்த செல்வங்களை பெற்று, தோஷம் நீங்க சிவபெருமானை வேண்ட, சிவனும் சுயம்புவாக எழுந்தருளினார்.. மஹாவிஷ்ணு இங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு தோஷம் நீங்கினார்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்குள்ள கோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. ஸ்தல விநாயகர் வலம்புரி விநாயகர். இங்குள்ள விமானம் கஜபிருஷ்டம்.
லிங்கம் மேற்புறத்திலும் பக்கவாட்டில் இரு புறங்களிலும் வெட்டுப்பட்டுள்ளது. மூங்கில் புதரிலலிருந்து வெளிப்பட்டதால் சொர சொரப்புகளுடன் தழும்புகளுடன் இருக்கிறது.
சுவாமிக்கு எண்ணெய் காப்பு மட்டும் செய்யப்படுவதில்லை.
இத்தலத்தை உச்சி காலத்தில் தரிசித்தால் விசேஷம் என்று ஸ்தல புராணம் கூறுகிறது.
ஏனைய ஸ்தலங்களின் கலைகள் இங்கு வந்து அச்சமயத்தில் கூடுவதால் உச்சி கால தரிசனம் சிறப்பு.
மொத்தம் 16 கல்வெட்டுகள்.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமணத்தடை நீங்க
குழந்தை பாக்கியம் பெற,
குடும்ப தோஷங்கள் நீங்க
தடைகள் நீங்கி மன அமைதி பெற
குடும்ப வளம் சிறக்க
எதிரி தொல்லைகள் நீங்க
பயம் நீங்கி மனத் துணிவு பெற பிரார்த்தனை.
திருவிழாக்கள்
,°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வைகாசி 10 நாள் பிரம்மோற்சவம்,
மார்கழி திருவாதிரை,
மஹா சிவராத்திரி,
விநாயகர் சதுர்த்தி மற்றும்
சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம் பௌர்ணமி சிறப்பு
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாவிஷ்ணு திருப்பதி வெங்கடாஜலபதி அகத்தியர் சந்திரன் பரணதேவ நாயனார், பட்டினத்து பிள்ளையார் சம்பந்தர் சுந்தரர் சேக்கிழார் கரிகால் சோழன் முதலியோர்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
5KM from திருவள்ளூர்.
Also சென்னை திருவாலங்காடு வழியாக அரக்கோணம் பாதையில் வரலாம், சென்னை திருத்தணி பேருந்து வழியில் கடம்பத்தூர் சாலை பிரியுமிடத்தில், திருவள்ளூர் பேரம்பாக்கம் பேருந்துகள் செல்லும்.
7AM to 12NOON, 4PM to 8 PM
9791593564 சிவானந்த குருக்கள்
96262 17640 ராஜப்பா குருக்கள்
குருக்களை அழைத்துவிட்டு செல்வது சிறப்பு.
கோயில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிந்தை யிடையார் தலையின்
மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும்
போழ்தென் மனத்துள்ளார்
மைந்தர் மணாள ரென்ன
மகிழ்வா ரூர்போலும்
பைந்தண் மாதவி சோலை
சூழ்ந்த பாசூரே. 1
ஞான சம்பந்தர்


Leave a Reply