திருநாகேஸ்வரம் நாகநாதர்

🌻மூலவர் : நாகேஸ்வரர்/நாகநாதர்

அம்பாள் : பிறையணி வானுதலாள் / கிரிகுஜாம்பிகை ( தனி சன்னதி )

ஸ்தல விருட்சம் : செண்பகம் தீர்த்தம் : சூரிய சந்திர கௌதம வராக தீர்த்தம் & மங்கள கூபம் நாக தீர்த்தம் கிணறுகள்.

பாடல் : அப்பர் சுந்தரர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 29

🌻 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷 2000 வருடம் புராதன கோவில்

🌷 ராகு பகவான் சிவராத்ரியில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாராம். இப்போதும் சிவராத்திரியில் இரண்டு கால பூஜையை ராகுவே செய்வதாக ஐதீகம். சிவராத்திரி & ராகு பெயற்சி = உற்சவர் ராகு வீதியுலா வருகிறார். ராகு பெயர்ச்சிக்கு இங்கு விசேஷ பரிகார பூஜை உண்டு..

🌷சிவராத்திரி இரவில் வாசுகி இதர நாகங்களுடன் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரம், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரம், நான்காம் காலத்தில் நாகூர் என வழிபட்டு பலனடைந்ததாக ஸ்தல புராணங்கள் கூறுகின்றன..

🌷இத்தலம் ராகு தோஷ பரிகார ஸ்தலம். நாக தோஷத்திற்கு பாலபிஷேகம் செய்து வேண்டுகிறார்கள். அபிஷேகம் செய்யும் பொழுது பால் நீல நிறமாக மாறுகிறது. காலை 9.30, 11.30, மாலை 5.30 & ராகுகாலம் 👉பாலாபிஷேக நேரம்.

🌷பொதுவாக ராகு மனித தலை நாக உடலுடன் தான் காட்சி தருவார், ஆனால் இங்கு மனித வடிவில் காட்சி தருகிறார். மேலும் இத்தலத்தில் ராகு தனது மனைவிகளான சிம்ஹி, சித்திரலேகாவுடன் மங்கள ராகுவாக பல நலன்களும் அருள்வது சிறப்பு..

🌷சூரியன் இங்கே வழிபட்டு பேறு பெற்றார். 

🌷விநாயகர் வழிபட்டு கணங்களுக்குப் பதியானார்.

🌷கௌதமர் வழிபாடு செய்து அகலிகையை அடைந்தார்.

🌷நளன் இங்கே வணங்கி, இழந்த தன் மனைவியைப் பெற்றான். 

🌷பராசர முனிவர் வழிபட்டு பாவம் நீங்கினார்.

🌷பாண்டவர்கள் வழிபட்டு இழந்த தம் செல்வத்தை மீண்டும் பெற்றதோடு இப்பெருமானுக்குக் கார்த்திகை மாத விழாவினையும் நடத்தினர்.

🌷வசிஷ்ட முனிவர் வழிபட்டு நலம் பெற்றார். 

🌷ஒரு குருவியின் கட்டளைப்படி இந்திரன் இங்கே வழிபட்டு மேன்மையுற்றான்.

🌷பிரமனும், பகீரதனும் வழிபட்டுப் புனிதமடைந்தனர்.  🌷சித்திர சேனன் எனும் மன்னன் வைகாசியில் விழா நடத்தி, வழிபட்டு நற்புத்திரனை அடைந்தான். 

🌷ஒரு சிவயோகி கோயிலில் உள்ள புற்பூண்டுகளை போக்கிப் புனிதரானார். 

🌷சௌனக முனிவர் காம மயக்கத்திற்குக் கழுவாய் இங்கே பெற்றார்.

🌷கதிரவன் வழிபட்டு கைவளர பெற்றான்.

🌷நற்குணன் என்னும் முனிவன் கார்த்திகைச் சோமவாரங்களில் விளக்கேற்றி நோன்பிருந்து, பாம்பு கடித்து இறந்த தன்மகனைப் பிழைக்கச் செய்தான். இராக்கதம், பைசாசம், வேதாளம் முதலிய பிணிப்பினின்றும் விடுபட்டுப் பேறு பெற்றோர் பலர்.

🌷கேரள நாட்டு மன்னனாக விளங்கிய சம்புமாலி, சூரிய புஷ்கரணியில் நீராடி அலகையுறு நீங்கினான்.அலகையுருக்கொண்ட சம்புமாலியின் உருவம் இக்கோயிலின் அலங்கற மண்டபத்தில் ஒரு  தூணில் உள்ளது.

🌷சோழர்களால் கட்டப்பட்டது.

🌻 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷பிறையணியம்பாள் தனி சன்னதி.

🌷 கிரிகுஜாம்பிகை சுதை உருவம் அபிஷேகம் கிடையாது. இங்கு ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை லக்ஷ்மி சரஸ்வதி முப்பெரும் தேவியரும் காட்சி தருகின்றனர்..

முத்தேவியர்கள் பிருங்கி முனிவருக்காக காட்சி கொடுத்தனர். மார்கழி/தை – 45 நாட்கள் புனுகு சாத்துகின்றனர். NO தரிசனம், திரைச்சீலைக்கே பூஜை.. தை கடைசி வெள்ளி – இவரது சன்னதி முன் மண்டபத்தில் அன்னம் காய்கறி பழங்கள் படைக்கின்றனர்.. மேலும் இச்சன்னதியில் பால சாஸ்தா சங்கநிதி பதுமநிதி காணலாம். முத்தேவியரை வேண்ட ஐஸ்வர்யம் பெருகும்.

🌷மேலும் கிரி குஜாம்பிகை சன்னதி நுழைவாயிலில், விநாயகரும் அருகில் ராகு யோக ராகுவாக அமர்ந்திருக்கிறார். விநாயகர் கேதுவிற்கு அதிபதி. இங்கு வேண்டினால் ராகு கேது இரண்டு தோஷமும் நிவர்த்தி..

🌷 ஆதிசேஷனும் ஒரு முறை செண்பகவணம் வந்து தவம் செய்து சிவன் காட்சி கொடுத்தார். So நாகநாதர். ஆதிசேஷன் உருவாக்கிய தீர்த்தம் தான் நாக தீர்த்தம்.

🌷 FEB 16, 1986 ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகம், தனது சட்டையை மாலையாக ராகு பகவானுக்கு அணிவித்து இவர் பெருமையை உலகுக்கு உணர்த்தியது. இப்பொழுதும் கண்ணாடி பேழையில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

🌻 ஸ்தல புராணம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷புராணங்களின்படி, பார்வதி தேவி பிருங்கி முனிவரைக் கடுமையாகத் தண்டித்ததால், பூமிக்குச் சென்று தவம் செய்யுமாறு சிவபெருமான் அவளிடம் கூறினார். மேலும், லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியர் அவளுடன் வருவார்கள் என்றும் சிவபெருமான் அவளிடம் கூறினார். பார்வதி தேவி தனது தவத்தை மேற்கொள்வதற்காக இந்த இடத்தைத் (திருநாகேஸ்வரம்) தேர்ந்தெடுத்தார். அவளது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், அவளுக்குத் தரிசனம் அளித்து, அவளை மீண்டும் கைலாச மலைக்கு அழைத்துச் சென்றார். இங்கு பார்வதி தேவி ஸ்ரீ கிரிகுஜாம்பாள் என்று போற்றப்படுகிறார். அவளது திருவுருவச் சிலை சுயம்பு என்றும் நம்பப்படுகிறது.

🌷மேலும், இந்தக் கோயிலின் புராணக்கதை, ‘சமுத்திர மந்தனம்’ நிகழ்விலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘திருப்பாற்கடல்’ கடலிலிருந்து அமிர்தம் எடுக்கப்பட்ட பிறகு, அது அனைத்து தேவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. ராகுவும் அந்த அமிர்தத்தில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டான். இருப்பினும், ராகு ஒரு அரக்கியின் மகன் என்பதை மகாவிஷ்ணு உணர்ந்தபோது, ​​அவன் தலையைத் துண்டித்தார். ராகு சிவபெருமானிடம் மன்னிப்புக் கோரினான். சிவபெருமான், துண்டிக்கப்பட்ட அந்தத் தலையை ஒரு பாம்பின் உடலில் பொருத்தி, அவனை மீண்டும் உயிர்ப்பித்ததாக நம்பப்படுகிறது. சிவபெருமான் அவனை ஆசீர்வதித்து, நவகிரஹங்களில் அவனுக்கு ஓர் இடத்தையும் அளித்தார்.

🌷ராகு, சுசீல முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்க இங்கே சிவனை வழிபட்டு, நிவர்த்தி பெற, So நாகநாதர். So ராகு தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

சிவபக்த கிரஹமாகிய ராகு, ராமேஸ்வரம் மற்றும் காளஹஸ்தியில் மேன்மை பெற்று விளங்கினாலும், இத்தலத்தில் மனித உருவில் தனது மனைவிகளான சிம்ஹி சித்ரலேகாவுடன் மங்கள ராகுவாக பல நலன்களும் அருள்வது மிகச் சிறப்பு..

🌷நவகிரகங்களில் ஒருவரான ராகு இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார். தினமும் சிவதரிசனம் பெற இங்கேயே தங்கிவிட்டார். பிற்காலத்தில் ராகுவிற்கு தனி சன்னதி. இவருடன் நாகவல்லி நாகக்கன்னி என மனைவியருடன் பிரதிஷ்டை. மனித வடிவில் மனைவியருடன் மங்கள ராகுவாக அருள்வது விசேஷம் அபூர்வம்.

🌻 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷கிழக்கு நோக்கிய கோவில், இதன் பிரதான கோபுரமான ராஜகோபுரம் 5 அடுக்குகளைக் கொண்டது. இக்கோயிலில் மேலும் 6 கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் நான்கு திசைகளிலும் பெரிய கோபுரங்களுடன் கூடிய நான்கு நுழைவாயில்களை கொண்டுள்ளது. கோயில் வளாகம் அகலமான மற்றும் நீண்ட சுற்றுச்சுவர்களுடன் பல பிரகாரங்களை கொண்டுள்ளது.

மூலவர் அம்பாள் ராகு சன்னதிகள் தவிர நிருத்த கணபதி, செண்பக விநாயகர், நந்தி, ஆதி விநாயகர், முருகன், அவரது துணைவியருடன் நடராஜர், சோமாஸ்கந்தர், நால்வர், சப்தமாதாக்கள், சந்திரன், நவக்கிரகம், பாவாணர், சரஸ்வதி, மகாலட்சுமி, நவக்கிரகங்கள் ஆகிய சன்னதிகளையும் தரிசிக்கலாம்.

🌷அகஸ்தியர், பராசரர், கௌதமர், வியாக்ரபாதர், பதஞ்சலி, மார்க்கண்டேயர் ஆகியோர் வழிபட்ட சிவலிங்கங்களையும் மாடவீதிகளில் காணலாம்.

🌷சேக்கிழார் திருப்பணி செய்த பெருமையுடையது. அவர் மிகவும் நேசித்த தலம். சேக்கிழார் இறைவனின் திருவடி தீக்ஷை பெற்ற ஸ்தலம்.

இதனால் தம் ஊரான குன்றத்தூரில் இப்பெயரில் ஒரு கோயிலைக் கட்டினார்.

இக்கோயிலில் 16 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன.

🌻 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷திருமண தடை, குழந்தை பாக்யம், கல்வி கேள்விகளில் சிறக்க பிரார்த்தனை & ராகு தோஷ பரிகார ஸ்தலம். நாக தோஷம் தீர பாலாபிஷேகம் செய்கிறார்கள்..

🌷ராகு பகவான் யோகக்காரர். இவரை வணங்கிட யோகம், பதவி உயர்வு, தொழில் லாபம், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை ஒழிந்து, நோய் குணமாகி, கடன் நீங்கி , வெளிநாட்டுப் பயணம் மற்றும் யோகம் அருள்வார்..

🌻 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரம்மோற்சவம் 10 Days

கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா

வைகாசி விசாகப் பெருவிழா

மஹா சிவராத்திரி

ராகு பெயர்ச்சி விழா

🌻 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

விநாயகர், பிரம்மா, நந்தி, ராகு, சிம்ஹி, சித்திரலேகா, வாசுகி,

ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன், கௌதமர், நளன், பராசரர், வசிஷ்டர், சௌனகர், நற்குணன், கதிரவன் இந்திரன், சூரியன், பகீரதன், பாண்டவர்கள், சித்திரசேனன், சிவயோகி, சம்புமாலி, சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார்

🌻 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கும்பகோணத்தின் கிழக்கே 6KM. கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து திருநாகேஸ்வரம் செல்ல அடிக்கடி நகரப் பேருந்துகள் மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன. கும்பகோணம் – காரைக்கால் பிரதான சாலையில் இக்கோவில் அமைந்துள்ளது.

6.30AM – 12.30PM 4.30PM-8.30PM

79042 75132 சிவகுருநாதன் சிவாச்சாரியார்

94435 78604 செல்லப்பா சிவாச்சாரியார்

90478 81000 சங்கர் சிவாச்சாரியார்

63692 32784 சரவணன் சிவாச்சாரியார்

89032 31823 சபரி சாம்பசிவம் சிவாச்சாரியார்

🌻 கோவில் தேவார பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பொன்நேர் தருமே

னியனே புரியும்

மின்நேர் சடையாய்

விரைகா விரியின்

நன்னீர் வயல்நா

கேச்சுர நகரின்

மன்னே யெனவல்

வினைமாய்ந் தறுமே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *