திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர்

🌻மூலவர் : பராய்துறைநாதர் / தாருகாவனேஸ்வரர்,

அம்பாள் : பசும்பொன் மயிலாம்பிகை ஹேமவர்ணாம்பாள்

ஸ்தல விருக்ஷம் : பராய் மரம்,

தீர்த்தம் : அகண்ட காவேரி

பாடல் : அப்பர், சம்பந்தர்,

சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 03

🌻 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷இறைவன் சிவபெருமான் இத்தலத்தில் தானே உவந்து தன் இரு கைகளால் உருவாக்கிக் கொண்ட சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

🌷புரட்டாசி 18 சூரிய பூஜை. ராமகிருஷ்ண தபோவனம் இவ்வூரில் உள்ளது.

🌷முன் மண்டபத்தில் 12 ராசிகள் குறித்த கட்டம் மேல் விதானத்தில் இருக்கிறது. இதற்கு கீழே நின்று கொண்டு சிவலிங்கத்தையும் ஒரே நேரத்தில் வழிபட்டால் ராசி மற்றும் கிரக தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.

🌷பார்வதி சன்னதி முன் உள்ள தூண்களில் ஊர்ந்துவ தாண்டவ மூர்த்தி மற்றும் காளிதேவி அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.

🌷இங்குள்ள நந்தி மண்டபம் தூண்களில் ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் மாணிக்கவாசகர் நாகப்ப செட்டியார் (Who renovated this temple) சிற்பங்கள் உள்ளது.

🌷தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் ஒரு கல்லால மரம் கூரை மற்றும் நான்கு சிங்கங்கள் நான்கு தூண்களை தாங்கியபடி சித்தரிக்கப்பட்டுள்ளது.

🌷பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் ரிஷப வாகனத்துடன் சித்தரிக்கப்படுவதில்லை. இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் தனிச்சிறப்பு அவர் காளை

மாடத்துடன் காட்சி அளிக்கிறார்.

🌷பிக்ஷாடனராக வந்த சிவன் அர்த்தமண்டபத்தில் உற்சவர் வடிவில் இருக்கிறார். பிரகாரத்திலும் பிக்ஷாடனர் சிலை இருக்கிறது.

🌻 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷 பல்லாண்டுகளுக்கு முன் இத்தலம் பராய் மரங்கள் நிறைந்த வனமாக இருந்த போது சிவலிங்கம் இருந்ததை கண்டு கோவில் எழுப்பப்பட்டது. சுவாமி பராய்துறைநாதர் என்று பெயர் பெற்றார். பராய்மரத்திற்கு சமஸ்கிருத மொழியில் தாருகா விருக்ஷம். ஆகவே தாருகாவனேஸ்வரர்.

🌷 கருவறைக்கு பின்புள்ள பிரகாரத்தில் ஸ்தலவிருட்சம் பராய் மரத்தின் அடியிலும் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. இந்த மரத்தின் அடியில் தான் சிவன் காட்சி தந்ததாக சொல்கிறார்கள்.

🌷அம்பாள் பசும்பொன் மயில் அம்மையும் நடராஜரும் தனித்தனி சன்னதிகளில் தெற்கு நோக்கியபடி அருளுகின்றனர். வைகாசியில் பிரம்மோற்சவம் நடக்கும் பொழுது தேரில் நடராஜர் மட்டும் எழுந்தருளி வீதியுலா வருகிறார். அவருடன் அம்பாள் வருவதில்லை.

🌷 இத்தலத்தின் அருகே உள்ள காவேரி “அகண்ட காவேரி” என்கின்றனர். இங்கிருந்து சுமார் 2KM தூரத்தில் காவிரி கொள்ளிடம் என 2 நதிகளாக இது பிரிகிறது.

🌷 மாயவரத்தில் ஐப்பசி மாதம் கடைசி நாளன்று “கடை முழுக்கு” எனும் துலாஸ்நானம் நடப்பது போல், இங்கு ஐப்பதி மாதம் முதல் தேதியில் காவிரி கரையில், ” முதல் முழுக்கு” எனும் துலாஸ்நானம் நடக்கிறது. இந்நாளில் சிவன் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காவிரி கரையில் எழுந்தருளுகிறார்.

இந்நாளில் காவிரியில் நீராடி சுவாமியை வணங்கினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

🌷பராய்மரம் ஒரு முக்கியமான மருத்துவ தாவரம். அதன் சாறு இலைகள் விதைகள் மற்றும் வேர்கள் புற்றுநோய் தோல்நோய் பாம்பு கடி ரத்தம் தோய்ந்த மூக்கு வயிற்றுப் போக்கு போன்றவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

🌻 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷முன்னொரு காலத்தில் இத்தலம் தாருகாவனம் எனப்பட்டது. இப்பகுதியில் வசித்த ரிஷிகள் அனைவரும் தாங்களே அனைத்திலும் உயர்ந்தவர் என்ற ஆணவமும் அவர்களது மனைவியர்கள் தாங்களே அனைவரிலும் அழகானவர்கள், கற்புக்கரசிகள் என்று அகங்காரமும் கொண்டிருந்தனர்.

🌷சிவனும் விஷ்ணுவும் அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினர். சிவன் காண்போரைக் கவரும் பேரழகுடன் பிக்ஷாடனர் திருக்கோலம் தாங்கி கையில் திருவோடு ஏந்தி வந்தார். மஹாவிஷ்ணு அழகே உருவான மோஹினி எனும் பெண்ணாக மாறினார். இருவரும் தாருகாவனம் வந்தனர்.

🌷ரிஷிகள் பெண் வடிவில் இருந்த மஹாவிஷ்ணுவின் அழகில் மயங்கி அவரை பின்தொடர்ந்தனர்.

சிவனது பேரழகை கண்டு வியந்த ரிஷி பத்தினிகள் தங்களது கற்பையும் மறந்து அவர் பின்னே சென்றார். தங்கள் மனைவியர் பிச்சை எடுக்கும் ஒருவருடன் சென்றதைக் கண்ட மஹரிஷிகள், வந்திருப்பது ஏதோ மாயக்காரன் என்றெண்ணி அவரை தாருகாவனத்தை விட்டு

செல்லும்படி விரட்டினார்கள். இருவரும் செல்ல மறுத்தனர். கோபம் கொண்ட ரிஷிகள் சிவனுடன் சண்டையிட்டனர். அவர்கள் பல யுக்திகளை கையாண்டும் சிவனை எதிர்த்து நிற்க முடியவில்லை. அவர்கள் ஏவிய விலங்குகளையும் எய்த ஆயுதங்களையும் தன் உடலில் ஏந்தி கொண்டார் சிவன்.

🌷சிவனை அழிக்க முடியாமல் கலங்கிய மஹரிஷிகள் குழம்பி நின்றனர். சிவன் அவர்கள் முன்பு பேரழகனாக காட்சி தந்தார். உண்மை உணர்ந்த மகரிஷிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிக்கும்படி வேண்டினார்கள்.

🌷அனைத்து மந்திரங்களையும் வேதங்களையும் கற்றுக் கொள்வது சுய பாதுகாப்பிற்காக அல்ல, மாறாக மனித குலத்தின் நலனை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாகும் என்பதை புரிந்து கொண்டனர். சிவன் அவர்களுக்கு குருவாக இருந்து, மன்னித்தருளி, சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.

🌻 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

காவிரி நதியின் தென்கரையில் சோழர் காலத்துச் சிற்பக்கலை அழகோடு, 7 நிலை ராஜகோபுரத்துடன், இரண்டு பிரகாரங்களும் இரண்டு கோபுரங்களும் கொண்ட கோவில். ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் தாண்டி, அடுத்து 5 நிலைகளைக் கொண்ட மற்றொரு கோபுரம் நம்மை வரவேற்கிறது. உள்பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், சப்தகன்னியர்கள், மற்றும் அறுபத்து மூவர் சிலைகள்.

🌻 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

புற்றுநோய் மற்றும் தோல் நோய் நிவர்த்தி

திருமணத்தடை நீங்க

பாப விமோசனம்

🌻 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வைகாசிப் பிரம்மோற்சவம் 12 Days

ஐப்பசி துலா நீராடல் (கடை முழுக்கு) இரண்டும் மிகச் சிறப்பு.

மற்றும் சிவபெருமானுக்குரிய அனைத்து விழாக்களும்.

🌻 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தாருகாவனத்து முனிவர்கள், இந்திரன் குபேரன் சப்தரிஷிகள் அப்பர் சம்பந்தர் மாணிக்கவாசகர் அருணகிரிநாதர் பட்டினத்துப் பிள்ளையார் சேக்கிழார் முதலியோர்.

🌻 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருச்சியிலிருந்து கரூர் / குளித்தலை செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாகப் பயணம் செய்து எளிதில்

கோயிலை அடையலாம்.

திருச்சி 16KM

8AM – 12.30PM 5PM – 8PM

90426 91924 சேஷாத்ரி குருக்கள்

94427 10298 முத்து கிருஷ்ணன் குருக்கள்

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🌻 கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கரப்பர் கால

மடைந்தவர் தம்வினை

சுருக்கு மாறுவல்

லார்கங்கை செஞ்சடைப்

பரப்பு நீர்வரு

காவிரித் தென்கரைத்

திருப்ப ராய்த்துறை

மேவிய செல்வரே. 1

திருநாவுக்கரசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *