திருசாய்க்காடு சாயாவனம் சாயாவனேஸ்வரர்
மூலவர் : சாயாவனேஸ்வரர்
அம்பாள் : குயிலினும் இனிய மொழியம்மை கோகிலாம்பாள்
ஸ்தல விருக்ஷம் : கோரை, பைஞ்சாய்
தீர்த்தம் : ஐராவதம், காவிரி, சங்கமுக தீர்த்தங்கள்
பாடல் : அப்பர், சம்பந்தர்
புராண பெயர் : திருசாய்க்காடு, மேலையூர்
ஊர் : சாயாவனம், சுயம்பு,
63வது தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழநாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 9
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பாரத தேசத்தில், “காசி க்ஷேத்ர சமாநிஷத்” என்று சில க்ஷேத்ரங்கள் உண்டு. அதில் ஒன்று இது.
கோச்செங்கண்ணன் எனும் சோழ மன்னன், நிறைய (72) சிவாலயங்கள், மாட கோவில்களாக கட்டினான். இதுவும் ஒரு மாடக்கோவில்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
63 நாயன்மார்கள் ஒருவர் இயற்பகை நாயனார். இவர் பிறந்து முக்தி அடைந்தது இத்தலத்தில் தான். இவரது மனைவியும் சிறந்த பக்தை. இவர்களது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார். ஒருமுறை இவர்கள் இல்லத்திற்கு சிவனடியார் வேடமிட்டு வந்தார்.
இயற்பகையாரிடம்,’ நீ கேட்டதையெல்லாம் இல்லை என்று கூறாமல் அள்ளிக் கொடுப்பவன். எனவே உன் மனைவியை என்னுடன் அனுப்பி வை’ என்றார்.
உடனே அவரும் சம்மதிக்க மனைவியும் சம்மதிக்க, உன் உறவினர்கள் தடுப்பார்கள். ஊர் எல்லை கடக்கும் வரை எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்றார்.
இயற்பகையார் அதற்கும் சம்மதித்து, கையில் பெரிய வாளுடன், சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல விட்டு, பாதுகாப்பாக பின்னே சென்றார். சுற்றத்தார் தடுத்தனர், இவர் வென்றார்.
ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார், ” நான் உன் மனைவியுடன் செல்கிறேன், நீ ஊர் திரும்பலாம்” என்றார். இயற்பகையாரும் அதன்படி செய்தார்.
திடீரென அங்கிருந்த சிவன் அடியார் மறைந்து, வானத்தில் அன்னை உமையவளுடன் தோன்றி, “நீ உனது துணைவியாருடன், இந்த பூவுலகில் பலகாலம் சிறப்புடன் வாழ்ந்து, என் திருவடி வந்து சேர்க” எனக் கூறி மறைந்தார்.
மனிதன் மன உறுதி மிக்கவனாகவும் தைரியசாலியாகவும் இருக்க வேண்டும் என்பதையே இந்த நாடகம் உணர்த்துகின்றது.
வில்லேந்திய வேலவன்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தலத்தில் முருகப்பெருமான் மில் ஏந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ரு சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த முருகர் தனது வலது காலில் சிவனால் கொடுக்கப்பட்ட வீரகண்டரமணி யை அணிந்திருக்கிறார்.
எதிரிகளை அழிக்க, சக்தி கொடுத்த வேல் எப்படியோ, அதேபோல் சிவன் கொடுத்தது தான் இந்த வீரகண்டரமணி. எதிரி பயம் இருப்பவர்கள் இவரை வழிபட்டு சங்கடங்களை சமாளிக்கும் தைரியம் பெறலாம்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தலம் தேவலோகத்தில் தேவேந்திரனின் தாயாராகிய அதிதி மாதா சிவபூஜை புரிந்த பெருமைக்குரியது. இப்படி தினந்தோறும் வந்து வழிபட்ட அதிதி, ஒரு சந்தர்ப்பத்திலே வரமுடியாத பொழுது தேவேந்திரன் தன்னுடைய ரதத்தை வைத்து இந்த ஆலயத்தை தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்டான்.
தன்னுடைய ரதத்திலே வந்தவன், இவ்வாலயம் மூர்த்தி ஆகியவற்றை சேர்த்து தன் ரதத்தில் கட்டி, தன்னுடைய உலகத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்டான். முடியவில்லை. அந்த ரதம் இங்கேயே நின்றது.
இறைவன், “இங்கு வந்து நீ வழிபடுவாயாக!” இத்தலம் கைலாயத்திற்கு சமானம். இது தேவலோகம் வராது. நீதான் இங்கே வரவேண்டும். இந்திரனால் இங்கு வந்து இந்திர பூஜை செய்யப்பட்டது. அந்த வழிபாடும் சிறப்பும் இன்று வரை சைத்திர மாதம் வைகாசி மாசத்தில் கொண்டாடப்படும் ஒரு அற்புதமான ஆலயம்.
இப்படி அற்புதங்களால் சூழப்பட்ட, அருளாளர்களால் நிறைவானதொரு ஆனந்தமாக்கி தரக்கூடிய ஆலயம்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இக்கோவிலுக்கு அண்மையில் தான் (கோயில் குளத்தில் தெற்கே) பூம்புகார் காவல் தெய்வமான சம்பாகி அம்மன் கோவில் உள்ளது.
முகப்பு வாயிலைக் கடந்ததும் கொடிமரம் இல்லை. கொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார். மாடக்கோவில், அதனால் நந்தி உயரத்தில் உள்ளார். வெளிப்பிரகாரத்தில் சூரியன் இந்திரன் இயற்பகை நாயனார் துணைவியாருடன் உள்ள சன்னதிகள் உள்ளன.
அடுத்து நால்வர் விநாயகர் சுப்பிரமணியர் கஜலட்சுமி பைரவர் நவக்கிரகம். வலப்புறம் பள்ளியறை அம்பாள் சன்னதி.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எதிரிகளின் பயம் நீங்குதல் & எதிரிகளின் தொல்லை நீங்குதல் வில்லேந்திய வேலவர் வழிபாடு.
மன அமைதி, குடும்ப மகிழ்ச்சிக்கும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
21 நாள் இந்திர விழா இங்கு பெருவிழா – சித்திரை பௌர்ணமி துவங்கி வெகு சிறப்பு.
மார்கழியில் இயற்பகை நாயனார் ஐந்து நாள் விழா
தை உத்திரம் சண்டிகேஸ்வர நாயனார் விழா
வைகாசியில் குமரகுருபரர் குருபூஜை,
மாசி மஹா சிவராத்திரி
ஆடி அமாவாசை அன்னதானம், கோடைகால தண்ணீர் பந்தல் இங்கு சிறப்பு.
மேலும் இங்கு
வில்லேந்திய வேலவருக்கு சத்ரு சம்ஹார சிறப்பு வழிபாடுகள் மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தன்று சிறப்பாக நடைபெறும்.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உபமன்யு முனிவர், இந்திரன், ஐராவதம், இந்திரனின் தாயார் அதிதி, ஆதிசேஷன், சம்பந்தர், அப்பர், ஐயடிகள் காடவர்கோன், இயற்பகை நாயனார், சேக்கிழார் முதலியோர்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சீர்காழி பூம்புகார் சாலையில் திருவெண்காட்டில் இருந்து 3KM
9 AM – 12NOON, 5PM – 7PM
94431 07069 சந்திரசேகர சிவாச்சாரியார்.
குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோயில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நித்தலுந் நியமஞ்
செய்துநீர் மலர்தூவிச்
சித்தமொன் றவல்லார்க்
கருளுஞ் சிவன்கோயில்
மத்தயா னையின்கோ
டும்வண்பீ லியும்வாரி
தத்துநீர்ப் பொன்னி
சாகரமேவு சாய்க்காடே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply