திருநெல்வாயில் அரத்துறை தீர்த்தபுரீஸ்வரர் ஆனந்தீஸ்வரர்
மூலவர் : தீர்த்தபுரீஸ்வரர் ஆனந்தீஸ்வரர்
அம்பாள் : திரிபுரசுந்தரி ஆனந்தநாயகி
தீர்த்தம் : நீலமலர் பொய்கை நீவாநதி வடவெள்ளாறு
ஸ்தல விருக்ஷம் : ஆலமரம்
பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர் ஆதிசங்கரர் குகை நாச்சியார், ராமலிங்க அடிகள்,
ஊர் : திருவட்டத்துறை,
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் 33, நடுநாட்டு முதல் ஸ்தலம்.
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுயம்பு. நிவா நதிக்கரையில் கோவில்.
நிவா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பொழுது, அதனால் சேதம் உண்டாகாமல் இருக்க, நந்தியம் பெருமான் தலையை சற்று திரும்பி, வெள்ளத்தை பார்க்க, வெள்ளம் வடிந்ததாக வரலாறு.
இங்கு கோவில் கர்ப்ப கிரஹத்திற்கு இடப்புறம் மகம் வாசல் உண்டு. கணவனை இழந்த பெண்கள் (ஒரு வருடம் கழிந்த பிறகு ) அருகில் உள்ள ஆற்றில் குளித்துவிட்டு மகம் வாசல் வழியாக வந்து சாமி தரிசனம் செய்த பிறகு அதன் வழியே சென்று விடுவர்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
யுகத்திற்கெல்லாம் முன்னால் தோன்றிய பதி.
கிருத யுகத்தில்
பிரம்மா மஹாவிஷ்ணு (பிரம்மபுரம் என
பெயரும் உள்ளே மஹாவிஷ்ணு சந்நிதியும் உள்ளது)
திரேதா யுகம்
வால்மீகி தவமிருந்த புண்ணிய பூமி (தவத்துறை வன்மீகிநாதர் )
வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதுவதற்காக சங்கல்பம் செய்து கொண்ட இடம். வால்மீகிக்கு ஞானோபதேசம் செய்த பெருமான்..
துவாபர யுகம்
ஆதிசேஷன் தவம் ( வால்மீகி ஆதிசேஷன் சந்நிதி ) அரவம் வணங்கியதால் அரத்துறை.
கலியுகம்
ஞான சம்பந்த பெருமான் வணங்கும் பொழுது, சிவபெருமான் ஆச்சாரியர் ஸ்தானத்தில் இருந்து ஞான சம்பந்தருக்கு ஆச்சார்ய ஸ்தானத்தை கொடுத்த பெருமைக்குரியது.
நமக்கு ஆனந்தத்தை அளிப்பதால் ஆனந்தீஸ்வரர்.
நீலமலர் பொய்கை மஹா விஷ்ணுவால் ஏற்படுத்தப்பட்ட புண்ணிய தடாகம்.
திருப்புகலூரில் 3 கோவில்கள் அனுபவித்ததைப் போல் இங்கு 3 லிங்கங்ளை அனுபவிக்கலாம். பூதேஸ்வரம் பவிஷ்யேஸ்வரம் வர்த்தமானேஸ்வரம் ( இந்த ஜன்மம் போன ஜன்மம் இனிமே ஜன்மம் இல்லாமல் ஆக்க கூடிய ஸ்தலம்
அனைத்து சாபங்களும் நிவர்த்தி )
சிற்பங்கள் கல்வெட்டு சிறப்பு + தொன்மை, தீர்த்தமே பிரதக்ஷிணம் பண்ணிண்டு போச்சாம். So திருவட்டத்துறை.
அம்பாள் த்ரிபங்கி கோலம்.
திரேதா யுகத்தில் நவகிரஹம் பூஜை. சனிபகவானுக்கும் செவ்வாய் பகவானுக்கும் க்ஷயரோகம் நிவர்த்தி ஆச்சு.( க்ஷய ரோகம் நிவர்த்தி நாதர் ).
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஞான சம்பந்தர் சிறு பாலகனாக அவருடைய தந்தை தோள்களில் அமர்ந்து கோவில்களுக்கு செல்வார். தூங்காணைமடம் சிவ ஸ்தலத்தை தரிசித்துவிட்டு, அரத்துரை நோக்கி செல்லும் பொழுது நடந்தே சென்றார். சம்பந்தர் தன் சிற்றடிகள் நோக நடந்து செல்வதை கண்டு யாவரும் வருந்தினர். இரவு மாறன்பாடி தங்கினார்.
கால்கள் சிவந்து வலிக்க, சிவபெருமான் வருந்தி, அன்றிரவு திருநெல்வாயில் அரத்துறையில் உள்ள அந்தணர்கள் கனவில் தோன்றி தான் முத்து சிவிகை முத்து குடை, முத்து சின்னங்கள் அளிப்பதாகவும், அதை ஞான சம்பந்தரிடம் சேர்த்து அவரை அழைத்து வரும்படி ஆணை. அதேபோல் ஞான சம்பந்தர் கனவிலும் தெரிவித்தார்.
மறுநாள் ஆலயத்தை திறக்க, அவை அனைத்தும் அங்கே இருக்க, இறைவனை வணங்கி, எடுத்து சென்று, மாறன்பாடி ல, ஞான சம்பந்தரை முத்து சிவிகையில் அமர வைத்து அழைத்து வந்தனர்…
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இப்பதிக்கு தீர்த்தபுரி என்ற பெயரும் உண்டு. இதனாலேயே இத்தல இறைவன் தீர்த்தபுரீஸ்வரர்.
சப்த ரிஷிகள் பூஜை செய்ய தீர்த்தம் வேண்டி, நீ வா என்று அழைத்ததால் இதுவே நிவா நதியாகவும், வடவெள்ளாறாக பெயர் கொண்டது என்று கூறுவர்.
இந்த நிவா நதியின் கரையில் சப்த ரிஷிகள் வழிபட்ட ஆதித்துறை ஆலந்துறை மாந்துறை ஆடுதுறை வசிட்டதுறை திருநெல்வாயில் அரத்துரை முடவன்(பலா)துறை ஆகிய துறைகள் அமைந்துள்ள
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆயில்ய நட்சத்திர பரிகார ஸ்தலம்
தோஷ நிவர்த்தி
பாப விமோசனம்
திருமண தடை நீங்க
மன அமைதி மற்றும் இடர் நீங்க
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாசி மகம்,மஹா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம், பிரதோஷம் சிறப்பு.
திருஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துச் சிவிகையும், முத்துக் குடையும் அருளிய குருபூஜை மற்றும் திருவிழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள்.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மீகி முனிவர், வசிஷ்டர், சனகர், சேர சோழ பாண்டியர், சேக்கிழார் அரவான் அப்பர், சுந்தரர், சம்பந்தர் முதலியோர்.
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள தொழுதூர் வழியில் (திட்டக்குடி வட்டம்) திருநெல்வாயில் (திருவட்டத்துறை) அமைந்துள்ளது.
தொழுதூரிலிருந்து விருத்தாச்சலம் சாலையில் 20KM தொலைவில் கொடிக்களம் பிரியும் பாதையில் 1 KM
7AM – 12NOON, 4PM – 8 PM
9487913593 & 8438636485
விக்னேஷ் சிவம் குருக்கள்
கிராமத்துக் கோவில் குருக்களை தொடர்பு கொண்டு விட்டு செல்வது சிறப்பு.
94433 82945 OFF HELP
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எந்தை ஈசனெம் பெருமான்
ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லால்
சென்றுகை கூடுவ தன்றால்
கந்த மாமல ருந்திக் கடும்புனல்
நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே. ஞான சம்பந்தர்


Leave a Reply