திருநாவலூர் திருநாவலேஸ்வரர் பக்தஜனேஸ்வரர்
மூலவர் : பக்தஜனேஸ்வரர் ஜம்புநாதேஸ்வரர் திருநாவலீஸ்வரர்
அம்பாள் : மனோன்மணி நாவலாம்பிகை சுந்தரநாயகி
ஸ்தல விருக்ஷம் : நாவல் மரம், தீர்த்தம் : கோமுகி தீ, கருட நதி ஜாம்பூநத தீ,
பாடல் சுந்தரர், அருணகிரிநாதர்
ஆகமம் : காமிக,
புராண பெயர் : ஜம்புநாதபுரி, திருநாமநல்லூர், சுயம்பு
40வது தேவாரப் பாடல் பெற்ற சிவாலயம், நடுநாட்டு ஸ்தலம் 8
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமால் வைகுண்டத்தில் சிவபெருமானை இதயத்தில் தியானித்து இருந்தபோது அந்த ஆனந்தத்தால் அதிக பளுவாக இருந்தார். அதனை தாங்க இயலாமல் ஆதிசேஷன் நஞ்சை உமிழ்தபோது, அது கருடனை தாக்கி கருநிறம் ஆக்கியது. கருடன் இங்கு ஜாம்பூநத தீர்த்தத்தில் குளித்து சிவ பூஜை செய்து விஷம் நீங்கிய ஸ்தலம்.
இங்கு தக்ஷிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். இவர் பூராட நக்ஷத்திரத்திற்கு உகந்தவர். இவர் சுந்தரருக்கு காட்சியளித்தவர்.
சுந்தரரின் தந்தை சடைய நாயனார்
அவதாரம்/ தொண்டு / முக்தி ஸ்தலம்
தாயார் இசைஞானியார் வாழ்ந்து தொண்டாற்றி முக்தி பெற்ற ஸ்தலம்.
சுந்தரர் அவதார ஸ்தலம்.
( அவரின் முக்தி ஸ்தலம் திரு அஞ்சைகளம் திருக்கயிலாயம் )
பங்குனி மாதம் 23 to 27 வரை சூரிய ஒளி கதிர்கள் கருவறையில் நுழைந்து, மூலவர் மீது படுகின்றன.
ஸ்தல பெருமை :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
யுகம் கண்ட ஷேத்ரம்.
கிருத யுகத்ல : அம்பாள் & மஹாவிஷ்ணு லிங்கம்
திரேதா : சண்டிகேசர் லிங்கம்
துவாபர : பிரம்மா லிங்கம்
கலியுகம் : சுந்தரர்
( இவர்கள் பிரதிஷ்டை செய்த லிங்கங்கள் இப்போதும் இங்குள்ளது )
பலரும் வழிபட்ட ஸ்தலம்.
ஈசானிய மூலையில் நவகிரகத்திற்கு
அருகிலேயே சுக்கிரனாலே பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்மார்த்த பூஜை செய்த, பார்கவீஸ்ரவர லிங்கம் உள்ளது.
பார்வதி தேவி இங்கு எழுந்தருளி சிவனை பூஜித்து, அவர் மனம் மகிழ மணம் புரிந்தார்.
இரணியனை கொல்வதற்கு மஹாவிஷ்ணு இங்குள்ள சிவனை பூஜித்து, நரசிம்ம அவதாரம் எடுக்கும் ஆற்றலை பெற்றார்.
சிவபிரியர் என்பவர் சிவனை பூஜித்து சண்டிகேஸ்வரர் பதவி பெற்றதும்,
ஆதிசேஷன் உமிழ்ந்த நஞ்சினால் கருநிற மடைந்த கருடன் சிவனைப் பூஜித்து விஷம் நீங்கியதுமான ஸ்தலம்.
சுக்ரன் வழிபட்ட லிங்கம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுக்ரன் இத்தலத்தில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து அதற்கு முறைப்படி பூஜைகள் நடத்தி இறையருள் பெற்றார். சுக்ரன் நிறுவிய லிங்கம், நவகிரகம் அருகே, வெள்ளிக்கிழமைகளில் இந்த லிங்கத்திற்கு விசேஷ வழிபாடுகள்.
நவகிரகங்களில் சூரியன் மேற்கு நோக்கியவாறு இங்கு காட்சி தருகிறார், இத்தலத்தின் சிறப்பை சேக்கிழார் பெரியபுராணத்தில் சிறப்பித்து கூறுகிறார்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அமிர்தத்தை கடைந்த காலத்தில் வாசுகி என்ற நாகத்தின் நஞ்சை இறைவன் சாப்பிட்டு நஞ்சு விந்தாக மாறி பூமியில் விழுந்து நாவல் மரங்களாக முளைக்க பெற்றது. ஜம்புவனம் என்ற பெயரில் இந்த இடத்தில் இறைவன், நான்கு யுகங்களுக்கு முன்பே தானாக தோன்றப் பெற்று இங்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் கர்ப்பகிரஹம் மட்டும் கல்லால் அமைக்கப்பட்டு இருந்தது. பின்னர் சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களால் பெரிய அளவில் விரிவு.
ஜம்புநாதேஸ்வரர் என வழங்கி வந்த அந்தக் காலத்தில் சுந்தரர் ஜம்பு என்பது வடமொழி பெயர், எனவே நாவல் என்று அழைத்து திருநாவலீசன் என்று ஈசனையும் திருநாவல் நல்லூர் என்று ஊர் பெயரையும் பாடலில் அழைத்துள்ளார்.
இறைவனையே தோழனாக பழகிய சுந்தரர் பிறந்த இத்திருத்தலம் ஒவ்வொரு சைவ சமய அன்பர்களும் சென்று தரிசிக்க வேண்டிய தலம்.
ஒருமுறை சுக்கிர பகவான் காசிக்குச் சென்று லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பல காலம் பூஜை செய்து வந்தார். இவரது பூஜைக்கு மகிழ்ந்த சிவன், இறந்தவர்களை உயிர்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார்.
இதையறிந்த அசுரர்கள் சுக்கிரனை தங்கள் குல குருவாக ஏற்றுக் கொண்டார்கள். தேவ அசுர போர் ஆரம்பம் ஆனது. தேவர்கள் அசுரர்களை கொன்று குவித்தனர். ஆனால் இறந்த அசுரர்களை எல்லாம் சுக்கிரன் தன் சஞ்சீவினி மந்திரத்தால் உயிர்பிழக்கச் செய்தார்.
பயந்து போன தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவன் சுக்கிரனை அழைத்து அவரை விழுங்கிவிட்டார். சிவனின் வயிற்றில் பல காலம் யோகத்தில் இருந்தார் சுக்கிரன். பின்னர் அவரை வெளியே வரவழைத்து, நவகிரஹ பதவியை கொடுத்து, அனைவரும் செய்யும் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப செல்வத்தை வழங்கி வர உத்தரவிட்டார்.
பின்னர் சுக்கிரனுக்கு 4 குமாரர்கள் 2 புதல்வியர் பிறந்தனர். அவர் பூலோகம் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். அந்த இடமே இன்றைய திருநாவலூர். இங்கு வருவோருக்கு சுக்கிர கிரஹம் தொடர்பான தோஷம் விலகி, செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்த பக்தஜனேஸ்வரர் ஆலயம் மிகவும் பழமையானது. சுந்தர மூர்த்தி சுவாமிகள் நமக்கு தந்த அரிய தலம். அம்பாள் விரிசடை கோலத்தில், தியான ஸ்வரூபமாக உள்ளார் என்பதும் சிறப்பு.
5 நிலை ராஜகோபுரம், 2 பிரகாரமும் கொண்ட இக்கோவிலில் முதல் பிரகாரத்தில் வலது பக்கத்தில் பரவை நாச்சியார் சங்கிலி நாச்சியார் ஆகியோருடன் சுந்தரருக்கு தனி சந்நிதி உள்ளது.
பொதுவாக நவகிரஹம் நடுவில் உள்ள சூரியன் கிழக்கு நோக்கி இருப்பார். ஆனால் இங்கு சூரியன் மேற்கு நோக்கி உள்ளார். இவர் இறைவனை தரிசிப்பதாக ஐதீகம்.
இங்கு பக்தஜனேஸ்வரரை வணங்கி தரிசித்த இறைவி மனோன்மணியை முதலில் வணங்கி, அம்பிகையின் சொல்படி சுக்கிர பகவான் இறைவனை வணங்கி பூஜித்து வக்ரதோஷம் நிவர்த்தி பெற்ற ஸ்தலம்.
கருவறை சுவரில் சண்டிகேஸ்வரர் வரலாறு சிற்ப வடிவில்
பால் கறப்பது, தந்தையார் மரத்தின் மீது ஏறி பார்ப்பது, திருமஞ்சனம் செய்வது, தந்தையின் கால்களை துணிப்பது, இறைவன் கருணை செய்வது வடிக்கப்பட்டுள்ளது.
கோவிலை அடுத்து சுந்தரர் அவதாரம் செய்த இடத்தில் திருமடம் ஒன்றை எழுப்பி உள்ளனர்.
கோவிலுக்கு திரு தொண்டீச்சரம் என்றும் பெயர்.
அருணகிரிநாதர் முருகனை பாடியுள்ளார்.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுக்ர தோஷம், திருமண வரம், வியாபார விருத்தி, உத்யோக உயர்வு, உடல் ஆரோக்கியம் பெற அவசியம் வழிபட வேண்டிய ஸ்தலம்.
இங்கு வணங்கினால் மன நிம்மதி, வாக்கு வன்மை, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றல், கலை ஞானமும் , ஈசனின் அருளும் கிடைக்கும்.
தீராத வழக்குகளில் வெற்றி பெற, ஆன்மீக பற்று பெருக & ரோகினி பூராட நட்சத்திர பரிகாரத்திற்கும்
பிரார்த்தனைகள்.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காமிக ஆகமங்களுக்கேற்ப வழிபாடுகள்.
ஆவணி சுந்தரர் ஜனன விழா, ஆடி சுந்தரர் குருபூஜை விழா, சித்திரை பிரம்மோற்சவம் & தேர் விழா, ஆடிப்பூரம் மனோன்மணி சிறப்பு வழிபாடு
மற்றும் மஹாசிவராத்திரி, திருக்கார்த்திகை, பிரதோஷம், பௌர்ணமி சிறப்பு
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உமையம்மை பிரம்மா மஹாவிஷ்ணு சப்தரிஷி சுக்கிரன், ஆதிசேஷன், கருடன், திரேதா யுக சண்டேசர், இந்திரன், சந்திரன், அஷ்டதிக் பாலகர்கள், அப்பர், சுந்தரர்,
சடைய நாயனார், நரசிங்க முனையரையர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், அருணகிரிநாதர், இசைஞானியார்..
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பண்ருட்டி 20 கி.மீ
விழுப்புரத்தில் 24 கி.மீ
உளுந்தூர்ப்பேட்டை 15 கி.மீ
சென்னை திருச்சி GST ROAD நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்ரோடு நிறுத்தத்தில் இறங்க வேண்டும் & 2 KM உள்ளூர் பேருந்து or ஆட்டோ.
6AM-12NOON, 4.30PM-8.30PM
வெள்ளிக்கிழமைகளில் 12 – 1.30 சுக்கிர ஹோரையில் சுக்கிர பிரீத்தி பூஜைகள் நடைபெறும்.
96006 21719 சுந்தரமூர்த்தி குருக்கள்
94861 50809 செந்தில் குருக்கள்
கோயில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கோவலன் நான்முகன் வானவர்
கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரந் தீயெழு
வித்தவன் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை யாளுங்கொண்ட
நாவல னார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே. 1 சுந்தரர்


Leave a Reply