திருபுறவார் பனங்காட்டூர் பனையபுரம்  பனங்காட்டீஸ்வரர்

திருபுறவார் பனங்காட்டூர் பனையபுரம்  பனங்காட்டீஸ்வரர்

💐மூலவர் : பனங்காட்டீசர்

அம்பாள் : சத்யாம்பிகை, புறவம்மை

ஸ்தல விருக்ஷம் : பனை

தீர்த்தம்  : பத்ம தீ & சடாகங்கை 

பாடல் : சம்பந்தர்   

ஊர்: பனையபுரம் சுயம்பு

52வது தேவார பாடல் பெற்ற சிவாலயம் நடுநாட்டு ஸ்தலம் 21

 

💐 ஸ்தல சிறப்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய கதிர்கள் முதலில் சுவாமி மீதும் பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன.

💐 ஸ்தல பெருமை👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹சூரியன் வழிபட்ட தலம். .

🌹பனையை ஸ்தல விருக்ஷமாக கொண்டுள்ள தலங்கள் 5ல் ஒன்று. பிறதலம் வேறுபாடு அறிய 👉 காடுகள் சூழ்ந்த பகுதியாக இத்தலம் விளங்கியதால் 👉  புறவு= சோலை/காடு , ” புறவார் பனங்காட்டூர் “. முல்லை நிலக் காடுகளால் சூழப்பட்டு விளங்கியதாலும் இத்தலத்திற்கு இப்பெயர்.

🌹சிபி சக்கரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவை காத்ததற்காக தன் கண்களை பறித்தளிக்க, இறைவன் அம்மன்னனின் கடமை உணர்வை அறிந்து, காட்சி தந்து இழந்த கண்களை மீண்டும் அருளினார். இதனால் இத்தல இறைவனுக்கு கண் பறித்து அருளிய கடவுள் என பெயர்.

சிபி கதை👉 சூரிய குல சிறந்த அரசன்- அவரிடம் ஒரு முறை புறா ஒன்று தஞ்சம் அடைய – துரத்தி வந்த பருந்து, இது என்  உணவு- இதுவே வேண்டும் என வாதாட, அதற்கு நிகராக, தன் தொடையை அறுத்து- தராசு தட்டில், சமமாகவே இல்லை. ஒவ்வொரு பாகமாக அறுத்து – கடைசியில் கண்ணையும்- கடவுள் காட்சி தந்து அருள் புரிந்தார்.

💐ஸ்தல வரலாறு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சிவபெருமானை நிந்தித்து  தக்ஷன் செய்த வேள்விக்கு சென்று அவிர்பாகம் உண்ட அனைத்து தேவர்களும் சிவபெருமானின் கோபத்துக்கு ஆளாயினர்.அகோர வீரபத்திரர், சிவபெருமானின் கட்டளைப்படி தக்ஷ வேள்விக்கு சென்ற தேவர்களுக்கு தண்டனை தந்தார்.

தண்டனையால் சூரியன் ஒளி இழந்தான். தான் செய்த தவறுக்கு வருந்தி சிவபெருமானை பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து, உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டி பெற்றார். சூரியன் வழிபட்ட ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

💐 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹4 நிலைகளை உடைய சிறிய கோபுரம், வெளி பிரகாரத்தில் விநாயகர் , ஆறுமுகர் சன்னிதி..

பக்கத்தில் ஸ்தல விருக்ஷம் பனை மரங்கள் 3 உள்ளன. அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி, நின்ற திருக்கோலம்.

🌹துவார பாலகியர் சுதையில் உள்ளனர். துவார கணபதியையும் தண்டாயுத பாணியையும் தொழுது உட் சென்று சத்யாம்பிகையை தரிசிக்கலாம். நவகிரஹம் தொழுது வலம் முடிந்து, கொடிக்கம்பம் வணங்கி நுழைந்தால் சுவாமி.

🌹உள்பிரகாரத்தில் அனைத்து சந்நிதிகள். இவற்றுள் திருநீலகண்டர் தம் மனைவியுடன் கூடி, இருவருமாக தண்டினை பிடித்தவாறு கைகூப்பி நிற்கும் அமைப்பு மிகவும் அரிதான காட்சியாகும்

🌹இங்கு 3 கல்வெட்டுகள் 👉 குலோத்துங்க சோழன், போனேரின்மை கொண்டான்  பரகேசரி ஆதிராஜேந்திர தேவன் முதலிய அரசர்களின் கல்வெட்டுகள். அதில் இக்கோயில் திருப்புறவார் பனங்காடுடையார் கோவில் எனவும் இறைவன் பெயர் திருப்பனங்காட்டுடைய மகாதேவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

💐 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கண் நலம் மற்றும் பார்வை குறைபாடு

சூரிய மற்றும் சனி தோஷ நிவர்த்தி 

திருமணத் தடை நீங்க

குடும்ப ஒற்றுமை

💐திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சித்திரை திருவிழா தேரோட்டம் 10 நாட்கள் சிறப்பு.

சித்திரை முதல் ஏழு நாட்கள் சூரிய பூஜை.

மஹாசிவராத்திரி ,

மார்கழி திருவாதிரை ,

ஐப்பசி அன்னாபிஷேகம் விசேஷம்.

💐 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருமகள், முருகன், ராமர், சூரியன், தக்ஷன், சிபிச் சக்கரவர்த்தி, ஞானசம்பந்தர்,  சேக்கிழார் முதலியோர்.

💐அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°′°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

விழுப்புரம் (10KM) மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பனையபுரம் கிராமத்தில் உள்ளது.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கடந்து தஞ்சாவூர் கும்பகோணம் பாதையில் 2KM சாலையோரமாகவே கோவில் உள்ளது.

7AM – 12NOON, 5.30PM – 8.30PM

94435 94501 கணேஷ் குருக்கள்

99420 56781

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

💐 கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

💐விண்ண மர்ந்தன மும்ம தில்களை    

  வீழ வெங்கணை யாலெய் தாய்விரி

பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்    

பெண்ண மர்ந்தொரு பாக மாகிய    

  பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்    

கண்ணமர்ந் தவனே கலந்தார்க் கருளாயே. 1

ஞான சம்பந்தர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *