திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர்

🌹மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர் , பழனப்பிரான், அமுதலிங்கேஷ்வரர்

அம்பாள் : பெரியநாயகி, சிவசுந்தர கல்யாணி அம்மை.

தீர்த்தம் : மங்கள தீர்த்தம் (பயனின்றி அழிந்துவிட்டது), காவிரி தீ, அமுத தீ, முனிகுப்பம் தீ, தேவதீர்த்தம்.

ஸ்தல விருக்ஷம் : கதலி (வாழை), வில்வம்.

பாடல் : அப்பர் சம்பந்தர் சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 50

🌹ஸ்தலச்சிறப்பு :

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்கு முன்பின் இரண்டு நாட்களிலும் நிலா இத்தல இறைவன் மீது படுகிறது.

🌷ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் முதல் ஆதித்த மன்னராலும், முதல் பராந்தக மன்னராலும் கட்டப்பட்டது. பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளை கொண்டுள்ளது. கொடிமரமில்லை, பலிபீடம் நந்தி உள்ளன.

🌹ஸ்தல பெருமை :

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷நந்திபெருமானுக்கு ஈசன் மணமுடிக்க எண்ணினார். சிலாத முனிவரின் மகனான நந்திக்கு திருமழபாடியில் திருமணம் நடைபெற்றது. நந்தியும் ஈசனுடைய பிள்ளை போன்றவர் என்பதால் அவரை ஏழூர் ஊர்வலமாக அழைத்துவர ஈசன் விரும்பினார். ஊர்வலம் திருவையாற்றில் தொடங்கி, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம் வழியாக மீண்டும் திருவையாற்றை வந்தடையும்.

🌷திருமண தினத்தன்று சிவபெருமான் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருளியிருக்க, நந்தி அவருடைய மனைவியுடன் இருக்க, ஏழூர் உற்சவமாகச் செல்வதுதான் சப்தஸ்தான விழாவின் ஐதீகம் ஆகும். இதில் ஏழு ஊருக்கும் பல்லக்கு தோள்களிலேயே சுமந்து செல்லப்படுகிறது. சித்திரா பௌர்ணமி அன்று “சப்தஸ்தான விழா” வெகு விமர்சையாக நடைபெறுகிறது. திருவையாற்றைச் சுற்றி அமைந்துள்ள ஏழு தலங்களில் (சப்தஸ்தான தலங்கள்) ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் இரண்டாவதாக அமைந்துள்ளது. இத்தலத்திற்கு திருப்பழனம், கதலிவனம், கெளசிகாஷ்ரமம், பிரயாணபுரி, பழனிப்பதி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. சந்திரன் வழிபட்ட தலம்.

🌷அப்பர் இங்கு சிறிது காலம் தங்கி இருந்த பொழுது, பாம்பு கடித்து இறந்த அப்பூதி அடிகளின் மகனுக்கு பதிகம் பாடி உயிர் கொடுத்தார்.

🌹ஸ்தல வரலாறு :

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷கௌதம நதி தீர்த்தத்தில் இருந்து சுசரிதன் என்ற அந்தணச் சிறுவன் பெற்றோரை இழந்து அமைதி நாடி தல யாத்திரையாக வந்தான். அச்சிறுவன் திருப்பழனத்தில் ஒரு இரவு தங்கினான். அன்று கனவில் எமதர்மன் தோன்றி, “இன்று முதல் ஐந்தாம் நாள் நீ மரணம் அடைவாய்” எனக் கூறி மறைந்தான். இதனைக் கேட்ட சிறுவன் பயம் கொண்டு பழனப் பிரானை சரணடைந்தான். சிவபெருமான் அசிரீரியாக “நீ திருவையாற்றுக்குச் சென்றால் உயிர் பிழைத்துக்கொள்வாய்” என்று அச்சிறுவனுக்கு ஏற்ப்பட்ட ஆபத்திற்கு உதவி செய்ததார். எனவே இத்தல இறைவன் ஆபத்சகாயர் என அழைக்கப்பட்டார் என்பது புராண வரலாறு ஆகும்.

🌷ஸ்தல புராணத்தில் இத்தலத்து இறைவனை இலக்குமி வணங்கி வரம் பல பெற்றுத் தன் இருப்பிடம் புறப்பட்டதால் இத்தலத்திற்குப் பிரயாணபுரி என்றும், இறைவனுக்கு பிரயாணபுரீசர் என்றும் பெயராயிற்று எனக் கூறப்படுகிறது.

🌹கெளசிக முனிவர் ஆஸ்ரமம்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷இத்தலம் பாற்கடலை கடைந்த போது கிடைத்த அமுதத்தில் கெளசிகர் பங்கைப் பத்திரமாக ஒரு பாத்திரத்தில் மூடி வைத்திருந்ததாகவும், இதனை அறிந்து கொள்ளையடிக்க வந்த அசுரரை, இத்தலத்து இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட ஐயனார், காளி மூலம் அழிக்கப்பட்டதாகவும், கௌசிகர் அமுதத்தை கொண்டு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார் என்பது ஒரு புராணக் கதை.

🌷நந்திகேசர் திருமணத்திற்குl இங்கிருந்து பழங்கள் சென்றதால் திருப்பழனம்.

🌹 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கிழக்கு நோக்கிய கோவில்,

5 நிலை ராஜகோபுரம், 2 பிரகாரங்கள். சிவன், பார்வதி தேவி சன்னதிகளைத் தவிர, ஆதி விநாயகர், ஆறுமுகர், ஐயனார், சப்தமதாக்கள், வீரபத்திரர், உமை அம்மை, வேணுகோபாலர் (மகாவிஷ்ணு), நர்த்தன விநாயகர், காசி விஸ்வநாதர், கஜலக்ஷ்மி, நர்த்தன விநாயகர், சண்டிகேஸ்வரர், கஜலட்சுமி, நவக்கிரஹம் ஆகிய சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தேவகோஷ்ட விநாயகர், தக்ஷிணாமூர்த்தி மற்றும் துர்க்கையின் சிலைகளைக் காணலாம்.

தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் சப்த ரிஷிகள், காமதேனு, அப்பூதி அடிகள் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம். காமதேனு சிவலிங்கத்தின் மீது (பசுபதீஸ்வரர்) பால் சொரிவதை காணலாம். வெளிப்புற பிரகாரத்தில் பார்வதி தேவி & முருகபெருமானுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

🌹 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஆபத்திலிருந்து காப்பாற்ற,

ஆயுள் விருத்தி,

தோஷ நிவர்த்தி,

மன அமைதி & ஞானம் பெற

திருமணத்தடை நீங்க

🌹 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சப்தஸ்தானம் (“ஏழூர்”) திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி அன்னாபிஷேகம்

மார்கழி திருவாதிரை

மஹா சிவராத்திரி

திருக்கார்த்திகை

மற்றும் பிரதோஷம் சிறப்பு.

🌹வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

குபேரன், திருமால், திருமகள், அயன், சந்திரன், கௌசிக முனிவர், சுசரிதன் என்ற அந்தணச் சிறுவன், சப்தரிஷிகள், அஷ்டதிக் பாலகர்கள், அப்பூதி அடிகள், ஆதித்தன், அங்கி, சோமன், அப்பர் சம்பந்தர் சேக்கிழார் முதலியோர்

🌹அமைவிடம் நேரம் தொடர்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கும்பகோணம் – திருவையாறு பிரதான சாலையில், திருவையாறு அருகிலேயே 3KM அமைந்துள்ளது

8.30AM – 10 AM, 5.30PM – 7PM

97902 07773 ராஜா குருக்கள்

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🌹 கோவில் தேவாரப் பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வேதமோதி வெண்ணூல்பூண்டு

வெள்ளை யெருதேறிப்

பூதஞ்சூழப் பொலியவருவார்

புலியி னுரிதோலார்

நாதாஎனவும் நக்காஎனவும்

நம்பா எனநின்று

பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார்

பழன நகராரே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *